BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY

 

ஓம் சாந்தி

தாதி ஜானகி வகுப்பு 3 மார்ச் 2015 - பாண்டவ பவன்

கேள்வி & பதில் (ஞானத்தில் 35-ஆண்டுகளும் அதற்கு மேற்பட்டவர்களும் பங்குபெறும் இரட்டை வெளிநாட்டவர்களின் ஒன்றுகூடல்)

கேள்வி: எங்களுடைய இன்றைய ஸ்திதியின் அஸ்திவாரமானது 35-ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளின் அடிப்படையில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது பற்றி இன்று காலை நாங்கள் பார்த்தோம். மற்றவர்கள் பகிர்ந்துகொண்ட போது, அந்த அனுபவங்கள் பாபாவின் மீது ஆழமான நம்பிக்கை மற்றும் பாபாவை பயன்படுத்தி எவ்வாறு பல சூழ்நிலைகளில் வெளிவந்தார்கள் என்பதாக இருந்தது. எனவே தாதி, நாம் எவ்வாறு பாபாவை நன்கு பயன்படுத்துவது?

பதில்: நாம் நேற்று மௌனத்தில் அமர்ந்திருந்தோம், குறிப்பாக அந்த அமைதியில் பாபாவிடமிருந்து சக்தி பெறுவதாக இருந்தது. இந்த உணர்வு உங்களுக்கும் இருந்திருக்கலாம். ஒரு மகா வீரர் (மஹாவீர்) இருக்கின்றார், அவர் யானை மீது சவாரி செய்பவராக (Maharati) இருக்கின்றார். மஹாவீர் என்பவர், ஒரு மகா வீரர் ஆவார், இந்த ஒருவர் அனுமன் போன்று வாலை சுற்றி, ஆட்டுவார், அதன் மூலம் சேவை செய்கின்றார். இது ஒரு அதிசயம்! அனுமன் என்ன செய்கின்றார்? அவர், இராவணனை அழிக்கிறார் மற்றும் ராம் எப்படி, என்று இராவணனுக்கு காட்டுகின்றார். அவர் என்னுடைய ராம் என்று கூறுகின்றார். இன்றைய முரளியில் பாபா இதை நன்றாக விளக்கினார். நாம் 'என்னுடைய ராம்' என்ற ஆழமான உணர்வு இதயத்தில் வைத்திருக்கும் போது, அதிர்வுகளை உருவாக்க, வாயுமண்டலத்தை உருவாக்க, காற்றில் அந்த உணர்வுகளை உருவாக்க நம்முடைய வாலை நாம் சுற்றுகின்றோம்.

இங்கே இந்த மூன்று வடிவங்களில் நாம் சேவை செய்துகொண்டு இருக்கின்றோம். எனவே யார் அவர்களை ஒரு மஹாவீர் என்று கருதுகிறார்கள்? தூய்மை 100% இருக்க வேண்டும். சிறிதளவு கூட, சாதாரண சிந்தனை வெளிப்பட கூடாது, இந்த அளவிற்கு துல்லியமாக இருக்க வேண்டும். 100% நம்பிக்கையும் இருக்க வேண்டும், அதன் பின்னர் பாபா அதற்கு சக்தி அளிப்பார். தூய்மை, சத்தியத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு பொறுமை என்பது இருக்கிறது, மேலும் நீங்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்கின்றீர்கள். மனிதனே 'பொறுமையாக இரு, மகிழ்ச்சியான உன்னுடைய நாட்கள் விரைவில் வரவிருக்கின்றது என்று கூறிப்படுகிறது. ஒரு சிறிய அளவு கூட துக்கத்தை எடுத்துக்கொள்ளாதீர்கள்.

பாபா, மம்மா அவர் உடல் விட்டுவிட்ட பின்னர் மம்மாவின் படுக்கையில் என்னை தூங்க சொன்னார். நான் பாபாவின் நினைவில் அங்கு அமர்ந்திருந்தேன், திடீரென பாபா என் முன் இருந்த கதவின் பக்கத்தில் நின்றிருந்தார். நான் என்னுடைய அட்டவணையை, பார்க்கின்றேனா என்று பாபா என்னை கேட்டார். என்னுடன் சாப்பிடு என்று என்னை அழைத்தார். அந்த நாட்களில், பாபாவுடன் சாப்பிட அழைப்பு கிடைப்பது எளிதல்ல.

இந்த (meditation hall) தியான மண்டபம் அற்புதமாக இருக்கின்றது. பாபா அவ்யக்த் ஆன பிறகு அது கட்டப்பட்டது. (history hall) வரலாறு மண்டபம் சாக்கார் பாபா நாளில் இருந்தது. நாம் எல்லோரும் பாபாவின் அறை முன்பு இருந்தது போன்ற எல்லாவற்றையும் அனுபவம் செய்கின்றோம். வெவ்வேறு இடங்களுக்கு செல்லுங்கள் ... நாம் எங்கே அமர்ந்திருக்கின்றோம்? இது நம்பிக்கைக்கான ஒரு விஷயம் அல்ல ஆனால் அது நடைமுறை ஆகும். பாபா வகுப்பிற்கு சென்றார், நீ துக்கம் எடுத்துக் கொள்ள மாட்டாய் என்று நம்புகிறேன் என்றார். நான் துக்கம் எடுத்துக்கொள்வதும் இல்லை யாருக்கும் துக்கம் கொடுப்பதும் இல்லை என்று கூறினேன். இங்கு அமர்ந்திருக்கும் யாருக்காவது நான் துக்கம் கொடுத்திருக்கின்றேனா? நீங்கள் அனைவரும் என்னுடைய சகவாசிகள். மஹாவீர் மூன்றாவது கண்கள் மூலம் பார்க்கின்றார். மூன்று உலகங்களில் வலம் வருகின்றார்.

கேள்வி: தாதி, பாபாவுடன் சாப்பிடுவதற்கு ஒரு அழைப்பை கிடைப்பது கடினமான ஒரு என்று கூறினீர்கள்? இது ஏன் அப்படி?

பதில்: அது பாபாவை இனங்கண்டுகொள்வதை பற்றிய ஒரு விஷயம் ஆகும். பாபா யார்நீங்கள் யாருடன் சாப்பிடுகிறீர்கள்? ஒவ்வொரு முரளியிலும், சிவ் பாபா (recognition) அங்கீகாரத்தை கொடுக்கின்றார், பிரம்மா பாபாவை பின்பற்ற சொல்கின்றார். ஒரு மஹாவீர் என்பவரின் திருஷ்டியில், மனோபாவத்தில், விழிப்புணர்வில் தரம் எனது இயற்கையாக இருக்கிறது. திருஷ்டியின்  அடித்தளமாக இருப்பது, உள்ளார்ந்த மனோபாவமாகும், இது முற்றிலும் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் விழிப்புணர்வில் வரும்போது, மனதின் மனோபாவமானது இத்தகைய எண்ணங்களை உருவாக்குகின்றது. பாபா மிகவும் அன்புடன் தோளி கொடுப்பார். நீங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், வெற்றி உடையவர்கள். ஒரே ஒரு 108 மணி மாலை இல்லை, மாலைகளுக்கு மேல் மாலைகள் இருக்கின்றன என்று பாபா ஒரு முறை கூறினார்.

கேள்வி: தாதி அந்த பரிபூரணமான சத்தியத்தில், அதாவது பாபா யார் மற்றும் நாம் யார் போன்றவற்றில் உங்களுக்கு இருக்கும் ஒட்டு மொத்தமான அஸ்திவாரத்திற்கு நம்மையும் கொண்டு செல்கின்றீர்கள் சில நேரங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு வழிமுறைகளில் மக்கள் சத்தியத்தை பற்றியும் ஞானத்தை பயன்படுத்துவதை பற்றியும் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளார்கள். நாம் அனைவரும் சத்தியத்தின் ஒரே அதிர்வலைகளில் இருக்கும் போது தந்தை வெளிப்படுத்தப்படுவார் என்று பாபா கூறுகின்றார். எவ்வாறு நாம் அனைவரும் நமக்கிடையே எந்த வித்தியாசமும் இல்லாத ஒரே அதிர்வலைகளை உடைய அந்த சத்தியத்தை நாம் அனைவரும் வாழ்கின்றோம் என்ற ஒரு புரிந்துணர்விற்கு வருவது?

பதில்: நீங்கள் இது போன்ற ஒரு ஒன்றுகூடலை பார்க்கமுடியாது. இது எப்பொழுதாவது நடந்திருக்கிறதா? இது எப்படி திட்டமிடப்பட்டது என்பது எனக்கு தெரியாது! ஒரு நிமிடத்தில் நான் இங்கு வருமாறு கேட்டு கொள்ளபட்டேன்! என்னை பாபா எங்கெங்கு வைக்கிறாரோ அங்கு நான் இருக்கிறேன். உங்களுடைய சித்தில் (chit) நடந்துமுடிந்த எதையும் வைத்திருக்காதீர்கள். அதே வேளையில் எதிர்காலத்தை பற்றி (Hopes) நம்பிக்கைகளையும் அல்லது (expectation) எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக்கொள்ளாதீர்கள். இது இயல்பாக இருப்பதற்கான வழியாகும். என்ன நடந்ததோ அது முடிந்துவிட்டது. நான் நேற்று சொன்னது அல்லது சொல்லாதது அது முடிந்து விட்டது. சித் (chit) மற்றும் சிந்திப்பதற்கு இடையே என்ன வேறுபாடு உள்ளது? நாம் எவ்வாறு சிந்திக்கின்றோமோ அது நம்முடைய சித்தில் (chit) இருந்து விடுகிறது. கடைவது, சிந்தனை செய்வது, ஆழமாக கடைவது மற்றும் கருத்தாய்வு உள்ளது. கடவுள் பற்றி ஆழமான சிந்தனையில் இருக்கும் போது, மரணம் என்பது உங்களை பற்றிக்கொள்ள வாய்ப்பு இல்லை.

 நீங்கள் பிரம்மா பாபாவை பார்த்திருந்தால் உங்கள் கையை உயர்த்துங்கள். வெகு சிலர்தான். இது நாடகம். சகோதரிகள் சந்திரிகாவும் வேதாந்தியும் தான் அகமதாபாத்திலிருந்து வந்த முதல் சகோதரிகள் ஆவார்கள். அவர் சாஸ்திரங்களை படித்திருந்ததால், பாபா, வேதாந்தி என்று அவருக்கு பெயர் கொடுத்தார்.

நாம் பாபா பற்றி அனைத்து விஷயங்களையும் நினைவு செய்யும் போது, நாம் நேற்று நடந்த விஷயங்களை பற்றி மறந்துவிடுவோம். நாம் நம்முடைய ஆரம்ப நாட்களை நினைவு செய்கின்றோம். மம்மா உடலை விட்டபோது தீதியும் தாதியும் இருந்தார்கள், நான் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள். முழு உலகமும், என்னுடைய கைகளில் இருக்கின்றது. நான் மற்ற அனைத்து வெவ்வேறு இடங்களையும் மறந்துவிடுகின்றேன். என்னை வெளிநாட்டுகளுக்கு அனுப்பியது பாபாவின் அற்புதம். நேரத்திற்கு ஏற்ப நான் பல்வேறு இடங்களுக்கு சென்றேன்.

என்னுடைய லௌகீக தாய்க்கு சந்தேகம் கொள்ளும் ஒரு பழக்கம் இருந்தது. நாங்கள் நான்கு மகள்களும் ஒரு மகனும் இருந்தோம். நாங்கள் பாக்கிஸ்தானிலிருந்து இங்கு வந்தால் நன்றாக இருப்போமா என்று அவர் வியப்புறுவார். 15 வயதிலிருந்து, பாபா என்னை அவருக்கு எழுதுமாறு கூறினார். அவர் என்ன எழுதவேண்டும் என்றும் என்னிடம் கூறினார்.

பம்பாயில் நாங்கள் (economy & eknami) அதாவது சிக்கனமாக இருப்பதை பற்றியும் ஒரே ஒருவரை பற்றிய பாடத்தையும் கற்றுக்கொண்டோம். நான் பம்பாயின் ஒவ்வொரு மையத்திலும் கால் வைத்திருக்கின்றேன். நான் மையங்களுக்கு டிராம் (tram) மூலம் பயணம் செய்வேன். அப்போது உண்மை என்ன என்று மக்களுக்கு விளக்கமளிப்பேன். பலர் இதனால் விழிப்படைந்தார்கள். நம்பிக்கையை பாபா நமக்குள் பறைசாற்றி இருக்கின்றார்.

பலர் கதைகளை வைத்திருக்கின்றார்கள். சாக்கார் பாபா அவ்யக்தமானார் அவர் எவ்வாறு நம் அனைவருக்கும் பாலனை அளித்தார்! இது ஒரு அதிசயம்!

கேள்வி: நாங்கள் முதன்முதலில் மதுபன் வந்தபோதும் இப்போதும் கூட, தாதிகளின் மனதில் ஒரே ஒரு விஷயம், அதாவது சாக்கார் பாபா கொடுத்திருக்கும் அந்த பாலனையை கொடுக்கவேண்டும் என்ற உணர்வு இருப்பதாக உணர்கின்றோம். இது சரியாஇது நாள்வரை இது உண்மையா?

பதில்: பாபா எங்களுக்கு கொடுத்த பாராமரிப்பு மிக ஆழமாக எங்களுக்குள் இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே, பாபா எங்களுக்கு அப்பேற்பட்ட பராமரிப்பை அளித்தார், அது ஆழமாக எங்கள் எலும்புகளில் கூட இருப்பதால் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கின்றோம். நீங்கள் இது பற்றி கேட்க வேண்டும் என்றால், இதை என்னிடம் கேளுங்கள்!

கேள்வி: அடுத்த தலைமுறையினர் உண்மையில் இதை அனுபவம் செய்யமுடியுமா?

பதில்: பாபா எங்கள் இதயங்களை வென்று இருக்கிறார். நாங்கள் ஐம்புலன்களையும் வெற்றி கொண்டிருக்கின்றோம். (attraction, attachment or desire) கவர்ச்சி, பற்று அல்லது ஆசை இல்லை. நீங்கள் அனைவரும் இதனை அறிவீர்கள், மேலும் அடையாளம் கண்டுகொள்கிறீர்கள். நாம் கருவிகளாக்கப்பட்டிருப்பது நம்முடைய அதிர்ஷ்டமாகும். ஒவ்வொருவரும் ஒன்று அல்லது மற்றொரு இடத்திற்கு  கருவியாக இருப்பது. தூய்மையும் பொறுமையும் இருக்கிறது, ஒருபோதும் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் என்று ஒப்பிட்டு பார்ப்பதில் வராதீர்கள், சப்தமாக பேசாதீர்கள். இவர்கள் தான் பாபாவுடன் அமர்ந்து சாப்பிட கூடியவர்கள். சிறிது கூட ஆணவம் இல்லாமல் இருப்பவர்கள். அதன் பின்னர் இனிமை இருக்கின்றது.

கேள்வி: தாதி, வாயுமண்டலம், அதிர்வலைகள் மற்றும் காற்றை பற்றி பேசினீர்கள்? இவற்றிக்கு இடையில் என்ன வேறுபாடு உள்ளது?

பதில்: என்ன வித்தியாசம் உள்ளது? வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது காற்றில் சுற்றி வருகிறது. என்ன வார்த்தைகள் சுற்றி வருகின்றனவோ, அவை உணர்வுகளை உருவாக்குகின்றது. உறுதியான பிராமணர்களால் இதை உருவாக்க முடியும். உள்ளுக்குள் (conflict) முரண்பாடுகள் உள்ளவர்கள் வெள்ளி யுகத்தை சார்ந்தவர்கள். கவலைப்படுபவர்கள் செம்பு யுகத்தை சார்ந்தவர்களும் சூத்திரர்களும் ஆவார்கள். கடவுள் அவர்களை பாதுகாக்கின்றார் என்று நாம் நம்புகின்றோம். அதனால் என்ன பேசப்படுகின்றதோ அது காற்றில், ஆகாய வெளியில் செல்கின்றது, வாயுமண்டலத்தில் செல்கின்றது. அதிர்வலைகள் வெகு தொலைவிற்கு செல்கின்றது. நாம் கொண்டிருக்கும் இந்த கலந்துரையாடல் தொழில்நுட்பத்தின் மூலம் வெகு தூரம் செல்லும்.

பாபா இன்றைய முரளியில் அழிவு பற்றி பேசினார். ஒரு மிக நல்ல நெருங்கமான ஆத்மா இருந்தார். பாபா நீங்கள் ஓரிரு வருடங்களில் அழிவு வந்துவிடும் என்று கூறினீர்கள் என்று அவர் பாபாவிடம் கூறினார். அவரை பார்த்து பாபா சொன்னார்: இன்று அழிவு இருக்கும், பாபா அதற்கு உங்களை தயார் படுத்துகின்றார் என்று கூறினார். அவரில் இருந்த ஒரு சந்தேகமானது பெரும் தீங்கை ஏற்படுத்தியது. இந்த சிந்தனையானது பின்னர் வெகு தொலைவிற்கும் பல இடங்களையும் அடைந்தது. எனவே நாம் மக்கள் பேசுகின்ற விஷயங்களை பற்றியும் அவர்கள் நடந்துக்கொள்வது பற்றியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அழிவு என்பது பேசுவதற்கு மிகவும் இக்கட்டான ஒரு விஷயமாகும். நீங்கள் அனைவரும் மகாரத்திகள் என்பதை என்னால் பார்க்க முடிகின்றது. அதன் பின்னர் குதிரை மீது சவாரி செய்யும் குதிரைப்படை உள்ளது. அதன் பின்னர் காலாட்படை உள்ளது.

இப்போது நாம் மௌனத்தில் அமரலாம்.

 

ஓம் சாந்தி