22.06.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே ! தன்னுடைய
முன்னேற்றத்திற்காக தினந்தோறும் தூங்குவதற்கு முன்பு தனது
கணக்கு வழக்கைப் பாருங்கள். நாம் முழு நாளில் யாருக்கும்
துக்கம் கொடுக்கவில்லை தானே என சோதியுங்கள்.
கேள்வி :
மகான் சௌபாக்கியசாலி
குழந்தைகளுக்குள் என்ன தைரியம் இருக்கும்?
பதில் :
மகான் சௌபாக்கியசாலியாக
இருப்பவர்கள் கணவன், மனைவி ஒன்றாக இருந்தாலும் சகோதர
மனப்பான்மையில் இருப்பார்கள். ஆண், பெண் என்ற உணர்வு இருக்காது.
உறுதியான நிச்சய புத்தி இருக்கும். நான் மாணவன், இவரும் மாணவன்
சகோதரன் சகோதரி ஆகிவிட்டோம் என்பதை மகான் சௌபாக்கியசாலி
குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். ஆனால் இந்த தைரியம் தன்னை
ஆத்மா என்று புரிந்து கொள்ளும் போது தான் இருக்கும்.
பாடல் :
முகத்தை பார்த்துக் கொள் மனிதா………
ஓம் சாந்தி.
தூங்குவதற்கு முன்பு யாருக்கும்
துக்கம் கொடுக்கவில்லை தானே, எவ்வளவு நேரம் பாபாவை நினைத்தேன்
என தங்களது அன்றைய கணக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என
தினந்தோறும் பாபா குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். இது
முக்கியமான விசயம் ஆகும். பாட்டில் கூட நாம் எவ்வளவு கீழான நிலை
யிலிருந்து உயர்ந்த நிலைக்கு மாறியிருக்கிறோம் என உள்நோக்கு
முகமாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று
கூறப்பட்டிருக்கிறது. முழு நாளில் எவ்வளவு நேரம் தங்களுடைய
இனிமையான தந்தையை நினைவு செய்தேன், எந்த ஒரு தேகதாரியையும்
நினைக்கவில்லையே? அனைத்து ஆத்மாக்களுக்கும் தன்னுடைய தந்தையை
நினையுங்கள் என்று கூறப்படுகிறது. இப்போது திரும்பிப் போக
வேண்டும். எங்கே போக வேண்டும்? சாந்திதாமத்திற்குச் சென்று புது
உலகத்தில் வர வேண்டும். இது பழைய உலகம் அல்லவ?. தந்தை வரும்
போது தான் சொர்க்கத்தின் வாயில் திறக்கும். இப்போது
குழந்தைகளாகிய நீங்கள் நாம் சங்கமயுகத்தில் அமர்ந்திருக் கிறோம்
என அறிகிறீர்கள். சங்கமயுகத்தில் வந்து படகில் அமர்ந்த பிறகு
இறங்கி விடுகிறார்கள். இதுவும் அதிசயமாக இருக்கிறது. இப்போது
நீங்கள் சங்கமயுகத்தில் புருஷோத்தமர்களாக மாறுவதற்காக, (விஷக்கடலை)
கடந்து செல்வதற்காக படகில் அமர்ந்திருக்கிறீர்கள். பிறகு பழைய
கலியுக உலகத்திலிருந்து மனதை விலக்கி விட வேண்டும். இந்த
சரீரத்தின் மூலமாக நடிக்க வேண்டும். இப்போது நாம் மிகவும்
மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்ப வேண்டும். மனிதர்கள்
முக்திக்காக எவ்வளவு தலையை உடைத்துக் கொள்கிறார்கள். ஆனால்
முக்தி, ஜீவன் முக்தி என்பதன் பொருளை புரிந்து கொள்ளவில்லை.
சாஸ்திரங்களின் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அது
என்ன, யார் கொடுக்கிறார், எப்போது கொடுக்கிறார் என்பது
தெரியவில்லை. முக்தி, ஜீவன் முக்தியின் சொத்தை அளிப்பதற்காக
பாபா வந்திருக்கிறார் என குழந்தைகள் அறிகிறீர்கள். அதுவும் ஒரு
முறை அல்ல, பல முறை, நீங்கள் முக்தியிலிருந்து ஜீவன் முக்தி,
பிறகு ஜீவன் பந்தனத்தில் எண்ணிலடங்கா முறை வந்துள்ளீர்கள். நாம்
ஆத்மா, பாபா குழந்தைகளாகிய நமக்கு நிறைய படிப்பினைகளைக்
கொடுக்கிறார் என இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
நீங்கள் பக்தி மார்க்கத்தில் துக்கத்தில் நினைத்தீர்கள். ஆனால்
அறிந்து கொள்ளவில்லை. இப்போது என்னை எப்படி நினைக்க வேண்டும்?
நினைத்தால் உங்களுடைய விகர்மங்கள் அழியும் என நான் உங்களுக்கு
என்னுடைய அறிமுகத்தைக் கொடுத்துள்ளேன். இது வரை எவ்வளவு
பாவகர்மங்கள் நடந்திருக்கிறது என்பது தனது கணக்கு வழக்கை
சோதித்தால் தெரியும். யார் சேவையில் ஈடுபட்டிருக்கிறார்களோ
அவர்களுக்குத் தெரிகிறது. குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம்
இருக்கிறது. தங்களுக்குள் கலந்து ஆலோசித்து மனிதர்களின்
வாழக்கையை வைரம் போல் மாற்றுவதற்காகக் கிளம்புகிறார்கள். இது
எவ்வளவு புண்ணிய செயல்! இதில் செலவாகும் என்ற விசயமே கிடையாது.
வைரம் போன்று மாறுவதற்காக தந்தையை நினைக்க வேண்டும். புஷ்பராகம்,
பச்சைக் கல் போன்ற பெயர்கள் தேவதைகளாகிய உங்களுடையதே. எவ்வளவு
நினைக்கிறீர்களோ அவ்வளவு வைரம் போன்று மாறிவிடுவீர்கள். சிலர்
மாணிக்கம் போன்று, சிலர் புஷ்பராகம் போன்று மாறுவார்கள். ஒன்பது
இரத்தினங்கள் இருக்கிறது அல்லவா. யாருக்காவது கிரகச்சாரம்
பிடித்து விட்டால் 9 இரத்தினங்களின் மோதிரத்தை அணிகிறார்கள்.
பக்திமார்க்கத்தில் நிறைய மந்திரங்களை ஜபம் செய்ய
கற்றுக்கொடுக்கிறார்கள். இங்கேயோ அனைத்து தர்மத்தினருக்கும்
மன்மனாபவ என்ற ஒரே ஒரு மந்திரம் தான். ஏனென்றால் இறைவன் ஒருவரே.
மனிதனிலிருந்து தேவதையாவதற்கு அல்லது முக்தி ஜீவன் முக்தி
பெறுவதற்கான முயற்சியும் ஒன்று தான். தந்தையை மட்டும் நினைக்க
வேண்டும். கஷ்டபடுவதற்கான விசயம் எதுவும் இல்லை. எனக்கு ஏன்
நினைவு இருப்பதில்லை என யோசிக்க வேண்டும். முழு நாளில் இவ்வளவு
நேரம் மட்டுமே நினைவு செய்தேன். இந்த நினைவில் இருந்தால் நாம்
சதா ஆரோக்கியமாகவும் நோயற்றவராகவும் மாறுவோம் என்றால் ஏன் நமது
சார்ட்டை வைத்து சுய முன்னேற்றம் அடையக் கூடாது? பலர் இரண்டு
நாட்கள், நான்கு நாட்கள் சார்ட் எழுதி விட்டு பிறகு மறந்து
போகிறார்கள். வேறு யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைப்பது
எளிதாகும். புதிய உலகத்திற்கு சத்யுகம் என்றும் பழைய
உலகத்திற்கு கலியுகம் என்றும் பெயர். கலியுகம் மாறி சத்யுகம்
வரும். மாறும் போது தான் நான் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்
(சங்கம யுகத்தில்).
அதே நிராகார தந்தை பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி நம்மை படிக்க
வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் பல குழந்தைகளுக்கு
உறுதியான நிச்சயம் இல்லை. அட! பிராமணன் அல்லவா! பிரம்மா குமார்
- பிரம்மா குமாரிகள் என அழைக்கப்படுகிறார்கள். அதனுடைய பொருள்
என்ன? அங்கே என்ன சொத்து கிடைக்கும்? ஏதாவது பிராப்தி
கிடைக்கும் போது தான் தத்தெடுக்கப்படுகிறார்கள். நீங்கள்
பிரம்மாவின் குழந்தைகள். பிரம்மா குமார்-குமாரிகளாக ஏன்
மாறியிருக்கிறீர்கள்? உண்மையில் மாறியிருக்கிறீர்களா அல்லது
யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா? மகான் சௌபாக்கியசாலி
குழந்தைகள் கணவன், மனைவி ஒன்றாக இருந்தாலும் சகோதரன் சகோதரி என
நினைப்பார்கள். கணவன் மனைவி என்ற உணர்வு இருக்காது. உறுதியான
நிச்சய புத்தி இல்லை என்றால் கணவன் மனைவி என்ற பார்வை
மாறுவதற்கே நிறைய நேரம் தேவைப்படுகிறது. மகான் சௌபாக்கியசாலி
குழந்தைகள், நானும் மாணவர், இவரும் மாணவர், சகோதரன் சகோதரிகள்
ஆகிவிட்டோம் என உடனே புரிந்து கொள்கிறார்கள். தன்னை ஆத்மா
என்று புரிந்து கொள்ளும் போது தான் இந்த தைரியத்தை செயல்
படுத்த முடியும். ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள் பிறகு
பிரம்மா குமார்-குமாரிகளாக மாறுவதால் சகோதரன், சகோதரி
ஆகிவிடுகிறார்கள். சிலர் பந்தனத்திலிருந்து விடுபட்டவர்களாக
இருக்கிறார்கள். இருப்பினும் எதிலாவது புத்தி செல்கிறது.
கர்மாதீத் நிலையை அடைய நேரம் ஆகிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு
மிகுந்த குஷி இருக்க வேண்டும். எந்த சச்சரவும் இல்லை.
ஆத்மாக்களாகிய நாம் பழைய உடலை விட்டு விட்டு இப்போது
தந்தையிடம் செல்கிறோம். நாம் எவ்வளவு நடித்திருக்கிறோம்!
இப்போது சக்கரம் முடியப் போகிறது. இவ்வாறு தனக்குத் தானே
பேசிக் கொள்ள வேண்டும். எவ்வளவு பேசிக் கொண்டிருக்கிறீர்களோ
அவ்வளவு மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். மேலும் எதுவரை நாம்
இலஷ்மி-நாராயணனை மணப்பதற்கு தகுதி அடைந்துள்ளோம் என தன்னுடைய
நடத்தையை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இப்போது சிறிது
நேரத்தில் பழைய உடலை விட வேண்டும் என புத்தியின் மூலம்
புரிந்து கொள்ளப்படுகிறது. நீங்கள் நடிகர்கள் அல்லவா! தன்னை
நடிகர் என புரிந்து கொள்கிறீர்கள். முன்பு புரிந்து
கொள்ளவில்லை. இப்போது ஞானம் கிடைத்திருக்கிறது என்றால்
உள்ளுக்குள் மிகுந்த குஷி இருக்க வேண்டும். பழைய உலகத்தின்
மீது வைராக்கியம் வெறுப்பு வர வேண்டும்.
நீங்கள் எல்யைற்ற சந்நியாசி, இராஜயோகி இந்தப் பழைய உடலை
புத்தியினால் சந்நியாசம் செய்ய வேண்டும். இதனுடன் புத்தியை
ஈடுபடுத்தக் கூடாது என ஆத்மா புரிந்து கொள்கிறது. புத்தியினால்
பழைய உலகம், பழைய உடலை சந்நியாசம் செய்திருக்கிறோம். இப்போது
ஆத்மாக்களாகிய நாம் செல்கிறோம், சென்று தந்தையை சந்திப்போம்.
அதுவும் ஒரு தந்தையை நினைக்கும் போது தான் நடக்கும். வேறு
யாரையாவது நினைத்தால்? நிச்சயம் நினைவு வரும். பிறகு தண்டனை
அடைய வேண்டியிருக்கும். மேலும் பதவியும் குறைந்து போகும். நல்ல
நல்ல மாணவர்கள் நாங்கள் ஸ்காலர்ஷிப் அடைந்து காட்டுவோம் என
தனக்குத்தானே உறுதிமொழி எடுக்கிறார்கள். அவ்வாறே இங்கேயும்
தந்தையிடமிருந்து முழுமையாக இராஜ்ய பாக்கியத்தை அடைந்து
காட்டுவோம் என ஒவ்வொருவருக்குள்ளும் இந்த எண்ணம் இருக்க
வேண்டும். அவர்களின் நடத்தையும் அவ்வாறே இருக்கும். இன்னும்
போகப்போக முயற்சி செய்து செய்து முன்னேறிச் செல்ல வேண்டும்.
தினந்தோறும் மாலையில் தன்னுடைய நிலையை சோதித்துக் கொள்ளும்
போது அந்த நிலை ஏற்படும். பாபாவிடம் ஒவ்வொருவரின் செய்திகளும்
வருகிறதல்லவா! பாபா ஒவ்வொருவரையும் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு சிலரைப் பார்த்து உங்களுக்கு அது தெரியவில்லை எனக்
கூறிவிடுகிறார். இந்த இலட்சுமி நாராயணரைப் போன்ற முகம்
தெரிவதில்லை. நடத்தை உணவு போன்றவைகளைப் பாருங்கள். எங்கே சேவை
செய்கிறீர்கள் பிறகு எவ்வாறு மாறுகிறீர்கள். நாம் ஏதாவது
செய்து காட்ட வேண்டும் என்று மனதிற்குள் நினைக்கிறார்கள்.
இதில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக தனது அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்
கொள்வதற்காகப் படிக்க வேண்டும். ஒருவேளை ஸ்ரீமத்படி
நடக்கவில்லை என்றால் உயர்ந்த பதவியும் பெற முடியாது. இப்போது
தேர்ச்சி அடையவில்லை என்றால் ஒவ்வொரு கல்பத்திலும் தேர்ச்சி
அடைய முடியாது. நாம் எந்தப் பதவியை அடைய தகுதி
பெற்றிருக்கிறோம் என்பது உங்களுக்கு காட்சிகள் கிடைக்கும்.
தங்களுடைய பதவியின் காட்சியும் கிடைக்கும். ஆரம்பத்தில்
காட்சிகள் கிடைத்தது. பிறகு வெளியில் கூறுவதற்கு பாபா தடை
விதித்து விட்டார். கடைசியில் நாம் அனைவரும் எப்படி மாறுவோம்
என்பது தெரிய வரும். அப்போது ஒன்றும் செய்ய முடியாது. கல்ப
கல்பத்திற்கு இந்த நிலை ஏற்படும். டபுள் கிரிடம் உடையவர்கள்,
டபுள் இராஜ்ய பாக்கித்தை எடுக்க முடியாது. இப்பொழுது முயற்சி
செய்வதற்கு நிறைய நேரம் இருக்கிறது. திரேதாவின் கடைசி வரை
16108 ன் மாலை உருவாக வேண்டும். இங்கே நரனிலிருந்து
நாராயணனாவதற்கு முயற்சி செய்வதற்காக வந்துள்ளீர்கள். குறைந்த
பதவியின் காட்சி கிடைக்கும் பொழுது அச்சமயம் வெறுப்பு
ஏற்படும். தலை குனிய வேண்டி வரும். நாம் ஒன்றுமே முயற்சி
செய்யவில்லையே என்று. பாபா சார்ட் வையுங்கள், இது செய்யுங்கள்
என எவ்வளவோ புரிய வைத்தார். ஆகவே தான் பாபா எந்த குழந்தைகள்
வந்தாலும் அனைவரின் நிழற் படங்களும் இருக்க வேண்டும் எனக்
கூறினார். குழுவாக சேர்ந்த போட்டோவாகவும் இருக்கலாம்.
குழுக்களை அழைத்து வருகிறீர்கள் அல்லவா? பிறகு அதில் தேதி
நெகட்டிவ் அனைத்தும் இணைத்திருக்க வேண்டும். யார்
விழுந்தார்கள் என பாபா கூறிக் கொண்டேயிருப்பார். பாபாவிடம்
அனைத்து செய்திகளும் வருகின்றது. தெரிவித்துக்
கொண்டேயிருப்பார். எத்தனை பேரை மாயை இழுத்துக் கொண்டு
போய்விட்டது. மடிந்து போய் விட்டார்கள். பெண் குழந்தைகள் கூட
பலர் விழுகிறார்கள். ஒரேயடியாக கெட்ட நிலையை அடைகிறார்கள்.
அதைப் பற்றி கேட்காதீர்கள். ஆகவே தான் பாபா குழந்தைகளை
எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார். மாயை ஏதாவது ஒரு ரூபத்தை
ஏற்று பிடிக்கிறது. யாருடைய பெயர், ரூபத்தையும்
பார்க்காதீர்கள். நல்லது இந்தக் கண்களினால் பார்க்கிறீர்கள்.
ஆனால் புத்தியில் ஒரு பாபாவின் நினைவு இருக்க வேண்டும்.
மூன்றாவது கண் கிடைத்திருக்கிறது. ஆகவே பாபாவைப் பாருங்கள்.
நினையுங்கள். தேக உணர்வை விட்டுக் கொண்டே செல்லுங் கள். கண்கள்
கீழே பார்த்துக் கொண்டும் யாரிடமும் பேசக் கூடாது. இவ்வாறு
கிடையாது. இவ்வாறு பலவீனம் ஆகக்கூடாது. பார்த்துக் கொண்டு
இருந்தாலும் புத்தியின் தொடர்பு தன்னுடைய இனிமையான மணவாளனிடம்
இருக்க வேண்டும். இந்த உலகத்தை பார்த்துக் கொண்டு இருந்தாலும்
உள்ளுக்குள் இது சுடுகாடு ஆகப்போகிறது எனப்புரிந்து
கொள்கிறார்கள். இதோடு ஏன் தொடர்பு வைக்க வேண்டும்? உங்களுக்கு
ஞானம் கிடைத்திருக்கிறது. அதைக் கடைபிடித்து அதன் படி நடக்க
வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள்
படக்கண்காட்சியை புரிய வைக்கும் பொழுது 1000 முறைகள்
வாயிலிருந்து பாபா பாபா என வரவேண்டும். பாபாவை நினைப்பதால்
உங்களுக்கு எவ்வளவு நன்மை நடக்கும்! என்னை மட்டும் நினைத்தால்
விகர்மங்கள் அழியும் என சிவபாபா கூறுகின்றார். சிவபாபாவை நினைவு
செய்தால் தமோபிரதானத்தில் இருந்து சதோபிரதானமாக மாறிவிடுவீர்கள்.
என்னை நினையுங்கள் என பாபா கூறுகின்றார் இதை மறக்காதீர்கள்.
பாபாவிடமிருந்து மன்மனாபவ என்ற டைரக்ஷன் (மந்திரம்)
கிடைத்திருக்கிறது. இந்த பாபா என்ற வார்த்தையை நன்கு நினைத்துக்
கொண்டேயிருங்கள் என பாபா கூறுகின்றார். முழு நாளும் பாபா பாபா
என்று கூறிக் கொண்டேயிருக்க வேண்டும். வேறு எந்த விஷயமும் இல்லை.
நம்பர் ஒன் முக்கிமான விஷயம் இதுவே. முதலில் தந்தையை அறிந்து
கொள்ளுங்கள். இதில் தான் நன்மை இருக்கிறது. இந்த 84 பிறவிகளின்
சக்கரத்தை தெரிந்து கொள்வது மிகவும் எளிதாகும். குழந்தைகளுக்கு
படக்கண்காட்சிகளில் புரிய வைப்பதற்கு நிறைய ஆர்வம் வேண்டும்.
ஒருவேளை எங்காவது புரிய வைக்க முடியவில்லை என்றால் நாங்கள்
எங்கள் சகோதரியை அழைக்கிறோம் எனக் கூறலாம். ஏனென்றால் இதுவும்
பள்ளிக்கூடம் அல்லவா! இதில் சிலர் குறைவாகவும் சிலர்
அதிகமாகவும் படிக்கிறார்கள். இவ்வாறு கூறுவதில் தேக உணர்வு
வரக்கூடாது. எங்கே பெரிய சென்டர் இருக்கிறதோ அங்கே
படக்கண்காட்சிகள் வைக்க வேண்டும். சொர்க்கத்தின் நுழைவு வாயில்
என்ற சித்திரங்கள் வைத்திருக்க வேண்டும். நாம் சொர்க்கத்தின்
வாயிலைத் (கதவை) திறந்து கொண்டு இருக்கிறோம். இந்தப் போர்
நடைபெறுவதற்கு முன்பாகவே உங்களின் ஆஸ்தியை அடையுங்கள்.
கோவில்களுக்கு தினந்தோறும் செல்வது போல நீங்கள் பாட சாலைக்குச்
செல்ல வேண்டும். சித்திரங்கள் வைத்திருப்பதால் புரிய வைப்பது
எளிதாகும். நாம் நமது பாடசாலையை எப்படி சித்திரக்கூடமாக
மாற்றுவது என முயற்சி செய்யுங்கள். பகட்டாக இருந்தால் மனிதர்கள்
வருவார்கள். வைகுண்டத்திற்குப் போவதற்காக வழி, ஒரு நொடியில்
புரிந்து கொள்ளும் வழி. தமோபிரதானமானவர்கள் யாரும்
வைகுண்டத்திற்குப் போக முடியாது என பாபா கூறுகின்றார். புது
உலகத்திற்கு போவதற்கு சதோபிரதானம் ஆகவேண்டும். இதில் எந்த
செலவும் இல்லை. எந்த கோவிலுக்கும், சர்ச்சுக்கும் போக வேண்டிய
அவசியம் இல்லை. நினைத்து நினைத்து தூய்மையாகி நேராக இனிமையான
இல்லத்திற்குச் செல்கிறீர்கள். நீங்கள் தூய்மையற்ற நிலையில்
இருந்து தூய்மையாகி விடுவீர்கள் என நான் உத்திரவாதம்
அளிக்கிறேன். நாடகசக்கரத்தில் மிகப்பெரிய கேட் வைக்க வேண்டும்.
சொர்க்கத்தின் கேட் எவ்வாறு திறக்கிறது? எவ்வளவு தெளிவாக
இருக்கிறது! நரகத்தின் கேட் மூட வேண்டும். சொர்க்கத்தில்
நரகத்தின் பெயர் இருக்காது. கிருஷ்ணரை எவ்வளவு நினைக்கிறார்கள்!
ஆனால் அவர் எப்போது வருகிறார் என்பது யாருக்கும் தெரியாது.
எதையும் அறியவில்லை. கிருஷ்ணரையும் அறியவில்லை. பகவான் மீண்டும்
நமக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். இந்த நினைவு இருந்தால்
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! நாம் இறைவனின் மாணவர்கள் என்ற
மகிழ்ச்சியும் இருக்கும். இதை ஏன் மறக்க வேண்டும்? நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை
வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம் :
1.முழு நாளும் வாயிலிருந்து பாபா பாபா என்று வந்து
கொண்டேயிருக்க வேண்டும். படக்கண்காட்சிகளில் புரிய வைக்கும்
பொழுது குறைந்தது 1000 முறையாவது பாபா பாபா என்று வரவேண்டும்.
2. இந்தக் கண்களினால் அனைத்தையும் பார்த்துக் கொண்டு
இருந்தாலும் ஒரு தந்தையின் நினைவு இருக்கட்டும். தங்களுக்குள்
பேசிக் கொள்ளும் பொழுது மூன்றாவது கண் மூலமாக ஆத்மாவையும்,
ஆத்மாவின் தந்தையையும் பார்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
சலிப்பான சூழ்நிலையிலும்
குஷியின் ஜொலிப்பை அனுபவம் செய்ய வைக்கக் கூடிய சதா
மகிழ்ச்சியானவர் (எவர் ஹேப்பி) ஆகுக.
சதா மகிழ்ச்சியாக (எவர் ஹேப்பி)
அதாவது சதா குஷியாக இருக்கக்கூடிய வரதானம் எந்தக்
குழந்தைகளுக்கு கிடைத்திருக்கிறதோ, அவர்களுக்கு துக்கத்தின்
அலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலையிலும், சலிப்பான சூழ்நிலையிலும்,
எதுவும் கிடைக்காத சூழ்நிலையை அனுபவம் செய்யக்கூடிய
சூழ்நிலையிலும் கூட சதா குஷியாக இருப்பார்கள், மேலும் தனது
குஷியின் ஜொலிப்பின் மூலம் துக்கம் மற்றும் சோகமான சூழ்நிலையை,
சூரியன் இருளை மாற்றம் செய்வதை போன்று மாற்றிவிடுகிறது.
இருளுக்கு மத்தியில் வெளிச்சம் வருவது, அமைதியற்ற நிலைக்கு
மத்தியில் அமைதியைக் கொண்டு வருவது, சலிப்பான சூழ்நிலையில்
குஷியின் ஜொலிப்பைக் கொண்டுவருவது, இதற்குத் தான் எவர் ஹேப்பி.
என்று சொல்லப்படுகிறது தற்சமயத்தில் இந்த சேவைதான் அவசியமாகிறது.
சுலோகன்:
யார் சரீரத்தின் எந்தவித
ஈர்ப்பும் தனது பக்கம் ஈர்க்காமல் இருக்கிறாரோ, அவர்களை அசரீரி
என்று சொல்லலாம்.
ஓம்சாந்தி