24-03-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

எந்த போதை குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் நிரந்தரமாக இருக்க வேண்டும்?

பதில்:

நாம் சிவபாபாவின் குழந்தைகள், அவரிடம் இராஜயோகம் கற்றுச் சொர்க்கத்தின் இராஜ்யத் தின் ஆஸ்தி அடைகிறோம் என்ற இந்த போதை உங்களுக்கு நிரந்தரமாக இருக்க வேண்டும். உலகின் எஜமானராக ஆக வேண்டுமென்றால் மிகவும் எச்சரிக்கையுடன் கற்க வேண்டும் மற்றும் பிறருக்கும் கற்பிக்க வேண்டும். ஒருபோதும் தந்தைக்கு நிந்தனை ஏற்படுத்தக் கூடாது. யாருடனும் சண்டை போடக் கூடாது. நீங்கள் சோழி யிலிருந்து வைரமாக ஆகிறீர்கள், ஆகவே நல்ல விதமாக தாரணை செய்ய வேண்டும்.

பாடல்:

யார் தந்தையுடன் இருக்கின்றனரோ. . .

ஓம் சாந்தி. குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். யார் தந்தையுடன் இருக்கின்றனரோ அவர்கள் பாப்தாதா வுடன் இருக்கின்றனர். இப்போது இரண்டு பேராக உள்ளனர் அல்லவா. பிரம்மாவின் மூலம் பரமபிதா பரமாத்மா சிவன் எப்படி ஸ்தாபனை செய்வார் என்பதை நன்றாகப் புரிய வைக்கப் படுகிறது. இது உலகத்தாருக்குத் தெரியாது. அவருக்கு தனக்கென்று சரீரம் கிடையாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள்தான் அறிவீர்கள். கிருஷ்ணருக்கோ அவரது சரீரம் உள்ளது. பரமபிதா ஸ்ரீகிருஷ்ணரின் மூலமாக. . . என சொல்ல முடியாது. கிருஷ்ணர் சத்யுகத்தின் இளவரசர். பரமபிதா பரமாத்மா பிரம்மாவின் மூலமாக ஸ்தாபனை செய்விக்கிறார் எனும் போது பிரம்மாவுக் குள் பிரவேசம் செய்ய வேண்டியிருக்கும். வேறு எந்த மாற்று வழியும் இல்லை. தூண்டுதல் முதலான விஷயம் ஏதுமில்லை. தந்தை பிரம்மாவின் மூலம் அனைத்தையும் புரிய வைக்கிறார். வெற்றி மாலை ருத்ர மாலை எனப்படுகிறது. அதனை மனிதர்கள் பூஜிக்கின்றனர், ஜபிக்கின்றனர். இந்த ருத்ர மாலை மட்டும் தான் ஜபிக்கப்படுகிறது என குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள். பிரம்மா சரஸ்வதி மேரு (உயர்ந்தவர்கள்) எனப்படுகிறது. மற்றபடி குழந்தை களுடைய மாலை உள்ளது. விஷ்ணுவின் மாலை என்ற ஒன்று பூஜிக்கப்பட முடியும். இந்த சமயம் நீங்கள் முயற்சியாளராக உள்ளீர்கள். இறுதியில் உங்களுடைய நினைவு ஏற்படுகிறது. ஆத்மாக் களின் மாலையா? அல்லது ஜீவாத்மாக்களுடையதா? கேள்வி எழும் அல்லவா. விஷ்ணுவின் மாலையை சைதன்யமான ஜீவாத்மாக்களின் மாலை என்று சொல்வோம். லட்சுமி நாராயணர் பூஜிக்கப்படுகின்றனர் அல்லவா, ஏனெனில் அவர்களுடைய உடல், ஆத்மா இரண்டும் தூய்மையாய் இருக்கும். ருத்ரமாலை என்பது ஆத்மாக்களுடையது, ஏனெனில் சரீரம் தூய்மையற்றது. அவை பூஜிக்கப்படுவதில்லை. ஆத்மா எப்படி பூஜிக்கப்படுகிறது? ருத்ர மாலையாக பூஜிக்கப்படுகிறது என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அப்படி கிடையாது, அது பூஜிக்கப்படுவதில்லை. பெயரை மட்டுமே நினைவு செய்யப்படும். மணிகள் சரீரத்தில் இருக்கும் குழந்தைகளாகிய உங்களது பெயர் தான் நினைவு செய்யப்படுகின்றன. மணிகள் பிராமணர்களுடையது. யாரை ஜபிக்கின்றனர்? இது யாருக்கும் தெரியாது. இந்த பிராமணர்கள் பாரதத்தின் சேவை செய்கின்றனர். அவர்களை நினைவு செய்கின்றனர். ஜகதம்பா, தேவியர் முதலானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர், அவர்களை நினைவு செய்ய வேண்டுமா (ஜபிக்க வேண்டுமா)? இலட்சுமி நாராயணர் பூஜிக்கத் தகுந்தவர்களாக ஆகின்றனர். நீங்கள் அல்ல, ஏனெனில் உங்கள் சரீரம் தூய்மையற்றிருக்கிறது. ஆத்மா தூய்மை யாய் இருக்கிறது, ஆனால் அது பூஜிக்கப்பட முடியாது, நினைவு செய்யப்படும். யாராவது உங்களிடம் கேட்டால் விளக்கம் கூற நீங்கள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பிராமணி களாக இருக்கிறீர்கள். உங்களின் நினைவுச் சின்னங்கள் தேவிகளின் ரூபத்தில் உள்ளன. நீங்கள் ஸ்ரீமத்படி தான் தூய்மையடைகிறீர்கள் எனும் போது இந்த மாலை முதலில் பிராமணர் களுடையதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும், பிறகு தேவதைகளுடைய தாக புரிந்து கொள்ள வேண்டும். மனன சிந்தனை செய்யும்போது முடிவுகள் (ரிசல்ட்) வெளியாகும். ஆத்மாக்கள் சாலிக் கிராமங்களின் ரூபத்தில் இருக்கும்போது பூஜிக்கப்படுகின்றனர். சிவனின் பூஜை நடக்கும்போது சாலிக் கிராமங்களின் பூஜையும் நடக்கிறது, ஏனெனில் ஆத்மா தூய்மையாக இருக்கும், சரீரம் தூய்மையாக இருக்காது. உங்களுடைய நினைவை மட்டும் செய்யப்படுகிறது, ஏன்? நீங்கள் சரீரத்துடன் சேவை செய்கிறீர்கள். உங்களுக்கு பூஜை நடக்க முடியாது, பிறகு சரீரத்தை விடும்போது நீங்களும் சிவனுடன் பூஜிக்கப்படுவீர்கள். சிந்தனை செய்யப்படுகிறது அல்லவா. நீங்கள் இந்த சமயம் பிராமணர்களாக இருக்கிறீர்கள். சிவபாபா பிரம்மாவுக்குள் பிரவேசமாகிறார் எனும்போது பிரம்மாவும் கூட சாகாரத்தில் இருக்கிறார். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். இந்த மாலை சாகாரமானது போலாகும் - பிரம்மா சரஸ்வதி மற்றும் ஞான கங்கைகள் நீங்கள். நீங்கள் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினீர்கள், இந்த ருத்ர ஞான யக்ஞத்தை படைத்தீர்கள். செய்யப்படும் பூஜையில் சிவன் மற்றும் சாலிக்கிராமங்கள் மட்டும் இருப்பார்கள். அதில் பிரம்மா சரஸ்வதி அல்லது உங்களுடைய பெயர் இருக்காது. இங்கே அனைவருடைய பெயரும் உள்ளன. யார் யார் ஞான கங்கைகளாக இருந்தனரோ அவர்கள் ஜபிக்கப்படுகின்றனர். அவரோ ஞானக் கடல். இவர் பிரம்மபுத்திரா எனும் பெரிய நதி ஆவார். இந்த பிரம்மா தாயாகவும் இருக்கிறார். கடல் ஒன்று மற்றபடி கங்கைகள் பலவிதமாக இருக்கின்றனர். வரிசைக்கிரமமாக யாரிடம் நல்ல ஞானம் இருக்கிறதோ அவர்கள் சரோவர் (நீர் நிறைந்த குளம்) எனப்படுகின்றனர். மகிமையும் இருக்கிறது. மானசரோவரில் நீராடினால் பாரிஜாதமாக (தேவதைகளாக) ஆவார்கள் என சொல்கின்றனர். ஆக உங்களுடைய மாலை ஜபிக்கப்படுகிறது. ஜபம் என சொல்கின்றனர் அல்லவா. ஜபியுங்கள் என்றால் அவர்களோ ராமா ராமா என்கின்றனர். ஆனால் யாருடைய ஜபம் நடக்கும் என நீங்கள் அறிவீர்கள். யார் அதிகமாக சேவை செய்கின்றனரோ அவர்களுடையது பூஜை நடக்கும். முதலில் பாபா மலராக இருக்கிறார், பின்னர் மேரு - அதிகமாக முயற்சி செய்பவர்கள், பிறகு ருத்ர மாலையே விஷ்ணு மாலையாக ஆகிறது. உங்களுடைய ஆத்மா மட்டும் பூஜிக்கப்படுகிறது. நீங்கள் இப்போது ஜபிக்கத் தகுந்தவர்கள் ஆகிறீர்கள். ஜபம் உங்களுடையதாகும். மற்றபடி பூஜை ஏற்பட முடியாது ஏனெனில் ஆத்மா தூய்மையாக, சரீரம் தூய்மையற்றதாக உள்ளது. தூய்மை யற்ற பொருள் ஒருபோதும் பூஜிக்கப்படுவதில்லை. ருத்ரமாலையாக ஆகத் தகுந்தவர்களாக ஆகும் போது பிறகு இறுதியில் நீங்கள் சுத்தமாக ஆகிவிடுகிறீர்கள். மதிப்புடன் தேர்ச்சி அடையக் கூடியவர்கள் யார் யார் என்பது உங்களுக்கு காட்சியில் தெரியும். சேவை செய்வதன் மூலம் பெயர் மிகவும் பிரபலமாகும். வெற்றி மாலையில் யார் யார் வருவார்கள் என தெரிந்துவிடும். இந்த விஷயங்கள் மிகவும் ஆழமானவையாகும்.

மனிதர்கள் வெறுமனே ராமா ராமா என சொல்கின்றனர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை நினைவு செய்கின்றனர். மாலை யாருடையதாக இருக்கும்? பகவான் ஒருவரே ஆவார். மற்றபடி யார் அருகாமையில் அமர்ந்திருக்கின்றனரோ அவர்களுடைய மாலை உருவாகியபடி இருக்கும். இந்த மாலையை இப்போது நீங்கள் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும். நமது ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர்களே புரிந்துக் கொள்ள முடியாவிட்டால் வேறு யார் புரிந்து கொள்வார்கள்? அனைவரையும் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆக்கக் கூடியவர் ஒரு தந்தையே ஆவார். பதிதரிலிருந்து பாவனமாக்குபவர் என கிறிஸ்துவை சொல்ல மாட்டார்கள். அவர் பிறப்பு இறப்பில் வந்து கீழே இறங்கவே வேண்டியிருக்கும். உண்மையில் அவரை குரு என்றும் சொல்வதில்லை ஏனென்றால் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரு தந்தையே ஆவார். அதுவும் இறுதிக் காலம் வரும்போது, மரம் மிகவும் பட்டுப் போகும் நிலையடையும்போது தந்தை வந்து அனைவருக்கும் சத்கதி வழங்குகிறார். ஆத்மா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக மேலிருந்து கீழே வருகிறது. மற்றவர்கள் பிறப்பு இறப்பில் வரவே வேண்டும். சத்குரு ஒருவரே ஆவார். அவர் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். மனிதர்கள் யாரும் உண்மை யான சத்குருவாக ஆக முடியாது. அவர்கள் தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக மட்டுமே வருகின்றனர், அவர்களுக்குப் பின் அனைவரும் நடிப்பை நடிப்பதற்காக வரத் தொடங்குகின்றனர். அனைவரும் தமோபிரதானமான நிலையை அடையும்போது நான் வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறேன். அனைவரும் திரும்பிச் செல்கின்றனர், பிறகு புதிதாக சக்கரம் சுற்றத் தொடங்கு கிறது. நீங்கள் இராஜயோகம் கற்கிறீர்கள். அதே இராஜ்யத்தை அடைவீர்கள், பிறகு ராஜாவாகவோ பிரஜைகளாகவோ ஆவீர்கள். பிரஜைகள் நிறைய ஆவார்கள். இராஜ்யத்தின் பதவியை அடைவதில் முயற்சி தேவைப்படும். கடைசியில் அனைத்தும் தெரிந்துவிடும். யார் வெற்றி மாலையில் உருட்டப்படுவார்கள். படிக்காதவர்கள் படித்தவர் முன்னால் மூட்டை தூக்குவார்கள். சத்யுகத்திற்கு வருவார்கள், ஆனால் வேலைக்காரர்களாக ஆக வேண்டியிருக்கும். இது அனைவருக்கும் தெரிந்து விடும். பரீட்சை நாளன்று யார் யார் தேர்ச்சி அடைவார்கள் என அனைவருக்கும் தெரிந்துவிடுவது போல. படிப்பின் மீது கவனம் வைக்காவிட்டால் பரீட்சையில் தோற்றுவிடுகின்றனர். இது உங்களுடைய எல்லைக்கப்பாற்பட்ட படிப்பாகும். ஈஸ்வரிய பல்கலைக்கழகம் ஒன்றேயாகும், இங்கே மனிதரிலிருந்து தேவதை ஆக வேண்டும், அதில் வரிசைக்கிரமமாக தேர்ச்சி அடைவார் கள். படிப்பு ஒன்று தான் இராஜ யோகத்திற்கானது, இராஜ்ய பதவி பெறுவதற்கு முயற்சி தேவைப் படுகிறது மேலும் சேவையும் செய்ய வேண்டும். ராஜாவாக ஆகக்கூடியவர்கள் பிறகு தனது பிரஜைகளையும் உருவாக்க வேண்டும். நல்ல நல்ல குழந்தைகள் பெரிய பெரிய சென்டர்களை கவனித்துக் கொள்கின்றனர், பெருமளவில் பிரஜைகளை உருவாக்குகின்றனர். பெரிய மலர்த் தோட்டத்தை உருவாக்கினீர்கள் என்றால் பாபாவும் வந்து பார்ப்பார் என பாபாவும் சொல்கிறார். இப்போது மிகவும் சிறியதாக உள்ளது. பம்பாயில் இலட்சக்கணக்கில் ஆகிவிடுவார்கள். முழு சூரிய வம்சத்தின் இராஜ்யம் ஆகிவிடும்போது அளவற்றவர்கள் இருப்பார்கள். முயற்சி செய்பவர்கள் ராஜா ஆவார்கள் மற்றவர்கள் பிரஜைகளாக ஆகியபடி இருப்பார்கள். பிரபு உங்களின் சத்கதியின் லீலை என பாடவும் பட்டுள்ளது. ஆஹா பாபா என நீங்கள் பாடுகிறீர்கள். உங்களின் கதி, வழி, . . . அனைவருக்கும் சத்கதி வழங்கும் ஸ்ரீமத் போன்ற இவை அனைத்திலும் தனிப்பட்ட தாகும். தந்தை தன்னுடன் அழைத்துச் செல்வார், விட்டுச் செல்லமாட்டார். நிராகாரி, ஆகாரி, சாகாரி உலகத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைப் பற்றித் தெரிந்திருப்பது மட்டும் முழுமையான ஞானம் அல்ல. முதலில் மூல வதனத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே ஆத்மாக்களாகிய நாம் வசிக்கிறோம். இந்த முழு சிருஷ்டி சக்கரத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் சக்ரவர்த்தி ராஜா ஆகிறீர்கள். இவையனைத்தும் எவ்வளவு புரிந்துக் கொள்ளக்கூடிய விஷயங்கள். சிவன் பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் சொல்லிவிடுகின்றனர். படமும் உள்ளது, ஆனாலும் பெயர் உருவத்திற்கும் அப்பாற்பட்டவர் என சொல்கின்றனர். பிறகு எங்கும் நிறைந்தவர் என சொல்லிவிடுகின்றனர். ஈஸ்வரன் எங்கும் நிறைந்தவர் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொன்னார். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்கின்றனர், இது ஈஸ்வரனுடைய வேலையா என்ன? போகப்போக உங்களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும் போது இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வார்கள். தன்னை புத்திசாலிகளாக புரிந்துக் கொண்டி ருப்பவர்கள் இப்படி இப்படியாக கடிதம் எழுத வேண்டும். இந்த முழு ஞானமும் என்ன என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். எங்களால் முழுமையான ஞானம் கொடுக்க முடியும் என எழுதிப் போடலாம். மூல வதனத்தின் ஞானத்தை கொடுக்க முடியும். நிராகார தந்தையின் அறிமுகத்தையும் கொடுக்க முடியும், பிறகு பிரஜாபிதா பிரம்மா மற்றும் அவருடைய பிராமண தர்மத்தைப் பற்றியும் புரிய வைக்கலாம். இலட்சுமி நாராணர், பிறகு இராமன் - சீதை இவர்களுடைய இராஜ்யம் எப்படி நடக்கிறது, பிறகு அந்த இராஜ்யத்தை யார் பறித்துக் கொள்வது, அந்த சொர்க்கம் எங்கே சென்றது? நரகம் எங்கே சென்றது? என சொல்லப்படுவது போல. முடிந்து போய் விட்டது. சொர்க்கமும் முடிவடைந்துவிடும். அந்த சமயத்திலும் பூகம்பம் போன்றவை ஏற்படும். அந்த வைர வைடூரியங்களால் ஆன மாளிகை முதலானவை வெளியில் வர இயலாத படி போய்விட்டன. தங்கம், வைரம், வைடூரியங்களால் ஆன மாளிகைகள் ஒருபோதும் கீழே யிருந்து வெளிவரவில்லை. சோம்நாத் முதலான கோவில்கள் பின்னர் உருவாகின, அதனை விட அவர்களுடைய வீடு உயர்வானதாக இருக்கும். இலட்சுமி நாராயணரின் வீடு எப்படி இருக்கும்? அந்த முழு ஆஸ்தியும் எங்கே சென்றது? இப்படி இப்படியான விஷயங்களை வித்வான் முதலானவர்கள் கேட்டார்கள் என்றால் அதிசயப்படுவார்கள். இவர்களின் ஞானம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது. மனிதர்களுக்கு எதுவும் தெரியாது. சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்று மட்டும் சொல்லிவிடுகின்றனர். இவையனைத்தும் புரிந்துக் கொள்ளக் கூடிய மற்றும் புரிய வைக்கக் கூடிய விஷயங்கள் ஆகும். உங்களுக்கு (ஞானத்தின்) செல்வம் கிடைக்கிறது, பிறகு தானம் செய்ய வேண்டும். பாபா உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறார், நீங்களும் கொடுத்துக் கொண்டே இருங்கள். இது குறையாத பொக்கிஷமாகும், அனைத்திற்கும் ஆதாரம் தாரணையில் உள்ளது. எந்தளவு தாரணை செய்வீர்களோ அந்தளவு உயர்ந்த பதவியை அடைவீர் கள். சோழிகள் எங்கே வைரங்கள் எங்கே - சிந்தித்துப் பாருங்கள். வைரத்தின் மதிப்பு அனைத்திலும் உயர்ந்ததாகும். சோழியின் மதிப்பு அனைத்திலும் குறைந்ததாகும். இப்போது நீங்கள் சோழி யிலிருந்து வைரமாகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விஷயங்கள் ஒருபோதும் யாருடைய கனவிலும் வந்திருக்காது. இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது, வாழ்ந்திருந்து சென்றிருக் கின்றனர் என்பதை மட்டும் புரிந்து கொள்வார்கள். ஆனால் இந்த இராஜ்யம் எப்போது, யார் கொடுத்தது என்பது எதுவும் தெரியாது. இராஜ்யத்தை யார் கொடுத்தார்? இங்கே ஒன்றும் கிடையாது. இராஜயோகத்தின் மூலம் சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறது. இது அதிசயம் அல்லவா. நல்ல விதமாக குழந்தைகளின் புத்தியில் போதை இருக்க வேண்டும். ஆனால் மாயை அந்த போதை நிலையாய் இருக்க விடுவதில்லை. நாம் சிவபாபாவின் குழந்தைகள். இந்த ஞானத்தைப் படித்து நாம் உலகின் எஜமானர்களாக ஆகப் போகிறோம். இது எப்போதாவது யாருடைய புத்தியிலாவது வந்திருக்குமா? ஆக, குழந்தைகள் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும் என தந்தை புரிய வைக்கிறார். குருவை நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவியை அடைய மாட்டார்கள். இது இங்குள்ள விஷயமாகும். அஞ்ஞானிகளுக்கு இலட்சியம் குறிக்கோள் எதுவுமே கிடையாது. உங்களுக்கு இலட்சியம், குறிக்கோள் உள்ளது. தந்தை, ஆசிரியர், குரு மூவரும் உண்டு. படிப்பின் மூலம் நாம் உலகின் எஜமானர் ஆகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு கவனத்துடன் கற்று பிறருக்கு கற்பிக்கவும் வேண்டும். நிந்தனை செய்விக்கும் அளவு எந்த விஷயமும் நடக்கக் கூடாது. யாருடனும் சண்டை சச்சரவில் ஈடுபடக் கூடாது. அனைவருடனும் இனிமையாகப் பேச வேண்டும். தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். தானம் கொடுத்தால் கிரகணம் விலகிவிடும் என பாபா சொல்கிறார். தேக அபிமானத்தை தானம் செய்வதே முதன்மையான தானம். இந்த சமயத்தில் நீங்கள் ஆத்ம அபிமானியாக இருக்கிறீர்கள், மேலும் பரமாத்ம அபிமானியாகவும் ஆகிறீர்கள். இது மதிப்பு மிக்க வாழ்க்கையாகும். ஒவ்வொரு கல்பத்திலும் நான் உங்களை இப்படி இராஜயோகத்தை கற்பிக்க வருகிறேன், நீங்கள் மறந்து விடுகிறீர்கள், இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது என தந்தை சொல்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட செல்லமான ஞான இரத்தின தாரணை மற்றும் சேவை செய்யக்கூடிய குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. அனைவருடனும் இனிமையாகப் பேச வேண்டும். தந்தைக்கு நிந்தனை உண்டாகும்படியான எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. தேக அபிமானத்தை தானம் செய்து ஆத்ம அபிமானி மற்றும் பரமாத்ம அபிமானியாக ஆக வேண்டும்.

2. தனக்கு கிடைக்கின்ற ஞான செல்வத்தை தானம் செய்ய வேண்டும். படிப்பின் மூலம் இராஜ்யம் கிடைக்கிறது என்ற நிலையான போதையில் இருக்க வேண்டும். கவனம் கொடுத்து படிப்பை படிக்க வேண்டும்.

வரதானம்:

ஒருமுகத்தன்மையின் அப்பியாசத்தின் மூலம் அநேக ஆத்மாக்களின்

விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய விஷ்வ கல்யாண்காரி ஆகுக.
அலைந்து கொண்டிருக்கும் புத்தி மற்றும் சஞ்சலத் தன்மையிலிருந்து ஒருமுகத்தன்மை உள்ளவராக ஆகிவிட வேண்டும் என்பது தான் அனைத்து ஆத்மாக்களின் விருப்பமாக உள்ளது. ஆகவே அவர்களின் இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக முதலில் நீங்கள் சுயம் தங்களின் சங்கல்பங்களை ஒருநிலைப் படுத்துவதற்கான அப்பியாசத்தை அதிகப் படுத்துங்கள். நிரந்தர ஏக்ரஸ் ஸ்திதியில் மற்றும் ஒரு தந்தை தவிர வேறு யாரும் இல்லை இந்த ஸ்திதியில் நிலைத் திருந்து, வீண் சங்கல்பங்களை சுத்த சங்கல்பங்களாக மாற்றி விடுங்கள். அப்போது விஷ்வ கல்யாண்காரி ஆகுக என்ற வரதானம் கிடைத்து விடும்.

சுலோகன்:

பிரம்மா பாபாவுக்கு சமமாக குணசொரூபம், சக்தி சொரூபம் மற்றும்

 

நினைவு சொரூபமாக ஆகிறவர் தான் உண்மையான பிராமணர் ஆவார்.