30.04.2020    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


  

இனிமையான குழந்தைகளே! பாபாவின் ஸ்ரீமத் உங்களை சதா சுகம் நிறைந்தவர்களாக ஆக்கக் கூடியது. அதனால் தேகதாரிகளின் வழிமுறையை விட்டு ஒரு பாபாவின் ஸ்ரீமத் படி நடந்து செல்லுங்கள்.

 

கேள்வி :

எந்தக் குழந்தைகளின் புத்தி அலைவதிலிருந்து இது வரையிலும் கூட நிற்காமல் உள்ளது?

 

பதில் :

யாருக்கு உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையின் வழி அல்லது ஈஸ்வரிய வழி மீது நம்பிக்கை இல்லையோ, அவர்களின் புத்தி அலைவதிலிருந்து இது வரையிலும் கூட நிற்கவில்லை. தந்தை மீது முழு நம்பிக்கை இல்லாத காரணத்தால் இரண்டு பக்கமும் கால் வைக்கின்றனர். பக்தி, கங்கா ஸ்நானம் முதலியவற்றையும் செய்வார்கள், அத்துடன் தந்தையின் வழிப்படியும் நடப்பார்கள். அத்தகைய குழந்தைகளின் நிலைமை என்னவாகும்? ஸ்ரீமத்படி முழுமையாக நடப்பதில்லை. அதனால் அடி வாங்குகின்றனர்.

 

பாடல் :

இந்தப் பாவ உலகத்தில் இருந்து புண்ணியத்தின் உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.........

 

ஓம் சாந்தி.

குழந்தைகள் இந்த பக்தர்களின் பாடலைக் கேட்டீர்கள். இப்போது நீங்கள் அதுபோல் சொல்வதில்லை. நீங்கள் அறிவீர்கள், நமக்கு உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் கிடைத்துள்ளார். அவர் ஒருவர் தான் உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். மற்றபடி இந்த சமயம் மனிதர்கள் அனைவருமே மிகமிகத் தாழ்ந்தவர்கள். உயர்ந்தவரிலும் உயர்ந்த மனிதர்களாக பாரதத்தில் இந்த தேவி-தேவதைகள் தான் இருந்தனர். அவர்களுடைய மகிமை - சர்வகுண சம்பன்ன......... இப்போது மனிதர்களுக்கு இது தெரியாது, இந்த தேவதைகளை இவ்வளவு உயர்ந்தவர்களாக யார் ஆக்கினார் என்று. இப்போதோ முற்றிலும் (முயற்சி) தூய்மையற்றவர் ஆகி விட்டுள்ளனர். பாபா உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். சாது-சந்நியாசிகள் அனைவரும் அதற்கான சாதனை செய்கின்றனர். இப்படிப் பட்ட சாதுக்களின் பின்னால் மனிதர்கள் அரைக்கல்பமாக அலைந்துள்ளனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், பாபா வந்து விட்டார், நாம் பாபாவிடம் செல்கிறோம் என்று. அவர் நமக்கு ஸ்ரீமத் கொடுத்து சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமானவர்களாக, சதா சுகமானவர்களாக ஆக்குகிறார். இராவணனின் வழிப்படி நீங்கள் எவ்வளவு கீழான புத்தி உள்ளவர்களாக ஆகி விட்டீர்கள்! இப்போது நீங்கள் வேறு யாருடைய வழிமுறைப்படியும் நடக்காதீர்கள். பதீத பாவனர் தந்தையாகிய என்னை அழைத்தீர்கள். பிறகும் கூட மூழ்கடிப்பவர்களின் பின்னால் ஏன் செல்கிறீர்கள்? ஒரே ஒரு வழிமுறையை விட்டுவிட்டு அநேகரிடம் போய் ஏன் அடி வாங்குகிறீர்கள்? அநேகக் குழந்தைகள் ஞானத்தையும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பிறகு போய் கங்கா ஸ்நானமும் செய்வார்கள். குருக்களிடமும் செல்வார்கள். பாபா சொல்கிறார், அந்த கங்கை ஒன்றும் பதித பாவனி கிடையாது. பிறகும் நீங்கள் மனிதர்களின் வழிப்படி போய் ஸ்நானம் முதலியவற்றைச் செய்வீர்களானால் பாபா சொல்வார் - உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தையாகிய என் வழிமுறையில் கூட நம்பிக்கை இல்லை என்று. ஒரு பக்கம் உள்ளது ஈஸ்வரிய வழி, இன்னொரு பக்கம் உள்ளது அசுர வழி. அவர்களின் நிலைமை என்னவாகும்? இரண்டு பக்கமும் கால் வைத்தால் (தொடர்பு) அறுந்து போகும். பாபா மீதும் முழு நிச்சயம் வைப்பதில்லை. பாபா, நாங்கள் உங்களுடையவர்கள், உங்களுடைய ஸ்ரீமத்தினால் நாங்கள் சிரேஷ்டமானவராக ஆவோம் எனச் சொல்லவும் செய்கின்றனர். நாம் உயர்ந்தவரிலும் உயர்ந்த பாபாவின் வழிமுறைப்படி நம்முடைய அடியை எடுத்து வைக்க வேண்டும். சாந்திதாம், சுகதாமத்தின் எஜமானராக பாபா தான் ஆக்குவார். பிறகு பாபா சொல்கிறார்-யாருடைய சரீரத்தினுள் நான் பிரவேசம் செய்திருக்கிறேனோ, அவரோ 12 குருக்கள் வைத்திருந்தார். பிறகும் தமோபிரதானமாகத் தான் ஆகியுள்ளார். எந்த ஒரு பயனும் இல்லை. இப்போது பாபா கிடைத்துள்ளார் என்றால் அனைத்தையும் விட்டு விட்டார். உயர்ந்தவரிலும் உயர்ந்த பாபா கிடைத்துள்ளார். பாபா சொல்லியிருக்கிறார்- தீயதைக் கேட்காதீர்கள், தீயதைப் பார்க்காதீர்கள்......... ஆனால் மனிதர்கள் முற்றிலும் தூய்மையற்ற, தமோபிரதான புத்தி உள்ளவர்கள். இங்கேயும் கூட அநேகர் உள்ளனர், ஸ்ரீமத் படி நடக்க முடிவதில்லை. சக்தி இல்லை. மாயா அடி கொடுத்துக் கொண்டே இருக்கிறது, ஏனென்றால் இராவணன் விரோதி, இராமர் நண்பர். சிலர் இராமர் என்கின்றனர், சிலர் சிவன் என்கின்றனர். உண்மையான பெயர் சிவபாபா. நான் புனர்ஜென்மத்தில் வருவதில்லை. டிராமாவில் எனக்கு சிவன் என்று தான் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பொருளுக்கு பத்துப் பெயர்கள் வைப்பதால் மனிதர்கள் குழம்பிப் போயுள்ளனர். யாருக்கு என்ன தோன்றுகிறதோ, பெயர் வைத்து விட்டனர். உண்மையில் எனது பெயர் சிவன் என்பதாகும். நான் இந்த சரீரத்தில் பிரவேசமாகிறேன். நான் ஒன்றும் கிருஷ்ணர் முதலானவருக்குள் வருவதில்லை. அவர்கள் நினைக்கின்றனர், விஷ்ணுவோ சூட்சும வதனத்தில் இருப்பவர் என்று. உண்மையில் அவர் யுகல் ரூபம், இல்லற மார்க்கத்தினுடைய ரூபம். மற்றப்படி நான்கு புஜங்களெல்லாம் இருப்பதில்லை. நான்கு புஜங்கள் என்பது இல்லற மார்க்கம். இரண்டு புஜங்கள் துறவற மார்க்கம். சந்நியாசிகள் துறவற மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இல்லற மார்க்கத்தினர் தான் பிறகு பாவனத்திலிருந்து தூய்மையற்றவர் ஆகின்றனர். அதனால் சிருஷ்டியைத் தாங்கிப் பிடிப்பதற்காக சந்நியாசிகளின் பவித்திரமாவதற்கான பார்ட் உள்ளது. அவர்களும் லட்சம்- கோடிக்கணக்கில் உள்ளனர். மேளா நடக்கும் போது அநேகர் செல்கின்றனர். அவர்கள் உணவு சமைப்பதில்லை. இல்லற வாசிகளின் பாலனையில் செல்கின்றனர். கர்ம சந்நியாசம் செய்து விட்டனர் என்றால் பிறகு உணவு எங்கிருந்து சாப்பிடுவது? ஆகவே இல்லறவாசிகளிடம் சாப்பிடுகின்றனர். இதுவும் நாம் செய்யும் தானம் என இல்லறவாசிகள் நினைக்கின்றனர். இவரும் (பிரம்மா) பூஜாரி, பதித்தமாக இருந்தார். பிறகு இப்போது ஸ்ரீமத் படி நடந்து பாவனமாகிக் கொண்டிருக்கிறார். பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் தந்தையைப் பின்பற்றுங்கள் எனச் சொல்கிறார். மாயா ஒவ்வொரு விசயத்திலும் துன்புறுத்துகின்றது. தேக-அபிமானத்தினால் தான் மனிதர்கள் தவறு செய்கின்றனர். ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி, தேக-அபிமானம் விட்டுப்போக வேண்டும் இல்லையா? தேக-அபிமானம் விட்டுப்போவது தான் பெரிய முயற்சியாகும். பாபா சொல்கிறார், நீங்கள் உங்களை ஆத்மா என உணர்ந்து தேகத்தின் மூலம் பாகத்தை நடியுங்கள். நீங்கள் தேக-அபிமானத்தில் ஏன் வருகிறீர்கள்? டிராமாவின் அனுசாரம் தேக-அபிமானத்திலும் வரத்தான் வேண்டும். இச்சமயத்திலோ பக்கா தேக-அபிமானியாக ஆகி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், நீங்களோ ஆத்மா ஆவீர்கள். ஆத்மா தான் அனைத்தையும் செய்கின்றது. ஆத்மா சரீரத்திலிருந்து தனியாகி விட்டால் பிறகு சரீரத்தை வெட்டுங்கள், அப்போது சப்தம் ஏதாவது வெளிவருமா? வராது. ஆத்மா தான் சொல்கிறது - எனது சரீரத்திற்கு துக்கம் கொடுக்காதே! ஆத்மா அழியாதது, சரீரம் அழியக் கூடியது. தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். தேக-அபிமானத்தை விட்டு விடுங்கள்.

 

குழந்தைகள் நீங்கள் எவ்வளவு ஆத்ம அபிமானி ஆகிறீர்களோ, அவ்வளவு ஆரோக்கியவானாகவும் நோயற்றவராகவும் ஆகிக் கொண்டே செல்வீர்கள். இந்த யோக பலத்தினால் தான் நீங்கள் 21 பிறவிகளுக்கு நோயற்றவர்களாக ஆவீர்கள். எவ்வளவு ஆகிறீர்களோ, அவ்வளவு பதவியும் உயர்ந்ததாகக் கிடைக்கும். தண்டனை களில் இருந்து தப்புவீர்கள். இல்லையென்றால் தண்டனைகள் அதிகமாக அடைய நேரிடும். ஆக, எவ்வளவு ஆத்ம அபிமானி ஆக வேண்டும்! அநேகரின் அதிர்ஷ்டத்தில் இந்த ஞானம் இல்லை. எதுவரை உங்கள் குலத்தில் வரவில்லையோ, அதாவது பிரம்மா முகவம்சாவளி ஆகவில்லையோ, அப்போது பிராமணர் ஆகாமல் தேவதையாக எப்படி ஆவார்கள்? அநேகர் வரத்தான் செய்கின்றனர், பாபா-பாபா என எழுதுகின்றனர், அல்லது சொல்கின்றனர் என்றாலும் வெறுமனே சொல்ல மட்டுமே செய்கின்றனர். ஓரிரு கடிதங்கள் எழுதிவிட்டுப் பிறகு மறைந்து விட்டனர். அவர்களும் சத்யுகத்தில் வருவார்கள், ஆனால் பிரஜைகளில் ஒருவராக. பிரஜைகளோ அதிகம் உருவாகின்றனர் இல்லையா? இன்னும் போகப்போக அதிக துக்கம் வரும்போது அநேகர் ஓடி வருவார்கள். பகவான் வந்து விட்டார் என்ற சப்தம் பரவும். உங்களுடைய சென்டர்களும் அநேகம் திறக்கப்படும். குழந்தைகளாகிய உங்களுடைய குறைபாடு, நீங்கள் ஆத்ம அபிமானி ஆவதில்லை என்பது தான். இன்னும் அதிகமான தேக அபிமானம் உள்ளது. கடைசியில் கொஞ்சமாவது தேக-அபிமானம் இருக்குமானால் பதவியும் குறைந்து போகும். பிறகு வந்து தாச-தாசிகளாக ஆவார்கள். தாச-தாசிகளும் நம்பர்வார் ஏராளமாக உள்ளனர். இராஜாக்களுக்கு தாச-தாசிகள் சீதனமாகக் கிடைப்பார்கள். பணக்காரர்களுக்குக் கிடைப்பதில்லை. குழந்தைகள் பார்த்துள்ளனர், இராதை எத்தனை தாசிகளை சீதனமாகப் பெற்றுள்ளார் என்று. இன்னும் போகப்போக உங்களுக்கு நிறைய சாட்சாத்காரங்கள் கிடைக்கும். சாதாரண தாசியாக ஆவதைக் காட்டிலும் பணக்காரப் பிரஜை ஆவது நல்லது. தாசி என்ற சொல் மோசமானதாகும். பிரஜைகளில் பணக்காரராக ஆவது பிறகும் கூட நல்லது. பாபாவுடையவர்களாக ஆவதால் மாயா இன்னும் நன்றாகவே உபசாரம் செய்கிறது. பலம் மிகுந்த (ருஸ்தம்) போர்வீரனாகிப் போரிடுகின்றது. தேக-அபிமானம் வந்து விடுகின்றது. சிவபாபாவிடம் கூட முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். பாபாவை நினைவு செய்வதையே விட்டு விடுகின்றனர். அட, சாப்பிடுவதற்கு நேரம் உள்ளது, ஆனால் இப்படிப்பட்ட தந்தை, உலகத்திற்கு எஜமானர் ஆக்குபவர், அவரை நினைவு செய்வதற்கு நேரம் இல்லை? நல்ல-நல்ல குழந்தைகள் சிவபாபாவை மறந்து தேக-அபிமானத்தில் வந்து விடுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட தந்தை, உயிர்மூச்சைத் தருகிறார். அவரை நினைவு செய்து கடிதமோ எழுதத் தான் வேண்டும். ஆனால் இங்கே உள்ள விசயத்தைக் கேட்கவே வேண்டாம். மாயா முற்றிலும் மூக்கைப் பிடித்துக் கொண்டுபோய் விடுகிறது. ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத் படி நடந்தால் ஒவ்வொரு அடியிலும் பல மடங்கு வருமானம் உள்ளது. நீங்கள் அளவற்ற செல்வந்தர் ஆகிறீர்கள். அங்கே பணத்தை எண்ணுவதில்லை. பணம்- செல்வம், பயிரிடுவதற்கான நிலம் அனைத்தும் கிடைக்கும். அங்கே செம்பு, இரும்பு, பித்தளை போன்றவை இருக்காது. தங்கத்தினால் ஆன நாணயங்கள் இருக்கும். கட்டடமே தங்கத்தால் ஆனதாக இருக்குமென்றால் அங்கே என்ன தான் இருக்காது! இங்கே இருப்பதோ மிக தரமற்ற இராஜ்யம். இராஜா-ராணி எப்படியோ, பிரஜைகளும் அப்படியே! சத்யுகத்தில் ராஜா-ராணி எப்படியோ, அப்படியே பிரஜைகள் அனைவரும் மிக உயர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் மனிதர்களின் புத்தியில் பதிவதில்லை. தமோபிரதானமாக உள்ளனர். பாபா புரிய வைக்கிறார்-நீங்களும் அப்படித்தான் இருந்தீர்கள். இவரும் (பிரம்மா) அப்படித்தான் இருந்தார். இப்போது நான் வந்து தேவதா ஆக்குகிறேன். அப்படியும் ஆவதில்லை. தங்களுக்குள் சண்டை-சச்சரவு செய்து கொண்டுள்ளனர். நான் மிக நன்றாக உள்ளேன், அப்படி இருக்கிறேன்....... நாம் நரகத்தில் உள்ளோம், பயங்கர நரகத்தில் விழுந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. இதையும் குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். மனிதர்கள் முற்றிலும் நரகத்தில் விழுந்துள்ளனர். ஞான மார்க்கத்தில் யார் தங்களைப் போல் ஆக்குவதற்கான சேவை செய்ய முடிவதில்லையோ, உனது-எனது என்ற சிந்தனையில் உள்ளனரோ, அவர்கள் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள். பாபாவைத் தவிர வேறு யாரையாவது நினைவு செய்தால் கலப்பட நினைவு ஆகிறது இல்லையா? பாபா சொல்கிறார், வேறு யாருடைய வழிமுறையையும் கேட்காதீர்கள். நான் சொல்வதை மட்டுமே கேளுங்கள். என்னை நினைவு செய்யுங்கள். தேவதைகளை நினைவு செய்தாலும் கூட அது மேலானது தான். மனிதர்களை நினைவு செய்வதால் எந்தப் பயனும் கிடையாது. இங்கோ பாபா சொல்கிறார், நீங்கள் தலை தாழ்த்தியும் கூட ஏன் வணங்க வேண்டும்? நீங்கள் இந்த பாபாவிடம் வரும் போதும் கூட சிவபாபாவை நினைவு செய்து கொண்டு வாருங்கள். சிவபாபாவை நினைவு செய்வதில்லை என்றால் பாவம் செய்கிறீர்கள் என்று பொருளாகும். பாபா சொல்கிறார் முதலிலோ பவித்திரமாவதற்கான உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள். மிகுந்த பத்தியம் உள்ளது. மிக அபூர்வமாக யாரோ சிலர் புரிந்து கொள்கின்றனர். அந்த அளவு புத்தி இல்லை. பாபாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? இதிலோ மிகுந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாலையின் மணியாக ஆக வேண்டும். அது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. முக்கியமானது பாபாவை நினைவு செய்வதாகும். நீங்கள் பாபாவை நினைவு செய்ய முடியாதா? பாபாவின் சேவை, பாபாவின் நினைவு எவ்வளவு இருக்க வேண்டும்! பாபா தினந்தோறும் சொல்கிறார் அன்றாடக் கணக்கை எழுதுங்கள். எந்தக் குழந்தைகளுக்கு தங்களின் நன்மை செய்வதற்கான சிந்தனை உள்ளதோ, அவர்கள் ஒவ்வொரு விதத்திலும் முழுமையான பத்தியத்தைக் கடைப் பிடிப்பார்கள். அவர்களின் உணவு-பானம் மிகவும் சாத்வீகமாக இருக்கும்.

 

பாபா குழந்தைகளின் நன்மைக்காக எவ்வளவு சொல்லிப்புரிய வைக்கிறார்! அனைத்து விதமான பத்தியமும் இருக்க வேண்டும். சோதித்துப் பார்க்க வேண்டும் - நம்முடைய உணவு-பானமோ அதுபோல் இல்லையே? பேராசைக்காரனாக இல்லையே? எதுவரை கர்மாதீத் அவஸ்தா ஏற்படவில்லையோ, அதுவரை மாயா தலைகீழான காரியங்களைச் செய்ய வைத்துக் கொண்டே இருக்கும். அதில் நேரம் பிடிக்கின்றது. பிறகு தெரிய வரும், இப்போதோ விநாசம் முன்னால் நின்று கொண்டுள்ளது என்று. நெருப்பு பரவி விட்டுள்ளது. நீங்கள் பார்ப்பீர்கள், எப்படி வெடிகுண்டுகள் விழுகின்றன என்று. பாரதத்திலோ இரத்த ஆறுகள் ஓடப்போகின்றன. அங்கே (வெளிநாடுகளில்) வெடிகுண்டுகளால் ஒருவர் மற்றவரை அழித்து விடுவார்கள். இயற்கை சேதங்கள் நடைபெறும். கஷ்டங்கள் அனைத்திலும் அதிகமாக பாரததின் மீது உள்ளது. தன் மீது அதிகமான பார்வை (கவனம்) வைக்க வேண்டும் - நாம் என்ன சேவை செய்கிறோம்? எத்தனைப் பேரை தனக்குச் சமமாக நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகிறோம்? யாராவது பக்தியில் அதிகம் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றால் புரிந்து கொள்கின்றனர் - இந்தப் (பெண்) குழந்தைகள் என்ன கற்றுக் கொடுப்பார்கள்? இவர்களுக்குப் படிப்பு சொல்லித்தருபவர் தந்தை (பகவான்) என்பதைப் புரிந்து கொள்வதே இல்லை. கொஞ்சம் படித்து விட்டால் அல்லது பணம் உள்ளது என்றால் சண்டை போடத் தொடங்கி விடுகின்றனர். கௌரவத்தையே இழந்து விடுகின்றனர். சத்குருவுக்கு நிந்தனை செய்பவர்கள் நல்ல பதவி பெற மாட்டார்கள். பிறகு ஒன்றுக்கும் உதவாத பதவியைத் தான் பெறுவார்கள். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

 

தாரணைக்கான முக்கிய சாரம் :

1) உனது-எனது என்ற சிந்தனைகளை விட்டு தன்னைப்போல் ஆக்குகிற சேவை செய்ய வேண்டும். ஒரு பாபா சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். பாபாவை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். பலவிதமான கலப்பட நினைவு செய்பவராக ஆகக் கூடாது.

 

2) தனது நன்மைக்காக உணவு-பானத்தின் பத்தியம் மிகவும் வைக்க வேண்டும். நான் பேராசைக்கா ரனாகவோ இல்லை தானே? மாயா தலைகீழான காரியம் செய்ய வைக்கவில்லையே? இவ்வாறெல்லாம் தன்னை சோதிக்க வேண்டும்.

 

வரதானம்:

நடைமுறை வாழ்க்கையின் மூலம் பரமாத்ம ஞானத்தின் நிரூபணத்தைக் காட்டக் கூடிய தர்மயுத்தத்தில் வெற்றி பெறுபவர் ஆகுக.

 

இப்போது தர்ம யுத்தத்தின் மேடையின் மீது வர வேண்டும். அந்த தர்ம யுத்தத்தில் வெற்றியாளராக ஆவதன் சாதனம் உங்களின் நடைமுறை வாழ்க்கையாகும். ஏனென்றால் பரமாத்ம ஞானத்தின் நிரூபணமே நடைமுறை வாழ்க்கையாகும். உங்களின் முகத்தின் மூலம் ஞானம் மற்றும் குணம் நடைமுறையில் தெரிய வேண்டும், ஏனென்றால் இன்றைய நாட்களில் கலந்துரையாடுவதன் மூலம் தனது மூர்த்தியை வெளிப்படுத்த முடியாது, ஆனால் தனது நடைமுறை தாரணை மூர்த்தியின் மூலம் ஒரு வினாடியில் யாரை வேண்டுமானலும் அமைதிப்படுத்த முடியும்.

 

சுலோகன்:

ஆத்மாவை தூய்மைப்படுத்துவதற்காக பரமாத்ம நினைவின் மூலம் மனதின் குழப்பங்களை முடித்து விடுங்கள்.

 

ஓம்சாந்தி