11.07.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! நான் நன்றாகப் படித்து தனக்குத் தானே
இராஜ திலகம் இட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு கவலை மட்டுமே சதா
இருக்க வேண்டும், படிப்பின் மூலம் தான் இராஜ்யம் கிடைக்கும்.
கேள்வி:
குழந்தைகள் எந்த உற்சாகத்துடன் இருக்க வேண்டும்? மனமுடைந்து
விடக் கூடாது, ஏன்?
பதில்:
நான் இந்த லெட்சுமி நாராயணன் போன்று ஆக வேண்டும் என்ற உற்சாகம்
சதா இருக்க வேண்டும், இதற்கான முயற்சி செய்ய வேண்டும்.
ஒருபொழுதும் மனமுடைந்து விடக் கூடாது. ஏனெனில் இந்த படிப்பு
மிகவும் எளிதானது. வீட்டில் இருந்து கொண்டே படிக்க முடியும்.
இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால் அவசியம் தைரியம்
வேண்டும்.
பாட்டு:
தாயும் நீயே, தந்தையும் நீயே .
ஓம்
சாந்தி.
குழந்தைகள் தங்களது தந்தையின் மகிமையை கேட்டீர்கள்.
மகிமைக்குரியவர் ஒரே ஒருவர் தான். வேறு யாருக்கும் மகிமை பாட
முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கருக்கும் எந்த மகிமையும்
கிடையாது. பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்விக்கின்றார், சங்கர்
மூலம் விநாசம் செய்விக்கின்றார், விஷ்ணுவின் மூலம் பாலனை
செய்விக்கின்றார். லெட்சுமி நாராயணனையும் இவ்வாறு
தகுதியானவர்களாக சிவபாபா தான் ஆக்குகின்றார். அவர் தான்
மகிமைக்குரியவர் ஆவார். அவரைத் தவிர வேறு யாருக்கு மகிமை செய்ய
முடியும்! இவர்களை இவ்வாறு ஆக்கக் கூடிய ஆசிரியர் இல்லையெனில்
இவர்களும் இவ்வாறு ஆக முடியாது. பிறகு மகிமை சூரிய வம்சத்தில்
இராஜ்யம் செய்பவர்களுக்கு. தந்தை சங்கமத்தில் வரவில்லையெனில்
இவர்கள் இராஜ்யமும் அடைய முடியாது. வேறு யாருக்கும் மகிமை
கிடையாது. அயல்நாட்டினர் யாருக்கும் மகிமை செய்ய வேண்டிய
அவசியமில்லை. மகிமைக்குரியவர் ஒரே ஒருவரேயன்றி வேறு யாரும்
கிடையாது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் சிவபாபா மட்டுமே.
அவரிடமிருந்து தான் உயர்ந்த பதவி கிடைக்கிறது எனில் அவரை நல்ல
முறையில் நினைவு செய்ய வேண்டும் அல்லவா! தான் இராஜா ஆவதற்கு
சுயம் தானே படிக்க வேண்டும். வக்கீல் படிப்பு படிக்கின்றனர்
எனில் படிப்பின் மூலம் தன்னை வக்கீலாக ஆக்கிக் கொள்கின்றனர்
அல்லவா! சிவபாபா நமக்கு கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிவீர்கள். யார் நன்றாக படிப்பார்களோ அவர்கள் தான்
உயர்ந்த பதவி அடைவார்கள். படிக்காதவர்கள் பதவி அடைய முடியாது.
படிப்பதற்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. பாவனம் ஆவது தான் மூல
விசயமாகும், அதற்குத் தான் இந்த படிப்பாகும். இந்த நேரத்தில்
அனைவரும் தமோ பிரதானம், பதீதமாக இருக்கின்றனர் என்பதை நீங்கள்
அறிவீர்கள். நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவே மனிதர்கள் தான்
ஆகின்றனர். தூய்மையாக இருப்பவர்கள் தான் நல்லவர்கள் என்று
கூறப்படுகின்றனர். நன்றாகப் படித்து பெரிய மனிதர்களாக
ஆகின்றனர் எனில் மகிமை செய்கின்றனர். ஆனால் அனைவரும்
பதீதமானவர்களாகத் தான் இருக்கின்றனர். பதீதமானவர்கள் தான்
பதீதமானவர்களை மகிமை செய்கின்றனர். சத்யுகத்தில் பாவனமானவர்கள்
இருப்பர். அங்கு யாரும் யாரையும் மகிமை செய்யமாட்டார்கள்.
இங்கு தூய்மையான சந்நியாசிகளும் இருக்கின்றனர், அசுத்தமான
கிரஹஸ்திகளும் இருக்கின்றனர். அதனால் தான் தூய்மைக்கு மகிமை
பாடப்படுகிறது. அங்கு இராஜா ராணி எப்படியோ அப்படியே பிரஜைகளும்
இருப்பர். தூய்மை மற்றும் அசுத்தம் என்று வேறுபடுத்திக்
கூறுவதற்கு வேறு எந்த தர்மமும் கிடையாது. இங்கு சில
கிரஹஸ்திகளுக்கும் மகிமை செய்து கொண்டே இருக்கின்றனர்.
அவர்களுக்கு அவரே குதாவாக, அல்லாவாக இருக்கின்றார். ஆனால்
அல்லாவை பதீத பாவன், விடுவிப்பவர், வழிகாட்டி என்று
கூறப்படுகிறது. பிறகு அவர் எவ்வாறு அனைவருமாக இருக்க முடியும்?
உலகம் எவ்வளவு காரிருளில் இருக்கிறது! இப்பொழுது குழந்தைகள்
நீங்கள் என்று புரிந்திருக்கிறீர்கள், குழந்தைகளிடத்தில் நாம்
படித்து தன்னை இராஜாவாக ஆக்கி கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்
இருக்க வேண்டும். யார் நன்றாக முயற்சி செய்கிறார்களோ அவர்கள்
தான் இராஜ்ய திலகத்தை அடைய முடியும். நானும் இந்த லெட்சுமி
நாராயணனைப் போன்று ஆக வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்குள்
இருக்க வேண்டும். இதில் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை.
முயற்சி செய்ய வேண்டும். மனம் உடைந்து விடக் கூடாது. இந்த
படிப்பு அப்படிப்பட்டது, அதாவது கட்டிலில் தூங்கிக் கொண்டே
படிக்க முடியும். அயல்நாட்டில் இருந்தாலும் படிக்க முடியும்.
வீட்டில் இருந்து கொண்டே படிக்க முடியும். அந்த அளவிற்கு
எளிதான படிப்பாகும். முயற்சி செய்து தனது பாவங்களை அழிக்க
வேண்டும், மேலும் மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். மற்ற
தர்மத்தைச் (மதம்) சார்ந்தவர்களுக்கும் நீங்கள் புரிய வைக்க
முடியும். யாராக இருந்தாலும் நீங்கள் ஒரு ஆத்மா, ஆத்மாவின்
சுயதர்மம் ஒன்று தான், இதில் எந்த மாற்றமும் ஏற்பட முடியாது,
சரீரத்தினால் தான் பல மதங்கள் ஏற்படுகின்றன, ஆத்மா ஒன்று தான்,
அனைவரும் ஒரே ஒரு தந்தையின் குழந்தைகள் என்பதை புரிய வைக்க
வேண்டும். ஆத்மாக்களை பாபா தத்தெடுத்திருக்கின்றார், அதனால்
தான் பிரம்மாவின் வாய் வழி வம்சத்தினர்கள் என்று
பாடப்படுகிறது.
ஆத்மாவின் தந்தை யார்? என்பதை யாருக்கு வேண்டுமென்றாலும் புரிய
வைக்க முடியும். நீங்கள் எழுதிவாங்கக் கூடிய படிவத்தில்
(பார்ம்) நிறைய அர்த்தம் உள்ளடங்கி இருக்கிறது. தந்தை அவசியம்
இருக்கிறார் அல்லவா! அவரைத் தான் நினைவு செய்கின்றனர். ஆத்மா
தனது தந்தையை நினைவு செய்கிறது. இன்றைய நாட்களில் பாரதத்தில்
யாரை வேண்டுமென்றாலும் தந்தை என்று கூறிவிடுகின்றனர்.
மேயரையும் தந்தை (நகரத் தந்தை) என்று கூறுகின்றனர். ஆனால்
ஆத்மாவின் தந்தை யார்? என்பதை அறியவில்லை. நீங்கள் தான் தாய்,
தந்தையாக. என்று பாடுகின்றனர். ஆனால் அவர் யார்? எப்படி
இருக்கின்றார்? என்பது யாருக்கும் தெரியாது. பாரதத்தில் தான்
நீங்கள் தாய், தந்தை என்று கூறி அழைக்கிறீர்கள். தந்தை தான்
இங்கு வந்து பிரம்மா வாய் வழி வம்சத்தினர்களைப் படைக்கின்றார்.
பாரதம் தான் தாய்நாடு என்று கூறப்படுகிறது. ஏனெனில் இங்கு தன்
சிவபாபா தாய், தந்தை என்ற பாகத்தில் நடிக்கின்றார். இங்கு தான்
பகவானை தாய், தந்தை என்ற ரூபத்தில் நினைவு செய்கின்றனர்.
அயல்நாடுகளில் இறை தந்தை (காட் பாதர்) என்று மட்டுமே கூறி
அழைக் கின்றனர். ஆனால் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு தாயும் தேவை
அல்லவா! ஆணாக உள்ளவர் பெண்ணை தத்தெடுக்கின்றார், பிறகு அவர்
மூலம் குழந்தைகள் உருவாகின்றன. படைப்புகள் படைக்கப்படுகின்றன.
இங்கும் பிரம்மா மூலம் பரம்பிதா பரமாத்மா தந்தை பிரவேசம்
செய்து தத்தெடுக்கின்றார். குழந்தைகள் பிறப்பதால் தான் இவர்
தாய், தந்தை என்று கூறப்படுகின்றனர். அவர் ஆத்மாக்களின் தந்தை,
பிறகு இங்கு வந்து படைப்புகளைப் படைக்கின்றார். இங்கு நீங்கள்
குழந்தைகளாக ஆகிறீர்கள் எனும் பொழுது தாய் மற்றும் தந்தை என்று
கூறுப்படுகின்றார். அது இனிமையான வீடாகும். அங்கு தான்
ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் இருக்கிறோம். அங்கே கூட தந்தையைத்
தவிர வேறு யாரும் அழைத்துச் செல்ல முடியாது. யாரைச்
சந்தித்தாலும் நீங்கள் இனிய வீட்டிற்குச் செல்ல
விரும்புகிறீர்களா? என்று கேளுங்கள். பிறகு அவசியம் தூய்மை ஆக
வேண்டியிருக்கும். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்களாக
இருக்கிறீர்கள், இது இரும்பு யுகம், தமோ பிரதான உலகமாகும்.
இப்பொழுது நீங்கள் திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
இரும்பு யுக ஆத்மாக்கள் திரும்பி வீட்டிற்குச் செல்ல முடியாது.
ஆத்மாக்கள் இனிய வீட்டில் தூய்மையாகத் தான் இருப்பார்கள்,
ஆகையால் இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார் - தந்தையின்
நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகும். எந்த
தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். தந்தையை எந்த அளவு நினைவு
செய்வீர்களோ அந்த அளவிற்கு தூய்மை ஆவீர்கள் மற்றும்
வரிசைக்கிரமமாக உயர்ந்த பதவி அடைவீர்கள். லெட்சுமி நாராயணனின்
சித்திரத்தை வைத்து மற்றவர்களுக்குப் புரிய வைப்பது மிகவும்
எளிதாகும். பாரதத்தில் இவர்களது இராஜ்யம் இருந்தது. இவர்கள்
இராஜ்யம் செய்த பொழுது உலகில் அமைதி இருந்தது. உலகில் அமைதியை
தந்தை தான் ஏற்படுத்த முடியும், வேறு யாரிடத்திலும் சக்தி
கிடையாது. இப்பொழுது தந்தை நமக்கு இராஜயோகம் கற்பித்துக்
கொண்டிருக் கின்றார். புது உலகில் இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக
எப்படி ஆவது? என்பதைக் கூறுகின்றார். தந்தை தான் ஞானம்
நிறைந்தவராக இருக்கின்றார். ஆனால் அவரிடத்தில் எந்த ஞானம்
இருக்கிறது? என்பதை யாரும் அறியவில்லை. உலகின் முதல், இடை,
கடையின் சரித்திர பூகோளத்தை எல்லையற்ற தந்தை தான்
கூறுகின்றார். மனிதர்கள் சில நேரங்களில் சர்வவியாபி என்றும்
சிலநேரங்களில் அனைவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்றும்
கூறுகின்றனர். அப்படியானால் தன்னையே பகவான் என்று கூறிக் கொள்ள
முடியாது. இந்த அனைத்து விசயங்களையும் தந்தை வந்து புரிய
வைக்கின்றார். நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும் மற்றும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த லெட்சுமி நாராயணனின்
சித்திரம் சதா புன்முறுவலுடன் இருப்பதாகத் தான்
உருவாக்குகின்றனர். பள்ளியில் உயர்ந்த படிப்பு படிப்பவர்கள்
எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருப்பர். இவர்கள் மிகப் பெரிய
தேர்வில் தேர்ச்சி பெறக் கூடியவர்கள் என்று மற்றவர்களும்
நினைப்பர். இது மிகவும் உயர்ந்த படிப்பாகும். கட்டணம் போன்ற
எந்த விசயமும் கிடையாது. தைரியத்திற்கான விசயமாகும். தன்னை
ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதில்
தான் மாயை தடையிடுகிறது. தூய்மையாக ஆகுங்கள் என்று தந்தை
கூறுகின்றார். தந்தையினுடையவராகி பிறகு முகத்தை கருப்பாக்கிக்
கொள்கிறீர்கள், மிகவும் தந்திரம் வாய்ந்தது மாயை,
தோல்வியடைந்து விடுவீர்கள் எனில் பிறகு புகழ் கிடைக்காது.
இன்னார் ஆரம்பத்திலிருந்தே மிகவும் நன்றாக முன்னேறிக்
கொண்டிருக்கின்றார் என்று மகிமை பாடப்படும். தனக்காக தானே
முயற்சி செய்து இராஜ்யத்தைப் பலனாக அடைய வேண்டும் என்று தந்தை
கூறுகின்றார். படிப்பின் மூலம் உயர்ந்த பதவி அடைய வேண்டும்.
இது இராஜயோகம் ஆகும். பிரஜையோகம் அல்ல. ஆனால் பிரஜைகளாகவும்
ஆவீர்கள் அல்லவா! முகம் மற்றும் சேவையின் மூலம் இவர்கள் என்ன
ஆவதற்கு தகுதியானவர்கள்? என்பது தெரிந்து விடும். வீட்டில்
மாணவனின் நடத்தையின் மூலம் இவர் முதல் நம்பரில் வருவாரா?
அல்லது மூன்றாம் நம்பரில் வருவாரா? என்பதைப் புரிந்து கொள்ள
முடியும். இங்கும் அவ்வாறு தான் இருக்கிறது. எப்பொழுது தேர்வு
முடிவடையுமோ அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் சாட்சாத்காரம்
ஏற்படும். சாட்சாத்காரம் ஏற்படுவதற்கு எந்த தாமதமும் ஏற்படாது.
பிறகு வெட்கப்பட வேண்டியிருக்கும், நான் தோல்வியடைந்து
விட்டேன். தோல்வி அடைந்தவர் மீது யார் அன்பு செலுத்துவர்?
மனிதர்கள் சினிமா பார்ப்பதில் மகிழ்ச்சியை அனுபவம்
செய்கின்றனர். ஆனால் நம்பர் ஒன் அசுத்தமானவர் களாக ஆக்கக்
கூடியது இந்த சினிமா என்று தந்தை கூறுகின்றார். அதில் செல்லக்
கூடிய பலர் தோல்வியடைந்துகீழே விழுந்து விடுகின்றனர். சில
பெண்களும் அப்படியிருக்கின்றனர், அதாவது சினிமாவிற்கு செல்லா
விட்டால் தூக்கம் வரவே வராது. சினிமா பார்ப்பவர்கள் அசுத்தம்
ஆவதற்கான முயற்சி அவசியம் செய்வர். இங்கு என்னவெல்லாம்
நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அதில் மகிழ்ச்சியிருப்பதாக
மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவையனைத்தும்
துக்கத்திற்கானதாகும். இது அழிவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தக்
கூடியதாகும். அழிவற்ற மகிழ்ச்சி அழிவற்ற தந்தையிடமிருந்து தான்
கிடைக்கும். பாபா நம்மை இந்த லெட்சுமி நாராயணன் போன்று
ஆக்குகின்றார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். முன்பு
21 பிறவிகள் என்று எழுதி வந்தோம், இப்பொழுது 50-60 பிறவிகள்
என்று பாபா எழுதுகின்றார். ஏனெனில் துவாபர யுகத்திலும்
ஆரம்பத்தில் மிகவும் செல்வந்தர்களாக, சுகமானவர்களாக
இருப்பீர்கள் அல்லவா! பதீதமாக ஆகலாம், இருந்தாலும் அதிக
செல்வம் இருக்கும். எப்பொழுது முற்றிலும் தமோ பிரதானமாக
ஆகிறீர்களோ அப்பொழுது தான் துக்கம் ஆரம்பமாகிறது. முதலில்
சுகமாக இருப்பீர்கள். எப்பொழுது அதிக துக்கம் ஏற்படுகிறதோ
அப்பொழுது தந்தை வருகின்றார். அஜாமில் போன்ற மகா பாவிகளையும்
முன்னேறச் செய்கின்றார். (கை தூக்கி விடுகின்றார்) நான்
அனைவரையும் முக்திதாமத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று தந்தை
கூறுகின்றார். பிறகு சத்யுக இராஜ்யத்தையும் உங்களுக்கு
கொடுக்கிறேன். அனைவருக்கும் நன்மை ஏற்படுகிறது அல்லவா!
அனைவருக்கும் அவரவர்களது குறிக்கோளாகிய அமைதி அல்லது சுகத்தை
அடையச் செய்கிறேன். சத்யுகத்தில் அனைவரும் சுகமாக இருப்பர்.
சாந்திதாமத்திலும் சுகமாக இருப்பர். உலகில் அமைதி நிலவ
வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த லெட்சுமி நாராயணனின்
இராஜ்யம் எப்பொழுது இருந்ததோ அப்பொழுது அமைதி இருந்தது என்று
கூறுங்கள். துக்கமான விசயங்கள் இருக்கவே முடியாது. துக்கமும்
கிடையாது, அசாந்தியும் கிடையாது. இங்கு வீட்டிற்கு வீடு
அசாந்தி இருக்கிறது. நாட்டுக்கு நாடு அசாந்தியாக இருக்கிறது.
முழு உலகிலும் அசாந்தி நிலவுகிறது. எவ்வளவு துண்டு துண்டாக
பிரிந்து கிடக்கிறது. எவ்வளவு பிளவுகள் உள்ளன! 100 மைல்
தொலைவுகளில் ஒரு மொழி இருக்கிறது. பாரதத்தின் பழமையான மொழி
சமஸ்கிருதம் என்று இப்பொழுது கூறுகின்றனர். ஆதி சநாதன தர்மம்
பற்றி யாருக்கும் தெரியவில்லையெனும் பொழுது இது பழமையான மொழி
என்று எப்படி கூறுகிறீர்கள்? ஆதி சநாதன தேவி தேவதா தர்மம்
எப்பொழுது இருந்தது? என்று நீங்கள் கூற முடியும். உங்களிலும்
வரிசைக்கிரமம் இருக்கிறது. சிலர் மந்தபுத்தியுடனும்
இருக்கின்றனர். இவர்கள் கல்புத்தி போன்றவர்கள் என்பதை
பார்க்கவும் முடிகிறது. ஹே பகவான், இவரது புத்தியின் பூட்டைத்
திறந்து விடுங்கள் என்று அஞ்ஞான காலத்திலும் கூறுகிறீர்கள்
அல்லவா!
தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் ஞான ஒளி
கொடுக்கின்றார், இதன் மூலம் பூட்டு திறக்கப்படுகிறது.
இருப்பினும் சிலரது புத்தி திறக்கப்படுவது கிடையாது. பாபா,
நீங்கள் புத்திசாலிகளுக்கெல்லாம் புத்திசாலி, எனது கணவனின்
புத்தியை திறந்து விடுங்கள் என்று கூறுகின்றனர். ஒவ்வொருவரின்
புத்தியின் பூட்டை திறப்பதற்காக நான் வரவில்லை என்று தந்தை
கூறுகின்றார். பிறகு அனைவரின் புத்தியும் திறக்கப்பட்டு
விடுமானால் அனைவரும் மகாராஜா, மகாராணிகளாக ஆகிவிடுவர். நான்
எப்படி அனைவரின் பூட்டையும் திறப்பேன்? அவர்கள் சத்யுகத்திற்கு
வரக் கூடியவர்களே இல்லையெனும் பொழுது நான் எப்படி பூட்டை
திறப்பேன்? நாடகப்படி, நேரம் வரும் பொழுது அவர்களது புத்தி
திறக்கப்பட்டு விடும். நான் எப்படி திறப்பேன்? நாடகத்தில் என்ன
உள்ளதோ அதன்படி நடக்கும் அல்லவா! அனைவரும் முழுமையாக தேர்ச்சி
அடைவது கிடையாது. பள்ளியிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது.
இதுவும் படிப்பாகும். பிரஜைகளும் உருவாக வேண்டும். அனைவரின்
பூட்டும் திறக்கப்பட்டு விட்டால் பிரஜைகள் எங்கிருந்து
வருவார்கள்? இது நியமம் கிடையாது. குழந்தைகளாகிய நீங்கள்
முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் முயற்சியைப் பார்த்து
புரிந்து கொள்ள முடியும், யார் நன்றாக படிக்கிறார்களோ, அவர்கள்
இங்கு அங்கு என்று (சேவைக்காக) அழைக்கப்படுகின்றனர். யாரெல்லாம்
நன்றாக சேவை செய்து கொண்டிருக்கின்றனர்? என்பதை பாபா அறிவார்.
குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்தால்
வீட்டிற்கு அழைத்துச் செல்வேன், பிறகு சொர்க்கத்திற்கு அனுப்பி
வைத்து விடுவேன். இல்லையெனில் அதிக தண்டனைகள் காத்திருக்கும்.
பதவியும் குறைந்து விடும். மாணவர்கள் ஆசிரியரை வெளிப்படுத்த
வேண்டும். தங்கயுகத்தில் தங்க புத்தியுடையவர்களாக இருந்தீர்கள்,
இப்பொழுது இரும்பு யுகமாகும். இங்கு தங்க புத்தியுடையவர்கள்
எப்படி இருக்க முடியும்? எப்பொழுது ஒரே இராஜ்யம், ஒரே தர்மம்
இருந்ததோ அப்பொழுது உலகில் அமைதி இருந்தது. பாரதத்தில் இவர்களது
இராஜ்யம் இருந்த பொழுது உலகில் அமைதி இருந்தது என்று நீங்கள்
செய்தித்தாளில் போடுங்கள். கடைசியில் அவசியம் புரிந்து
கொள்வார்கள். குழந்தைகளாகிய உங்களது பெயர் பிரபலம் ஆகப்போகிறது.
அந்த படிப்பில் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கின்றனர்! இங்கு
எதுவும் கிடையாது. படிப்பு முற்றிலும் எளிதானது. மற்றபடி
நினைவில் நல்ல நல்ல மகாரதிகளும் தோல்வி அடைந்து விடுகின்றனர்.
நினைவு என்ற கூர்மை இல்லையெனில் ஞான அம்பு பாதிபை ஏற்படுத்தாது.
அதிகம் நினைவு செய்தால் தான் கூர்மை ஏற்படும். பந்தனங்களில்
இருக்கலாம், இருப்பினும் நினைவு செய்து கொண்டே இருந்தால் அதிக
லாபம் ஏற்படும். ஒருபொழுதும் பாபாவை பார்த்திருக்கவும்
மாட்டார்கள், நினைவிலேயே இருந்து உயிர் விட்டு விடுகின்றனர்.
அப்படிப்பட்டவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியும். ஏனெனில் அதிகம்
நினைவு செய்கின்றனர். தந்தையின் நினைவில் அன்புக் கண்ணீர்
வடிக்கின்றனர். அந்த கண்ணீர் முத்தாக மாறிவிடுகிறது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு, தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்காண முக்கிய சாரம்:
1)
தனக்காக தானே முயற்சி செய்து உயர்ந்த பதவியடைய வேண்டும்.
படிப்பின் மூலம் தனக்குத் தானே இராஜ்ய திலகம் இட்டுக் கொள்ள
வேண்டும். ஞானத்தை நல்ல முறையில் தாரணை செய்து சதா
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.
2)
ஞான வாளில் நினைவு என்ற கூர்மையை நிரப்ப வேண்டும். நினைவின்
மூலம் பந்தனங்களை துண்டிக்க வேண்டும். ஒருபொழுதும் அசுத்த
சினிமாக்களைப் பார்த்து தனது சங்கல்பங்களை அசுத்தம் ஆக்கிக்
கொள்ளக் கூடாது.
வரதானம்:
சதா ஏகாந்தம் மற்றும் நினைவில் பிசியாக இருக்கக்கூடிய
எல்லையற்ற வானபிரஸ்தி ஆகுக.
தற்கால சமயத்தின் அனுசாரமாக நீங்கள் அனைவரும் வானபிரஸ்த
நிலையில் உள்ளீர்கள். வானபிரஸ்திகள் ஒருபொழுதும் பொம்மைகளை
வைத்து விளையாடமாட்டார்கள். அவர்கள் சதா ஏகாந்தம் மற்றும்
நினைவில் இருப்பார்கள். எல்லையற்ற வானபிரஸ்திகளாகிய நீங்கள்
அனைவரும் சதா ஒருவருடைய அந்தத்தில் அதாவது நிரந்தரமாக
ஏகாந்தத்தில் இருங்கள், கூடவே ஒருவரை நினைவு செய்து கொண்டு
இருக்கும் நினைவு சொரூபம் ஆகுங்கள். இப்பொழுது தந்தை மற்றும்
குழந்தைகள் சமம் ஆக வேண்டும், சதா நினைவில் மூழ்கி இருக்க
வேண்டும் என்பதுவே அனைத்து குழந்தைகள் மீதும் பாப்தாதா
கொண்டிருக்கும் சுப ஆசை ஆகும்.
சுலோகன்:
நீங்கள் தைரியமாக ஒரு அடி முன் வைத்தீர்கள் என்றால்,
உதவியினுடைய ஆயிரம் அடிகளை தந்தை முன் வைப்பார்.
ஓம்சாந்தி