08.08.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! தந்தை
எவ்வாறு வழிகாட்டியாக இருக்கின்றாரோ, அதேபோன்று நீங்களும்
வழிகாட்டியாக இருந்து அனைவருக்கும் பரந்தாமம் வீட்டிற்கு
வழிகாட்ட வேண்டும், கண்கள் இல்லாதவர்களுக்கு ஊன்றுகோல் ஆக
வேண்டும்.
கேள்வி:
இந்த உருவான நிச்சயிக்கப்பட்ட
அனாதியான நாடகத்தின் இரகசியம் எப்படிபட்டது, இதனை குழந்தைகள்
நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள்?
பதில்:
இந்த நிச்சயக்கப்பட்ட அனாதியான
(முதலும் முடிவும் இல்லாத) நாடகத்தில் எந்தவொரு நடிகரையும்
கூடுதலாக சேர்க்க முடியாது, யாரையும் குறைக்கவும் முடியாது.
மோட்சம் யாருக்கும் கிடைக்காது. இந்த வருவதும் போவதுமான
காலச்சக்கரத்தில் நாங்கள் வரவே மாட்டோம் (விரும்பவில்லை) என
சிலர் கூறினாலும், சிறிது காலத்திற்கு அவ்வாறு இருந்துவிடலாம்
என பாபா கூறுகின்றார். ஆனால் நாடகத்தில் நடிக்காமல் முற்றிலும்
வராமல் இருக்க முடியாது. இந்த நாடகத்தின் இரகசியத்தை குழந்தைகள்
நீங்கள் மட்டுமே அறிந்துள்ளீர்கள்.
ஓம் சாந்தி!
கள்ளம்கபடமற்றவர் என்று யாரை
கூறுகின்றனர் என்பதை இனிமையிலும் இனிமையான குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள். சங்கமயுகத்தை சேர்ந்த குழந்தைகள் மட்டுமே
அறிந்துள்ளீர்கள். கலியுக மனிதர்கள் யாருக்கும் துளியளவும்
தெரியாது. ஒரு தந்தை மட்டுமே ஞானக்கடலாக இருக்கின்றார், அவரே
படைப்பின் மூன்று கால ஞானத்தை புரியவைக்கின்றார். குழந்தைகள்
நீங்கள் இப்பொழுது தான் புரிந்துள்ளீர்கள், இதற்குமுன்
உங்களுக்கும் தெரியாது. நான் வந்துதான் பாரதத்தை சொர்க்கமாக
ஆக்குகின்றேன், எல்லையற்ற ஆஸ்தியை தருகின்றேன், அதனை இப்பொழுது
நீங்கள் அடைகின்றீர்கள் என தந்தை கூறுகின்றார். நாம் எல்லையற்ற
தந்தையிடம் இருந்து எல்லையற்ற சுகத்தின் பொக்கிஷத்தை
அடைகின்றோம். இது நிச்சயக்கப்பட்ட நாடகமாக இருக்கின்றது, ஒரு
நடிகரைக் கூட அதிகமாக சேர்க்கவோ, குறைக்கவோ முடியாது.
அனைவருக்கும் தனிப்பட்ட நடிப்பு கிடைத்திருக்கின்றது, மோட்சம்
யாருக்கும் கிடைக்க முடியாது. யார் யார் எந்தெந்த தர்மத்தை
சேர்ந்தவர் களோ அவர்கள் மீண்டும் அதே தர்மத்தில் செல்வார்கள்.
புத்த தர்மம், கிறிஸ்துவ தர்மத்தை சேர்ந்தவர்கள் நாங்கள்
சொர்க்கத்திற்கு செல்வதற்கு விரும்புகின்றோம் என்றாலும் அவ்வாறு
செல்ல முடியாது. அவர்களுடைய தர்மத்தை படைத்தவர்கள் வந்தபிறகு
தான் அவர்களுக்கு இந்த நாடகத்தில் நடிப்பு ஏற்படும்.
இவையனைத்தும் குழந்தைகள் உங்கள் புத்தியில் இருக்கின்றது. முழு
உலகத்தைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரும் இந்த நேரம்
நாஸ்திகர்களாக இருக்கின்றனர், அதாவது எல்லையற்ற தந்தையை
அறியாமல் இருக்கின்றனர். இந்த நாடகசாலை மனிதர்களுக்கானது, ஆகவே
மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தானே! ஓவ்வொரு ஆத்மாவும்
பரந்தாமத்திலிருந்து நடிப்பதற்காக இங்கு வருகின்றனர், பிறகு
பரந்தாமத்திற்கு செல்வதற்கு முயற்சி செய்கின்றனர். புத்தர்
நிர்வாண நிலை அடைந்தார் என கூறுகின்றனர், ஆக புத்தருடைய சரீரம்
செல்லவில்லை, ஆத்மா மட்டுமே சென்றது. ஆனாலும் யாரும்
பரந்தாமத்திற்குச் செல்லவில்லை என பாபா புரிய வைக்கின்றார்.
நாடகத் திலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாது, மோட்சம்
யாருக்கும் கிடைக்காது. இது நிச்சயக்கப்பட்ட நாடக மல்லவா! சில
மனிதர்கள் மோட்சம் கிடைக்குமென்று புரிந்துகொண்டு அதற்காக
முயற்சி செய்கின்றனர். ஜைன மதத்தை சேர்ந்தவர்கள் முயற்சி
செய்கின்றனர், அவர்களுடைய நடைமுறை பழக்கம் வேறுபட்டது, அவர்கள்
தனது குருவை ஏற்றுக் கொள்கின்றனர். மற்றபடி மோட்சம் யாருக்கும்
கிடைக்க முடியாது. நாம் அனைவரும் இந்த நாடகத்தில் நடிகர்களாக
இருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் அனைவரும்
எப்பொழுது வந்தோம், பிறகு எப்படி திரும்பிச் செல்வோம் என்பது
வேறு யாருக்கும் தெரியாது. பிராணிகளுக்கு இந்த விசயங்கள்
தெரியாதல்லவா! மனிதர்கள் தான் நாங்கள் இந்த கர்ம சேத்திரத்தில்
நடிகர்களாக இருக்கின்றோம் என கூறுகின்றனர். ஆத்மாக்கள்
பரந்தாமத்தில் இருந்து வந்தன, அந்த இடத்தை கர்மசேத்திரம் என
கூறமுடியாது. அந்த இடம் நிராகாரமான(அசரீரி) உலகமாக இருக்கின்றது.
அங்கு எந்தவிதமான விளையாட்டுகளோ, காரியங்களோ இருக்காது.
நிராகாரமான உலகத்தில் இருந்து இந்த சாகார (மனித) உலகத்தில்
ஆத்மா நடிப்பதற்காக வருகின்றது, இந்த நடிப்பு மீண்டும்
தொடர்கின்றது. பிரளயம் என்பது ஏற்படாது. மகாபாரத யுத்தத்தில்
யாதவர்கள் மற்றும் கௌரவர்கள் இறந்துவிட்டனர், 5 பாண்டவர்கள்
மட்டுமே மீதி இருந்தனர், அவர்களும் மலைமேல் ஏறி மறைந்துவிட்டனர்
என சாஸ்திரத்தில் காட்டப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எதுவும்
கூறவில்லை, எனவே பிரளயம் ஏற்பட்டதாக புரிந்துள்ளனர். பிறகு
கடலின் மத்தியில் ஆலிலையில் ஒரு குழந்தை வந்ததாகவும் விசயங்களை
உருவாக்கிவிட்டனர். ஆக இதன் மூலம் எவ்வாறு ஒரு உலகம் உருவாக
முடியும்? மனிதர்கள் கேட்ட விசயங்களை எல்லாம் சத்தியமானது என
புரிந்துள்ளனர். சாஸ்திரத்தில் என்னென்ன விசயங்களை
எழுதிவிட்டனர் என குழந்தைகள் இப்பொழுது புரிந்துள்ளனர்.
இவையனைத்தும் பக்திமார்க்கத்தின் சாஸ்திரங் களாகும்.
பக்தர்களுக்கு பலன் தருபவர் ஒரு பகவான் மட்டுமே, இதனால் சிலர்
முக்தியிலும் சிலர் ஜீவன் முக்தியிலும் செல்வார்கள். ஒவ்வொரு
ஆத்மாவிற்கும் தன்னுடைய பங்கு நாடகத்தில் ஏற்படும் போது
மீண்டும் வருவார்கள். இந்த நாடகத்தின் இரகசியத்தை குழந்தைகள்
உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எங்களுக்கு படைப்பவர்
மற்றும் படைப்பு இதனைப் பற்றி தெரியாது என கூறுகின்றனர்.
நாடகத்தில் நடிகராக நடித்துக் கொண்டு நாடகத்தின் மூன்று காலம்
(முதல்-இடை-கடை) மற்றும் அவற்றின் காலஅளவைப் பற்றி தெரியவில்லை
என்றால் புத்தியில்லை என்றுதானே அர்த்தமாகும்! புரியவைத்தாலும்
புரிந்து கொள்வதில்லை. 84 இலட்சம் பிறவிகள் என்று
புரிந்துகொண்டதால் நாடகத்தின் காலத்தை இலட்சக்கணக்கான
ஆண்டுகளாக கூறிவிட்டனர்.
பாபா நாங்கள் உங்களிடமிருந்து கல்பகல்பமாக சொர்க்க இராஜ்யத்தை
அடைகின்றோம் என நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். 5000
ஆண்டுகளுக்கு முன்பாகவும் உங்களை சந்தித்து, எல்லையற்ற ஆஸ்தியை
அடைந்தோம். இராஜா -இராணியைப் போன்று பிரஜைகள் அனைவரும்
உலகத்திற்கு எஜமானராக ஆகின்றனர். நாங்கள் உலகத்தின் எஜமானர்
என்று பிரஜைகளும் கூறுவார்கள். நீங்கள் உலகத்தின் எஜமானராக
ஆவீர்கள், அந்த நேரம் சந்திரவம்சத்தின் இராஜ்யம் இருக்காது.
குழந்தைகள் நீங்கள் நாடகத்தின் மூன்று காலத்தை
அறிந்துள்ளீர்கள். மனிதர்கள் பக்திமார்க்கத்தில் யாரை பூஜை
செய்கின்றனரோ அவர்களைப் பற்றி எதுவும் தெரியாது, யாரை நோக்கி
பக்தி செய்யப்படுகின்றதோ அவர்களைப் பற்றிய முழு விபரங்களும்
தெரிய வேண்டு மல்லவா! குழந்தைகள் இப்பொழுது பாபா மூலமாக
அனைவரைப் பற்றிய முழு விபரங்களும் அறிந்துள்ளீர்கள். நீங்கள்
தந்தையுடையவராக ஆகி தந்தையைப் பற்றிய முழு விபரங்களை
அறிந்துள்ளீர்கள். தந்தை பதீதபாவனராக, காப்பாற்றுபவராக,
வழிகாட்டியாக இருக்கின்றார். பாண்டவர்கள் என உங்களை
கூறுகின்றார். நீங்கள் அனைவருக்கும் வழிகாட்டிகள், கண் பார்வை
இழந்தவர்களுக்கு ஊன்றுகோலாக இருப்பதற்கான வழிகாட்டிகள். பாபா
எவ்வாறு வழிகாட்டியாக இருக்கின்றாரோ அதேபோன்று குழந்தைகளும் ஆக
வேண்டும். அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். நீங்கள்
ஆத்மாக்கள், அனைவரின் தந்தை பரமாத்மா, அவரிடம் இருந்து
எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது என கூறுங்கள். பாரதத்தில்
எல்லையற்ற இராஜ்யம் இருந்தது, ஆனால் இப்பொழுது இல்லை. நாம்
எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தின் பொக்கிஷத்தை
அடைகின்றோம், அதாவது மனிதனிலிருந்து தேவாத்மாவாக ஆகின்றோம்,
நாம் தேவாத்மாவாக இருந்தோம் பிறகு 84 பிறவிகள் எடுத்து
சூத்திரராக ஆனோம் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளீர்கள். பாபா
வந்து சூத்திரர்களை பிராமணர்களாக ஆக்குகின்றார். இதுதான் ஞான
யக்ஞமாகும், இதற்கு பிராமணர்கள் அவசியம் வேண்டும். பாரதத்தில்
நிறைய யாகங்கள் நடத்துகின்றனர், குறிப்பாக ஆரிய சமாஜத்தை
சேர்ந்தவர்கள் அதிகமாக யாகங்கள் செய்கின்றனர். இது ருத்ரஞான
யாகமாகும், இதன்மூலம் முழு பழைய உலகமும் ஸ்வாஹா ஆகிவிடும்.
இதனை புத்தி மூலம் புரிந்து கொண்டு காரியம் செய்ய வேண்டும்.
கலியுகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கின்றனர், ஆக இவ்வளவு பெரிய
முழு உலகமும் முடியத்தான் வேண்டும். இந்த உலகத்தின் எந்த
பொருளும் காரியத்திற்கும் பயன்படாது. சத்யுகத்தில் அனைத்தும்
புதியதாக இருக்கும், இங்கு எல்லாமே கெட்டுப்போய்விட்டது,
மனிதர்களும் கெட்டுப் போய்விட்டனர். பெரிய செல்வந்தர்கள் பெரிய
மாளிகைகளில் வசிக்கின்றனர், ஏழைகள் அழுக்கான இடங்களில்,
குடிசைகளில் வசிக்கின்றனர். இப்பொழுது இந்த குடிசைகளை எல்லாம்
காலி செய்வதற்கு முயற்சி செய்கின்றனர், அவர்களுக்கு வேறு இடம்
கொடுத்து காலி செய்கின்றனர், கட்டாயப்படுத்தியும் கூட காலி
செய்கின்றனர். ஏழைகள் மிகவும் துக்கத்தில் உள்ளனர், யார்
சுகமாக இருக்கின்றனரோ அதுவும் நிலையான சுகமாக இல்லை. நிலையான
சுகம் இருந்தால் இந்த உலகத்தின் சுகம் காக்கை எச்சத்திற்கு
சமம் என ஏன் கூறுவார்கள்?
சிவ பகவான் வாக்கியம், நான் தாய்மார்களின் மூலமாக
சொர்க்கத்தின் கதவுகளை திறக்கின்றேன், தாய்மார் களின் தலையில்
ஞானக்கலசம் வைத்திருக்கின்றேன். அவர்கள் அனைவருக்கும் ஞான
அமிர்தத்தை கொடுக் கின்றனர், ஆனாலும் உங்களுடையது இல்லற
மார்க்கமாகும். நீங்கள் அனைவரையும் ஞானச்சிதையில் அமர
வைக்கக்கூடிய உண்மையான பிராமணர்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீக
வம்சத்திற்கு செல்கின்றீர்கள், இராவண இராஜ்யத்தில் அசுர வம்சம்
இருக்கின்றது. இராம இராஜ்யம் வேண்டுமென காந்திஜீயும் கூறினார்.
ஹே! பதீதபாவனரே வாருங்கள் என அழைத்தாலும் தன்னைத் தான்
அழுக்காக இருக்கின்றோம் என புரிந்து கொள்ளவில்லை. பாபா
குழந்தைகளை விழிப்படைய வைக்கின்றார், நீங்கள் இப்பொழுது ஆழ்ந்த
இருளில் இருந்து வெளிச்சத்தில் வந்துவிட்டீர்கள். கங்கையில்
குளித்தால் பாவனமாவோம் என மனிதர்கள் புரிந்துள்ளனர், ஆனாலும்
கங்கையில் தான் ஹரித்துவார் நகரத்தின் குப்பைகள் எல்லாம்
சேர்கின்றது. பிறகு குப்பைகளை வயல்வெளிகளிலும் சேர்க்கின்றனர்.
சத்யுகத்தில் இப்படிப்பட்ட வேலைகள் இருக்காது, அங்கு
தானியங்கள் நிறைந்து இருக்கும், பணம் கொடுத்து செலவு செய்ய
வேண்டிய அவசியமில்லை. பிரம்மா பாபா அனுபவசாலி அல்லவா!
ஆரம்பகாலத்தில் தானியங்கள் மிகவும் மலிவாக இருந்தது.
சத்யுகத்தில் மிகவும் குறைவாக மனிதர்கள் இருந்தனர், அங்கு
எல்லாப் பொருட்களும் மிகவும் சுலபமாக கிடைக்கும். இனிமையான
குழந்தைகளே, இப்பொழுது நீங்கள் பாவனமாக வேண்டும் என தந்தை
கூறுகின்றார், அதற்கான யுக்தியும் சுலபமாக கூறுகின்றார்,
தன்னைத் தான் ஆத்மாவென புரிந்து தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். ஆத்மாவில் கறை ஏற்பட்டதால் முலாம் பூசப்பட்டு
மதிப்பு குறைந்துவிட்டது, தங்கபுத்தியாக இருந்தவர்கள்
கல்புத்தியுடையவர்களாக ஆகி விட்டார்கள். குழந்தைகள் நீங்கள்
பாபாவிடம் வந்து கல்புத்தி நிலையிலிருந்து தங்கபுத்தியுடைய
அதிபதி ஆவதற்கு வந்துள்ளீர்கள். எல்லையற்ற பாபா உங்களை பொற்கால
உலகத்தின் எஜமானராக ஆக்குகின்றார். பாபா அமர்ந்து குழந்தைகளை
தங்கமான உலகிற்கு எஜமானராக ஆக்குகின்றார். இங்கு இருக்கக்கூடிய
பெரிய மாளிகைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் எதுவும் பயன்படாமல்
எல்லாம் முடிந்து போய்விடும். இந்த உலகத்தில் என்ன
இருக்கின்றது! அமெரிக்காவில் அதிகமாக தங்கம் இருக்கின்றது.
இங்கு தாய்மார்களிடம் குறைவாக தங்கம் இருக்கின்றது, அதையும்
வாங்கிவிடுகின்றனர், ஏனென்றால் கடனுக்குப் பதில் தங்கம்
தரவேண்டும். அந்த உலகத்தில் உங்களிடம் தங்கம், வைரம்
நிறைந்திருக்கும். இங்கு சோழிகள் தான் இருக்கின்றது, அங்கே
வைரங்கள் இருக்கின்றன. இதைத்தான் இரும்பு யுகம் என
கூறப்படுகின்றது. பாரதம் மட்டுமே ஒரு பொழுதும் அழியாமல்
நிலையாக இருக்கும், பாரதம் மட்டுமே அனைத்தையும் விட
உயர்ந்ததாகும். நீங்கள் தாய்மார்கள் முழு உலகத்தையும்
காப்பாற்ற வேண்டும், எனவே உங்களுக்காக புதிய உலகம் அவசியம்
வேண்டும். பழைய உலகம் முடிந்தாக வேண்டும். எவ்வளவு புரிந்து
கொள்ள வேண்டிய விசயங்கள் இருக்கின்றது! மற்றபடி சரீர
நிர்வாகத்திற்காக தொழில், காரியங்களும் செய்ய வேண்டும்,
எதையும் விடுவதற்கு அவசியமில்லை. அனைத்தையும் செய்து கொண்டே
என்னை நினைவு செய்யுங்கள் என பாபா கூறுகின்றார். எங்களை
சுத்தமாக, அழகாக மாற்றுவதற்கு வாருங்கள் என பக்தி
மார்க்கத்தில் அன்பானவராகிய என்னை நினைவு செய்து வந்தீர்கள்,
ஆகவே பாபாவை வழிப்போக்கர் என்றும் கூறப்படுகின்றது. நீங்கள்
அனைவரும் வழிப்போக்கர்கள் தானே! உங்களுடைய வீடு பரந்தாமம்,
அங்கு தான் எல்லா ஆத்மாக்களும் வசிக்கின்றனர்.
நீங்கள் அனைவரையும் ஞானச்சிதையில் அமரவைக்கின்றீர்கள்,
அனைவரும் கணக்கு, வழக்குகளை முடித்துவிட்டுச் செல்ல வேண்டும்,
பிறகு புதிய உலகத்தில் நீங்கள் வருவீர்கள். எந்தளவு அதிகமாக
நினைவு செய்கின்றீர்களோ அந்தளவு தூய்மையாக ஆவீர்கள் மற்றும்
உயர்ந்த பதவி அடைவீர்கள். தாய்மார்களுக்கு அதிகமாக நேரம்
கிடைக்கின்றது. ஆண்களின் புத்தியானது தொழில் மற்றும்
காரியங்களில் சுற்றுகின்றது, எனவே பாபா ஞானத்தின் கலசத்தை
தாய்மார்களிடம் கொடுத்துள்ளார். இந்த உலகத்தில் கணவர்தான்
மனைவிக்கு குரு என்று சொல்லி, மனைவியை அடிமையாக கருதுகின்றனர்.
இங்கு பாபா மாதாக்களை எவ்வளவு உயர்வாக ஆக்குகின்றார். பெண்கள்
தான் பாரதத்தை காப்பாற்ற வேண்டும் என கூறுகின்றார். சிலர் இந்த
உலகத்தின் பிறவி சுழற்சியில் இருந்து விடுதலையடைய முடியுமா? என
பாபாவிடம் கேட்கின்றார்கள். சிறிது காலத்திற்கு அவ்வாறு இருக்க
முடியும் என பாபா கூறுகின்றார். குழந்தைகள் நீங்கள் ஆரம்பம்
முதல் கடைசிவரை முழுமையாக நடிக்கின்றீர்கள். மற்றவர்கள்
அந்தநேரம் முக்திதாமத்தில் இருப்பார்கள், அவர்களுடைய நடிப்பு
குறைவாக இருக்கும், அவர்கள் சொர்க்கத்தில் வரமாட்டார்கள். இந்த
உலகத்தின் சுழற்சியில் மோட்சம் என்பது கடைசி காலத்தில் இந்த
உலகத்தில் வந்துவிட்டு செல்பவர்களுக்கு கிடைப்பதாக தோன்றும்.
அவர்கள் ஞானத்தைக் கேட்க முடியாது. ஆரம்பத்திலிருந்து இந்த
உலகத்தில் நடிப்பவர்கள் மட்டுமே ஞானத்தை கேட்பார்கள்.
எங்களுக்கு பரந்தாமத்திலிருப்பது பிடித்திருக்கின்றது என
நினைத்தாலும் நாடகத்தில் பதிவானபடி கடைசி நேரத்திலாவது அவசியம்
வரவேண்டும். மீதி காலங்களில் பரந்தாமத்தில் இருக்கலாம், இது
எல்லையற்ற நாடகமாக இருக்கின்றது. நல்லது.
இனிமையிலும் இனிமையான
தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்,
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மிகவும் உண்மையான பிராமணராகி அனைவருக்கும் ஞான அமிர்தத்தை
அருந்தச் செய்ய வேண்டும். ஞானச்சிதையில் அமர வைக்க வேண்டும்.
2. சரீர நிர்வாகத்திற்காக தொழில், காரியங்கள் செய்தாலும்
தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை ஆவதற்கு தந்தையின் நினைவில்
இருக்க வேண்டும் மற்றும் அனைவருக்கும் தந்தையின் நினைவை
ஏற்படுத்த வேண்டும்.
வரதானம் :
நிரந்தர நினைவு மற்றும் சேவையின்
சமநிலை மூலம் குழந்தைப் பருவ குறும்புத்தனத்தை முடிவடையச்
செய்யக்கூடிய வானப்பிரஸ்தி ஆகுக.
சின்னச்சின்ன விசயங்களில்
சங்கமயுகத்தின் விலைமதிப்பற்ற சமயத்தை இழப்பது என்பது குழந்தைப்
பருவத்தின் குறும்புத்தனம் ஆகும். இப்பொழுது இந்தக்
குறும்புத்தனம் அழகல்ல. வானப்பிரஸ்த நிலையில், தந்தையின் நினைவு
மற்றும் சேவை என்ற இந்த ஒரு காரியம் மட்டுமே மீதம் உள்ளது.
இதைத் தவிர வேறு எதுவும் நினைவு வரக் கூடாது. எழுந்தாலும்
நினைவு மற்றும் சேவை, தூங்கினாலும் நினைவு மற்றும் சேவை
நிரந்தரமாக இதனுடைய சமநிலை இருக்க வேண்டும். திரிகாலதரிசியாக
குழந்தைப் பருவ விசயங்கள் மற்றும் குழந்தைப் பருவ
சமஸ்காரங்களினுடைய நிறைவு விழா கொண்டாடுங்கள். அப்பொழுதே உங்களை
வானப்பிரஸ்தி என்று கூறமுடியும்.
சுலோகன் :
அனைத்து பிராப்திகளிலும்
நிறைந்திருக்கும் ஆத்மாவின் அடையாளம் திருப்தி ஆகும்,
திருப்தியாக இருங்கள் மற்றும் திருப்திப்படுத்துங்கள்.
ஓம்சாந்தி