07.09.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! பழைய
பக்தர்களாகிய உங்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்க தந்தை
வந்துள்ளார். பக்தியின் பலன் ஞானமாகும், அதன் மூலம்தான்
உங்களுக்கு சத்கதி உண்டாகும்.
கேள்வி:
பல குழந்தைகள் போகப்போக
அதிர்ஷ்டத்தை தாமாகவே அழித்துக் கொள்கின்றனர், எப்படி?
பதில்:
ஒரு வேளை தந்தையுடையவராகி சேவை
செய்வதில்லை, தன் மீதும், பிறர் மீதும் இரக்கம் காட்டுவதில்லை
என்றால் அவர்கள் தம் அதிர்ஷ்டத்தை அழித்துக் கொள்கின்றனர்.
அதாவது பதவியை கீழான தாக்கிக் கொள்கின்றனர். நல்ல விதமாக
படித்தால், நினைவில் இருந்தால் பதவியும் நல்லதாகக் கிடைக்கும்.
சேவை செய்யும் குழந்தைகளுக்கு சேவையின் மீது மிகவும் ஆர்வம்
இருக்க வேண்டும்.
பாடல்:
யார் வந்தது அதி காலையில்…
ஓம் சாந்தி.
நான் ஆத்மா, சரீரமல்ல என
ஆன்மீகக் குழந்தைகள் புரிந்துள்ளனர். மேலும் இந்த ஞானம் பரமபிதா
பரமாத்மாவிடமிருந்து இப்போதுதான் கிடைக்கிறது. தந்தை சொல்கிறார்
- நான் வந்துள்ளேன் - எனும் போது நீங்கள் உங்களை ஆத்மா என
நிச்சயம் செய்யுங்கள். ஆத்மாதான் சரீரத்தில் பிரவேசம் செய்கிறது.
ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுத்தபடி இருக்கிறது. ஆத்மா
மாறுவதில்லை, சரீரம் மாறுகிறது. ஆத்மா அழிவற்றது, ஆகவே, தன்னை
ஆத்மா என புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த ஞானத்தை ஒருபோதும்
வேறு யாரும் கொடுக்க முடியாது. தந்தை குழந்தைகளின் அழைப்பின்
பேரில் வந்துள்ளார். இது புருஷோத்தம சங்கம யுகம் என்பது கூட
யாருக்கும் தெரியாது. தந்தை வந்து புரிய வைக்கிறார் - எனது
வருகை கல்பத்தின் புருஷோத்தம சங்கம யுகத்தில் நடக்கிறது, அந்த
சமயத்தில் முழு உலகமும் புருஷோத்தம உலகமாக ஆகிறது. இந்த
சமயத்தில் முழு உலகமும் கீழானதாக தூய்மையற்றதாக உள்ளது. அது
அமரபுரி என்று சொல்லப்படுகிறது, இது மரணலோகமாகும். மரணலோகத்தில்
அசுர குணமுள்ள மனிதர்கள் இருக்கின்றனர், அமரலோகத்தில் தெய்வீக
குணமுள்ள மனிதர்கள் இருக்கின்றனர், ஆகையால் அவர்கள் தேவதைகள்
என கூறப்படுகின்றனர். இங்கும் கூட நல்ல குணங்களுள்ளவர்களை இவர்
தேவதை போல் இருக்கிறார் என சொல்கின்றனர். சில தெய்வீக
குணமுள்ளவர்கள் இருக்கின்றனர், இந்த சமயத்தில் அனைவருமே அசுர
குணங்கள் நிறைந்த மனிதர்களாக உள்ளனர். 5 விகாரங்களில் மாட்டிக்
கொண்டுள்ளனர், எனவே துக்கத்திலிருந்து எங்களை வந்து
விடுவியுங்கள் என பாடுகின்றனர். ஒரு சீதையை மட்டும்
விடுவிக்கவில்லை. பக்தர்கள் சீதைகள் என கூறப் படுகின்றனர்,
பகவான் ராமன் என கூறப்படுகிறார் என பாபா புரிய வைத்துள்ளார்.
அவர் பக்தர்களுக்கு பலனைத் தருவதற்காக வருகிறார். இந்த
எல்லைக்கப்பாற்பட்ட இராவண இராஜ்யத்தில் முழு உலகமும் சிக்கி
கொண்டுள்ளது. அவர்களை விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துச்
செல்கிறார். ரகுபதி ராகவ ராஜாராமின் விஷயமல்ல. அவர் திரேதாவின்
ராஜாவாக இருந்தவர். தற்சமயம் அவரும் கூட தமோபிரதானமாக மிக
மோசமான நிலையில் தான் இருக்கிறார். ஏணியில் இறங்கி இறங்கி கீழே
வந்தார். பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரியாக ஆகி விட்டார்.
தேவதைகள் யாருடைய பூஜையும் செய்வதில்லை. அவர்களோ
பூஜைக்குரியவர்கள். பிறகு அவர்கள் வைஸ்யர்களாக, சூத்திரர்களாக
ஆகும்போது பூஜை தொடங்குகிறது. வாம மார்க்கத்தில் வருவதன் மூலம்
பூஜாரிகளாக ஆகின்றனர், பூஜாரிகள் தேவதைகளின் படங்களின் முன்னால்
நமஸ்கரிக்கின்றனர், இந்த சமயத்தில் எந்த ஒருவரும்
பூஜைக்குரியவராக இருக்க முடியாது. உயர்ந்தவரிலும் உயர்ந்த
பகவான் பூஜைக் குரியவர், பிறகு சத்யுகத்தின் தேவதைகள்
பூஜைக்குரியவர்கள். இந்த சமயத்தில் அனைவருமே பூஜாரிகள், முதன்
முதலாக சிவனுக்கு பூஜை நடக்கிறது, அது அந்த ஒருவருக்கு மட்டுமே
செய்கின்ற பூஜையாகும். அது சதோபிரதானம், பிறகு சதோ, அதன் பின்
தேவதைகளிலிருந்தும் கூட கீழிறங்கி நீருக்கு, மனிதர்களுக்கு,
பறவைகள் முதலானவைகளுக்கு பூஜை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
நாளுக்கு நாள் பலரின் பூஜை நடக்கத் தொடங்கி விடுகிறது. இன்றைய
நாட்களில் தார்மீக (மதசம்மந்த) மாநாடுகள் கூட நிறைய நடந்தபடி
இருக்கின்றன. ஒரு சமயம் ஆதி சனாதன தர்மத்தவர்களுடையது, ஒரு
சமயம் ஜைனர்களுடையது, ஒரு சமயம் ஆர்ய சமாஜத்தவர்களுடையது
நடக்கிறது. பலரை அழைக்கின்றனர், ஏனென்றால் ஒவ்வொருவரும்
தம்முடைய தர்மத்தை உயர்வாகப் புரிந்து கொள்கின்றனர் அல்லவா.
ஒவ்வொரு தர்மத்திலும் ஏதாவதொரு விசேஷ குணம் உள்ள காரணத்தால்
அவர்கள் தம்மை பெரிதாகப் புரிந்து கொள்கின்றனர். ஜைனர்களிலும்
பல விதமானவர்கள் இருக்கின்றனர். 5-7 விதமானவர்கள் (பிரிவுகள்)
இருக்கின்றனர். அவர்களில் சிலர் நிர்வாணமாகவும் இருக்கின்றனர்.
நிர்வாணம் ஆவதென்பதன் அர்த்தமும் புரிந்து கொள்வதில்லை.
பகவானுடைய மகா வாக்கியம் - நிர்வாணமாக அதாவது அசரீரியாக
வந்தீர்கள், பிறகு அசரீரியாகி செல்ல வேண்டும். அவர்கள் பிறகு
ஆடையை நீக்கிக் கொண்டு நிர்வாணமாக ஆகி விடுகின்றனர். பகவானுடைய
மகா வாக்கியத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. தந்தை
சொல்கிறார் - ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கே இந்த சரீரத்தை தாரணை
செய்து நடிப்பை நடிக்க வந்தீர்கள், பிறகு திரும்பிச் செல்ல
வேண்டும், இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து
கொள்கிறீர்கள். ஆத்மாதான் நடிப்பை நடிக்க வருகிறது, மரம் (மனித
குலம்) வளர்ச்சியடைந்தபடி இருக்கிறது. புதிது புதிதாக ஏதாவது
தர்மம் தோன்றியபடி இருக்கிறது, ஆகையால் இது பல விதமான தர்மங்
களின் நாடகம் என்று சொல்லப்படுகிறது. பல விதமான தர்மங்களின்
மரமாகும். இஸ்லாமியர்களைப் பாருங்கள், எவ்வளவு கருப்பாக
இருக்கின்றனர். அவர்களின் கிளைகளும் நிறைய வெளிப்படுகின்றன.
முகம்மது பிற்காலத்தில் வந்தவர் ஆவார். முதலில் இஸ்லாமியர்கள்.
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆப்பிரிக்காவில்
எவ்வளவு பணக்காரர்கள் இருக்கின்றனர், தங்கம், வைரங்களின்
சுரங்கங்கள் உள்ளன. செல்வங்கள் நிறைந்த இடங்களை வெற்றி கொண்டு
செல்வந்தர்கள் ஆகின்றனர். கிறிஸ்தவர்களும் கூட எவ்வளவு
செல்வந்தர்களாக ஆனார்கள். பாரதத்திலும் செல்வம் உள்ளது, ஆனால்
குப்தமாக (மறைந்து) உள்ளது. தங்கம் முதலானவை களை எவ்வளவு
பறிமுதல் செய்தபடி இருக்கின்றனர். இப்போது திகம்பர ஜைன்
சபாவினர் மாநாடு முதலானவை களை நடத்தியபடி இருக்கின்றனர்,
ஏனெனில் ஒவ்வொருவரும் தம்மை பெரிதாக நினைத்துக் கொள்கின்றனர்
அல்லவா. இந்த தர்மங்கள் அனைத்தும் அதிகரித்தபடி இருக்கின்றன,
எப்போதாவது வினாசமும் ஆக வேண்டி யுள்ளது, கொஞ்சமும் புரிந்து
கொள்வதில்லை. அனைத்து தர்மங்களிலும் உயர்வானது உங்களின் பிரமண
தர்மம் தான் ஆகும், அதைக் குறித்து யாருக்கும் தெரியாது.
கலியுகத்தின் பிராமணர்களும் நிறைய உள்ளனர், ஆனால் அவர்கள்
வயிற்றின் வழி வம்சாவளி பிராமணர்கள். பிரஜாபிதா பிரம்மாவின்
வாய் வழி வம்சாவளியினரான பிராமணர்கள் அனைவரும்
சகோதர-சகோதரிகளாக இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் தம்மை
பிரம்மா வின் வாரிசுகள் என சொல்லிக் கொண்டார்கள் என்றால்,
சகோதர-சகோதரிகளாகத்தான் இருக்க வேண்டும், பிறகு திருமணம் கூட
செய்ய முடியாது. ஆக, அந்த பிராமணர்கள் வாய் வழி வம்சாவளியினர்
அல்ல என நிரூபணமாகிறது, பெயரை மட்டும் வைத்து விடுகின்றனர்.
உண்மையில் தேவதைகளை விடவும் உயர்வானவர்கள் பிராமணர்கள் என
சொல்வார்கள், உச்சிக் குடுமி போன்றவர்கள் அல்லவா. இந்த
பிராமணர்கள்தான் மனிதர்களை தேவதைகளாக ஆக்குகின்றனர்.
படிப்பிக்கக் கூடியவர் பரமபிதா பரமாத்மா ஆவார், அவர் ஞானக்கடல்
ஆவார். இது யாருக்கும் தெரியாது. தந்தையிடம் வந்து பிராமணராகி
பிறகும் கூட சூத்திரர்கள் ஆகி விடுகின்றனர். பழைய சம்ஸ்காரம்
சீரடைவதில் (மாற்றமடைவதில்) மிகவும் சிரமம் உள்ளது. தன்னை ஆத்மா
என புரிந்துக் கொண்டு தந்தையிடம் ஆஸ்தி எடுக்க வேண்டும்,
ஆன்மீகத் தந்தையிடமிருந்து ஆன்மீகக் குழந்தைகள்தான் ஆஸ்தி
எடுப்பார்கள். தந்தையை நினைவு செய்வதில்தான் மாயை தடைகளை
ஏற்படுத்துகிறது. கைகள் வேலைகளை செய்தபடி இருப்பினும் உள்ளம்
நினைவு செய்தபடி இருக்க வேண்டும். எப்படி பிரியதர்ஷன் -
பிரியதர்ஷினி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடிவதில்லையோ
அது போல. பாபாவோ பிரியதர்ஷனாக இருக்கிறார். அனைத்து
குழந்தைகளும் பிரியதர்ஷினிகள், அவர்கள் தந்தையை நினைவு செய்தபடி
இருக்கின்றனர். ஒரு தந்தை மட்டுமே ஒருபோதும் யாருக்கும்
பிரியதர்ஷினியாக ஆவதில்லை, ஏனெனில் அவரை விட உயர்ந்தவர் யாரும்
இல்லை. ஆம், மற்றபடி குழந்தைகளை மகிமை செய்கிறார். நீங்கள்
அனைவரும் பக்தி மார்க்கத்திலிருந்து தொடங்கி பிரியதர்ஷனாகிய
என்னுடைய பிரியதர்ஷினிகளாக உள்ளீர்கள். வந்து துக்கத்திலிருந்து
விடுவித்து தூய்மையாக்குங்கள் என அழைக்கவும் செய்கிறீர்கள்.
நீங்கள் அனைவரும் மணமகள்கள், நான் மணமகன். நீங்கள் அனைவரும்
அசுரரின் சிறையில் அடைபட்டிருக்கிறீர்கள், நான் வந்து உங்களை
விடுவிக்கிறேன். இங்கே சிரமம் அதிகம் உள்ளது, கிரிமினல் (தேக
அபிமானம் மிக்க) பார்வை ஏமாற்றம் கொடுக்கிறது. தூய்மையான
பார்வையாக ஆக்குவதற்கு முயற்சி தேவைப்படுகிறது. தேவதைகளுக்கு
எவ்வளவு நல்ல ஒழுக்கங்கள் உள்ளன, இப்போது இப்படிப்பட்டவர்களாக
ஆக்குபவர் கண்டிப்பாக தேவை அல்லவா.
மானிட வாழ்வில் மதத்தின் (தர்மத்தின்) முக்கியத்துவம் என
மாநாட்டுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நாடகத்தை அறியாத
காரணத்தால் குழப்பமடைந்திருக்கின்றனர். உங்களைத் தவிர வேறு
யாரும் புரிய வைக்க முடியாது. கிறிஸ்து, புத்தர் முதலானவர்கள்
மீண்டும் எப்போது வருவார்கள் என கிறிஸ்தவர்களுக்கோ, பௌத்த
சமயத்தவர்களுக்கோ தெரியாது. நீங்கள் சட்டென கணக்கு சொல்ல
முடியும். தர்மத்தின் தேவை உள்ளது என்பதை புரிய வைக்க
வேண்டும். முதன் முதலில் எந்த தர்மம் இருந்தது, பிறகு எந்த
தர்மங்கள் வந்தன. தம்முடைய தர்மத்தவர்களே முழுமையாக புரிந்து
கொள்வதில்லை. நினைவை ஈடுபடுத்துவதில்லை. நினைவு இன்றி சக்தி
வராது, புத்தியில் கூர்மை அதிகரிக்காது. தந்தைதான் ஆல்மைட்டி
அத்தாரிட்டி (சர்வ சக்திவான்) என சொல்லப்படுகிறார். நீங்கள்
எவ்வளவு சக்தி மிக்கவர்களாக ஆகிறீர்கள், உலகின் எஜமானாக ஆகி
விடுகிறீர்கள். உங்களின் இராஜ்யத்தை யாரும் பறித்துக் கொள்ள
முடியாது. அந்த சமயத்தில் வேறு எந்த கண்டமும் இருக்காது.
இப்போது எவ்வளவு கண்டங்கள் உள்ளன. இந்த சிருஷ்டி சக்கரம்
எப்படி சுற்றுகிறது. 5 ஆயிரம் வருடத்தின் சக்கரம் இது, மற்றபடி
சிருஷ்டி எவ்வளவு நீளமானது என்பதை வரைபடமாக்க முடியாது.
பூமிக்கு வரைபடம் தயாரிக்கலாம், கடலுக்கு அப்படி முடியாது.
ஆகாயம் மற்றும் கடலின் எல்லையைக் காண யாராலும் முடியாது. ஆக,
மதத்தின் அவசியம் ஏன் என்பதை புரிய வைக்க வேண்டும். தர்மங்களை
வைத்துத் தான் முழு சக்கரமும் உருவாகியுள்ளது. இது பல விதமான
தர்மங்களின் மரம் ஆகும், இந்த சிருஷ்டி மரத்தின் படம்
பார்வையற்றவர் முன்னே கண்ணாடி போன்றதாகும்.
நீங்கள் இப்போதுதான் வெளியே
சேவைக்காக சென்றிருக்கிறீர்கள், மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்தபடி
இருக்கும். புயல் வீசும்போது பல இலைகள் உதிர்ந்தும் போகின்றன
அல்லவா. மற்ற தர்மங்களில் புயல் வீசும் விஷயமே இருப்பதில்லை.
அவர்கள் மேலிருந்து வந்துதான் ஆக வேண்டும். இங்கே உங்களின்
ஸ்தாபனை மிகவும் அதிசயமானதாகும். முதன் முதலில் பக்தி
செய்தவர்களுக்குத்தான் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடிய
பலனை பகவான் கொடுக்க வேண்டும். ஆத்மாக்களாகிய எங்களை உங்கள்
வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என அழைக்கவும் செய்கின்றனர்.
தந்தை சொர்க்கத்தின் இராஜ்ய பாக்கியத்தையும் கூட கொடுக்கிறார்
என்பது யாருக்கும் தெரியாது. சன்னியாசிகள் சுகத்தை ஒப்புக்
கொள்வதே இல்லை. அவர்கள் மோட்சத்தை விரும்புகின்றனர். மோட்சம்
ஆஸ்தி என சொல்லப்படுவதில்லை. சிவபாபாவுக்கே நடிப்பை நடிக்க
வேண்டி இருக்கும்போது, பிறகு மற்றவர்களை மோட்சத்தில் எப்படி
வைக்க முடியும். பிரம்மாகுமார்-குமாரிகளகிய நீங்கள் உங்களின்
தர்மத்தைப் பற்றியும், பிற தர்மங்களைப் பற்றியும் அறிவீர்கள்.
உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டும். சக்கரத்தின் ரகசியத்தைப்
புரிய வைக்க வேண்டும். உங்களுடைய தர்ம ஸ்தாபகர் மீண்டும் இன்ன
சமயத்தில் வருவார் என சொல்லுங்கள். புரிய வைப்பவர்களும்
புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அனைவருமே சதோ
பிரதானத்திலிருந்து சதோ, ரஜோ மற்றும் தமோவில் வரவே
வேண்டியுள்ளது என நீங்கள் புரிய வைக்க முடியும். இப்போது
இருப்பது இராவண இராஜ்யமாகும். உங்களுடையது உண்மையான கீதையாகும்,
அதனை தந்தை சொல்கிறார். நிராகாரமானவர்தான் பகவான் என
சொல்லப்படுகிறார். ஆத்மா நிராகாரமான இறைத் தந்தையை அழைக்கிறது.
அங்கே ஆத்மாக்களாகிய நீங்கள் வசிக்கிறீர்கள். உங்களை பரமாத்மா
என அழைப்ப தில்லை. பரமாத்மா ஒருவர்தான் உயர்ந்தவரிலும் உயர்ந்த
பகவான், பிறகு அனைவருமே ஆத்மாக்கள், குழந்தைகள் ஆவார்கள்.
அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒருவர், அடுத்து
இருப்பவர்கள் தேவதைகள். அவர்களிலும் முதல் எண்ணில் வருபவர்
ஸ்ரீகிருஷ்ணர், ஏனென்றால் ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே
தூய்மையாக இருக்கும். நீங்கள் சங்கமயுகத்தைச் சேர்ந்தவர்கள்.
உங்களுடைய வாழ்க்கை விலை மதிப்பிட முடியாததாகும். தேவதைகளுடையது
அல்ல, பிராமணர்களுடைய வாழ்க்கை விலை மதிப்பிட முடியாததாகும்.
தந்தை உங்களை குழந்தைகளாக்கி பிறகு உங்களுக்காக எவ்வளவு முயற்சி
செய்கிறார், தேவதைகள் இவ்வளவு முயற்சி செய்வதில்லை. அவர்கள்
படிப்பிப்பதற்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள். இங்கே
தந்தை அமர்ந்து உங்களை படிப்பிக்கிறார். அவர் தந்தை, ஆசிரியர்
மற்றும் குரு என மூன்றும் ஆவார். ஆக, எவ்வளவு மரியாதை இருக்க
வேண்டும். சேவை செய்யும் குழந்தைளுக்கு சேவையின் மீது மிகவும்
ஆர்வம் இருக்க வேண்டும். நல்ல புத்திசாலிகள் மிகவும்
குறைந்தவர்களே இருக்கின்றனர், அவர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
சேவைக்கான உதவிக் கரங்கள் தேவைப்படுகின்றன அல்லவா.
போர்க்களத்தில் செல்வதற்காக யாருக்கு கற்றுக் கொடுக்கின்றனரோ
அவர்களை அவர்கள் செய்து வந்த வேலையிலிருந்து விடுவித்து விடு
கின்றனர். அவர்களிடம் பெயர் பட்டியல் இருக்கும். பிறகு நாங்கள்
போர்க்களத்திற்குச் செல்ல மாட்டோம் என்று ராணுவத்திற்கு மறுப்பு
சொல்ல முடியாது. பயிற்சி (டிரில்) செய்விக்கிறார்கள், பிறகு
தேவைப்படும்போது அழைத்துக் கொள்வார்கள். மறுப்பவர்கள் மீது
வழக்கு தொடர்வார்கள். இங்கே அது போன்ற விஷயம் எதுவும் கிடையாது.
இங்கே சேவையை நல்ல விதமாக செய்யாதவர்களின் பதவி குறைந்து விடும்.
சேவை செய்யாவிட்டால் தன்னைத் தானே சுட்டுக் கொள்வது (தற்கொலை)
போலாகும். பதவி கீழானதாகி விடும். தனது அதிர்ஷ்டத்தை சுட்டி (வரை
கோடு போட்டு) விடுகின்றனர். நல்ல விதமாக படித்தால், நினைவில்
இருந்தால், நல்ல பதவி கிடைக்கும். தன் மீது இரக்கம் காட்ட
வேண்டும். தன் மீது இரக்கம் கொண்டால் பிறகு மற்றவர்கள் மீதும்
இரக்கப்படுவார்கள். தந்தை, இந்த உலகின் நாடகம் எப்படி நடக்கிறது
என்பது போன்ற அனைத்து விதமான விழிப்புணர்வும் கொடுத்தபடி
இருக்கிறார். இராஜ்யத்தின் ஸ்தாபனை நடக்கிறது. இந்த விஷயங்கள்
உலகத்திற்குத் தெரியாது. இப்போது அழைப்பு வருகிறது. 5-10
நிமிடங்களில் என்ன புரிய வைக்க முடியும். ஒன்றிரண்டு மணி நேரம்
கொடுத்தால் புரிய வைக்க முடியும். நாடகம் குறித்து முற்றிலும்
தெரியாது. நல்ல நல்ல விஷயங்களை அங்கும் இங்குமாக எழுதி வைக்க
வேண்டும். ஆனால் குழந்தைகள் மறந்து விடுகின்றனர். தந்தை
படைப்பவரும் ஆவார், குழந்தைகளாகிய உங்களை படைக்கிறார்.
தன்னுடையவராக்கியுள்ளார், டைரக்டராகி வழிகளும் கொடுக்கிறார்.
ஸ்ரீமத் கூட கொடுக்கிறார், பிறகு நடிக்கவும் செய்கிறார். ஞானம்
சொல்கிறார். இதுவும் கூட அவருடைய உயர்ந்ததிலும் உயர்ந்த
நடிப்பல்லவா. நாடகத்தை படைப்பவர், டைரக்டர் மற்றும் முக்கிய
நடிகரைத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் என்னவாகத்தான்
இருந்திருப்பார்கள்? நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல்
போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும்
தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்
1. இந்த மதிப்பு மிக்க வாழ்க்கையில் படிப்பிக்கக் கூடிய
ஆசிரியருக்கு மிகவும் மரியாதை கொடுக்க வேண்டும். படிப்பில்
நல்ல புத்திசாலிகளாகி சேவையில் ஈடுபட வேண்டும். தன் மீது தானே
இரக்கம் கொள்ள வேண்டும்.
2. தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்வதற்காக தூய்மையான
பார்வையுடையவராக ஆக வேண்டும். தம்முடைய நடத்தையை முன்னேற்றிக்
கொள்ள வேண்டும். மனிதர்களை தேவதைகளாக ஆக்கக் கூடிய சேவை செய்ய
வேண்டும்.
வரதானம்:
எண்ணம் மற்றும் வார்த்தை (பேச்சு)
விரிவானதை சாராம்சத்தில் கொண்டு வரக்கூடிய அந்தர்முகி (உள்நோக்கு
முகமுடைவர்) ஆகுக.
வீணான எண்ணங்களின் விரிவை
சுருக்கி சாராம்சத்தில் நிலைபெற செய்வது மற்றும் வீணான பேச்சின்
(வார்த்தைகளின்) சுருக்கி சக்திசாலியாக அதாவது சாராம்சத்தில்
கொண்டு வருவது - இது தான் அந்தர்முகி (உள்நோக்குத்தன்மை)
அப்படிப்பட்ட அந்தர்முகி குழந்தைகள் தான் அமைதியின் சக்தி மூலம்
அலைந்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சரியான வழியைக் காட்ட
முடியும். இந்த அமைதியின் சக்தி தான் விதவிதமான ஆன்மீக வன்ணத்தை
வெளி காட்டுகிறது. அமைதியின் சக்தி மூலம் ஒவ்வொரு ஆத்மாவின்
மனதின் சப்தம் (வார்த்தைகளை) அருகாமையில் பேசுவது போன்று
அருகாமையில் கேட்கும்.
சுலோகன்:
சுபாவம், சம்ஸ்காரம், சம்மந்தம்,
தொடர்பில் இலேசாக இருப்பது என்றாலே ஃபரிஸ்தா ஆவது
ஓம்சாந்தி