15.10.2020 காலை முரளி
ஓம் சாந்தி
பாப்தாதா,
மதுபன்
இனிமையான குழந்தைகளே! உணர்ச்சி
வசப்படுவது கூட (முன் கோபம்) தேக அபிமானம்தான். (புண்படுத்துவது)
சண்டையிடுவது, அழுவது, இந்த அசுர பழக்கங்கள் குழந்தைகளாகிய
உங்களிடம் இருக்கக்கூடாது. சுகம், துக்கம், மானம், அவமானம்
அனைத்தையும் சகித்து கொள்ள வேண்டும்.
கேள்வி:
சேவையில்
தளர்வு
ஏற்படுவதற்கான
முக்கிய
காரணம்
என்ன?
பதில்:
தேக அபிமானத்தின் காரணத்தால்
எப்பொழுது ஒருவர் மற்றவருடைய அவ குணங்களைப் பார்க்கின்றார்களோ,
அப்பொழுது சேவையில் தளர்வு ஏற்படுகின்றது. தங்களுக்குள் ஒன்று
சேராமல் இருப்பதுகூட தேகாபிமானம் தான். என்னால் இன்னாருடன்
சேர்ந்திருக்க முடியாது, நான் இங்கிருக்க முடியாது, என்று
கூறுவது இவை அனைத்தும் கூட தேகாபிமானம் தான். இந்த வார்த்தை
வாயிலிருந்து வருகின்றதென்றாலே முள் ஆவது, மற்றும் கட்டளையை
மீறுவதாகும். பாபா கூறுகின்றார், நீங்கள் ஆன்மீக சேனைகள் கட்டளை
கிடைத்ததும் உடனே தயாராக வேண்டும். எந்த விஷயத்திற்கும்
சாக்குப் போக்கு சொல்லக் கூடாது.
ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை வந்து ஆன்மீகக்
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். தன்னைத்தான் ஆத்மா என்று
புரிந்துகொள்ளுங்கள் என்ற படிப்பினை முதன் முதலில்
குழந்தைகளுக்குக் கிடைக்கின்றது, தேக அபிமானத்தை விட்டு ஆத்மா
அபிமானியாக வேண்டும். நான் ஆத்மா, ஆத்ம அபிமானியானால் தான்
பாபாவை நினைவு செய்ய முடியும். அது அஞ்ஞான காலம். இது ஞான காலம்.
அனைவருக்கும் சத்கதி தரக் கூடிய பாபா ஒருவர்தான் இந்த ஞானத்தை
நமக்குத் தருகின்றார். மேலும் அவர் நிராகாரமாக இருக்கின்றார்,
அவருக்கு எந்த மனித சரீரமும் இல்லை. யாருக்கு மனித சரீரம்
இருக்கின்றதோ அவரை பகவான் என்று கூற முடியாது. ஆத்மாக்கள் கூட
அனைவரும் நிராகாரமானவர்கள் தான், ஆனால் தேக அபிமானத்தில்
வந்ததால் தன்னைத்தான் மறந்துவிட்டார்கள். நீங்கள் திரும்ப
வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று இப்பொழுது பாபா கூறுகின்றார்.
தன்னைத்தான் ஆத்மா என்று புரிந்துக்கொள்ளுங்கள், பாபாவை நினைவு
செய்யயுங்கள் உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் அனைத்தும்
பஸ்மமாகிவிடும். வேறு எந்த உபாயமும் இல்லை. ஆத்மாதான்
பதீதமாகின்றது, ஆத்மாதான் பாவனமாகின்றது. பாவனமான ஆத்மாக்கள்
சத்யுகத்தில்தான் இருப்பார்கள் என்று பாபா புரிய வைத்திருக்
கின்றார்கள். இராவண இராஜ்யத்தில் தான் பதீத ஆத்மா ஆகின்றீர்கள்.
யார் பாவனமாக இருந்தார்களோ அவர்களே பதீதமாகிவிட்டார்கள் என்பதை
ஏணிப்படி படத்தில் புரிய வைக்கப் பட்டிருக்கின்றது. 5 ஆயிரம்
ஆண்டிற்கு முன்னால் நீங்கள் சாந்தி தாமத்தில் பாவனமாகத் தான்
இருந்தீர்கள். அதனைத்தான் நிர்வாண தாமம் என்று
சொல்லப்படுகின்றது. பிறகு கலியுகவாசியான பிறகு தான் ஹே! பதீத
பாவனா வாருங்கள் என்று அழைக் கின்றீர்கள். பாபா புரிய
வைக்கின்றார், நான் இப்பொழுது உங்களுக்கு என்ன ஞானத்தை
தருகின்றேனோ இதுதான் உங்களை பதீதத்திலிருந்து
பாவனமாக்கக்கூடியது. இதனை நான்தான் உங்களுக்குத் தருகின்றேன்.
பிறகு இது மறைந்துவிடுகின்றது. மீண்டும் பாபா வந்து தான் கூற
வேண்டியுள்ளது. இங்கு மனிதர்கள் அநேக சாஸ்திரங்களை உருவாக்கி
யுள்ளார்கள். சத்யுகத்தில் எந்த சாஸ்திரங்களும் கிடையாது. அங்கு
பக்திமார்க்கத்தினுடைய விஷயங்கள் துளியளவுக்கூட இருக்காது.
என் மூலமாகத்தான் நீங்கள் பதீதத்திலிருந்து பாவனமாக முடியும்
என்று பாபா கூறுகின்றார். பாவனமான உலகம் அவசியம் வரத்தான்
வேண்டும். நான் வந்து குழந்தை களுக்குத்தான் இராஜயோகத்தைக்
கற்பிக்கின்றேன். தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
சண்டையிடுவது, அழுவது இவையனைத்தும் அசுர சுபாவம் ஆகும்.
குழந்தைகள் சுகம், துக்கம், மானம், அவமானம் அனைத்தையும்
சகித்துக் கொள்ள வேண்டும். நாசுக்கான குணம் இருக்கக்கூடாது.
நான் இக்கு இருக்க முடியாது, இவர் களுடைய சுவபாவம்
இப்படியிருக்கின்றது, அப்படியிருக்கின்றார்கள், இப்படியிருக்
கின்றார்கள், அவை கொஞ்சம் கூட இருக்கக்கூடாது. வாயிலிருந்து
மலர்தான் வெளிப்பட வேண்டும். முள் வெளிப்படக் கூடாது. எத்தனை
குழந்தைகளின் வாயிலிருந்து முள் வெளிப்படுகின்றது! பிறரிடம்
கோபப் படுவதுக்கூட முள் தான். ஒருசில குழந்தைகளிடம் (கருத்து
வேற்றுமை) ஒத்துப்போகாத குணமுள்ளது. ஒருவர் மற்றொருவருடைய குறை
களைப் பார்ப்பதால் தன்னிடமுள்ள அநேக குறைகள் அப்படியே
இருந்துவிடுகின்றன. அதனால் சேவையில் தளர்வு ஏற்படுகின்றது. இது
கூட நாடகத்தின் படி நடக்கின்றது என்று பாபா புரிந்துக்
கொள்கின்றார். திருத்திக் கொள்ள வேண்டும். யுத்த களத்தில்
யுத்தம் செய்பவர்களின் கடமை எதிரிகளிடம் சண்டையிடுவது. வெள்ளம்
வருகின்றது, ஏதாவது ஆபத்து ஏற்படுகின்றது என்றால், அப்பொழுது
இராணுவத்தைக் கூப்பிடு கின்றார்கள். பிறகு இராணுவ சேனையினர்
தொழிலாளியாகி வேலையும் செய்ய வேண்டி யுள்ளது. இங்கு மண்ணை
நிரப்புங்கள் என்று அரசாங்கம் இராணுவத்தினருக்குக் கட்டளை
யிடுகின்றது. ஒருவேளை வரவில்லையென்றால் அவர்கள் துப்பாக்கி
முனையில், ஏற்றுத் தான் ஆக வேண்டும். நீங்கள் கூட சேவைக்குக்
கட்டுபட்டவர்கள் என்று பாபா கூறுகின்றார். உடனே ஆஜராக
வேண்டும். ஏற்கவில்லையென்றால் இராணுவம் என்று உங்களை அழைக்க
முடியாது. பிறகு அவர்கள் பாபாவின் மனதில் இடம் பிடிக்க
முடியாது. பாபாவிற்கு உதவியாளராகி அனைவருக்கும் பாபாவினுடைய
செய்தியைக் கொடுக்க வேண்டும். எங்காவது பெரிய மியூசியம்
திறந்தால் அது 10 மைல் தூரம் இருந்தாலும் அவசியம் சென்று சேவை
செய்ய வேண்டும். செலவைப் பற்றி சிறிதுக் கூட சிந்திக்கக்
கூடாது. மிகப்பெரிய அரசாங்கமான பாபா வினுடைய கட்டளை
கிடைத்திருக்கின்றது. அவருடைய வலது கை தர்மராஜ் இருக்கின்றார்.
அவருடைய ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால், பிறகு கீழே
விழுந்துவிடுவீர்கள். தன்னுடைய கண்களை குற்றமற்ற பார்வை
உடையதாகுங்கள் என்று ஸ்ரீமத் கூறுகின்றது. காம விகாரத்தின்
மீது வெற்றியடைய தைரியம் வைக்க வேண்டும். பாபாவினுடைய கட்டளையை
ஏற்கவில்லையென்றால், அவர்கள் ஒரேயடியாக தூள்
தூளாகிவிடுவார்கள். 21 ஜென்ம இராஜ்ய பாக்கியத்தில் குறை
ஏற்பட்டு விடும். நான் குழந்தைகள் இல்லாமல் ஒருபோதும் செல்ல
முடியாது. கல்பத்திறகு முன்புள்ளவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். இது முற்றிலும்
புதுமையான விஷயம். இதுதான் கீதையினுடைய யுகம். ஆனால் சாஸ்திரங்
களில் சங்கம யுகத்தினைப் பற்றிய வர்ணணை எதுவுமில்லை.
கீதையைக்கூட துவாபர யுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
ஆனால் எப்பொழுது இராஜயோகத்தை கற்றுக் கொடுக்கின்றாரோ, அப்போது
அவசியம் சங்கம யுகம் இருக்கு மல்லவா? ஆனால் யாருடைய புத்திலும்
இந்த விஷயம் இருப்பதில்லை. இப்பொழுது உங்களுக்கு ஞானத் தினுடைய
போதை அதிகமாக உள்ளது. மனிதர்களுக்கு பக்தியினுடைய போதை உள்ளது.
பகவானே வந்தாலும் கூட நாங்கள் பக்தியை விட மாட்டோம் என்று
கூறுகின்றார்கள். ஏற்றம், இறக்கம் பற்றிய இந்த ஏணிப்படி
மிகவும் நன்றாக உள்ளது. இருந்தும் கூட மனிதர்களின் கண்கள்
திறக்கவில்லை. மாயாவினுடைய போதையில் ஒரேயடியாக
மூழ்கியுள்ளார்கள். ஞானத்தினுடைய போதை மிக மெதுவாகத் தான்
ஏறுகின்றது. முதலில் தெய்வீக குணங்கள் வேண்டும். பாபாவினுடைய
எந்த கட்டளையானாலும் சாக்குபோக்கு சொல்லக் கூடாது. இதை என்னால்
செய்ய முடியாது என்று கூறுவது கட்டளையை மீறுவதாகும். ஸ்ரீமத்
கிடைக்கின்றது, இதனை சிவபாபாவினுடைய ஸ்ரீமத் என்று புரிந்து
கொள்ள வேண்டும். அவர் தான் சத்கதி அளிக்கக்கூடியவர். சத்கதி
அளிப்பவர் ஒருபோதும் தவறான வழி கொடுக்க முடியாது. நான் இவருடைய
பல பிறவிகளின் கடைசி பிறவியில் பிரவேச மாகின்றேன். இவரில் கூட
பாருங்கள் லெட்சுமி முதலில் சென்றுவிடுகின்றார். பெண்களை
முன்னால் வைக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் லெட்சுமி
பிறகு நாராயணன். எப்படி ராஜா ராணியோ அப்படி பிரஜைகள்
இருக்கின்றார்கள். நீங்களும் கூட அப்படி சிரேஷ்டமாக வேண்டும்.
இந்த நேரம் முழு உலகிலும் இராவண இராஜ்யம் நடந்து
கொண்டிருக்கின்றது. இராம இராஜ்யம் வேண்டுமென்று அனைவரும்
விரும்புகின்றார்கள். இப்பொழுது சங்கமம். எப்பொழுது லெட்சுமி
நாராயணனின் இராஜ்யம் இருந்ததோ? அப்பொழுது இராவண இராஜ்யம்
இல்லை. பிறகு எப்படி மாற்றம் அடைகின்றது, இது யாருக்கும்
தெரியாது. அனைவரும் ஆழ்ந்த இருளில் இருக்கின்றார்கள். கலியுகம்
என்பது சிறிய குழந்தை, கவுன் அணிந்திருக்கின்றது என்று
நினைக்கின்றார்கள். எனவே மனிதர்கள் மேலும் ஆழ்ந்த நித்திரையில்
சென்றுவிட்டார்கள். இந்த ஆன்மீக ஞானத்தை ஆன்மீகத் தந்தை
வந்துதான் ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கின்றார், இராஜயோகத்தைக்
கற்றுத் தருகின்றார். கிருஷ்ணரை ஆன்மீகத் தந்தை என்று கூற
முடியாது. ஹே! ஆன்மீகக் குழந்தைகளே என்று கிருஷ்ணர்
கூறுவதில்லை. ஆன்மீக ஞானம் நிறைந்த தந்தை, ஆன்மீக ஞானத்தை
ஆன்மீகக் குழந்தை களுக்குத்தான் தருகின்றார்.
உலகத்தில் அனைத்து மனிதர்களும் தேக அபிமானத்தில் உள்ளார்கள்.
நான் ஆத்மா என்பதை ஒரு மனிதன் கூட தெரிந்து கொள்ளவில்லை.
எந்தவொரு ஆத்மாவும் ஐக்கிய மாவதில்லை என்று பாபா
புரியவைக்கின்றார். தசரா, தீபாவளி என்ன என்பது குழந்தை
களுக்குப் புரிய வைக்கப்படுகின்றது. மனிதர்கள் செய்யும் பூஜை
எல்லாம் குருட்டு நம்பிக்கையுடன் செய்து
கொண்டிருக்கின்றார்கள். இதனைத்தான் பொம்மை விளையாட்டு என்று
சொல்லப்படுகின்றது. இப்பொழுது நீங்கள் பாரஸ் புத்தியாகிக்
கொண்டிருக்கின்றீர்கள். எனவே நீங்கள் கல்லுக்கு பூஜை செய்ய
முடியாது. சித்திரங்களுக்கு முன்னால் சென்று
தலைவணங்குகின்றார்கள். எதையுமே புரிந்து கொள்வதில்லை. ஞானம்,
பக்தி, வைராக்கியம் என்று சொல்லப்படுகின்றது. ஞானம் அரைக்
கல்பம் நடைபெறுகின்றது, பிறகு பக்தி ஆரம்பமாகின்றது. இப்பொழுது
உங்களுக்கு ஞானம் கிடைத்திருக்கின்றது, எனவே பக்தியின் மீது
உங்களுக்கு வைராக்யம் வந்துவிடுகின்றது. இந்த உலகம்
மாற்றமடைகின்றது. கலியுகத் தில் தான் பக்தி, சத்யுகத்தில்
பக்தி கூட கிடையாது. அங்கு பூஜ்ய நிலையில் இருக்கின்றீர்கள்.
குழந்தைகளே, நீங்கள் ஏன் தலை வணங்குகின்றீர்கள்? என்று பாபா
கேட்கின்றார். அரைக் கல்பமாக தலை வணங்கினீர்கள், பணத்தையும்
செலவு செய்தீர்கள், கிடைத்தது ஒன்றுமே யில்லை. மாயா ஒரேயடியாக
புத்தியை மாற்றிவிட்டது. ஏழையாக்கிவிட்டது. பிறகு பாபா வந்து
அனைவருடைய புத்தியையும் சரி செய்கின்றார். இப்பொழுது நாளாக
நாளாக கொஞ்சம் ஐரோப்பியர்கள், வெளி நாட்டவர் கூட புரிந்து
கொள்கின்றார்கள். இந்த பாரத வாசிகள் முற்றிலும்
தமோகுணியாகிவிட்டார்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். மற்ற
தர்மத்தைச் சேர்ந்தவர்கள் பிறகுதான் வருகின்றார்கள் எனவே
அவர்களுக்கு துக்கமும் குறைவு, சுகமும் குறைவாகத்தான்
கிடைக்கின்றது. பாரதவாசிகளுக்குத்தான் சுகமும் அதிக மாகக்
கிடைக்கின்றது, துக்கமும் அதிகமாகக் கிடைக்கின்றது.
ஆரம்பத்தில் எவ்வளவு செல்வந்தனாக, உலகிற்கே எஜமானனாக
இருந்தீர்கள். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது
ஆரம்பத்திலேயே செல்வந்தனாக இருந்தார்களா என்ன? பின்னால்
வளர்ச்சி அடைந்து அடைந்து பிறகு தான் செல்வந்தன் ஆனார்கள்.
இப்பொழுது பிறநாடுகளைக் காட்டிலும் பாரதம் ஏழ்மை நிலையில்
இருக்கின்றது. அதிகமான குருட்டுதனமான பாரதத்தில் தான் உள்ளது.
இது கூட நாடகத்தில் பதிவாகியுள்ளது. நான் எதனை சொர்க்கம்
ஆக்கியிருந் தேனோ அது இப்பொழுது நரகம் ஆகிவிட்டது என்று பாபா
கூறுகின்றார். மனிதர்கள் குரங்கு புத்தியுடையவர்
ஆகிவிட்டார்கள். நான் வந்து கோவிலில் வைத்து பூஜிக்கத்
தகுதியாக்குகின்றேன். விகாரம் மிகவும் கடுமையானதாக
இருக்கின்றது. கோபம் எவ்வளவு இருக்கின்றது. உங்களுக்குள் எந்த
கோபமும் இருக்கக்கூடாது. முற்றிலும் இனிமையான, அமைதியான
மிகவும் இனிமையானவர் ஆகவும். ராஜ்ய பதவி அடைபவர் கோடியிலும்
ஒரு சிலர் தான் வெளிப்படுகின்றார்கள் என்பது உங்களுக்குத்
தெரியும். உங்களை நரனிலிருந்து நாராயணன் ஆக்குவதற்காக நான்
வந்திருக்கின்றேன் என்று பாபா கூறுகின்றார். அதிலும் கூட 8
ரத்தினங்கள் தான் மகிமை பாடப்படுகின்றார்கள். 8 ரத்தினங்கள்
நடுவில் இருப்பது பாபா ஆவார். 8 பேர்கள் தான் தண்டணையில்லாமல்
வெற்றி பெறுபவர், அதிலும் வரிசைக்கிரம (நம்பர்வார்)
முயற்சியின் படிதான். தேக அபிமானத்தை விடுவதற்கு நிறைய முயற்சி
தேவைப்படுகின்றது. தேக அபிமானம் முற்றிலும் விலக வேண்டும்.
சிலர் பக்கா பிரம்ம ஞானிகளாக இருப்பவர்கள், அவர்கள் அப்படி
இருக்கின்றார்கள். அமர்ந்த படியே தேகத்தை தியாகம்
செய்துவிடுகின்றார்கள். அமர்ந்தபடியே அப்படியே சரீரத்தை
விட்டுவிடுகின்றார்கள், அதனால் வாயு மண்டலத்தில் மிகுந்த அமைதி
ஏற்பட்டு விடுகின்றது. அதிகாலை சுத்தமான சமயத்தில் சரீரத்தை
விடுகின்றார்கள். இரவு நேரத்தில் மனிதர்கள் அழுக்கான
காரியத்தைச் செய்கின்றார்கள். பிறகு அதிகாலையில் எழுந்து
பகவான் பகவான் என்று கூற ஆரம்பித்துவிடுகின்றார்கள். பூஜை
செய்கின்றார்கள். பாபா அனைத்து விஷயங் களையும் புரிய
வைத்துக்கொண்டிருக்கின்றார். கண்காட்சியில் கூட முதலில்
நீங்கள் பாபாவின் அறிமுகத்தைக் கொடுங்கள். முதலில் பாபா பிறகு
ஆஸ்தி. பாபா ஒரே ஒருவர் தான் நிராகாரமானவர். பாபா படைப்பவர்
அவர் வந்துதான் படைப்பினுடைய ஆதி, மத்ய, அந்திமத்தின்
ரகசியத்தைப் புரிய வைக்கின்றார். அதே தந்தை கூறுகின்றார்....
ஒருவனை நினைவு செய்யவும். தேக சம்மந்தங்களை விட்டு தன்னை ஆத்மா
என்று புரிந்து என் ஒருவனை நினைவு செய்யவும். பாபாவினுடைய
அறிமுகத்தை நீங்கள் கொடுத்தீர் களேயானால், பிறகு கேள்வி
கேட்கும் தைரியம் யாருக்கும் வராது. பாபா அறிமுகத்தை பக்கா
செய்த பிறகு 84 ஜன்மம் எப்படி எடுத்தோம் என்பதைப் புரிய
வைக்கவும். சக்கரத் தையும், பாபாவையும் புரிந்துக் கொண்டால்
பிறகு எந்த கேள்வியும் வராது. பாபாவினுடைய அறிமுகத்தை
கொடுக்காமல் நீங்கள் அதிகம் கூறினீர்களேயானால் உங்களுடைய நேரம்
நிறைய வீணாகிவிடும். தொண்டையும் அடைத்துவிடும். அதிகம்
கூறுவதால் புரிந்து கொள்வார்களா என்ன? மிகச் சாதாரணமாக
அமைதியாக அமர்ந்து புரிய வைக்கவும். யார் ஆத்ம அபிமானியாக
இருக்கின்றார்களோ அவர்களே நல்ல முறையில் புரிய வைக்க முடியும்.
பெரிய பெரிய மியூசியத்தில் நன்றாகப் புரிய வைப்பவர்கள் உதவி
செய்ய வேண்டும். சிறிது நாட்கள் தன்னுடைய சென்டரை விட்டு வந்து
உதவி செய்யவும். கடைசியில் சென்டரை நிர்வாகம் செய்ய யாரையாவது
அமர வைக்கவும். சென்டரை நிர்வாகம் செய்வது போல் யாரையாவது
நீங்கள் உருவாக்கவில்லை என்றால், எந்த காரியத்திற்கும்
பயன்படாதவர் என்று பாபா புரிந்து கொள்வார். பாபா கட்டளை
கொடுத்தால் உடனே ஓட வேண்டும். அவர்களைத்தான் மகாரதி பிராமணி
என்று சொல்லப்படுகின்றது. மற்றவர்கள் குதிரைப்படை, காலாட்ப்படை
ஆவார்கள். அனைவரும் சேவையில் உதவி செய்ய வேண்டும். இத்தனை
ஆண்டுகளாக பிறரை தனக்குச் சமான் ஆக்கவில்லை யென்றால், இவ்வளவு
நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்? சென்டரை நடத்துமளவு இவ்வளவு
நேரத்தில் செய்தியாளரை உருவாக்கவில்லையா? எப்படிப்பட்ட
மனிதர்கள் வருகின்றார்களோ அவர்களுக்கு தகுந்தாற்போல பேசுவதற்கு
புத்தி வேண்டும். முரளியை அவசியம் தினமும் படிக்க வேண்டும்.
அதாவது கேட்க வேண்டும். முரளி படிக்கவில்லை யென்றால்,
வகுப்பிற்கு வரவில்லை என்பதாகும். குழந்தைகள் முழு உலகத்தையும்
முற்றுகையிட வேண்டும். நீங்கள் முழு உலகிற்கும் சேவை
செய்கின்றீர்களல்லவா? பதீத உலகத்தைப் பாவனமாக்க முற்றுகையிட
வேண்டும். அனைவருக்கும் முக்தி ஜீவன் முக்திக்கான வழிக் காட்ட
வேண்டும். துக்கத்திலிருந்து விடுபட வைக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடி
கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய் தந்தையாகிய
பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக
குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே,
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இனிமையான, அமைதியான, மிகவும் இனிமையான சுபாவம் உள்ளவராக
வேண்டும். ஒருபோதும் கோபப்படுபவராகக் கூடாது. தன்னுடைய கண்களை
மிகவும் தூய்மையாக்க (குற்றமற்ற) வேண்டும்.
2) பாபா என்ன கட்டளை தருகின்றாரோ அதனை உடனே ஏற்றுக்கொள்ள
வேண்டும். முழு உலகத்தையும் பதீதத்திலிருந்து பாவனமாக்கும் சேவை
செய்ய வேண்டும், அதாவது முற்றுகையிட வேண்டும். (சேவைக்காக
சுற்றி வர வேண்டும்)
வரதானம்:
தனது மகத்துவம் மற்றும் கடமையை
அறிந்திருக்கக் கூடிய எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் ஜோதி
ஆகுக.
குழந்தைகளாகிய நீங்கள் உலகத்தின்
ஜோதி ஆவீர்கள், உங்களின் மாற்றத்தின் மூலம் உலகத்தின் மாற்றம்
ஏற்பட வேண்டும். ஆகையால் நடந்து முடிந்ததை மறந்து விட்டு தனது
மகத்துவம் மற்றும் கடமையை அறிந்து எப்போதும் எரிந்து
கொண்டிருக்கும் ஜோதி ஆகுங்கள். நீங்கள் ஒரு வினாடியில் சுய
மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தை செய்ய முடியும். இந்த
பயிற்சியை மட்டும் செய்யுங்கள் - அவ்வபொழுது கர்மயோகி,
அவ்வபொழுது கர்மாதீத (கர்மங்களை வென்ற முழுமை) நிலை. உங்களின்
படைப்பாகிய ஆமை ஒரு வினாடியில் அனைத்து அங்கங்களையும்
உள்ளிழுத்துக் கொள்வது போல மாஸ்டர் படைப்பவர்களாகிய நீங்கள்
புலனடக்கும் சக்தியின் ஆதாரத்தின் மூலம் ஒரு வினாடியில் அனைத்து
எண்ணங்களையும் உள்ளடக்கிக் கொண்டு ஒரு எண்ணத்தில்
நிலைத்திடுங்கள்.
சுலோகன்:
அன்பில் மூழ்கியிருக்கும்
அனுபவத்தை செய்வதற்காக நினைவு-மறதியின் யுத்தத்திற்கு முடிவு
கட்டுங்கள்.
ஓம்சாந்தி