29.12.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இங்கே (சங்கமயுகத்தில்) தாரணை செய்து பிறரையும் கூட கண்டிப்பாக தாரணை செய்விக்க வேண்டும். தேர்ச்சி அடைவதற்காக தாய் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். எதைக் கேட்கிறீர்களோ அதனை (ஞானம்) பிறருக்கு சொல்லவும் வேண்டும்.

 

கேள்வி:

குழந்தைகளுக்குள் எந்த சுபமான விருப்பம் இருப்பது கூட நல்ல முயற்சியின் அடையாளமாகும்?

 

பதில்:

நாம் தாய் தந்தையைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமர்வோம் என்ற சுப விருப்பம் குழந்தைகளுக்குள் இருப்பதும் கூட நல்ல தைரியம் ஆகும். பாபா, நாங்கள் தேர்வில் முழுமையாகத் தேர்ச்சி அடைவோம் என்று சுபமானதைக் கூறுகிறார்கள். இதற்காக கண்டிப்பாக அவ்வளவு தீவிரமாக முயற்சியும் செய்ய வேண்டும்.

 

பாடல்:

நம்முடைய தீர்த்த ஸ்தலம் தனிப்பட்டது. . . .

 

ஓம் சாந்தி.

இப்போது இங்கே அனைவருமே பாவாத்மாக்களாக உள்ளனர், புண்ணிய ஆத்மாக்கள் இருப்பதே சொர்க்கத்தில் தான். இது பாவாத்மாக்களின் உலகம். இங்கே அஜாமில் போன்ற பாவாத்மாக்கள் உள்ளனர் மற்றும் அது சொர்க்கத்தின் தேவதைகளுடைய, புண்ணிய ஆத்மாக்களுடைய உலகம். இரண்டினுடைய மகிமைகளும் வேறு வேறு. அனைத்து பிராமண ஆத்மாக்களும் தம்முடைய இந்த பிறவியின் வாழ்க்கைக் கதையை நாங்கள் இவ்வளவு பாவம் செய்துள்ளோம் என்று பாபாவுக்கு எழுதி அனுப்புகின்றனர். பாபாவிடம் அனைவருடைய வாழ்க்கைக் கதையும் உள்ளது. இங்கே கேட்க வேண்டும் மற்றும் அதனை பிறருக்குக் கூற வேண்டும் என்பது குழந்தைகளுக்கு தெரியும். அப்போது சொல்லக் கூடியவர்கள் எவ்வளவு பேர் தேவைப்படுவார்கள். எதுவரை சொல்லக்கூடியவராக ஆகவில்லையோ அதுவரை தேர்ச்சி அடைய முடியாது. மற்ற சத்சங்கங்களில் உள்ளவர்கள் இப்படி கேட்டுவிட்டு, பிறருக்குச் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. இங்கே தாரணை செய்து பின் செய்விக்க வேண்டும், பின்பற்றுபவரை உருவாக்க வேண்டும். ஒரே பண்டிதர் கதை கூறுவார் என்பதல்ல, இங்கே அனைவரும் தாய் தந்தைக்குச் சமமாக ஆக வேண்டும். பிறருக்கு கூறினால் தேர்ச்சி அடைந்து தந்தையின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடிக்கலாம். ஞானம் தான் புரிய வைக்கப்படுகிறது. அங்கே அனைவரும் கிருஷ்ண பகவானின் மஹாவாக்கியம் என்று கூறுகின்றனர், இங்கே ஞானக் கடல், பதீத பாவனர் (தூய்மையற்றவரை தூய்மைப்படுத்துபவர்), கீதா ஞானத்தை வழங்கும் வள்ளல் சிவபகவானுடைய மஹாவாக்கியம் என்று கூறப்படுகிறது. இராதா-கிருஷ்ணரோ, லட்சுமி-நாராயணரோ பகவான்-பகவதி என கூறப்படுவதில்லை, அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் பகவான் அவர்களுக்கு பதவி கொடுத்தார் எனும்போது கண்டிப்பாக பகவான் பகவதியாகத்தான் ஆக்குவார், ஆகையால் அந்த பெயர் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் இப்போது வெற்றி மாலையில் உருட்டப்படுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். மாலை உருவாகிறது அல்லவா! மேலே இருப்பது ருத்ரன். ருத்ராட்ச மாலை இருக்கிறது அல்லவா? ஈஸ்வரனுடைய மாலை இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தீர்த்தங்கள் தனிப்பட்டவை என இவர் (ஈஸ்வரன்) கூறுகிறார். அவர்கள் தீர்த்தங்களில் நிறைய ஏமாற்றங்கள் அடைகின்றனர். உங்களுடைய விசயமே தனிப்பட்ட தாகும். உங்களுடைய புத்தியின் தொடர்பு சிவபாபாவிடம் உள்ளது. ருத்ரனின் கழுத்தின் மாலையாக வேண்டும். மாலையின் ரகசியம் கூட அவர்களுக்குத் தெரியாது. மேலே சிவபாபா மலராக இருக்கிறார், பிறகு ஜகதம்பா, ஜகத்பிதா, பிறகு அவர்களின் 108 வம்சாவளியினர். மிகப்பெரிய மாலை இருக்கிறது என்பதை பாபா பார்த்திருக்கிறார். பிறகு அனைவரும் அதனை உருட்டுகின்றனர். ராமா ! ராமா என்கின்றனர். லட்சியம் எதுவுமில்லை. ருத்ர மாலையை உருட்டுகின்றனர், ராமா! ராமா! என்று பித்து பிடித்தவராகி விடுகின்றனர். இவையனைத்தும் பக்தி மார்க்கமாக உள்ளது. ஆனாலும் கூட இது மற்ற விசயங்களை விட சரியானதே, மாலை உருட்டும் நேரம் எந்த பாவமும் ஏற்படாது. பாவங்களிலிருந்து தப்பிப்பதற்காக இவை யுக்திகளாக உள்ளன. இங்கே மாலை உருட்டக்கூடிய விசயம் இல்லை. சுயம் மாலையின் மணியாக வேண்டும். ஆக, நம்முடைய தீர்த்தங்கள் தனிப்பட்டவையாகும். நாம் நமது சிவபாபாவின் வீட்டைச் சேர்ந்த அவிபசாரி (கலப்படமற்ற) பிரயாணிகளாக உள்ளோம். நினைவின் மூலம் நமது பல பிறவிகளின் விகர்மங்கள் பஸ்பமாகின்றன. கிருஷ்ணரை சிலர் இரவும் பகலும் நினைவு செய்யலாம், ஆனால் விகர்மங்கள் ஒருபோதும் வினாசமாக முடியாது. ராமா ராமா என்று கூறினால் அந்த சமயத்தில் பாவம் ஏற்படாது, பிறகு மீண்டும் பாவம் செய்யத் தொடங்குகின்றனர். பாவங்கள் மறையும் அல்லது ஆயுள் அதிகரிக்கும் என்பதல்ல. இங்கே யோக பலத்தின் மூலம் குழந்தைகளாகிய உங்களுடைய பாவங்கள் பஸ்மமாகும். மேலும் ஆயுள் அதிகரிக்கிறது. பல பிறவிகளுக்கு ஆயுள் அழிவற்றதாக ஆகி விடுகிறது.

 

மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டும் - இதுதான் வாழ்க்கையை உருவாக்குவது எனப்படுகிறது. தேவதைகளின் மகிமைகள் எவ்வளவு உள்ளது! தம்மைக் குறித்து நான் கீழானவன், பாவி என்று கூறுவார்கள், ஆக அனைவருமே அப்படி இருப்பார்கள். குணமற்ற தீமை நிறைந்த எனக்குள் எந்த குணமும் இல்லை, நீங்கள்தான் இரக்கம் காட்ட வேண்டும். . . . என்கிறார்கள். பரமாத்மாவின் மகிமையைப் பாடுகின்றனர். அவர் உங்களை அனைத்து குணங்களும் நிரம்பியவர்களாக, ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமாக ஆக்கி விடுகிறார். நீங்கள் இப்போது அவ்வாறு ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி சொல்லக்கூடிய வேறு எந்த சத்சங்கமும் இருக்காது. இங்கே தந்தை கேட்கிறார் - நீங்கள் லட்சுமி-நாராயணரை மண முடிப்பீர்களா அல்லது ராமன்-சீதையையா? குழந்தைகளும் கூட முட்டாள்கள் அல்ல. உடன் கூறுகின்றனர் - பாபா நாங்கள் முழுமையாக தேர்வில் தேர்ச்சி பெறுவோம். சுபமானதைக் (நல்ல விஷயங்களை) கூறுகின்றனர். ஆனால் அனைவருமே ஒரே மாதிரி ஆக முடியும் என்பதல்ல. ஆனாலும் தைரியத்தைக் காட்டுகின்றனர். மம்மா-பாபா சிவபாபாவின் முதன்மையான குழந்தைகள். நாம் அவர்களைப் பின்பற்றி சிம்மாசனத்தில் அமர்வோம். இந்த சுப விருப்பம் நன்றாக உள்ளது. பின் அந்த அளவு முயற்சி செய்ய வேண்டும். இந்த சமயத்தின் முயற்சியே கல்ப கல்பத்திற்குமானதாகி விடும், உத்திரவாதம் ஆகி விடும். இப்போதைய முயற்சியிலிருந்து, கல்பத்திற்கு முன்பும் கூட இப்படித்தான் செய்திருந்தனர் என்று தெரிந்து விடும். ஒவ்வொரு கல்பமும் இப்படிப்பட்ட முயற்சி நடக்கும். நாம் எந்த அளவில் தேர்ச்சி அடையப் போகிறோம் என்று பரீட்சை வரும் சமயம் தெரிந்து விடும். ஆசிரியருக்குச் சட்டென்று தெரிந்து விடும். இது நரனிலிருந்து நாராயணனாவதற்கான பாடசாலையாகும், பிற கீதா பாடசாலைகளில் நாங்கள் நரனிலிருந்து நாராயணன் ஆவதற்காக வந்துள்ளோம் என்று ஒருபோதும் கூறுவதில்லை, ஆசிரியரும் கூட நான் நரனிலிருந்து நாராயணன் ஆவேன் என்று கூற முடியாது. முதலில் ஆசிரியர்களுக்கு நானும் கூட நரனிலிருந்து நாராயணர் ஆகப் போகிறேன் என்ற போதை இருக்க வேண்டும். கீதை பிரசங்கம் செய்பவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் நாங்கள் சிவபாபாவிடமிருந்து படிக்கிறோம் என்று கூற மாட்டார்கள். அவர்களோ மனிதர்களிடமிருந்து படிக்கிறார்கள். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பரமாத்மா சிவன். அவர்தான் சொர்க்கத்தை படைக்கக் கூடியவர், ஞானம் நிறைந்தவர், அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தலைவனை (சாஹேப்) ஜெபித்தீர்கள் என்றால் சுகம் கிடைக்கும் என்று குருநானக் கூட அவரது மகிமையை பாடியுள்ளார். உயர்விலும் உயர்வான உண்மையான சாஹேப் அவர்தான் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள், அவரே கூறுகிறார் - தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். நான் உங்களுக்கு உண்மையான அமரகதை, மூன்றாம் கண்ணின் கதையைக் கூறுகிறேன். ஆக, இது மூன்றாம் கண் கிடைக்கக் கூடிய மற்றும் நரனிலிருந்து நாராயணர் ஆகக் கூடிய ஞானம் ஆகும். ! பார்வதிகளே! அமரநாத் ஆகிய நான் உங்களுக்கு அமர கதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன். உயர்விலும் உயர்வானவர் சிவபாபா, பிறகு பிரம்மா, விஷ்ணு, சங்கரர் பிறகு சொர்க்கத்தில் லக்ஷ்மி நாராயணர், பிறகு சந்திர வம்சத்தவர். . . வரிசைக் கிரமமாக வாருங்கள். சமயம் கூட சதோ, ரஜோ, தமோ ஆகிறது. இந்த விசயங்கள் யாருக்கும் தெரியாது. பாபா மிகவும் ஆழமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆத்மாவில் அழிவற்ற நடிப்பு அடங்கியுள்ளது. ஒவ்வொரு பிறவியினுடைய நடிப்பும் நிரம்பியுள்ளது. ஒரு போதும் அழிந்து போவதில்லை. தந்தை கூறுகிறார் - என்னுடைய நடிப்பும் நிரம்பியுள்ளது. நீங்கள் சுகதாமத்தில் இருக்கும் போது நான் சாந்தி தாமத்தில் இருப்பேன். சுகமும் துக்கமும் உங்களுடைய அதிர்ஷ்டத்தில் உள்ளது. சுகம் மற்றும் துக்கத்தில் எத்தனை எத்தனை பிறவிகள் கிடைக்கின்றன என்பதும் கூட புரிய வைக்கப்பட்டுள்ளது. நான் உங்களுடைய சுயநலமற்ற தந்தை ஆவேன். உங்கள் அனைவரையும் சொர்க்கத்திற்கு எஜமானர் ஆக்குகிறேன். நானும் பதீதமாக ஆகி விட்டால், உங்களை தூய்மைப்படுத்துபவர் யார்? அனைவருடைய அழைப்பையும் யார் கேட்பார்? பதீத பாவனர் என்று யாரைக் கூறுவது? இதை தந்தை கூறுகிறார், கீதையை சொல்லக் கூடிய யாரும் இப்படி புரிய வைக்க முடியாது, அவர்கள் திரிலோகி (மூன்று உலகங்களும் அறிந்தவர்) என்பதனுடைய அர்த்தத்தை விதவிதமான முறையில் கூறுகின்றனர். வேத சாஸ்திரங்களின் மூலம் பகவானை சந்திப்பதற்காக வழி கிடைக்கிறது என்று மனிதர்கள் கூறுகின்றனர். இந்த சாஸ்திரங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கானதாகும் என்று தந்தை கூறுகிறார். ஞான மார்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கான சாஸ்திரங்கள் எதுவும் இல்லை. ஞானத்தை சொல்லக் கூடியவர் ஞானக்கடலான நான் தான். மற்ற அனைத்துமே பக்தி மார்க்கத்தின் விசயங்கள் ஆகும். நான் தான் வந்து இந்த ஞானத்தின் மூலம் அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறேன். நீர்க்குமிழிகள் வெளியேறி பிறகு ஐக்கியமாகிவிடுகிறது என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், ஐக்கியமாவதற்கான விசயமே இல்லை. ஆத்மா அழிவற்றது, அது ஒருபோதும் எரிந்து போவதில்லை, துண்டாவதில்லை, தேய்ந்து போவதும் இல்லை. தந்தை இந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை குஷி இருக்க வேண்டும் - நாம் யோக பலத்தின் மூலம் உலகத்தின் எஜமானன் ஆகிக் கொண்டிருக்கிறோம். இந்த குஷியும் கூட வரிசைக்கிரமமாக உள்ளது. ஒரே மாதிரி யாரும் இருப்பதில்லை. பரீட்சை ஒன்றுதான், ஆனால் தேர்ச்சியும் அடைய வேண்டுமல்லவா! இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதற்கான திட்டத்தை கூறிவிடுகிறார். சூரிய வம்சத்தில் இத்தனை சிம்மாசனங்கள், சந்திர வம்சத்தில் இத்தனை சிம்மாசனங்கள், தேர்ச்சி அடையாதவர்கள் தாச தாசிகள். தாச தாசிகளிலிருந்து பிறகு வரிசைக்கிரமமாக ராஜா ராணியாக ஆகின்றனர். படிக்காதவர்கள் கடைசியில் பதவியைப் பெறுகிறார்கள். பாபா நிறையவே புரிய வைக்கிறார், ஏதும் புரியவில்லை என்றால் நீங்கள் கேட்கலாம். புத்தி கூறுகிறது - படிக்காதவர்கள் எங்கே பிறவி எடுப்பார்கள், அங்கும் கூட சுகத்திற்கு குறைவு இருக்கிறதா என்ன? மிகவும் மதிப்பு இருக்கும். பெரிய மாளிகைகளில் வசிப்பார்கள். பெரிய பெரிய தோட்டங்கள் இருக்கும். அங்கே இரண்டு மூன்று மாடிகள் கட்ட வேண்டிய அவசியமில்லை. நிலம் அதிக அளவில் இருக்கும். பணத்திற்கு குறைவு இருக்காது. கட்டுவதற்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். இங்கே மனிதர்களுக்கு ஆர்வம் இருக்கிறதல்லவா! அதுபோல. புது டெல்லி என்று சொல்வதுபோல இதை புதிய பாரதம் என்று அவர்கள் புரிந்து கொள்கின்றனர். உண்மையில் புதிய பாரதம் என்று சொர்க்கத்தையும் பழைய பாரதம் என்று நரகத்தையும் கூறப்படுகிறது. அங்கு யாருக்கு எவ்வளவு தேவையோ கிடைக்கும். . . அனைத்தும் நாடகத்தின்படி தான் நடக்கும். மாளிகை முதலானவை கல்பத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டதைப் போலவே உருவாகும். இந்த ஞானத்தை வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால், யாருடைய அதிர்ஷ்டத்தில் உள்ளதோ அவர்களுடைய புத்தியில் தான் பதியும். குழந்தைகள் முயற்சி செய்ய வேண்டும், முழுமையாக நினைவில் இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணருடைய நினைவில் இருந்தபடி வந்தீர்கள், சொர்க்கத்தின் எஜமானனாக ஆகவில்லை. இப்போதோ சொர்க்கம் உங்கள் முன்னால் இருக்கிறது. நீங்கள் பரமபிதா பரமாத்மாவின் வாழ்க்கை வரலாறு, பிரம்மா, விஷ்ணு சங்கரருடைய வாழ்க்கை வரலாறும் கூட தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். பிரம்மா எத்தனை பிறவிகள் எடுக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்.

 

இந்த தாய்மார்கள், சொர்க்கத்தின் வாசலை திறக்கக் கூடியவர்கள், மற்ற அனைவரும் நரகத்தில் விழுந்து கிடக்கிறார்கள். மாதர்கள் தான் அனைவரையும் முன்னேற்றுவார்கள். நாம் பரமாத்மாவின் மகிமை செய்கிறோம். சிவபாபா உங்களுக்கு நமஸ்காரம் என்று நீங்கள் புரிந்து கொண்டு கூறுகிறீர்கள். நீங்கள் வந்து எங்களை வாரிசாக ஆக்குகிறீர்கள். சொர்க்கத்தின் எஜமானராக ஆக்குகிறீர்கள், இப்படிப்பட்ட சிவபாபா உங்களுக்கு நமஸ்தே! தந்தைக்கு குழந்தைகள் நமஸ்காரம் செய்யவே செய்கிறார்கள். பிறகு தந்தையும் கூறுகிறார் - குழந்தைகளே! நமஸ்காரம். நீங்கள் கூட என்னை சில்லரை பைசாவுக்கு வாரிசாக ஆக்குகிறீர்கள், சோழிகளுக்கு வாரிசாக ஆக்குகிறீர்கள். நான் உங்களை வைரத்திற்கு வாரிசாக ஆக்குகிறேன். சிவபாலகனை வாரிசாக ஆக்குகிறீர்கள் அல்லவா! நல்லது!.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள், காலை வணக்கம், நமஸ்காரம், சலாம் மாலேகம். வந்தே மாதரம்.

 

தாரணைக்கான முக்கிய சாராம்:

1. சிவபாபாவின் வீட்டிற்கு (ஒருவர் நினைவில்) செல்லும் அவிபசாரி பிரயாணியாகி, யோக பலத்தின் மூலம் விகர்மங்களை சாம்பலாக்க வேண்டும். ஞானத்தை சிந்தனை செய்து அளவுகடந்த குஷியில் இருக்க வேண்டும்.

 

2. தந்தைக்குச் சமமாக சிம்மாசனதாரி ஆவதற்கான சுப விருப்பங்கள் வைத்தபடி தந்தையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

 

வரதானம்:

சுத்தமான புத்தி மூலம் ஒவ்வொரு விசயத்தையும் பகுத்தறிந்து சரியான நிர்ணயம் செய்யக்கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.

 

எந்தளவு புத்தி சுத்தமாக இருக்குமோ, அந்தளவு பகுத்தறியும் சக்தி கிடைக்கிறது. விசயங்களை அதிகமாக யோசிப்பதற்குப் பதிலாக ஒரு தந்தையின் நினைவில் இருங்கள், தந்தையிடம் உண்மையாக இருங்கள். அப்பொழுது ஒவ்வொரு விசயத்திலும் சுலபமாகப் பகுத்தறிந்து சரியான தீர்மானம் செய்ய முடியும். எந்த நேரம் எத்தகைய சூழ்நிலையோ, சம்பந்தம், தொடர்பில் வரக்கூடியவர்கள் மனநிலை எவ்வாறு உள்ளதோ, அந்த நேரம் அதற்கேற்றாற் போல் நடப்பது, அதைக் கண்டறிந்து நிர்ணயம் செய்வது என்பது கூட மிகப் பெரிய சக்தி ஆகும். இதுவே வெற்றி மூர்த்தி ஆக்குகிறது.

 

சுலோகன்:

யார் இருளிற்கு வசமாகாமல், உலகத்தின் இருளை அழிக்கக்கூடியவர்களோ, அவர்களே ஞான சூரியன் தந்தையுடன் இருக்கக்கூடிய அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் ஆவார்கள்.

 

ஓம்சாந்தி