31.05.2020  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  ரிவைஸ் 18.01.1986          மதுபன்


  

மனதின் சக்தி மற்றும் பயமற்ற நிலையின் சக்தி

 

இன்று விருட்சபதி தன்னுடைய புதிய விருட்சத்தின் அஸ்திவாரமான குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். விருட்சபதி தன்னுடைய விருட்சத்தின் அடிமரத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். விருட்ச பதியின் பாலனையில் வளர்ந்திருக்கும் சிரேஷ்டமான பலன் சொரூபமான அனைத்து குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஆதிதேவன் தனது ஆதி இரத்தினங்களைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். ஒவ்வொரு இரத்தினத்தின் மகான்தன்மை, விஷேத்தன்மை வெவ்வேறானது. ஆனால், அனைவரும் புதிய படைப்பிற்கு நிமித்தமாகி இருக்கும் விசேஷஆத்மாக்கள் ஆவீர்கள். ஏனெனில், தந்தையை அறிந்து கொள்வது, தந்தையின் காரியத்தில் சகயோகி ஆவதில் நிமித்தமாகியிருக்கிறீர்கள் மற்றும் அனேகருக்கு முன்னால் உதாரணம் ஆகியிருக்கிறீர்கள். உலகத்தைப் பார்க்காமல், புது உலகத்தைப் படைக்கக் கூடியவரைப் பார்த்தீர்கள். உலகத்திற்கு முன் உறுதியான நம்பிக்கை மற்றும் தைரியத்தின் சான்றாக ஆகிக்காட்டுவீர்கள், ஆகையினால், அனைவரும் விசேஷ ஆத்மாக்கள் ஆவீர்கள். விசேஷ ஆத்மாக்களை விசேஷமான ரூபத்தில் குழுவாகப் பார்த்து, பாப்தாதாவும் மகிழ்ச்சி அடைகின்றார்கள் மற்றும் அத்தகைய குழந்தைகளின் மகிமையின் பாடல் பாடுகின்றார்கள். தந்தையை அறிந்துகொண்டீர்கள், மேலும், தந்தை நீங்கள் யாராக இருந்தாலும், எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் உங்களை விரும்பியிருக்கின்றார். ஏனெனில், சத்தியமான உள்ளம் உடையவர்களே திலாராமிற்கு விருப்பமானவர்கள் ஆவார்கள். உலகத்தின் புத்திசாலித்தனம் இல்லாமலும் கூட இருக்கலாம், ஆனால், தந்தைக்கு உலகீய புத்திசாலித் தனம் கொண்டவர்கள் விருப்பமானவர்கள் அல்ல, பாவனையான உள்ளம் உடையவர்களே விருப்பமானவர்கள் ஆவார்கள். புத்தியோ தந்தை அவ்வளவு பெரியதாகக் கொடுக்கின்றார், அதன் மூலம் படைப்பாளரை அறிந்துகொள்வ தனால் படைப்பின் முதல், இடை, கடை பற்றிய ஞானத்தை அறிந்துவிடுகிறீர்கள். ஆகையினால், பாப்தாதா உள்ளத்திலிருந்து விரும்புகின்றார்கள். சத்தியமான தூய்மையான உள்ளத்தின் ஆதாரத்தினால் நம்பரும் உருவாகிறது, சேவையின் ஆதாரத்தினால் அல்ல. சேவையில் கூட சத்தியமான உள்ளத்தோடு சேவை செய்வீர்களா அல்லது வெறும் புத்தியின் ஆதாரத்தில் சேவை செய்வீர்களா? உள்ளத்தின் சப்தம் உள்ளம் வரை சென்ற டைகிறது, புத்தியின் சப்தம் புத்தி வரை சென்றடைகிறது.

 

இன்று பாப்தாதா உள்ளம் உடையவர்களின் பட்டியலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். புத்தி உடையவர் கள் பெயரை சம்பாதிக்கின்றனர், உள்ளம் உடையவர்கள் ஆசீர்வாதங்களை சம்பாதிக்கின்றனர். எனவே, இரண்டு மாலைகள் உருவாகிக்கொண்டிருந்தன. ஏனெனில், இன்று வதனத்தில் அட்வான்ஸாக சென்றிருக்கும் ஆத்மாக்கள் எமர்ஜ் ஆகியிருந்தார்கள். அந்த விசேஷ ஆத்மாக்கள் உரையாடல் செய்துகொண்டிருந்தார்கள். முக்கியமாக என்ன உரையாடல் நடக்கும்? நீங்கள் அனைவரும் கூட விசேஷ ஆத்மாக்களை எமர்ஜ் செய்துவிட்டீர்கள் அல்லவா. சமயம் மற்றும் சம்பூரண நிலை ஆகிய இரண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? எத்தனை நம்பர் தயாராகி உள்ளன? நம்பர் தயாராகிவிட்டதா அல்லது இப்பொழுது தயாராக வேண்டுமா என்ற உரையாடல் வதனத்திலும் நடந்துகொண்டிருந்தது. வரிசைக்கிரமமாக அனைவரும் மேடைக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள் அல்லவா. இப்பொழுது நாங்களோ அட்வான்ஸ் காரியம் (முன்னேற்பாடு) செய்து கொண்டிருக்கின்றோம், ஆனால், நம்முடைய துணையானவர்கள் நம்முடைய காரியத்தில் விசேஷமாக என்ன சகயோகம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்? என்று அட்வான்ஸ் பார்ட்டியில் சென்றவர்கள் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களும் மாலையை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். என்ன மாலையை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்கள்? எங்கெங்கு யார் யார் புது உலகத்தின் ஆரம்ப காரியத்திற்காகப் பிறப்பெடுப்பார்கள். இது நிச்சயம் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அவர்களுக்கும் கூட அவர்களுடைய காரியத்தில் சூட்சுமமான சக்திசாலியான மனதினுடைய விசேஷ சகயோகம் தேவைப்படுகிறது. யார் சக்திசாலியான ஸ்தாபனைக்கு நிமித்தமாகியிருக்கக்கூடிய ஆத்மாக்களோ, அவர்கள் சுயம் பாவனமாக இருக்கின்றார்கள், ஆனால், மனிதர்களுடைய, இயற்கையினுடைய வாயுமண்டலம் தமோகுணமாக உள்ளது. அதிக தமோகுணத்திற்கு நடுவில் குறைவான சதோகுணமான ஆத்மாக் கள் தாமரை மலருக்குச் சமமானவர்கள். ஆகையினால், இன்று, நம்முடைய துணையானவர்களுக்கு இவ்வளவு பெரிய சேவையின் நினைவு உள்ளதா அல்லது சென்டர்களிலேயே பிஸியாக ஆகிவிட்டனரா அல்லது ஜோனில் (மண்டலம்) பிஸியாகி விட்டனரா என்ன? என்று உரையாடல் செய்துகொண்டே உங்களுடைய மிகவும் அன்பான சிரேஷ்ட ஆத்மாக்கள் புன்னகைத்துக்கொண்டே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 

இவ்வளவு பெரிய இயற்கையின் மாற்றத்திற்கான காரியம், தமோகுண சமஸ்காரம் உடைய இத்தனை ஆத்மாக்களின் விநாசம் ஏதோ ஒரு விதி மூலம் நடந்தேறும். ஆனால், திடீரென ஏற்படும் மரணம், அகால மரணம், மொத்தமான மரணம் ஏற்படும்பொழுது அந்த ஆத்மாக்களின் அதிர்வலைகள் (வைப்பிரேசன்) எவ்வளவு

 

தமோகுணமானதாக இருக்கும்! அதை பரிவர்த்தனை செய்வது மற்றும் தன்னையும் கூட அத்தகைய இரத்த வெள்ள வாயுமண்டலத்தின் வைப்பிரேசனில் இருந்து பாதுகாப்பது மற்றும் அந்த ஆத்மாக்களுக்கு சகயோகம் கொடுப்பது ஆகிய இந்த விசாலமான காரியத்திற்காக தயாராகிக்கொண்டு இருக்கிறீர்களா என்ன? அல்லது யாரோ வந்தார்கள், புரியவைத்தோம் மற்றும் சாப்பிட்டோம், இதிலேயே சமயம் செல்லவில்லை தானே? இதைப் பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இன்று பாப்தாதா அவர்களுடைய செய்தியைக் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தகைய எல்லையற்ற காரியத்தை செய்வதற்கு நிமித்தமானவர்கள் யார்? ஆதியில் நிமித்தமாகி இருக்கிறீர்கள் எனில், இறுதியிலும் கூட பரிவர்த்தனையின் எல்லையற்ற காரியத்தில் நிமித்தம் ஆக வேண்டும் அல்லவா? யார் முடித்து வைத்தார்களோ அவர்கள் அனைத்தையும் செய்தார்கள் என்ற பழமொழி கூட உள்ளது. கர்ப்ப மாளிகையையும் தயார் செய்ய வேண்டும், அப்பொழுதே புதிய படைப்பினுடைய, யோகபலத்தினுடைய ஆரம்பம் ஆகும். யோகபலத்திற்காக மனதின் சக்தி அவசியமானதாக உள்ளது. தன்னுடைய பாதுகாப்பிற்காகக் கூட மனதின் சக்தியே சாதனமாக ஆகும். மனதின் சக்தி மூலமே தன்னுடைய இறுதி நேரத்தை அழகானதாக ஆக்குவதற்கு நிமித்தம் ஆக முடியும். இல்லையெனில், சாகாரமான சகயோகம் தக்க சமயத்தில் சூழ்நிலையின் அனுசாரம் கிடைக்க முடியாமலும் போகலாம். அந்த சமயத்தில் மனதின் சக்தி அதாவது சிரேஷ்ட சங்கல்ப சக்தி, ஒருவருடன் லைன் (தொடர்பு) கிளியராக இல்லையெனில், தன்னுடைய பலவீனங்கள் பட்சாதாப ரூபத்தில் பூதங்கள் போன்று அனுபவம் ஆகும். ஏனெனில், பலவீனங்கள் நினைவில் வருவதனால் பயமானது பூதம் போல் அனுபவம் ஆகும். இப்பொழுது எப்படியோ சமாளித்துவிடுகிறீர்கள், ஆனால், இறுதியில் பயம் அனுபவம் ஆகும். ஆகையினால், இப்பொழுதிலிருந்தே எல்லையற்ற சேவைக்காக, தன்னுடைய பாதுகாப்பிற்காக மனதின் சக்தி மற்றும் பயமற்ற நிலையின் சக்தியை சேமிப்பு செய்யுங்கள். அப்பொழுதே இறுதி நேரம் அழகானதாகவும் ஆகி மற்றும் எல்லையற்ற காரியத்தில் சகயோகியாகவும் ஆகி எல்லையற்ற விஷ்வ இராஜ்யத்தின் அதிகாரியாக ஆகுவீர்கள். இப்பொழுது உங்களுடைய துணையானவர்கள், உங்களுடைய சகயோகத்திற்காகக் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். காரியம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால், பரிவர்த்தனைக்கு இருவருமே நிமித்தமானவர்கள் ஆவீர்கள். அவர்கள் தங்களுடைய ரிசல்ட்டை கூறிக்கொண்டு இருந்தார்கள்.

 

அட்வான்ஸ் பார்ட்டியைச் சேர்ந்த சிலர் சுயம் சிரேஷ்ட ஆத்மாக்களை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள் மற்றும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள், சிலர் தயார் செய்வதில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். நட்பு மற்றும் நெருக்கமான சம்பந்தமே அவர்களுடைய சேவைக்கான சாதனம் ஆகும். இதன் மூலம் வெளிப்படையான ரூபத்தில் ஞானத்தின் உரையாடல் செய்யமாட்டார்கள், ஆனால், ஞான சொரூப ஆத்மா என்ற சம்ஸ்காரம் இருக்கும் காரணத்தினால் ஒருவருக்கொருவர் சிரேஷ்ட சம்ஸ்காரம், சிரேஷ்ட வைப்பிரேசன் மற்றும் சதா தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான முகம் ஒருவருக்கொருவர் தூண்டுதலை கொடுக்கக்கூடிய காரியத்தை செய்துகொண்டு இருக்கிறது. வெவ்வேறு குடும்பத்தில் உள்ளனர், ஆனால், ஏதாவது சம்பந்தம் அல்லது நட்பின் ஆதாரத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பில் வருவதனால், ஞானம் நிறைந்த ஆத்மாக்களாக இருக்கும் காரணத்தினால் இவர்கள் என்னுடையவர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் என்ற அனுபவம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. தன்னுடையவர் என்ற ஆதாரத்தினால் ஒருவரை ஒருவர் அறிந்துள்ளார்கள். இப்பொழுது சமயம் நெருக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது, ஆகையினால், அட்வான்ஸ் பார்ட்டியின் காரியம் தீவிர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடுக்கல் வாங்கல் வதனத்தில் நடந்து கொண்டிருந்தது. விசேஷமாக ஜெகதம்பா அனைத்து குழந்கைளுக்காகவும் இரண்டு இனிமையான வார்த்தைகளை கூறிக்கொண்டு இருந்தார்கள். வெற்றிக்கான ஆதாரம் சதா பொறுமை சக்தி மற்றும் கரைக்கும் சக்தி, இந்த விசேஷத்தன்மைகள் மூலம் வெற்றியானது சதா சகஜமானதாக மற்றும் சிரேஷ்டமானதாக அனுபவம் ஆகும் என்ற இரண்டு வார்த்தைகளில் அனைவருக்கும் நினைவை ஏற்படுத்தினார்கள். பிறருடையதையும் கூறவா என்ன? இன்று சந்தித்து உரையாடும் தினமாக, விசேஷமான சந்திப்பிற்கான நாளாக இருந்ததனால் ஒவ்வொருவரும் தன்னுடைய அனுபவத்தை வர்ணனை செய்து கொண்டிருந்தார்கள். நல்லது, வேறு யாருடையதை கேட்க விரும்புகிறீர்கள்? (விஷ்வ கிஷோர் சகோதரருடைய உரையாடல்) அவர் எப்பொழுதும் குறைவாகப் பேசுவார், ஆனால், என்ன பேசுகிறாரோ சக்திசாலியாக பேசுவார். அவருடைய பேச்சிலும் கூட ஒரே வார்த்தையில் முழு அனுபவமும் இருந்தது, அதாவது, எந்த ஒரு காரியத்திலும் வெற்றிக்கான ஆதாரம் உறுதியான நம்பிக்கை மற்றும் முழுமையான போதை என்று கூறினார். ஒருவேளை, நம்பிக்கை உறுதியாக இறுக்கிறது எனில், பிறருக்கும் கூட தானாகவே போதை அனுபவம் ஆகும். ஆகையினால், நம்பிக்கை மற்றும் போதை வெற்றிக்கான ஆதாரமாக இருந்தது. இது அவருடைய அனுபவம் ஆகும். எவ்வாறு சாகார தந்தைக்கு, நான் வருங்காலத்தின் விஷ்வ மகாராஜனாக ஆகியே ஆகிவிட்டேன் என்ற நம்பிக்கை மற்றும் போதை சதா இருந்ததோ, அவ்வாறு விஷ்வ கிஷோர் சகோதரருக்கும் கூட, நான் முதல் விஷ்வ மகாராஜனுடைய முதல் இளவரசன் ஆவேன் என்ற போதைஇருந்தது. நிகழ்கால மற்றும் எதிர்காலத்தினுடைய இந்த போதை உறுதியானதாக இருந்தது. எனவே, சமநிலை வந்துவிட்டது அல்லவா? யார் அவருடன் இருந்தீர்களோ, அவர்கள் அவரை அப்படிப் பார்த்தீர்கள் அல்லவா.

 

நல்லது, தீதி என்ன கூறினார்கள்?      தீதி மிகவும் நன்றாக உரையாடல் செய்து கொண்டிருந்தார்கள். நீங்கள் அனைவரையும் எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏன் அழைத்துவிட்டீர்கள்? விடைபெற்று வந்திருப்போம் அல்லவா ஒருவேளை, நீங்கள் கூறியிருந்தால் நாங்கள் விடைபெற்றுக்கொண்டு தயாராக இருந்திருப்போம் என்று கூறினார்கள். நீங்கள் விடைகொடுத்தீர்களா? பாப்தாதா குழந்தைகளுடன் உரையாடல் செய்து கொண்டிருந்தார் கள். தேக சகிதம் தேகத்தின் சம்பந்தம், தேகத்தின் சம்ஸ்காரம், அனைவருடைய சம்பந்தமும் லௌகீகமானதாக இல்லையென்றாலும் அலௌகீகமான சம்பந்தம் உள்ளது. அலௌகீக சம்பந்தத்தில் இருந்து, தேகத்திலிருந்து, சம்ஸ்காரத்திலிருந்து நஷ்டமோஹா ஆவதற்கான விதியாக இதுவே நாடகத்தில் பதிவாகி இருக்கிறது. ஆகையினால், இறுதியில் அனைத்திலிருந்தும் நஷ்டமோஹா ஆகி தன்னுடைய வேலைக்காக வந்தடைந்து விட்டார்கள். விஷ்வ கிஷோருக்குக் கொஞ்சம் முன்னரே தெரிந்திருந்தது, ஆனால், எந்த சமயம் செல்வதற்கான சமயமாக இருந்ததோ, அந்த சமயத்தில் அவரும் மறந்து விட்டார். இது கூட நாடகத்தில் நஷ்டமோஹா ஆவதற்கான விதியாகப் பதிவாகி இருந்தது, அதுவே திரும்ப நடந்தது. ஏனெனில், கொஞ்சம் தனது முயற்சி இருந்தது மற்றும் கொஞ்சம் தந்தை, நாடகத்தின் அனுசாரம் கர்மபந்தனத்தில் இருந்து விடுபட்டவராக ஆக்குவதில் சகயோகமும் கொடுக்கின்றார். யார் நீண்டகால சகயோகி குழந்தைகளாக இருக்கின்றார்களோ, ஒரு தந்தையைத் தவிர வேறு எவரும் இல்லை என்ற இந்த முக்கியமான பாடத்தில் பாஸ் ஆகி இருக்கின்றார்களோ, இவ்வாறு ஒரு அனுபவம் செய்யக்கூடியவர்களுக்கு தந்தை அத்தகைய சமயத்தில் விசேஷமாக ஒரு சகயோகம் கண்டிப் பாகக் கொடுக்கின்றார். இவர்கள் அனைவரும் கர்மாதீத நிலையை அடைந்துவிட்டார்களா என்ன? என்று சிலர் யோசிக்கின்றனர். இதுவே கர்மாதீத நிலையாகும். ஆனால், அத்தகைய ஆரம்பத்திலிருந்து சகயோகியாக இருக்கும் குழந்தைகளுக்கு அதிகப்படியான சகயோகம் கிடைக்கிறது. ஆகையினால், கொஞ்சம் தனது முயற்சி குறைவாக இருக்கிறது என்றாலும் தந்தையின் உதவி அந்த சமயத்தில் இறுதியில் அதிகப்படியான மதிப்பெண்கள் கொடுத்து மதிப்புடன் தேர்ச்சி பெற்றவராக ஆக்கிவிடுகின்றது. அது குப்தமாக நடக்கின்றது. ஆகையினாலேயே என்ன இப்படி ஆகிவிட்டது என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், இது சகயோகத்தின் கைமாறாகும். இறுதி நேரத்தில் பயன்படும் என்று சொல்லப்படுகிறது அல்லவா? எனவே, யார் உள்ளத்தால் சகயோகியாக இருந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு அத்தகைய சமயத்தில் அதிகப்படியான மதிப்பெண்கள் கைம்மாறாகக் கிடைக்கின்றது. இந்த இரகசியத்தைப் புரிந்து கொண்டீர்களா? ஆகையினால், நஷ்டமோஹா நிலையின் விதி மூலம், அதிகப் படியான மதிப்பெண்கள் என்ற பரிசு மூலம் வெற்றியைப் பிராப்தியாக அடைந்துவிட்டீர்கள். புரிந்ததா - முடிவு என்ன என்று கேட்டுக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா? அதை இன்று இந்த உரையாடலில் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் நல்லது, தீதி என்ன கூறினார்கள்? அவர்களுடைய அனுபவத்தையோ அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். சதா தந்தை மற்றும் தாதாவின் விரலைப் பிடித்துக்கொள்ளுங்கள் அல்லது விரல் கொடுங்கள். ஒன்று குழந்தையாக்கி விரலைப் பிடியுங்கள் அல்லது தந்தையாக்கி உங்கள் விரலைக் கொடுங்கள் என்ற வார்த்தைகளைக் கூறிக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ரூபத்தினால் ஒவ்வொரு அடியிலும் விரலைப் பிடித்துக்கொண்டு துணையின் அனுபவத்தை செய்துகொண்டே செல்ல வேண்டும். இதுவே என்னுடைய வெற்றிக்கான ஆதாரம் ஆகும். இந்த விசேஷ உரையாடலே நடந்தது. ஆதி இரத்தினங்களினுடைய குழுவில் அவர்கள் (தீதி) எவ்வாறு வராமல் போவார்கள்? ஆகையினால், அவர்களும் எமர்ஜ் ஆகியிருந்தார்கள். நல்லது. இதுவே அட்வான்ஸ் பார்ட்டியினுடைய விசயங்கள் ஆகும், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

 

அட்வான்ஸ் பார்ட்டி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறது. நீங்கள் அட்வான்ஸ் போர்ஸை (சக்தி) நிறைத்திடுங்கள். இதன் மூலம் பரிவர்த்தனை (மாற்றம்) செய்யும் காரியத்தினுடைய கோர்ஸ் முடிவடைந்து விடவேண்டும். ஏனெனில், அஸ்திவாரம் ஆவீர்கள். அஸ்திவாரமே எல்லையற்ற சேவாதாரியாகி எல்லையற்ற தந்தையைப் பிரத்யட்சம் செய்வார்கள். விரைவில் இந்த சிருஷ்டியில் பிரத்யட்சதாவின் பறைசாற்றப்படுவதைக் கேட்பீர்கள். கிடைத்துவிட்டார், வந்துவிட்டார் என்ற இந்த ஒரே முழக்கம், ஒரே இசையில் நாலாபுறங்களில் இருந்தும் முழங்கும். இப்பொழுதோ அதிக வேலை உள்ளது. முடிந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுதோ பேச்சு மூலம் மாற்றம் செய்வதற்கான காரியம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது விருத்தி மூலம் விருத்திகள் மாற வேண்டும், சங்கல்பத்தின் மூலம் சங்கல்பம் மாற வேண்டும். இப்பொழுது இந்த ஆராய்ச்சியை ஆரம்பிக்கக் கூட இல்லை. கொஞ்சம் கொஞ்சம் செய்துள்ளீர்கள், அதனால் என்ன கிடைத்தது? இந்த சூட்சும சேவை தானாகவே சில பலவீனங்களில் இருந்து விடுவித்துவிடும். இது எவ்வாறு நடக்கும் என்று நினைக்கின்றீர்கள். அது எப்பொழுது இந்த சேவையில் பிஸியாக இருப்பீர்களோ, அப்பொழுது தன்னுடைய பலவீனங்கள் தனக்கே தெளிவாக அனுபவம் ஆகும்படி தானாகவே வாயுமண்டலம் உருவாகும். மேலும், வாயுமண்டலத்தின் காரணத்தினால் சுயம் தானே வெட்கப்பட்டு மாற்றம் அடைந்துவிடுவார்கள். சொல்ல வேண்டியது இருக்காது. சொல்வதன் பலனைப் பார்த்தாகி விட்டது, ஆகையினால், இப்பொழுது இதற்கான திட்டத்தை உருவாக்குங்கள். மாணவர்கள் இன்னும் அதிகமாக ஆவார்கள், அதைப் பற்றிய கவலை கொள்ளாதீர்கள் பண்டாரா (உண்டியல்) வரவும் அதிகமாக அதிகரிக்கும், அதைப் பற்றிய கவலையும் கொள்ளாதீர்கள். வீடும் கிடைத்துவிடும், அதைப் பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். அனைத்தும் கிடைத்துவிடும். இந்த விதி அத்தகையது, இதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகிவிடுவீர்கள். நல்லது.

 

சக்திகள் அதிகமானோர் உள்ளனர், ஆதியில் அதிகமான சக்திகளே நிமித்தமாக ஆனார்கள்.      பொன் விழாவிலும் கூட அதிகமாக சக்திகளே இருந்தனர். பாண்டவர்கள் குறைவான எண்ணிக்கையே உள்ளனர். ஆனாலும் பாண்டவர்கள் ஆவார்கள். நல்லது, தைரியத்துடன் ஆரம்பத்தில் பொறுத்துக் கொண்டதன் சான்று இந்த ஆதி இரத்தினங்களே ஆவார்கள். தடைகளை அழிப்பவர்கள் ஆகி, நிமித்தம் ஆகி, நிமித்தம் ஆக்கும் காரியத்தில் அமரர்களாக இருந்தீர்கள். ஆகையினால், பாப்தாதாவிற்கும் கூட அழிவற்ற, அமர்பவ என்ற வரதானி குழந்தைகள் சதா பிரியமானவர்கள் ஆவார்கள். மேலும், இந்த ஆதி இரத்தினங்கள் ஸ்தாபனையினுடைய, அவசியமான நேரத்தினுடைய சகயோகிகள் ஆவார்கள். ஆகையினால், அத்தகைய நிமித்தம் ஆகக்கூடிய ஆத்மாக்களுக்கு, இறுதி நேரத்தில் சகயோகி ஆகக்கூடிய ஆத்மாக்களுக்கு, எந்தவொரு கடினமான நேரம் வந்தாலும் பாப்தாதாவும் அவர்களுக்கு அதற்கான கைம்மாறு செய்கின்றார்கள். ஆகையினால், நீங்கள் அனைவரும், யாரெல்லாம் அத்தகைய சமயத்தில் நிமித்தம் ஆக ஆகியிருக்கிறீர்களோ, அவர்களுக்கு இந்த அதிகப்படியான பரிசானது நாடகத்தில் பதிவாகி உள்ளது. ஆகையினால், அதிகப்படியான பரிசின் அதிகாரி ஆவீர்கள்.

 

புரிந்ததா - தாய்மார்களின் துளித் துளியான பங்கேற்பினால் ஸ்தாபனை காரியம் ஆரம்பம் ஆனது மற்றும் இப்பொழுது வெற்றியின் அருகாமையில் வந்தே வந்துவிட்டீர்கள். மாதாக்களினுடையது உள்ளத்தின் வருமானம் ஆகும், தொழிலின் வருமானம் அல்ல. உள்ளத்தின் வருமானம் ஓராயிரத்திற்கு சமமானது. அன்பின் விதை விதைத்துவிட்டீர்கள். ஆகையினால், அன்பின் விதைக்கான பலன் கிடைத்துக்கொண்டு இருக்கின்றது, பாண்டவர்களும் உடன் இருக்கின்றார்கள். பாண்டவர்கள் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது. ஆனால், அதிகமான எண்ணிக்கை சக்திகளுடையதே. ஆகையினால், 5 பாண்டவர்கள் என்று எழுதி இருக்கின்றனர். ஆனாலும், இல்லறத்தை பராமரித்துக் கொண்டே பற்றற்றவர் ஆகி, தந்தைக்கு அன்பானவர் ஆகி தைரியம் மற்றும் ஊக்கத்தினுடைய சான்று கொடுத்திருக்கின்றீர்கள், ஆகையினால், பாண்டவர்களும் குறைந்தவர்கள் அல்ல. சக்திகளின் சர்வசக்திவான் என்ற மகிமை பாடப்பட்டுள்ளது, அவ்வாறே பாண்டவர்களின் பாண்டவபதி என்றும் மகிமை பாடப்பட்டுள்ளது. ஆகையினால், எவ்வாறு நிமித்தம் ஆகியிருக்கிறீர்களோ, அந்த நிமித்த உணர்வை சதா நினைவில் வைத்து முன்னேறிக் கொண்டே செல்லுங்கள். நல்லது.

 

சதா பத்மாபதம் பாக்கியத்தின் அதிகாரி, சதா வெற்றியின் அதிகாரி, சதா தன்னை சிரேஷ்ட ஆதாரமூர்த்தி எனப் புரிந்து அனைவரையும் முன்னேற்றக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

 

வரதானம்:

அனுபவங்களின் ஆழத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து புதிய ஆராய்ச்சி செய்யக்கூடிய உள்நோக்கு முகமுடையவர் ஆகுக.

 

எப்பொழுது தனக்குள், முதலில், அனைத்து அனுபவங்களும் பிரத்யட்சம் ஆகுமோ, அப்பொழுதே

பிரத்யட்சதா ஏற்படும். இதற்காக உள்நோக்கு முகமுடையவர் ஆகி நினைவு யாத்திரை மற்றும் ஒவ்வொரு பிராப்தியின் ஆழத்தில் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள், சங்கல்பத்தைக் கொண்டு வாருங்கள் மற்றும் பிறகு, என்ன சங்கல்பம் செய்தீர்களோ அது வெற்றி அடைந்ததா இல்லையா? என்று அதன் விளைவு மற்றும் வெற்றியைப் பாருங்கள். இவ்வாறு அனுபவங்களினுடைய ஆழத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் இருங்கள், இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விசேஷ அன்பில் ஈடுபாட்டில் மூழ்கி இந்த உலகத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்ற உணர்வு பிறருக்கு ஏற்பட வேண்டும். கர்மம் செய்துகொண்டே யோகத்தின் சக்திசாலியான நிலையில் இருப்பதற்கான பயிற்சியை அதிகரித்திடுங்கள். எவ்வாறு பேச்சில் வருவதற்கான பயிற்சி உள்ளதோ, அவ்வாறு ஆன்மிகத்தன்மையில் இருப்பதற்கான பயிற்சியை ஏற்படுத்துங்கள்.

 

சுலோகன்:

திருப்தி என்ற ஆசனத்தில் அமர்ந்துகொண்டு சூழ்நிலைகளின் விளையாட்டைப் பார்க்கக்கூடியவர்களே திருப்திமணி ஆவார்கள்.

 

ஓம்சாந்தி