29.03.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

29.03.2020 காலை முரளி ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ் 16.12.1985 மதுபன்

________________________________________________________________________________________________

 

வலது கரமாக எப்படி ஆவது?

 

இன்று பாப்தாதா தம்முடைய அநேக புஜங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். 1. புஜங்கள் எப்போதுமே பிரத்யட்ச (வெளிப்படையான) கர்மம் செய்வதற்கான ஆதாரமாகும். ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய புஜங்களின் மூலமாகத் தான் கர்மம் செய்கிறது. 2. புஜங்கள் சகயோகத்தின் அடையாளம் என்றும் சொல்லப் படுகிறது. சகயோகி ஆத்மா வலது கரம் எனச் சொல்லப் படுகிறார். 3. புஜங்கள் சக்தி ரூபத்திலும் காண்பிக்கப் படுகிறது. எனவே புஜபலம் எனச் சொல்லப்படுகிறது. புஜங்களுக்கு இன்னும் விசேஷங்கள் உள்ளன. 4. புஜம் என்றால் கை - சிநேகத்தின் அடையாளம். அதனால் சிநேகத்தினால் சந்திக்கும் போதெல்லாம் கை கொடுத்துக் கொள்கின்றனர். புஜங்களின் விசேஷ சொரூபம் முதலாவது சொல்லப்பட்டது - சங்கல்பத்தைக் கர்மத்தில் பிரத்யட்சம் செய்வது. நீங்கள் அனைவரும் பாபாவின் புஜங்கள். ஆகவே இந்த நான்கு விசேஷங்களும் தங்களிடம் காணப்படுகின்றனவா? இந்த நான்கு விசேஷங்கள் மூலமாகவும் தன்னைத்தான் அறிந்து கொள்ள முடிகிறதா - நான் எத்தகைய புஜம் என்று? நீங்கள் அனைவருமே புஜங்கள் தாம், ஆனால் வலது புஜமா, இடது புஜமா என்பதை இந்த விசேஷங்கள் மூலம் சோதித்துப் பாருங்கள்.

 

முதல் விஷயம் பாபாவின் ஒவ்வொரு சிரேஷ்ட சங்கல்பத்தை, சொல்லை, கர்மத்தில், அதாவது நடைமுறை வாழ்க்கையில் எது வரை கொண்டு வந்திருக்கிறீர்கள்? கர்மம் அனைவருக்குமே வெளிப்படையாகத் தெரியும் (பிரத்தியட்சமாக). சகஜமான விஷயமாகும். கர்மத்தை அனைவரும் பார்க்க முடியும் மற்றும் சகஜமாக அறிந்து கொள்ள முடியும் அல்லது கர்மத்தின் மூலமாக அனுபவம் செய்ய முடியும். எனவே அனைவருமே இதைத் தான் சொல்கின்றனர் - எல்லாருமே சொல்லத்தான் செய்கின்றனர், ஆனால் செய்து காட்டுங்கள். பிரத்யட்ச கர்மத்தில் பார்த்தால் தான் ஏற்றுக் கொள்வார்கள், இவர்கள் சொல்வது சத்தியம் என்று. ஆக, கர்மம் என்பது, சங்கல்பத்துடன் கூடவே பேச்சையும் கூட பிரத்யட்ச பிரமாண ரூபத்தில் தெளிவு படுத்தக் கூடியதாகும். அத்தகைய வலது கரம் அல்லது வலது புஜம் ஒவ்வொரு கர்மத்தின் மூலமும் பாபாவைப் பிரத்யட்சம் செய்து கொண்டிருக்கிறதா? வலது கரத்தின் விசேஷம் - அதன் மூலம் சதா சுப மற்றும் சிரேஷ்ட கர்மங்கள் செய்யப்படுகின்றன. வலது கரம் செய்யும் கர்மத்தின் வேகம் இடது கரத்தை விடவும் தீவிரமாக இருக்கும். ஆக, அது போல் சோதித்துப் பாருங்கள். சதா சுப மற்றும் சிரேஷ்ட கர்மம் தீவிர கதியில் நடைபெறுகின்றனவா? சிரேஷ்ட கர்மதாரி வலது கரமாக இருக்கிறோமா? இந்த விசேஷங்கள் இல்லை என்றால், தானாகவே இடது கரமாகிறது. ஏனென்றால் உயர்ந்தவரிலும் உயர்ந்தவராகிய தந்தையைப் பிரத்தியட்சம் செய்வதற்கு நிமித்தமாக இருப்பது உயர்ந்ததிலும் உயர்ந்த கர்மம் ஆகும். ஆன்மிக திருஷ்டி மூலமாயினும் சரி, தன்னுடைய குஷியின் ஆன்மிக முகத்தின் மூலமாக என்றாலும் சரி, பாபாவைப் பிரத்யட்சம் செய்யுங்கள். இதுவும் கர்மம் தான். ஆக, அந்த மாதிரி சிரேஷ்ட கர்மதாரியாக ஆகி இருக்கிறீர்களா?

 

இதே விதமாக பூஜம் (கரம்) என்றால் சகயோகத்தின் (உதவி) அடையாளம். ஆக, சோதித்துப் பாருங்கள், ஒவ்வொரு சமயம் பாபாவின் காரியத்தில் சகயோகியாக இருக்கிறோமா? உடல்-மனம்-செல்வம் மூன்றின் மூலமாகவும் சதா சகயோகியா? அல்லது அவ்வப்போது மட்டும் சகயோகியா? எப்படி லௌகிக் காரியத்தில் சிலர் முழு நேரம் காரியம் செய்பவராக உள்ளனர். சிலர் கொஞ்ச நேரம் காரியம் செய்பவர்கள். அதில் வித்தியாசம் உள்ளது இல்லையா? அவ்வப்போது சகயோகியாக இருப்பவர்களின் பிராப்தி மற்றும் சதா சகயோகியாக இருப்பவர்களின் பிராப்திக்கிடையே வித்தியாசம் ஆகி விடுகிறது. எப்போது சமயம் கிடைத்ததோ, எப்போது ஊக்கம் வந்ததோ, அல்லது எப்போது மூடு (மனநிலை) வந்ததோ, அப்போது சகயோகி ஆவது. இல்லையென்றால் சகயோகிக்கு பதில் வியோகி (ஒத்துழைக்காதவர்) ஆகி விடுகின்றனர். ஆகவே சோதித்துப் பாருங்கள் மூன்று ரூபங்களிலும், அதாவது உடல்-மனம்-செல்வம் அனைத்து ரூபங்களிலும் பூர்ண சகயோகி ஆகியிருக்கிறீர்களா அல்லது பாதி தான் ஆகியிருக்கிறீர்களா? தேகம் மற்றும் தேகத்தின் சம்மந்தம் - அதில் அதிகமாக உடல்-மனம்- செல்வத்தை ஈடுபடுத்துகிறீர்களா அல்லது பாபாவின் சிரேஷ்ட காரியத்தில் ஈடுபடுத்துகிறீர்களா? தேகத்தின் சம்மந்தங்களின் ஈடுபாடு எவ்வளவு உள்ளதோ, அந்த அளவு தன்னுடைய தேகத்தின் ஈடுபாடும் அதிகமாக இருக்கும். அநேகக் குழந்தைகள் சம்மந்தத்தின் ஈடுபாட்டிலிருந்து கடந்து சென்று விடுகின்றனர். ஆனால் தேகத்தின் ஈடுபாட்டில் சமயம், சங்கல்பம், செல்வத்தை ஈஸ்வரிய காரியத்தில் அதிகமாக ஈடுபடுத்துகின்றனர். தனது தேகத்தின் ஈடுபாட்டினுடைய இல்லறமும் கூட பெரிய வலையாகும். இந்த வலையிலிருந்து அப்பாற்பட்டு இருக்கும் போது தான் வலது கரம் எனச் சொல்வார்கள். பிராமணராக மட்டும் ஆகி விட்டோம், பிரம்மாகுமார், குமாரி எனச் சொல்லிக் கொள்வதற்கு அதிகாரி (உரிமை) ஆகி விட்டோம் என்பதாலேயே சதா காலத்தின் சகயோகி எனச் சொல்ல முடியாது. ஆனால் இரண்டு ஸ்மிருதிகளில் இருந்தும் விலகியவராகவும், பாபாவின் காரியத்திற்கு அன்பானவராகவும் இருக்க வேண்டும். தேகத்தின் ஈடுபாட்டினுடைய விளக்கம் மிகவும் விஸ்தாரமானதாகும். இதைப்பற்றியும் பின்னால் தெளிவு படுத்துவோம். ஆனால் சகயோகியாக எது வரை ஆகியிருக்கிறோம்? இதை, தனக்குத் தானே சோதித்துப் பாருங்கள்.

 

மூன்றாவது விஷயம்

புஜம் என்பது சிநேகத்தின் அடையாளம். சிநேகம் என்றால் சந்திப்பு. எப்படி தேகதாரி ஆத்மாக்களின் தேகத்தின் சந்திப்பு கையோடு கை இணைக்க வேண்டி உள்ளது. அது போல் யார் வலது கரம் அல்லது வலது புஜமாக உள்ளனரோ, அவர்களின் அடையாளம் -- சங்கல்பத்தில் சந்திப்பு, பேச்சில் சந்திப்பு மற்றும் சம்ஸ்காரத்தில் சந்திப்பு. எது பாபாவின் சங்கல்பமோ, அது வலது கரமாக இருப்பவரின் சங்கல்பமாக இருக்கும். பாபாவுக்கு வீண் சங்கல்பங்கள் இருக்காது. சதா சக்திசாலி சங்கல்பம் தான் அடையாளமாகும். எப்படி பாபாவின் பேச்சு, சதா சுகம் தரும் பேச்சு, சதா இனிமையான பேச்சு உள்ளதோ, அது போல் சதா மகாவாக்கியமாக இருக்க வேண்டும், சாதாரணமானதாக இருக்கக் கூடாது. சதா அவ்யக்த பாவனை, ஆத்மிக பாவனை இருக்க வேண்டும். வியக்த பாவனையின் பேச்சு இருக்கக் கூடாது. இது தான் சிநேகம், அதாவது சந்திப்பு எனச் சொல்லப்படும். அதே போல் சம்ஸ்காரங்களின் சந்திப்பு (நல்ணக்கம்). எது பாபாவின் சம்ஸ்காரமோ, அது வலது கரமாக இருப்பவரின் சம்ஸ்காரமாக இருக்கும். ஆகவே சோதித்துப் பாருங்கள் -- அந்த மாதிரி சமமாக ஆக வேண்டும், அதாவது சிநேகி ஆக வேண்டும். இது எது வரை உள்ளது?

 

நாலாவது விஷயம்

புஜம் என்றால் சக்தி. ஆக, இதையும் சோதித்துப் பாருங்கள், எது வரை சக்திசாலி ஆகியிருக்கிறோம்? சங்கல்பம் சக்திசாலி, திருஷ்டி, விருத்தி சக்திசாலியாக எது வரை ஆகியிருக்கிறது? சக்திசாசங்கல்பம், திருஷ்டி மற்றும் விருத்தியின் அடையாளம் - அவர்கள் சக்திசாலியாக இருக்கும் காரணத்தால் யாரையும் பரிவர்த்தன் (மாற்றம்) செய்து விடுவார்கள். சங்கல்பத்தால் சிரேஷ்ட சிருஷ்டியைப் படைப்பார்கள். விருத்தியின் மூலம் வாயுமண்டலத்தை மாற்றியமைப்பார்கள். திருஷ்டி மூலம் அசரீரி ஆத்மா சொரூபத்தின் அனுபவம் செய்விப்பார்கள். ஆக, அத்தகைய சக்திசாலி புஜங்களாக இருக்கிறீர்களா? அல்லது பலவீனமாக இருக்கிறீர்களா? பலவீனம் இருக்குமானால் இடது கரம் ஆகிறார்கள். வலது கரம் எனச் சொல்லப்படுபவர்கள் யார் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா? நீங்கள் அனைவருமே புஜங்கள் தான். ஆனால் எத்தகைய புஜங்கள்? அதை இந்த விசேஷங்கள் மூலம் தன்னை அறிந்து கொள்ளுங்கள். வேறு யாராவது நீங்கள் வலது கரம் இல்லை எனச் சொல்வார்களானால் உறுதிப் படுத்தவும் செய்வார்கள், பிடிவாதமாகச் சொல்லவும் செய்வார்கள். ஆனால் தன்னைத் தான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இப்போது கூட தன்னை மாற்றிக் கொள்வதற்காகக் கொஞ்சம் சமயம் உள்ளது. கவனக்குறைவில் வந்து நானும் சரி தான் என்று நடந்து விடாதீர்கள். மனம் அரிக்கவும் செய்கிறது. ஆனால் அபிமானம் அல்லது கவனக்குறைவு பரிவர்த்தன் செய்வித்து முன்னேறச் செய்வதில்லை. எனவே இதிலிருந்து விடுபட்டு விடுங்கள். யதார்த்த ரீதியில் தன்னைச் சோதித்துப் பாருங்கள். இதில் தான் சுய நன்மை அடங்கியுள்ளது. புரிந்ததா? நல்லது.

 

சதா சுய மாற்றத்தில், சுய சிந்தனையில் இருக்கக் கூடிய, சதா தனக்குள் அனைத்து விசேஷங்களையும் சோதித்து, நிரம்பியவராக ஆகக்கூடிய, சதா இரண்டு செயல்பாடுகளிலும் இருந்து விலகியும், பாபா மற்றும் பாபாவின் காரியத்தில் அன்பானவராக இருக்கக் கூடிய, அபிமானம் மற்றும் கவனக்குறைவிலிருந்து சதா விடுபட்டு இருக்கக் கூடிய, அத்தகைய தீவிர புருஷார்த்தி சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

 

பார்ட்டிகளுடன் :

சதா தன்னை சுயதரிசனச் சக்கரதாரி என அனுபவம் செய்கிறீர்களா? சுயதரிசனச் சக்கரம் அநேக விதமான மாயாவின் சக்கரங்களை முடித்துவிடக் கூடியதாகும். மாயாவின் அநேகச் சக்கரங்கள் உள்ளன மற்றும் பாபா அந்தச் சக்கரங்களில் இருந்து விடுவித்து வெற்றியாளர் ஆக்கி விடுகிறார். சுயதரிசனச் சக்கரத்தின் முன்னால் மாயா நிற்க முடியாது - அந்த மாதிரி அனுபவியாக இருக்கிறீர்களா? பாப்தாதா தினந்தோறும் இதே டைட்டில் வாயிலாக அன்பு நினைவும் தருகிறார். இதே ஸ்மிருதி மூலம் சதா சக்திசாலியாக இருங்கள். சதா சுயத்தின் தரிசனத்தில் இருப்பீர்களானால் சக்திசாலியாக ஆகி விடுவீர்கள். கல்ப-கல்பத்தின் சிரேஷ்ட ஆத்மாக்களாக இருந்தீர்கள், இருக்கிறீர்கள்-- இது நினைவிருக்குமானால் மாயாஜீத் ஆகி விடுவீர்கள். சதா ஞானத்தை நினைவில் வைத்து, இதன் குஷியில் இருங்கள். குஷி அநேக விதமான துக்கங்களை மறக்க வைக்கிறது. உலகம் துக்கதாமத்தில் உள்ளது. ஆனால் நீங்கள் அனைவரும் சங்கமயுகத்தினராக ஆகி விட்டீர்கள். இதுவும் பாக்கியமாகும்.

 

2. நீங்கள் சதா பவித்திரதாவின் சக்தி மூலம் தன்னைப் பாவனமாக்கி மற்றவர்களையும் பாவனமாவதற்கான தூண்டுதல் கொடுப்பவர்கள் தாம் இல்லையா? வீடு-இல்லறத்தில் இருந்து கொண்டு பவித்திர ஆத்மா ஆவது என்றால் இந்த விசேஷத்தை உலகின் முன்னால் பிரத்யட்சம் செய்ய வேண்டும். அத்தகைய தைரியசாலி ஆகியிருக்கிறீர்களா? பாவன ஆத்மாக்கள் என்ற இதே ஸ்மிருதி மூலம் தானும் பரிபக்குவம் மற்றும் உலகத்திற்கும் இந்தப் பிரத்தியட்சப் பிரமாணத்தைக் காட்டுபவர்கள். எப்படிப்பட்ட ஆத்மாக்கள் நீங்கள்? அசம்பவத்தை சம்பவமாக்கிக் காட்டுவதற்கு நிமித்தம், பவித்திரதாவின் சக்தியைப் பரப்புகிற ஆத்மா நான். இதை சதா ஸ்மிருதியில் வையுங்கள்.

 

3. குமார்கள் தங்களை சதா மாயாஜீத் குமார் என உணர்ந்திருக்கிறீர்களா? மாயாவிடம் தோல்வியடைபவர்கள் அல்லர். ஆனால் சதா மாயாவைத் தோல்வியுறச் செய்பவர்கள். அத்தகைய சக்திசாலி தைரியசாலிகள் தாம் இல்லையா? யார் தைரியசாலியாக இருக்கிறார்களோ, அவர்களிடம் மாயாவே பயப்படும். தைரியசாலியின் முன்னால் மாயா ஒரு போதும் தைரியமாக நிற்க முடியாது. எப்போது எந்த விதமான ஒரு பலவீனத்தைப் பார்க்கிறதோ, அப்போது மாயா வருகிறது. தைரியசாலி என்றால் சதா மாயாஜீத். மாயா வர முடியாது. அந்த மாதிரி சவால் விடுபவர்கள் தானே நீங்கள்? அனைவரும் முன்னேற்றத்தில் செல்பவர்கள் தான் இல்லையா? அனைவரும் தங்களை சேவைக்கு நிமித்தம், அதாவது சதா விஷ்வ கல்யாண்காரி எனப் புரிந்து முன்னேறிச் செல்பவர்கள். விஷ்வ கல்யாண்காரி எல்லையற்ற நிலையில் இருப்பவர்கள். எல்லைக்குட்பட்டு வர மாட்டார்கள். எல்லைக்குட்பட்டு வருவது என்றால் உண்மையான சேவாதாரி இல்லை. எல்லையற்ற நிலையில் இருப்பது என்றால் எப்படி தந்தையோ குழந்தைகளும் அப்படியே! தந்தையைப் பின்பற்றக்கூடிய சிரேஷ்ட குமார்கள் -- சதா இதே ஸ்மிருதியில் (நினைவில்) இருங்கள். எப்படி பாபா அனைத்தும் நிரம்பியவரோ, எல்லையற்ற நிலையில் இருக்கிறாரோ, அதே போல் பாப்-சமான் சம்பன்னமான, சர்வ கஜானாக்களால் நிரம்பிய ஆத்மா நான் இந்த ஸ்மிருதி மூலம் வீணானவை முடிந்து போகும். சக்திசாலி ஆகி விடுவீர்கள். நல்லது.

 

அவ்யக்த முரளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி-பதில்கள் சில:

கேள்வி :

எந்த ஒரு விசேஷ குணம் சம்பூர்ண ஸ்திதியைப் வெளிப்படுத்துகிறது? எப்போது ஆத்மாவின் சம்பூர்ண ஸ்டேஜ் உருவாகி விடுகிறதோ, அப்போது அதன் நடைமுறைக் கர்மத்தில் எந்த ஒரு மகிமை பாடப் படுகிறது?

 

பதில் :

சமான நிலை! புகழ்ச்சி-இகழ்ச்சி, வெற்றி-தோல்வி, சுகம்-துக்கம் அனைத்திலும் சமநிலை இருக்க வேண்டும். இது தான் சம்பூர்ண நிலையின் ஸ்டேஜ் எனச் சொல்லப்படும். துக்கத்தில் கூட முகத்தோற்றத்தில் அல்லது நெற்றியில் துக்கத்தின் அலைக்குப் பதிலாக சுகம் மற்றும் மகிழ்ச்சியின் அலை காணப்பட வேண்டும். நிந்தனை செய்பவர்கள் மீது கொஞ்சம் கூட திருஷ்டி-விருத்தியில் வித்தியாசம் வந்துவிடக் கூடாது. சதா கல்யாண்காரி திருஷ்டி சுப சிந்தனையாளரின் விருத்தி இருக்க வேண்டும். இது தான் சமநிலை ஆகும்.

 

கேள்வி:

தனக்குத் தான் ஆசிர்வாதம் செய்து கொள்வது அல்லது பாப்தாதாவிடம் ஆசிர்வாதம் பெறுவதற்கான சாதனம் என்ன?

 

பதில்:

சதா சமநிலை சரியாக இருக்குமானால் பாபாவின் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டே இருக்கும். தன்னைப் பற்றிய மகிமையைக் கேட்டால் மகிமையின் நஷா ஏறக்கூடாது. மேலும் நிந்தனையைக் கேட்கும் போது வெறுப்பின் பாவனையும் உண்டாகக் கூடாது. எப்போது இரண்டிலும் சமநிலை சரியாக இருக்குமோ, அப்போது அற்புதம் மற்றும் தனக்குத் தானே திருப்தியின் அனுபவம் ஆகும்.

 

கேள்வி:

உங்களுடையது இல்லற மார்க்கம். அதனால் எந்த இரண்டு-இரண்டு விஷயங்களில் சமநிலை வைக்க வேண்டியது அவவசியம்?

 

பதில்:

எப்படி ஆத்மா, சரீரம் இரண்டாக உள்ளன, பாபா மற்றும் தாதாவும் கூட இருவராக உள்ளனர். இருவரின் காரியங்கள் மூலம் உலக மாற்றம் நிகழ்கிறது. அதே போல் இரண்டு-இரண்டு விஷயங்களின் சமநிலை வைப்பீர்களானால் சிரேஷ்ட பிராப்தி அடைவீர்கள். 1. விலகியும் அன்பாகவும் இருத்தல் 2. மகிமை மற்றும் நிந்தனை 3. அன்பு மற்றும் சக்தி 4. தர்மம் மற்றும் கர்மம் 5. ஏகாந்தவாசி மற்றும் ரமணீகரம் 6. கம்பீரம் மற்றும் அனுசரித்து நடந்து கொள்ளுதல் இது போல் அநேக விதமான சமநிலைகள் எப்போது சமமாகிறதோ, அப்போது சம்பூர்ண நிலையின் அருகில் வர முடியும். ஒன்று உள்ளடங்கி உள்ளது. இன்னொன்று வெளிப்படையாக உள்ளது என்பதாக இருக்கக் கூடாது. இதன் பிரபாவம் ஏற்படாது.

 

கேள்வி:

எந்த விஷயத்தில் சமநிலை கொண்டுவர வேண்டும், எதில் கூடாது?

 

பதில்

சிரேஷ்டதாவில் சமநிலை கொண்டுவர வேண்டும், சாதாரணத் தன்மையில் கூடாது. எப்படி கர்மம் சிரேஷ்டமோ, அது போல் தாரணையும் சிரேஷ்டமாக இருக்க வேண்டும். தாரணை கர்மத்தை உள்ளடக்கி விடுவதாக இருக்கக் கூடாது. தர்மம் மற்றும் கர்மம் இரண்டுமே சிரேஷ்டதாவில் சமமாக இருக்க வேண்டும். அப்போது தான் தர்மாத்மா எனச் சொல்வார்கள். ஆக, தன்னைத் தானே கேளுங்கள்- அந்த மாதிரி தர்மாத்மாவாக ஆகியிருக்கிறேனா? அந்த மாதிரி ப்ளிஸ்ஃபுல் (ஆனந்தமான) ஆகியிருக்கிறேனா?

 

கேள்வி :

புத்தியில் எந்த விதமான குழப்பம் உள்ளது என்றால் அதற்கான காரணம் என்ன?

 

பதில்

அதன் காரணம் சம்பன்னதாவில் குறைவு (நிறைவாக இல்லை). எந்த ஒரு பொருளும் நிறைவாக இருக்குமானால் அதனிடையில் ஒரு போதும் குழப்பம் இருக்காது. ஆகவே தன்னை எந்த ஒரு குழப்பத்தில் இருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்கு நிரம்பியவராக ஆகிக் கொண்டு செல்லுங்கள். அப்போது சம்பூர்ணம் ஆகி விடுவீர்கள். எந்த ஒரு பொருளும் சம்பன்னமாக உள்ளதென்றால் தானாகவே கவர்ந்திழுக்கும். சம்பூர்ண நிலையில் பிரபாவத்தின் சக்தி உள்ளது. ஆக, எவ்வளவு தன்னிடம் சம்பூர்ண நிலை உள்ளதோ, அந்த அளவுக்கு அநேக ஆத்மாக்கள் தாமாகவே கவர்ந்திழுக்கப் படுவார்கள்.

 

கேள்வி:

தேகி (ஆத்ம) அபிமானியின் சூட்சும ஸ்டேஜ் எது?

 

பதில்

யார் தேகி அபிமானியாக உள்ளனரோ, அவர்களுக்கு எந்த ஒரு விஷயத்தின் சமிக்ஞை கிடைத்தாலும் அந்த சமிக்ஞையை நிகழ்காலம் மற்றும் வருங்காலம் இரண்டிற்காகவும் முன்னேற்றத்தின் சாதனம் எனப் புரிந்து அந்த சமிக்ஞையை உள்ளடக்கிக் கொள்வார்கள் அல்லது பொறுத்துக் கொள்வார்கள். சூட்சுமத்திலும் கூட அவர்களின் திருஷ்டி விருத்தியில் என்ன, எப்படி என்ற குழப்பம் உற்பத்தியாகாது. எப்படி மகிமையைக் கேட்கும் போது அந்த ஆத்மாவுக்காக அன்பின் பாவனை உள்ளதோ, அது போல் யாராவது போதனை அல்லது சமிக்ஞை தருகிறார் என்றாலும் கூட அவருக்காக அன்பின் சுபசிந்தனையாளர் பாவனை இருக்க வேண்டும். நல்லது. ஓம் சாந்தி.

 

வரதானம் :

சதா குஷி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நிலையில் இருக்கக் கூடிய இணைந்த சொரூபத்தின் அனுபவி ஆகுக.

 

பாப்தாதா குழந்தைகளுக்கு எப்போதுமே சொல்கிறார் -- குழந்தைகளே, பாபாவின் கையோடு கை இணைத்துச் செல்லுங்கள். தனியாகச் செல்ல வேண்டாம். தனியாகச் செல்வதால் சில நேரம் போராகி (சலிப்பு) விடுவீர்கள். சில நேரம் யாருடைய பார்வையும் கூடப் பட்டு விடும். பாபாவோடு இணைந்திருக்கிறேன் -- இந்த சொரூபத்தின் அனுபவம் செய்து கொண்டே இருப்பீர்களானால் ஒரு போதும் மாயாவின் பார்வை படாது. மேலும் துணையின் அனுபவம் இருக்கிற காரணத்தால் குஷியில், மகிழ்ச்சியில் சாப்பிட்டுக் கொண்டு, நடந்து கொண்டு, மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டே இருப்பீர்கள். ஏமாற்றம் மற்றும் துக்கம் கொடுக்கக் கூடிய உறவினர்களிடம் சிக்கிக் கொள்வதில் இருந்தும் பாதுகாக்கப் படுவீர்கள்.

 

சுலோகன்:

யோகம் என்ற கவசத்தை அணிந்து கொண்டிருப்பீர்களானால் மாயா என்ற விரோதியின் போராட்டம் இருக்காது.

 

 

ஓம்சாந்தி