14-04-2021 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


கேள்வி:

சர்வ உத்தம, உண்மையான சேவை எது? யதார்த்த சேவையின் சூட்சும மற்றும் ஆழ மான இரகசியம் என்ன?

பதில்:

யாராவது ஏதாவது தவறு செய்கிறார்கள் எனில் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதன் கூடவே சூட்சும ரூபத்தில் தனது யோக சக்தியை அவர்களுக்கு கொடுத்து அவர்களது அசுத்த சங்கல்பங்களை அழித்து விட வேண்டும். இது தான் சர்வ உத்தம உண்மையான சேவையாகும். மேலும் தன் மீதும் கவனம் கொடுக்க வேண்டும். மனதிலும் கூட எந்த அசுத்த சங்கல்பம் உருவாகி விடக் கூடாது. இதில் தானும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், மற்றவர்களுக்கும் இவ்வாறு தெய்வீக சேவை செய்ய வேண்டும். இதுவே சேவையின் சூட்சும மற்றும் ஆழமான இரகசியமாகும்.

ஓம்சாந்தி. ஒவ்வொரு முயற்சியாளர் குழந்தையும் முதலில் உள்நோக்கு நிலையை அவசியம் தாரணை செய்ய வேண்டும். உள்நோக்கு முகத்துடன் இருப்பதில் மிகப் பெரிய நன்மை அடங்கி யிருக்கிறது. இந்த நிலையின் மூலம் தான் ஆடாத, நிலையான, தைரியம், பணிவு போன்ற தெய்வீக குணங்களை தாரணை செய்ய முடியும். அதாவது சம்பூர்ன ஞானம் நிறைந்த மனநிலை பிராப்தியாக அடைய முடியும். உள்நோக்கு முகத்துடன் இல்லாத காரணத்தினால் அந்த சம்பூர்ன ஞானம் நிறைந்த மனநிலை பிராப்தியாக அடைய முடியாது. ஏனெனில் எந்த மகாவாக்கியம் எதிரில் கேட்கிறீர்களோ, அதை ஆழத்தில் சென்று தாரணை செய்யாமல், அந்த மகாவாக்கியங்கள் கேட்டு வெறுமனே திரும்பிக் கூறும் பொழுது அந்த மகாவாக்கியம் வாக்கியமாக ஆகிவிடுகிறது. யார் ஞானம் நிறைந்த மன நிலையில் இருந்து மகாவாக்கியங்கள் கேட்கவில்லையோ, அந்த மகாவாக்கியங்களின் மீது மாயையின் நிழல்கள் விழுந்து விடுகிறது. அப்படிப்பட்ட மாயையின் அசுத்த அதிர்வலைகள் நிறைந்த மகாவாக்கியங்களைக் கேட்டு வெறுமனே திரும்பிக் கூறுவதன் மூலம் தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படுவதற்குப் பதிலாக தீமை ஏற்பட்டு விடுகிறது. ஆகையால் ஹே குழந்தைகளே! உள்நோக்கு முகமுடையவர்களாக ஆகிவிடுங்கள்.

உங்களது இந்த மனம் கோயில் போன்றது. கோயிலில் சதா நறுமணம் வீசுவது போன்று மனக் கோயில் தூய்மையாக ஆகின்ற பொழுது சங்கல்பமும் தூய்மையானதாக வெளிப்படும். கோயிலில் தூய்மை யான தேவி தேவதைகளின் சிலைகள் மட்டுமே வைக்கப்படுமே தவிர அசுரர்களுக்கு அல்ல. இவ்வாறு குழந்தைகளாகிய நீங்கள் தனது மனதில் அல்லது உள்ளம் என்ற கோயிலை அனைத்து குணங்கள் என்ற மூர்த்திகளினால் அலங்கரித்து விடுங்கள், அந்த குணங்கள் - பற்றற்று இருப்பது, ஆசைகளற்று இருப்பது, பயமற்று இருப்பது, தைரியமாக இருப்பது, அகங்காரமற்று இருப்பது போன்றவைகளாகும். ஏனெனில் இவை அனைத்தும் உங்களது இலட்சணங்களே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தங்களது மனக் கோயிலை சம்பூர்ண தூய்மையாக ஆக்க வேண்டும். எப்போது மனம் என்ற கோயில் தூய்மை யானதாக ஆகின்றதோ, அப்போது தான் தங்களது தூய்மையான, அன்பான வைகுண்டத்திற்குச் செல்ல முடியும். ஆக இப்போது தன் மனதை தூய்மையாக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மேலும் மனதின் கூடவே கர்மேந்திரியங்களை வசப்படுத்த வேண்டும். ஆனால் தனக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் இந்த தெய்வீக சேவை செய்ய வேண்டும்.

உண்மையில் சேவை என்பதன் பொருள் மிகவும் சூட்சுமமானது மற்றும் ஆழமானது. யாராவது தவறு செய்திருந்தால் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது மட்டுமே சேவை அல்ல. அவர்களுக்கு சூட்சும ரூபத்தில் தனது யோக சக்தி கொடுத்து அவர்களது அசுத்த சங்கல்பங்களை அழித்து விட வேண்டும், இதுவே சர்வ உத்தமான சேவையாகும். கூடவே தன் மீதும் கவனம் செலுத்த வேண்டும். வார்த்தைகள் மற்றும் செயல்களின் மட்டுமின்றி மனதிலும் எந்த அசுத்த சங்கல்பம் உருவாகி விடக் கூடாது. அந்த அதிர்வலைகள் மற்றவர்களுக்குச் சென்று சூட்சுமத்தில் தீமை செய்து விடும். அதன் சுமை தன் மீது ஏற்பட்டு விடும். மேலும் அதே சுமைகள் பந்தனமாக ஆகிவிடுகிறது. ஆகையால் ஹே குழந்தைகளே! சுயம் எச்சரிக்கையாக இருங்கள், பிறகு மற்றவர்களுக்கு அதே தெய்வீக சேவை செய்யுங்கள். இதுவே சேவாதாரி குழந்தைகளாகிய உங்களது அலௌகீக கடமையாகும். இவ்வாறு சேவை செய்பவர்கள் தனக்கென்று எந்த சேவையும் செய்ய வேண்டியிருக்காது. தவறுதலாக ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டாலும் அதை தனது புத்தியோக பலத்தின் மூலம் சதா காலத்திற்காக திருத்தி விடுங்கள். இப்படிப் பட்ட தீவிர முயற்சியாளர்கள் சிறிது சைகை கிடைத்தாலும் விரைவாக உணர்ந்து கொண்டு மாறி விடுவர். மேலும் வரும் காலத்தில் நல்ல முறையில் கவனம் செலுத்தி நடந்து கொள்வர். இதுவே விசால புத்தியுடைய குழந்தைகளின் கடமையாகும்.

ஹே என்னுடைய உயிர்களே! பரமாத்மாவின் மூலம் படைக்கப்பட்ட இந்த அழிவற்ற இராஜஸ்வ ஞான யக்ஞத்தில் உடல், மனம், பொருள் முழுமையாக அர்ப்பணம் செய்யும் இரகசியம் மிகவும் ஆழமானது. எப்போது நீங்கள் எனது உடல், மனம், பொருள் சகிதமாக யக்ஞத்தில் சுவாஹா அதாவது அர்ப்பணித்து இறந்து விட்டேன் என்று கூறுனீர்களோ, அந்த நிமிடத்திலிருந்து தனது என்று எதுவும் கிடையாது. அதிலும் முதலில் உடல், மனதை முழுமையான முறையில் சேவையில் ஈடுபடுத்த வேண்டும். எப்போது அனைத்தையும் யக்ஞத்தில் அதாவது பரமாத்மாவினுடையதாக ஆகிவிடு கிறதோ, பிறகு தனக்கென்று எதுவும் இருக்க முடியாது. செல்வமும் வீணாக்க முடியாது. மனதிலும் அசுத்த எண்ணங்கள், விகார எண்ணங்கள் வர முடியாது. ஏனெனில் பரமாத்மாவிற்கு அர்ப்பணித்து விட்டீர்கள். பரமாத்மா தூய்மை, சாந்த சொரூபமாக இருக்கின்றார். இதன் காரணத்தினால் அசுத்த எண்ணங்கள் தானாகவே சாந்தியாக ஆகிவிடுகிறது. ஒருவேளை மனதை மாயாவின் கைகளில் கொடுத்து விட்டால் மாயை பல விதங்களில் இருக்கின்ற காரணத்தினால் பல விதமான விகார எண்ணங்களை உருவாக்கி மனம் என்ற குதிரையின் மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடும். சில குழந்தைகளுக்கு இன்று வரை விகார எண்ணங்கள் வருகிறது எனில் மனதை முழுமையான முறையில் அர்ப்பணிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதாவது ஈஸ்வரிய மனம் ஆக ஆகவில்லை. ஆகையால் ஹே சர்வ தியாகி குழந்தைகளே! இந்த ஆழமான இரகசியங்களை புரிந்து கொண்டு காரியங்கள் செய்யுங்கள், சாட்சியாக இருந்து தன்னைப் பார்க்க வேண்டும், மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

சுயம் கோபி வல்லபர் தனது பிரியமான கோப, கோபியர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார் லி உங்கள் ஒவ்வொருவரின் உண்மையான அன்பு எது? ஹே உயிரானவர்களே! நீங்கள் ஒருவருக்கொருவரின் அன்பு நிறைந்த எச்சரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் எந்த அளவிற்கு பிரியமான மலராக இருக்கிறதோ, அந்த அளவிற்கு சிரேஷ்ட பரிபாலனை கிடைக்கிறது. மலரை மதிப்பானதாக ஆக்குவதற்கு எஜமானர் முட்களிலிருந்து நீக்கியே ஆக வேண்டியிருக்கிறது. அதே போன்று உங்களுக்கும் யாராவது எச்சரிக்கை செய்கிறார்கள் எனில் அவர் எனக்கு பரிபாலனை செய்யும் பொருட்டு எனக்கு சேவை செய்கின்றார் என்ற புரிந்து கொள்ள வேண்டும். அந்த சேவைக்கு அதாவது பரிபாலனைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுவே சம்பூர்னம் ஆவதற்கான யுக்தியாகும். இதுவே ஞான சகிதமான ஆத்மார்த்த உண்மையான அன்பாகும். இந்த தெய்வீக அன்பில் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை இருக்க வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் முதலில் தன்னையே எச்சரித்துக் கொள்ள வேண்டும். இது தான் பணிவான, மிக இனிமையான நிலையாகும். இவ்வாறு அன்பான நடந்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இங்கேயே அந்த சத்யுகத்தின் தென்றலான நாட்கள் உள்ளுக்குள் உணர்வீர்கள். அங்கு இந்த அன்பு இயற்கையாக இருக்கும். ஆனால் இந்த சங்கமத்தின் மிக இனிமையான தருணத்தில் ஒருவருக்கொருவர் சேவை செய்வதற்கு இது மிக இனிமையான, மகிழ்ச்சிகரமான அன்பாகும். இந்த சுத்தமான அன்பு தான் உலகில் பாடப் பட்டிருக்கிறது.

சைத்தன்ய மலர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் நிச்சய புத்தியுடைய காரணத்தினால் உங்களது ஒவ்வொரு நரம்பிலும் சம்பூர்ன ஈஸ்வரிய சக்தி நிறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தியானது அவசியம் தனது தெய்வீக ஜொலிப்பை வெளிப்படுத்தும். எவ்வாறு குற்றமற்ற சிறிய குழந்தை சுத்தமாக, தூய்மையாக இருக்கின்ற காரணத் தினால் சதா மகிழ்ச்சியாக இருக்கிறது, மேலும் தனது மகிழ்ச்சியான நடத்தையின் மூலம் அனைவரையும் அதிகம் ஈர்க்கின்றது. அதே போன்று உங்கள் ஒவ்வொருவரின் ஈஸ்வரிய மகிழ்ச்சி கரமாக வாழ்க்கை இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஏதாவது ஒரு யுக்தியின் மூலம் தனது அசுர சுபாவங்களின் மீது வெற்றியடைய வேண்டும். ஒருவர் கோபம் என்ற விகாரத்திற்கு வசமாகி என் முன் வருகின்றார் என்பதை பார்க்கும் போது அவர் முன் ஞான ரூபமாகி குழந்தைக்கான இனிய புன்முறுவல் செய்யுங்கள், பிறகு அவர் சுயம் அமைதியானவராக ஆகிவிடுவார். அதாவது மறதி சொரூபத்திலிருந்து நினைவில் வந்து விடுவார். அவருக்கு தெரியாமலும் இருக்கலாம். ஆனால் சூட்சும முறையில் அவர் மீது வெற்றியடைந்து எஜமானராக ஆகிவிடுவது லி இது தான் எஜமான் மற்றும் குழந்தைக்கான சர்வ உத்தமமான விதியாகும்.

ஈஸ்வரன் சம்பூர்ன ஞான ரூபத்தில் இருக்கின்றார், பிறகு சம்பூர்ன அன்பு ரூபத்திலும் இருக்கின்றார். ஈஸ்வரனிடம் இரண்டு குணங்களும் நிறைந்திருக்கிறது. ஆனால் முதலில் ஞானம், இரண்டாவது அன்பு. ஒருவேளை ஒருவர் முதலில் ஞான ரூபமின்றி வெறும் அன்பு ரூபமாக இருக்கின்றார் எனில் அந்த அன்பு அசுத்த கணக்கில் கொண்டு சென்று விடும். ஆகையால் அன்பை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு முதலில் ஞான ரூபமாகி வித விதமான முறையில் வந்திருக்கும் மாயாவின் மீது வெற்றியடைந்து பிறகு அன்பு ரூபமாக ஆக வேண்டும். ஞானமின்றி அன்பில் வந்தீர்கள் எனில் நிலையற்றதாகவும் ஆகிவிடும். எவ்வாறு ஒருவர் ஞானமின்றி தியானத்தில் (டிரான்சில்) செல்கிறார் எனில் பல நேரங்களில் மாயையிடம் அகப்பட்டுக் கொள்கின்றனர். ஆகையால் பாபா கூறுகின்றார் லி குழந்தைகளே! இந்த தியானமும் (டிரான்ஸ்) கூட நூல் சங்கிலியாகும். ஆனால் ஞான ரூபமாகி பிறகு தியானத்தில் செல்வதன் மூலம் அதிக போதையின் அனுபவம் ஏற்படும். ஆக முதலில் ஞானம், பிறகு தியானம். தியான நிலையை விட ஞான நிலை சிரேஷ்டமானது. ஆகையால் ஹே குழந்தைகளே! முதலில் ஞான ரூபமாகி பிறகு அன்பை வெளிப்படுத்த வேண்டும். ஞானமற்ற அன்பு என்பது முயற்சி யாளர் வாழ்க்கையில் தடைகளை உருவாக்குகிறது.

சாட்சி நிலை மிகவும் இனிய, ரமணீகரமான மற்றும் அழகான நிலையாகும். இந்த நிலை தான் எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. ஒருவருக்கு சரீர கணக்கு (நோய்) வருகிறது. அந்த நேரத்தில் அவர் சாட்சி, சுக சொரூப நிலையில் இருந்து அதை அனுபவிக்கின்றார் எனில் பழைய கர்மக் கணக்கு முடித்துக் கொண்டும் இருக்கின்றார், கூடவே எதிர்காலத்திற்காக சுகத்தின் கணக்கையும் உருவாக்குகின்றார். ஆக இந்த சாட்சிக்கான சுக சொரூப நிலையானது கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டுடன் தொடர்பு இருக்கிறது. ஆக இந்த இரகசியத்தை புரிந்து கொள்வதன் மூலம் என்னுடைய மகிழ்ச்சிகரமான நேரம் கணக்கு முடிப்பதிலேயே சென்று விட்டது என்று யாரும் கூறமாட்டார்கள். கிடையாது, இது தான் மகிழ்ச்சிகரமான முயற்சிக்கான நேரமாகும், இந்த காலத்தில் இரண்டு காரியமும் சம்பூர்ன முறையில் நிரூபனம் ஆகிறது. இவ்வாறு இரண்டு காரியங்களையும் நிரூபனம் செய்யக் கூடிய தீவிர முயற்சியாளர்கள் தான் அதீந்திரிய சுகம் அல்லது ஆனந்தத்தின் அனுபவத்தில் இருக்கின்றனர்.

பல விதங்களில் உள்ள இந்த விராட நாடகத்தின் ஒவ்வொரு விசயத்திலும் குழந்தைகளாகிய உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும். ஏனெனில் இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும், முற்றிலும் நன்றியுடையதாக இருக்கிறது. பாருங்கள், இந்த நாடகம் ஒவ்வொரு ஆத்மாவையும் அதன் பாகத்தை முழுமையான முறையில் நடிக்க வைத்து விடுகிறது. அது தவறாகக் கூட இருக்கலாம், அந்த தவறான பாகத்தையும் முழுமையான முறையில் நடிக்க வைத்து விடுகிறது. இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. கெட்டது மற்றும் நல்லது இரண்டு திட்டங்களும் பதிவாகியிருக்கிறது, பிறகு எந்த ஒரு விசயத்திலும் சந்தேகம் எழுவது என்பது ஞானம் அல்ல. ஏனெனில் ஒவ்வொரு நடிகரும் அவரவர்களது நடிப்பு நடித்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறு சினிமாவில் பல விதமான பெயர்களில், ரூபங்களில் நடிகர்கள் அவரவர்களது நடிப்பு நடிக்கின்றனர். அதைப் பார்க்கின்ற போது யார் மீதாவது கோபம் வருகிறது அல்லது யாரைப் பார்த்து மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பது இருக்காது. இது ஒரு விளையாட்டு என்பதை அறிவீர்கள். இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கான நல்ல பாகம் கிடைத்திருக்கிறது. அதே போன்று இந்த அழிவற்று உருவாக்கப்பட்டிருக்கும் சினிமாவையும் சாட்சியாக இருந்து ஏக்ரஸ் நிலையுடன், மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குழுவில் இந்த கருத்தை மிக நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும். ஒருவரை ஒருர் ஈஸ்வரிய ரூபத்தில் பார்க்க வேண்டும். உணரக் கூடிய ஞானத்தை பயன்படுத்தி அனைத்து ஈஸ்வரிய குணங்களை தாரணை செய்ய வேண்டும். தனது இலட்சிய சொரூபத்தின் நினைவின் மூலம் அமைதி, பணிவு, தைரியம், இனிமை, குளிர்ச்சி போன்ற அனைத்து தெய்வீக குணங்களை வெளிப்படுத்த வேண்டும்.

தைரியமான ஸ்திதியை தாரணை செய்வதற்கான முக்கிய அஸ்திவாரம் லி பொறுத்திருந்து பாருங்கள் (வெயிட் அண்ட் சீ). ருஹ என்னுடைய பிரியமான குழந்தைகளே! பொறுத்தல் என்றால் தைரியமாக இருப்பதாகும். தனது உள்ளத்தில் முதலில் தைரியத்தை தாரணை செய்து அதற்குப் பிறகு வெளியில் விராட நாடகத்தை சாட்சியாகப் பார்க்க வேண்டும். எதுவரை எந்த ஒரு இரகசியமும் கேட்கின்ற பொழுது புரியவில்லையோ அதுவரை தைரியத்தின் குணத்தை தாரணை செய்ய வேண்டும். நேரம் வரும் போது அந்த தைரியத்தின் குணத்தின் மூலம் இரகசியத்தை கேட்கின்ற பொழுது ஒருபோதும் குழப்பமடையமாட்டீர்கள். ஆகையால் ஹே முயற்சியாளர் ஆத்மாக்களே! சிறிது நில்லுங்கள் மற்றும் இரகசியத்தை பார்த்து முன்னேறிச் செல்லுங்கள். இந்த தைரியமான நிலையின் மூலம் முழு காரியமும் சம்பூர்ன முறையில் வெற்றியாகி விடும். இந்த குணம் நம்பிக்கையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நிச்சயபுத்தி சாட்சியாக இருந்து ஒவ்வொரு விளையாட்டையும் சிரித்த முகத்துடன் பார்த்து உள்ளுக்குள் தைரியம் மற்றும் உறுதியாக இருப்பது தான் ஞானத்தின் பரிபக்குவ நிலையாகும். இது கடைசியில் சம்பூர்ன நிலைக்கான நேரத்தில் நடைமுறையில் இருக்கும். ஆகையால் அதிக காலம் இந்த சாட்சி நிலையில் நிலைத்திருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

எவ்வாறு நாடக நடிகர்கள் தனக்குக் கிடைத்த பாகத்தை நடிப்பதற்கு முன்பாகவே ஒத்திகை செய்கிறார்களோ, அவ்வாற பிரிய மலர்களாகிய நீங்களும் வரக் கூடிய பெரிய சோதனைகளில் யோக பலத்தின் மூலம் தேர்ச்சி ஆவதற்காக முன் கூட்டியே ஒத்திகை அவசியம் செய்ய வேண்டும். ஆனால் அதிக காலம் இந்த முயற்சி செய்திருக்கவில்லையெனில் அந்த நேரத்தில் பயத்தினால் தோல்வி அடைந்து விடுவீர்கள். ஆகையால் முதலில் தனது ஈஸ்வரிய அஸ்திவாரத்தை உறுதியாக வைத்து தெய்வீக குணங்களுடையவர்களாக ஆகி விடுங்கள்.

ஞான சொரூப ஸ்திதியில் நிலைத்திருப்பதன் மூலம் தானாகவே அமைதி ரூப நிலை ஏற்பட்டு விடும். ஞானி ஆத்மாக்கள் ஒன்றாக அமர்ந்து முரளி கேட்கின்ற பொழுது நாலா புறமும் அமைதிக்கான வாயுமண்டலம் உருவாகி விடும். ஏனெனில் அவர்கள் எந்த ஒரு மகாவாக்கியம் கேட்டாலும் அதன் ஆழத்தில் சென்று விடுவர். ஆழத்தில் செல்கின்ற காரணத்தினால் அவர்களுக்கு உள்ளுக்குள் இனிய அமைதியில் உணர்வு ஏற்படும். இப்போது இதற்கென்று அமர்ந்து முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஆனால் ஞான ஸ்திதியில் நிலைத்திருப்பதன் மூலம் இந்த குணம் தானாகவே வந்து விடும். குழந்தை களாகிய நீங்கள் அதிகாலையில் எழுந்து ஏகாந்தத்தில் அமரும் போது, சுத்த சிந்தனைகள் என்ற அலைகள் உருவாகின்றன. அந்த நேரத்தில் மிகவும் விடுபட்ட நிலை இருக்க வேண்டும். பிறகு தனது நிஜமான, சுத்த சங்கல்பத்தில் நிலைத்திருப்பதன் மூலம் மற்ற அனைத்து சங்கல்பங்களும் தானாகவே அமைதியாகி விடும். மேலும் மனம் அமைதியாகி விடும். ஏனெனில் மனதை வசப்படுத்துவதற்கு அவசியம் ஏதாவது சக்தி தேவை. ஆகையால் முதலில் தனது இலட்சிய சொரூபத்தின் சத்த சங்கல்பத்தை தாரணை செய்யுங்கள். எப்போது உள்ளார்ந்த புத்தியோகம் நியமப்படி இருக்குமோ, அப்போது உங்களது இந்த சங்கல்பமற்ற நிலை தானாகவே ஏற்பட்டு விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான, செல்லமான, ஞான மலர், ஞான நட்சத்திரங்களுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தனது இலட்சிய சொரூபத்தின் நினைவின் மூலம் அமைதி, பணிவு, தைரியம், இனிமை, குளிர்ந்த நிலை போன்ற அனைத்து தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.

2) நிச்சயபுத்தி சாட்சி பார்வையாளர் ஆகி இந்த விளையாட்டை சிரித்த முகத்துடன் பார்த்து உள்ளார்ந்த தைரியம் மற்றும் உறுதியான நிலையுடன் இருக்க வேண்டும். அதிக காலம் இந்த சாட்சி நிலையில் நிலைத்திருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:

அன்பு மற்றும் சக்தி ரூபத்தின் சமநிலையின் மூலம் சேவை செய்யக் கூடிய வெற்றி மூர்த்தி ஆகுக.

ஒரு கண்ணில் தந்தையின் அன்பும், மற்றொரு கண்ணில் தந்தையின் மூலம் அடைந்திருக்கும் காரியம் (சேவை) சதா நினைவில் இருப்பது போன்று அன்பான மூர்த்தியின் கூடவே இப்போது சக்தி ரூபமானவராகவும் ஆகுங்கள். அன்பின் கூடவே வார்த்தைகளில் அந்த அளவிற்கு கூர்மை நிறைத்துக் கொள்ள வேண்டும், அது பிறருடைய இதயத்தை துளைத்து விட வேண்டும். எவ்வாறு தாய் குழந்தைக்கு எப்படிப்பட்ட வார்த்தைகளினால் போதனைகள் கொடுத்தாலும் தாயின் அன்பின் காரணத்தினால் அந்த வார்த்தைகளின் வேகம் அல்லது கசப்பு உணருவது கிடையாது. அதே போன்று ஞானத்தின் சத்திய விசயங்களை அவர்களுக்கு தெளிவான வார்த்தைகளில் கொடுங்கள், ஆனால் வார்த்தைகளில் அன்பு நிறைந்திருக்க வேண்டும். அப்போது வெற்றி மூர்த்திகளாக ஆகிவிடுவீர்கள்.

சுலோகன்:

சர்வசக்திவான் தந்தையை துணைவனாக ஆக்கிக்

 

கொண்டால் பட்சாதாபத்திலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.