ஓம்சாந்தி. இனிமையிலும் இனிய ஆன்மீகக் குழந்தைகள் (ஆத்மாக்கள்) இந்த பாட்டை கேட்டீர் களா! கூறியது யார்? ஆத்மாக்களுக்கு ஆன்மீகத் தந்தை கூறியிருக்கின்றார். ஆக ஆன்மீகக் குழந்தைகள் ஆன்மீகத் தந்தையைப் பார்த்து ஹே பாபா! என்று கூறுகிறீர்கள். அவர் ஈஸ்வரன் என்றும் கூறப்படுகின்றார், தந்தை என்றும் கூறப்படுகின்றார். எந்த தந்தை? பரம்பிதா. ஏனெனில் இரண்டு தந்தைகள் இருக்கின்றனர். ஒன்று லௌகீகம், மற்றொன்று பரலௌகீகம். லௌகீகத் தந்தையின் குழந்தைகள் பரலௌகீகத் தந்தையை அழைக் கின்றனர் - ஹே பாபா! நல்லது, தந்தையின் பெயர் என்ன? சிவன். அவர் நிராகாரமானவர், பூஜைக்குரியவர். அவர் தான் பரம்பிதா என்று கூறப்படுகின்றார். லௌகீகத் தந்தையை பரம் என்று கூறுவது கிடையாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர், அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர் ஒரே ஒருவர் தான். அனைத்து ஜீவ ஆத்மாக்களும் அந்த தந்தையை நினைவு செய்கின்றனர். நமது தந்தை யார்? என்பதை ஆத்மாக்கள் மறந்து விட்டனர். கண்ணில்லாதவர்களுக்கு கண் கொடுங்கள், அப்பொழுது தான் நாங்கள் எமது தந்தையை அறிந்து கொள்ள முடியும் என்று அழைக்கின்றனர். பக்தி மார்க்கத்தின் ஏமாற்றத்தி-ருந்து விடுவியுங்கள். சத்கதிக்காக, மூன்றாவது கண் அடைவதற்காக, தந்தையை அடைவதற்காக அழைக்கின்றனர். ஏனெனில் தந்தை தான் கல்ப கல்பமாக பாரதத்தில் வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகின்றார். இப்பொழுது க-யுகமாகும், க-யுகத்திற்குப் பிறகு சத்யுகம் வர வேண்டும். இது புருஷோத்தம சங்கமயுகமாகும். யார் தூய்மை இழந்து, கீழானவர்களாக ஆகி விட்டார் களோ அவர்களை எல்லையற்ற தந்தை வந்து புருஷோத்தமர்களாக ஆக்குகின்றார். இந்த புருஷோத்தமர்கள் (லெட்சுமி, நாராயணன்) பாரதத்தில் இருந்தனர். லெட்சுமி, நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இன்றி-ருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சத்யுகத்தில் ஸ்ரீலெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. இந்த நினைவை குழந்தைகளுக்கு மீண்டும் நினைவு படுத்துகின்றார். பாரதவாசிகளாகிய நீங்கள் இன்றி-ருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சொர்க்க வாசிகளாக இருந்தீர்கள். இப்பொழுது அனைவரும் நரகவாசிகளாக இருக்கிறீர்கள். இன்றி-ருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. பாரதம் மிகுந்த மகிமைக் குரியதாக இருந்தது. வைரம், தங்க மாளிகைகள் இருந்தன. இப்பொழுது எதுவும் கிடையாது. அந்த நேரத்தில் வேறு எந்த தர்மமும் கிடையாது. சூரியவம்சம் மட்டுமே இருந்தது. சந்திரவம்சத் தினர்களும் பிறகு தான் வருகின்றனர். நீங்கள் சூரியவம்ச இராஜ்யத்தினர்களாக இருந்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இன்று வரையும் இந்த லெட்சுமி, நாராயணனின் கோயில் கட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் லெட்சுமி, நாராயணனின் இராஜ்யம் எப்போது இருந்தது? எப்படி அடைந்தனர்? என்பது யாருக்கும் தெரியாது. பூஜை செய்கின்றனர், ஆனால் அறியவில்லை. அதனால் குருட்டு நம்பிக்கை ஆகிவிடுகிறது அல்லவா! சிவனின், லெட்சுமி, நாராயணனின் பூஜை செய்கின்றனர், வாழ்க்கைச் சரித்திரத்தை அறியவில்லை. இப்பொழுது பாரதவாசிகள் சுயம் கூறுகின்றனர் - நாங்கள் தூய்மையற்று இருக்கிறோம். தூய்மை இழந்த எங்களை தூய்மையாக்கும் பாபாவே வாருங்கள். வந்து எங்களை துக்கத்தி-ருந்து, இராவணனின் இராஜ்யத்தி-ருந்து விடுவியுங்கள். தந்தை வந்து தான் அனைவரையும் விடுவிக்கின்றார். சத்யுகத்தில் உண்மையில் ஒரே ஒரு இராஜ்யம் இருந்தது என்பதை குழந்தைகள் அறிவீர்கள். நமக்கு மீண்டும் இராம இராஜ்யம் தேவை, தூய்மை இழந்து விட்ட இல்லற தர்மம் தூய்மை ஆக வேண்டும் என்று பாபுஜியும் கூறினார். நாங்கள் சொர்க்கவாசி ஆவதற்கு விரும்புகின்றோம். இப்பொழுது நரகவாசி களின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா! இது தான் நரகம், அசுர உலகம் என்று கூறப்படுகிறது. இந்த பாரதம் தேவ - தேவதைகள் வாழ்ந்த உலகமாக இருந்தது. நீங்கள் 84 பிறவிகள் எடுத்திருக்கிறீர்கள், 84 லட்சப் பிறவிகள் அல்ல என்று தந்தை வந்து புரிய வைக்கின்றார். உண்மையில் நீங்கள் சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள், நீங்கள் இங்கு நடிப்பு நடிக்க வந்தீர்கள், 84 பிறவிகளுக்கான நடிப்பை நடித்து விட்டீர்கள் என்பதை தந்தை புரிய வைக்கின்றார். அவசியம் மறுபிறவி எடுக்க வேண்டும் அல்லவா! 84 மறு பிறவிகள் எடுக்கிறீர்கள்.
எல்லையற்ற ஆஸ்தியை குழந்தைகளாகிய உங்களுக்கு கொடுப்பதற்காக எல்லையற்ற தந்தை இப்பொழுது வந்திருக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய (ஆத்மாக்களாகிய) உங்களிடம் உரையாடிக் கொண்டிருக்கின்றார். மற்ற சத்சங்கங்களில் மனிதர்கள் மனிதர்களுக்கு பக்தி மார்க்கத் தின் விசயங்களைக் கூறுவர். அரைக் கல்பம் பாரதம் சொர்க்கமாக இருந்த பொழுது தூய்மை யற்றவர் ஒருவர் கூட இல்லை. இந்த நேரத்தில் தூய்மையானவர் ஒருவர் கூட இல்லை. இது தூய்மை இல்லாத உலகமாகும். கீதையில் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று எழுதி வைத்து விட்டனர். அவர் கீதை கூறவில்லை. இவர்கள் (க-யுகவாசிகள்) தங்களது தர்ம சாஸ்திரத்தைப் பற்றியும் அறியாமல் இருக்கின்றனர். தங்களது தர்மத்தைதே மறந்து விட்டனர். இந்து என்பது தர்மமே கிடையாது. முக்கிய தர்மங்கள் நான்கு. முதலாவது ஆதி சநாதன தேவி தேவதா தர்மம். சூரியவம்சம் மற்றும் சந்திரவம்சம் இரண்டையும் சேர்த்து தேவி தேவதா தர்மம் என்று கூறப்படுகிறது. அங்கு துக்கத்தின் பெயரின்றி இருந்தது. 21 பிறவிகளுக்கு நீங்கள் சுக தாமத்தில் இருந்தீர்கள், பிறகு இராவண இராஜ்யத்தில், பக்தி மார்க்கம் ஆரம்பமாகிறது. பக்தி மார்க்கம் என்றாலே கீழே இறங்கக் கூடிய மார்க்கமாகும். பக்தி என்றால் இரவு, ஞானம் என்றால் பகல். இப்பொழுது காரிருள் நிறைந்த இரவாகும். சிவஜெயந்தி மற்றும் சிவராத்திரி என்ற இரண்டு வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது. சிவபாபா எப்பொழுது வருகின்றார்? இரவு ஏற்படும் பொழுது. பாரதவாசிகள் காரிருளில் வந்து விடும் பொழுது தந்தை வருகின்றார். பொம்மை பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர், ஒருவரின் சரித்திரத்தைக் கூட அறியவில்லை. பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களும் உருவாக்கப் பட்டே ஆக வேண்டும். இந்த நாடகம், சிருஷ்டிச் சக்கரத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் இந்த ஞானம் கிடையாது. அது பக்தியின் ஞானமாகும், தத்துவமாகும். அது சத்கதி கொடுக்கும் ஞான மார்க்கம் அல்ல. நான் வந்து உங்களுக்கு பிரம்மாவின் மூலம் சரியான உண்மையான ஞானம் கூறுகிறேன் என்று தந்தை கூறுகின்றார். எமக்கு சுகதாமம், சாந்திதாமத்தின் வழி கூறுங்கள் என்றும் அழைக்கிறீர்கள். இன்றி-ருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு சுகதாமம் இருந்தது, அதில் நீங்கள் முழு உலகையும் இராஜ்யம் செய்தீர்கள், சூரியவம்ச இராஜ்யம் இருந்தது, மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்திதாமத்தில் இருந்தனர் என்று தந்தை கூறுகின்றார். அங்கு 9 லட்சம் பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இன்றி-ருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு குழந்தைகளாகிய உங்களை மிகுந்த செல்வந்தர்களாக ஆக்கி யிருந்தேன். எவ்வளவு செல்வம் கொடுத்திருந்தேன், பிறகு நீங்கள் அதை என்ன செய்தீர்கள்? நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள்! பாரதம் என்று கூறியது யார்? பாரதம் தான் அனைத்தையும் விட உயர்ந்ததிலும் உயர்ந்த கண்டமாகும். உண்மையில் இது அனைவரது தீர்த்த ஸ்தானமாகும். ஏனெனில் தூய்மையற்றோரை தூய்மை யாக்கும் தந்தையின் பிறப்பிடமாகும். எந்த தர்மத்தினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் தந்தை வந்து சத்கதி செய்கின்றார். இப்பொழுது இராவணனின் இராஜ்யம் முழு உலகிலும் நடைபெறுகிறது, இலங்கையில் மட்டும் அல்ல. அனைவரிடத்திலும் 5 விகாரங்கள் இருக்கின்றன. எப்பொழுது சூரியவம்ச இராஜ்யம் இருந்ததோ அப்பொழுது இந்த விகாரங்கள் கிடையாது. பாரதம் விகாரமின்றி இருந்தது. இப்பொழுது விகாரியாக இருக்கிறது. பாரதம் மிகுந்த செல்வ செழிப்புடன் இருந்தது. இப்பொழுது ஏழையாக ஆகிவிட்டது. அதனால் தான் யாசித்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்தீர்கள்! என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் அடைந்த சுகம் போன்று யாரும் அடைய முடியாது. நீங்கள் முழு உலகிற்கும் எஜமானர்களாக இருந்தீர்கள். பூமி, ஆகாயம் அனைத்தும் உங்களுடையதாக இருந்தது. தந்தை நினைவு படுத்துகின்றார், பாரதம் சிவபாபாவினால் ஸ்தாபனை செய்யப்பட்ட சிவாலயமாக இருந்தது. அங்கு தூய்மை இருந்தது, அந்த புது உலகில் தேவி தேவதைகள் இராஜ்யம் செய்தனர். இராதை-கிருஷ்ணர், அவர்களுக்குள் என்ன உறவு? என்பதையும் பாரதவாசிகள் அறிய வில்லை. இருவரும் தனித் தனியான இராஜ்யத்தில் இருந்தனர், சுயம்வரத்திற்குப் பிறகு லெட்சுமி நாராயணனாக ஆகின்றனர். இந்த ஞானம் எந்த மனிதனிடத்திலும் கிடையாது. பரம்பிதா பரமாத்மா தான் ஞானக் கடல் ஆவார், அவர் தான் உங்களுக்கு இந்த ஆன்மீக ஞானம் கொடுக்கின்றார். இந்த ஆன்மீக ஞானத்தை ஒரே ஒரு தந்தை மட்டுமே கொடுக்க முடியும். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். பரம்பிதா பரமாத்மா சிவனாகிய என்னை நினைவு செய்யுங்கள். நினைவின் மூலம் தான் சதோ பிரதானமாக ஆவீர்கள். மனிதனி-ருந்து தேவதை அதாவது தூய்மை இல்லா நிலையி-ருந்து தூய்மை ஆவதற்காகத் தான் நீங்கள் இங்கு வருகிறீர்கள். இது இப்பொழுது இராவண இராஜ்ய மாகும். பக்தி மார்க்கத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பமாகிறது. முழு உலகமும் 5 விகாரங்கள் என்ற இராவணனின் கைதியாக இருக்கிறது. அனைவரும் சோகவனத்தில் துக்கமானவர்களாக இருக்கின்றனர். தந்தை வந்து அனைவரையும் விடுவிக்கின்றார். இப்பொழுது தந்தை மீண்டும் சொர்க்கம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். யாரிடம் அதிக செல்வம் இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்பது கிடையாது. இது நரகமாகும். அனைவரும் பதீதமாக இருக்கின்றனர், அதனால் தான் கங்கைக்குச் சென்று ஸ்நானம் செய்கின்றனர், கங்கை பதீத பாவனி என்று நினைக்கின்றனர். ஆனால் யாரும் தூய்மையாவது கிடையாது. தூய்மைபடுத்துபவர் என்று தந்தை தான் கூறப்படுகின்றார், நதிகள் அல்ல. இவையனைத்தும் பக்தி மார்கமாகும். தந்தை வந்து தான் இந்த விசயங்களைப் புரிய வைக்கின்றார். ஒன்று லௌகீகத் தந்தை, மற்றொன்று அலௌகீகத் தந்தை பிரஜாபிதா பிரம்மா, அவர் பரலௌகீகத் தந்தை ஆவார். மூன்று தந்தைகள் இருக்கின்றனர். சிவபாபா, பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமண தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றார். பிராமணர்களை தேவதைகளாக ஆக்குவதற்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஒரே ஒரு தந்தை வந்து ஆத்மாக்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் மறுபிறப்பு எடுக்கிறது. நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என்று ஆத்மா தான் கூறுகிறது. தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு செய்தால் நீங்கள் தூய்மை ஆகிவிடுவீர்கள் என்ற தந்தை கூறுகின்றார். எந்த தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். இப்பொழுது இது மரண உலகின் கடைசியாகும். அமரலோகம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்ற அனைத்து தர்மங்களும் அழிந்து போய் விடும். சத்யுகத்தில் ஒரே ஒரு தேவதா தர்மம் இருந்தது. பிறகு திரேதாவில் சந்திரவம்சி சீதை, ராமர். குழந்தைகளாகிய உங்களுக்கு முழு சிருஷ்டியின் நினைவை ஏற்படுத்துகின்றார். சாந்திதாமம், சுகதாமத்தை ஸ்தாபனை செய்வது ஒரே ஒரு தந்தை ஆவார். மனிதன் மனிதனுக்கு சத்கதி கொடுக்க முடியாது. அவர்கள் அனைவரும் பக்தி மார்க்கத்தின் குருக்கள் ஆவர். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் பல வகையான சிலைகளை உருவாக்கி பூஜை செய்து பிறகு சென்று கரைந்து விடு, கரைந்து விடு என்று கூறி கரைத்து விடுகின்றனர். அதிகம் பூஜை செய்கின்றனர், படையல் படைக்கின்றனர், சாப்பிடுவது பிராமணர்கள் தான். இது தான் பொம்மை விளையாட்டு என்று கூறப்படுகிறது. எவ்வளவு குருட்டு நம்பிக்கை இருக்கிறது! அவர்களுக்கு யார் புரிய வைப்பது?
நீங்கள் இப்பொழுது ஈஸ்வரிய குழந்தைகள் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தந்தையிடத்தில் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. அதிக பிரஜைகள் உருவாக இருக்கின்றனர். கோடியில் சிலர் தான் இராஜாவாக ஆவர். மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் என்று சத்யுகம் கூறப்படுகிறது. இப்பொழுது முட்கள் நிறைந்த காடாக இருக்கிறது. இப்பொழுது இராவண இராஜ்யம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். இந்த ஞானம் பிராமணர்களாகிய உங்களுக்குத் தான் கிடைக்கிறது. லெட்சுமி நாராயணனிடத்திலும் இந்த ஞானம் கிடையாது. இந்த ஞானம் மறைந்து விடுகிறது. பக்தி மார்க்கத்தில் யாரும் தந்தையை அறியவில்லை. தந்தை தான் படைப்பவர் ஆவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் கூட படைக்கக் கூடியவர் அவரே ஆவார். பரமாத்மாவை சர்வவியாபி என்று கூறுவதால் அனைவரும் தந்தையாக ஆகிவிடுகின்றனர். ஆஸ்திக்கான உரிமை இல்லாமல் போய் விடுகிறது. தந்தை வந்து அனைத்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்கின்றார். அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். யார் சத்யுகத்தின் முத-ல் வருகிறார்களோ அவர்கள் தான் 84 பிறவிகள் எடுக்கின்றனர் என்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் எத்தனை பிறப்பு எடுப்பர்? 40 பிறவிகள் இருக்கலாம். இவ்வாறு கணக்கு எடுக்கப்படுகிறது. ஒரு பகவானை அடைவதற்கு எவ்வளவு அலைகின்றனர்? இப்பொழுது நீங்கள் அலையமாட்டீர்கள். நீங்கள் ஒரே ஒரு தந்தையை நினைவு செய்ய வேண்டும். இது நினைவு யாத்திரையாகும். இது பதீத பாவன் இறை தந்தையின் பல்கலைக் கழகமாகும். உங்களது ஆத்மா படித்துக் கொண்டி ருக்கிறது. ஆத்மாவில் எதுவும் ஒட்டாது (நிர்லேப்) என்று சாது, சந்நியாசிகள் கூறி விட்டனர். ஹரே, ஆத்மா தான் கர்மத்திற்கு ஏற்ப அடுத்த பிறவி எடுக்க வேண்டியிருக்கிறது. ஆத்மா தான் நல்லது மற்றும் கெட்ட காரியங்களைச் செய்கிறது. இந்த நேரத்தில் உங்களது காரியங்கள் விகர்மமாக ஆகிவிடுகிறது. சத்யுகத்தில் காரியங்கள் அகர்மமாக இருக்கும். அங்கு விகர்மம் இருக்காது. அது புண்ணிய ஆத்மாக்களின் உலகமாகும். இவை அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் புரிய வைக்க வேண்டிய விசயங்களாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) முள்ளி-ருந்து மலராகி மலர்கள் நிறைந்த பூந்தோட்டத்தை (சத்யுகம்) உருவாக்கும் சேவை செய்ய வேண்டும். எந்த கெட்ட காரியமும் செய்யக் கூடாது.
2) தந்தையிடமிருந்து கேட்ட ஆன்மீக ஞானத்தை அனைவருக்கும் கூற வேண்டும். ஆத்ம அபிமானி ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டுமே தவிர எந்த தேகதாரியையும் அல்ல.