19.12.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே ! எப்போது நீங்கள் (பாபா) வருவீர்களோ அப்போது நாங்கள் அர்ப்பணம் ஆகிவிடுவோம் என்பது உங்களின் உறுதி மொழியாகும். இப்போது உங்கள் உறுதி மொழியை நினைவு படுத்துவதற்காக பாபா வந்திருக்கிறார்.

 

கேள்வி:

எந்த முக்கிய விஷேசத்தன்மையின் காரணமாக பூஜைக்குரியவர்கள் என்று தேவதை களுக்கு மட்டும் கூற முடியும்?

 

பதில்:

தேவதைகளினுடைய விஷேசத்தன்மை ஒரு போதும் யாரையும் நினைப்பதில்லை, தந்தையையும் நினைப்பதில்லை, யாருடைய சிலைகளையும் (சித்திரங்களை) நினைப்பதில்லை. ஆகவே அவர்களை பூஜைக்குரியவர்கள் என்கிறார்கள். அங்கே சுகமே சுகம்தான். ஆகவே யாரையும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது நீங்கள் பாபாவின் நினைவினால் இவ்வாறு பூஜைக்குரிய தூய்மையாக மாறிக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு யாரையும் நினைவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளே... இப்போது ஆன்மீக ஆத்மா என்று கூற மாட்டார்கள். ரூஹ் மற்றும் ஆத்மா ஒன்று தான். ஆன்மீகக் குழந்தை களுக்கு ஆன்மீகத் தந்தை புரிய வைக்கிறார். முன்பு ஒருபோதும் ஆத்மாக்களுக்கு பரம்பிதா பரமாத்மா ஞானம் கொடுக்கவில்லை. ஒரே ஒரு முறை தான் கல்பத்தின் புருஷோத்தம யுகத்தில் நான் வருகிறேன் என்று பாபாவே கூறுகின்றார். முழு கல்பத்திலும் சங்கமயுகத்தைத் தவிர பாபா வேறு ஒரு போதும் வருவதில்லை. இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. பக்தி முடியும் போது பாபா சங்கமத்தில் தான் வருகிறார். மேலும் குழந்தைகளுக்கு பாபா ஞானம் அளிக்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள். இது நிறைய குழந்தைகளுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால் மிகவும் எளிது. ஆனால் புத்தியில் சரியாகப் பதிவதில்லை. எனவே அடிக்கடி புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார். புரிய வைத்தாலும் புரிந்துக் கொள்வதில்லை. பள்ளியில் டீச்சர் பனிரெண்டு மாதம் படிக்க வைக் கிறார்கள், இருந்தாலும் ஒரு சிலர் தேர்ச்சி அடைவதில்லை. இந்த எல்லையற்ற தந்தை கூட தினந்தோறும் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார். இருப்பினும் ஒரு சிலருக்கு தாரணை ஆகிறது. ஒரு சிலர் மறந்து விடுகிறார்கள். முக்கியமான விஷயம் தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினையுங்கள் என்பது புரிய வைக்கப்படுகிறது. என்னை மட்டும் நினையுங்கள் என்று தந்தை தான் கூறுகிறார், வேறு எந்த மனிதரும் ஒரு போதும் இவ்வாறு கூற முடியாது. பாபா நான் ஒரு முறை தான் வருகிறேன் என்கிறார். கல்பத்தின் முடிவில் சங்கமத்தில் ஒரே ஒரு முறை குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கிறேன். நீங்கள் தான் இந்த ஞானத்தை அடைகிறீர்கள். வேறு யாரும் அடைவதில்லை. பிரஜா பிரதா பிரம்மா வின் வாய் வழி பிராமணர்கள் தான் இந்த ஞானத்தைப் புரிந்துக் கொள்ள முடியும். போன கல்பத்திலும் கூட பாபா இந்த சங்கமயுகத்தில் தான் இந்த ஞானத்தைக் கூறினார். பிராமணர் களாகிய உங்களுக்குதான் இந்த நடிப்பு இருக்கிறது. இந்த வர்ணங்களில் நிச்சயம் சுழல வேண்டும். மற்ற தர்மத்தினர் இந்த வர்ணங்களில் வருவதில்லை. பாரதவாசிகள் தான் இந்த வர்ணங்களில் வருகிறார்கள். பாரத வாசிகள் தான் பிராமணர்களாகவும் ஆகிறார்கள். ஆகவே பாபா பாரதத்தில் வர வேண்டியிருக்கிறது. நீங்கள் தான் பிரஜா பிதா பிரம்மாவின் வாய் வழி வம்ச பிராமணர்கள். பிராமணர்களுக்குப் பிறகு தேவதைகள் மற்றும் சத்திரியர்கள் இருக்கிறார்கள். சத்திரியர்கள் யாரும் உருவாவதில்லை. உங்களை பிராமணர்களாக மாற்றுகிறேன். பிறகு நீங்கள் தேவதையாகிறீர்கள். பிறகு மெல்ல மெல்ல கலைகள் குறையும் போது அவர்கள் சத்திரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சத்திரியர்களாக தானாகவே மாறுகிறார்கள். தந்தை வந்து பிராமணர்களாக மாற்றுகிறார். பிறகு பிராமணலிருந்து தேவதையாக பிறகு அவர்களே சத்திரியர் களாக ஆகிறார்கள். மூன்று தர்மங்களையும் ஒரே ஒரு தந்தை தான் இப்போது ஸ்தாபனை செய்கிறார். சத்யுகம் திரேதாவில் மீண்டும் வருவார் என்பதல்ல. மனிதர்கள் புரிந்துக் கொள்ளா ததால் சத்யுகம் திரேதாவில் வருகிறார் என்கிறார்கள். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. நான் ஒரு முறை தான் கல்பத்தின் சங்கமத்தில் வருகிறேன் என பாபா கூறுகின்றார். உங்களை நான் தான் பிரஜா பிதா பிரம்மா மூலமாக மாற்றுகிறேன். நான் பரந்தாமத்திலிருந்து வருகிறேன் சரி, பிரம்மா எங்கிருந்து வருகிறார். பிரம்மா 84 பிறவிகளை எடுக்கிறார். நான் எடுப்பதில்லை. பிரம்மா சரஸ்வதி தான் விஷ்ணுவின் இரண்டு வடிவமான லஷ்மி நாராயணனாக மாறுகிறார்கள். அவரே 84 பிறவிகளை எடுக்கிறார். பிறகு அவரின் பல பிறவிகளின் கடைசியில் பிரவேசம் செய்து இவரை பிரம்மாவாக மாற்றுகிறேன். இவரின் பெயர் பிரம்மா என நான் வைக்கிறேன். இது இவருடைய பெயர் கிடையாது. குழந்தைகள் பிறந்ததும் ஆறாவது நாள் சடங்கு, பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். இவரின் ஜாதகப் பெயர் லேக்ராஜ். அது சிறு வயதினுடையதாகும். இவருக்குள் பாபா சங்கமத்தில் பிரவேசமாகியதும் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இருப்பினும் வான பிரஸ்த நிலையில் இருக்கும் போது பெயரை மாற்றுகிறார்கள். அந்த சன்னியாசி கள் வீடு வாசலைத் துறந்து செல்லும் போது பெயர் மாறுகிறது. இவரோ வீட்டில் தான் இருக்கிறார். இவரின் பெயர் பிரம்மா என வைக்கப்பட்டது. ஏனென்றால் பிராமணர்கள் வேண்டும் அல்லவா. உங்களை தன்னுடையவராக மாற்றி பவித்ர பிராமணனாக மாற்றுகிறார். தூய்மை யானவர்களாக மாறுகிறீர்கள். நீங்கள் பிறந்திதலிருந்தே தூய்மையாக இருக்கிறீர்கள் என்பது கிடையாது. உங்களுக்கு தூய்மையாவதற்கான போதனைகள் கிடைக்கிறது. எப்படி தூய்மை யாவது என்பதே முக்கிய விஷயம் ஆகும்.

 

பக்தி மார்க்கத்தில் ஒருவர் கூட பூஜைக்குரியவர் இல்லை என நீங்கள் அறிகிறீர்கள். மனிதர்கள் குருக்களுக்கு தலை வணங்குகிறார்கள். ஏனென்றால் வீடு வாசலை விட்டு தூய்மை யாகிறார்கள். மற்றபடி அவர்களை பூஜைக்குரியவர் என்று கூற முடியாது. பூஜைக்குரியவர் என்றால் அவர்கள் யாரையும் நினைக்க மாட்டார்கள். சன்னியாசிகள் பிரம்ம தத்துவத்தை நினைக்கிறார்கள் அல்லவா? பிரார்த்தனை செய்கிறார்கள். சத்யுகத்தில் யாரையும் நினைப்பதில்லை. நீங்கள் ஒருவரைத் தான் நினைக்க வேண்டும் என்று பாபா இப்போது கூறுகின்றார். அது பக்தியாகும். உங்களுடைய ஆத்மா குப்தமாக இருக்கிறது. ஆத்மாவை யாரும் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. சத்யுகம் திரேதாவில் கூட சரீரதாரிகள் தங்களின் பெயரோடு நடிக்கிறார்கள். பெயர் இல்லாமல் நடிகராக இருக்க முடியாது. எங்கிருந்தாலும் சரீரத்திற்கு என்று பெயர் நிச்சயம் இருக்கிறது. பெயர் இல்லாமல் எப்படி நடிப்பார்கள்? தாங்கள் வந்தால் நாங்கள் தங்களை எங்களுடையவராக மாற்றிக் கொள்வோம், வேறு யாரும் வேண்டாம் என பக்தி மார்க்கத்தில் பாடுகிறார்கள். நாங்கள் உங்களுடையவராக மாறுவோம் என ஆத்மா கூறுகிறது. பக்தி மார்க்கத்தில் யாரெல்லாம் தேகதாரிகள் இருக்கிறார்களோ, யாருடைய பெயர் வைக்கப் படுகிறதோ அவர்களை நாம் பூஜிப்பதில்லை. எப்போது தாங்கள் வருகின்றீர்களோ அப்போது தான் தங்களிடம் அர்ப்பணம் ஆவோம். எப்போது வருவார். இது தெரியவில்லை. பல தேகதாரிகள், பெயர் உடையவர்களுக்கு பூஜை செய்துக் கொண்டே இருக்கிறார்கள். அரைக் கல்பத்தில் பக்தி முடிவடையும் போது பாபா வருகிறார். நீங்கள் பல பிறவிகளாக நாங்கள் உங்களைத் தவிர வேறு யாரையும் நினைக்க மாட்டோம் என்று கூறி வந்தீர்கள் என கூறுகின்றார். தனது தேகத்தையும் நினைக்கக் கூடாது. ஆனால் என்னைப் பற்றித் தெரியவில்லை. எனவே எப்படி நினைப்பீர்கள். இப்போது பாபா அமர்ந்து குழந்தைகளுக்கு இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! தன்னை ஆத்மா என புரிந்துக் கொண்டு தந்தையை நினையுங்கள் என புரிய வைக்கிறார். தந்தையே பதீத பாவனர், அவரை நினைவு செய்வதால் நீங்கள் தூய்மையாக சதோபிரதானமாக மாறுவீர்கள். சத்யுகம் திரேதாவில் பக்தி செய்வதில்லை. நீங்கள் யாரையும் நினைப்பதில்லை. தந்தையையும் நினைப்பதில்லை, சித்திரங்களையும் நினைப்பதில்லை. அங்கேயோ சுகமே சுகமாக இருக்கிறது. எவ்வளவு நீங்கள் நெருக்கத்தில் வருகிறீர்களோ அவ்வளவு கர்மாதீத் நிலையை அடைகிறீர்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். சத்யுகத்தில் புது உலகம் புதிய கட்டிடத்தில் நிறைய குஷி இருக்கிறது. பிறகு 25 சதவீதம் பழையதாகிறது என்றால் சொர்க்கமே மறந்து போகிறது. உங்களுடையவராக மாறுவோம், நீங்கள் சொல்வதையே கேட்போம் என நீங்கள் பாடினீர்கள் என பாபா கூறுகின்றார். எனவே நிச்சயம் தாங்கள் பரமாத்மாவைத் தான் கூறினீர்கள் அல்லவா? ஆத்மா, பரமாத்மா தந்தைக்காக தான் கூறுகின்றது. ஆத்மா சூட்சும புள்ளியாக இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு தெய்வீக பார்வை வேண்டும். ஆத்மாவைப் பார்க்க முடியாது. ஆத்மாக்களாகிய நாம் எவ்வளவு சிறிய புள்ளியாக இருக்கிறோம். இவ்வாறு புரிந்துக் கொண்டு நினைப்பது மிகக் கடினம் ஆகும். ஆத்மாவின் காட்சிக்காக முயற்சி செய்வதிலை, பரமாத்மாவின் காட்சிக் காக முயற்சி செய்கிறார்கள். அவர் ஆயிரம் மடங்கு சூரியனைப் போன்று இருப்பதாக கேள்விப் பட்டிருக்கின்றனர். யாருக்காவது காட்சிகள் கிடைத்தது என்றால் மிகவும் பிரகாசமாக இருந்தது என்று கூறுகிறார்கள். ஏனென்றால் அவ்வாறே கேள்விப்பட்டிருக்கிறார்கள். யாரை தீவிரமாக பக்தி செய்கிறார்களோ அவரையே பார்ப்பார்கள். இல்லை என்றால் நம்பிக்கை ஏற்படாது. ஆத்மாவையே பார்க்கவில்லை என்றால், பரமாத்மாவை எப்படி பார்ப்பார்கள் என பாபா கூறுகின்றார். ஆத்மாவை எப்படிப் பார்க்க முடியும்? மற்ற அனைவருக்கும் சரீரத்தின் சித்திரம் இருக்கின்றது. பெயர் இருக்கிறது, ஆத்மா புள்ளியாக இருக்கிறது. மிகச் சிறியதாக இருக்கிறது. அதை எப்படி பார்ப்பது. மிகவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த கண்களினால் பார்க்க முடியாது. ஆத்மாவிற்கு ஞானத்தின் அவ்யக்த கண்கள் கிடைத்திருக்கின்றது.

 

ஆத்மாக்களாகிய நாம் எவ்வளவு சிறியதாக இருக்கின்றோம், ஆத்மாவாகிய எனக்குள் 84 பிறவிகளின் பாகம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது, அதை நான் திரும்ப நடிக்க வேண்டும் என நீங்கள் அறிகிறீர்கள். உயர்ந்தவர்களாக மாறுவதற்கு பாபாவின் ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. அதன் படி நடிக்க வேண்டும். நீங்கள் தெய்வீக குணங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பாடு, குடித்தல் ராயலாக இருக்க வேண்டும். நடத்தை மிகவும் ராயலாக இருக்க வேண்டும். நீங்கள் தேவதையாகிறீர்கள். தேவதைகள் பூஜைக்குரியவராக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் யாரையும் பூஜை செய்வதில்லை. அவர்களோ டபுள் கிரீடம் உடையவர்கள் அல்லவா? இவர்கள் யாரையாவது பூஜித்தால் பூஜாரி ஆகிவிடுவார்கள் அல்லவா? சத்யுகத்தில் யாரையும் பூஜிக்க வேண்டிய அவசியம் இல்லை ஆம், மற்றபடி ஒருவருக்கொருவர் நிச்சயம் மதிப்பு கொடுப்பார்கள். இவ்வாறு வணங்குவதே மதிப்பளித்தல் என்று கூறப்படுகிறது. மனதில் அவர்களை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது கிடையாது. மதிப்பு கொடுக்க வேண்டும். குடியரசு தலைவர் இருக்கிறார் என்றால், அனைவரும் மதிக்கிறார்கள். அவர் பெரிய பதவியில் இருக்கக் கூடியவர் என அறிகிறார்கள். வணங்க வேண்டியதில்லை. இந்த ஞான மார்க்கம் முற்றிலும் தனிப்பட்டது. இதில் தன்னை ஆத்மா என்று உணர வேண்டும். அதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என பாபா புரிய வைக்கிறார். சரீரத்தின் பெயரை நினைத்து விட்டீர்கள். பெயரின் அடிப்படையில் தான் வேலை செய்ய வேண்டும். பெயர் இல்லாமல் எப்படி ஒருவரை அழைப்பது? நீங்கள் சரீரத்தை எடுத்து உங்கள் பாகத்தை நடிக்கலாம். ஆனால் புத்தியின் மூலமாக சிவபாபாவை நினைக்க வேண்டும். கிருஷ்ணரின் பக்தர்கள் நாங்கள் கிருஷ்ணரைத் தான் நினைக்க வேண்டும் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் கிருஷ்ணரே கிருஷ்ணர் தான் தெரிகிறார் என்கிறார்கள். நானும் கிருஷ்ணன், நீயும் கிருஷ்ணன் என்கின்றனர். அடே, உங்களுடைய பெயர் தனி, அவர்களுடைய பெயர் தனி... அனைவரும் கிருஷ்ணரே கிருஷ்ணராக எப்படி இருக்க முடியும். அனைவரின் பெயரும் கிருஷ்ணராக இருக்க முடியாது. எது தோன்றுகிறதோ அதை கூறிக் கொண்டிருக்கிறார்கள். பக்தி மார்க்கத்தின் அனைத்து சித்திரங்களையும் மறந்து ஒரு தந்தையை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். சித்திரங்களை நீங்கள் பதீத பாவனர் என்று கூற முடியாது. அனுமான் போன்றோர் பதீத பாவனர் கிடையாது. பல சித்திரங்கள் இருக்கின்றது. யாரும் பதீத பாவனர் கிடையாது. சரீரம் இருக்கக்கூடிய எந்த தேவியாக இருந்தாலும் அவர்களை பதீத பாவனர் என்று கூற முடியாது. 6-8 கைகளை உடைய தேவிகளை தங்களின் புத்தியால் உருவாக்குகிறார்கள். இவர் யார் என்பது தெரியவில்லை. இவர் பதீத பாவனர் பாபாவின் வாரிசு உதவியாளர் என்பது யாருக்கும் தெரியவில்லை. உங்களுடைய ரூபமும் சாதாரணமாக இருக்கிறது. இந்த உடல் அழிந்து போகும். உங்களுடைய சித்திரம் மட்டும் இருக்கும் என்பது கிடையாது. இது அனைத்தும் அழிந்து போகும். உண்மையில் நீங்கள் தான் தேவிகள். சீதா தேவி, இந்த தேவி என்று பெயர் கூட வைக்கப்படுகிறது. ராம் தேவதா என்று கூற மாட்டார்கள். இந்த தேவி அல்லது ஸ்ரீமதி என்று கூறுகிறார்கள். அதுவும் தவறாகி விடுகிறது. இப்போது தூய்மையாவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பதீதத்திலிருந்து பாவனமாகுங்கள் என்று கூறப்படுகிறது. லஷ்மி நாராயணன் ஆகுங்கள் என்று கூறுவதில்லை. பதீதத்திலிருந்து பாவனமாக பாபா தான் மாற்றுகிறார். நரனிலிருந்து நாராயணனாகவும் அவர் மாற்றுகிறார். அவர்கள் பதீத பாவனர் என்று நிராகாரருக்கு கூறுகிறார்கள். மேலும் சத்திய நாராயணனின் கதையைக் கூறுபவர்கள் பிறகு வேறு யாரையோ காண்பிக்கிறார்கள். பாபா சத்திய நாராயணனின் கதையைக் கூறி அமரராக்குங்கள், நரனிலிருந்து நாராயணன் ஆக்குங்கள் என்று கூறுவதில்லை. தூய்மை யாக்குங்கள் என்று மட்டும் கூறுகிறார்கள். பாபா தான் சத்திய நாராயணனின் கதையைக் கூறி தூய்மையாக்குகிறார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு சத்தியமான கதையைக் கூறுகிறீர்கள். வேறு யாரும் அறியவில்லை. உங்களுக்குத் தான் தெரியும். உங்களுடைய வீட்டில் நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் போன்றோர் இருக்கலாம். ஆனால் அவர்களும் புரிந்துக் கொள்ள வில்லை. நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1. தன்னை சிறந்தவராக (சிரேஷ்டமானவராக) ஆக்கிக் கொள்ள பாபாவிடமிருந்து என்ன ஸ்ரீமத் கிடைத்திருக்கின்றதோ அதன்படி நடக்க வேண்டும். தெய்வீக குணங்களை நடைமுறைப் படுத்த வேண்டும். உணவு, நடத்தை அனைத்தும் உன்னதமாக (ராயலாக) இருக்க வேண்டும்.

 

2. ஒருவர் மற்றவரை நினைவு செய்யக் கூடாது. ஆனால் மரியாதை நிச்சயம் கொடுக்க வேண்டும். தூய்மையாவதற்காக முயற்சி செய்ய வேண்டும். மேலும் செய்விக்க வேண்டும்.

 

வரதானம்:

அனைத்துப் பொக்கிஷங்களையும் தேவையான நேரத்தின்படி (தேவையான நேரத்தில்) பயன்படுத்தி நிலையான மகிழ்ச்சியினை அனுபவம் செய்யக்கூடிய அதிர்ஷ்டசாலி ஆத்மா ஆகுக!

 

பாப்தாதா மூலமாக பிராமண பிறப்பு கிடைத்த உடனேயே முழு நாளுக்கான பல உயர்ந்த மகிழ்ச்சியின் பொக்கிஷங்கள் கிடைக்கின்றன. எனவே, உங்களுடைய பெயரிலிருந்தே இதுவரையிலும் பல பக்தர்கள் தற்கா கமாக (நிலையற்ற) மகிழ்ச்சியில் வந்துவிடு கின்றார்கள், உங்களுடைய சிலைகளைப் பார்த்து மகிழ்ச்சியில் நடனம் ஆடுகின்றார்கள். அப்படிப்பட்ட நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். அநேக பொக்கிஷங்கள் கிடைத்து இருக்கின்றன, ஆனால், தக்க சமயத்தில் (சரியான சமயத்தில்) மட்டும் பயன் படுத்துங்கள். சாவியை எப்பொழுதும் எதிரில் வையுங்கள் அதாவது சதா நினைவில் வையுங் கள். மேலும், நினைவு சொரூபத்தைக் கொண்டு வந்தீர்கள் என்றால், நிலையான மகிழ்ச்சியின் அனுபவம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

சுலோகன்:

தந்தையின் சிரேஷ்டமான ஆசைகளின் தீபத்தை ஏற்றி வைப்பவர்களே குல தீபம் (விளக்கு) எனப்படுவார்கள்.

 

ஓம்சாந்தி