01.11.2020 காலை முரளி ஓம் சாந்தி
அவ்யக்த பாப்தாதா,
ரிவைஸ் 11.09.1986
மதுபன்
''சிரேஷ்ட அதிர்ஷ்டத்திற்கான வரைபடம் அமைப்பதற்கான யுக்தி ''
இன்று அதிர்ஷ்டத்தை உருவாக்கும்
பாப்தாதா அனைத்து குழந்தைகளின் உயர்ந்த அதிர்ஷ்டத்திற்கான
வரைபடத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அனைவருமே, அதிர்ஷ்டசாலி
ஆகியுள்ளீர்கள், ஆனால் ஒவ்வொரு வருடைய அதிர்ஷ்டத்திற்கான
வரைபடமும் அதனதற்கே உரிய பொலியுடன் காணப்படுகின்றது. ஒருசிலரின்
வரைபடம் ஆயிரக்கணக்கில் பெருமானம் உள்ளதாக இருக்கிறது. சிலர்
வரைபடம் சாதாரணதாகவும் உள்ளது. இங்கு பாப்தாதா மூலமாக
கிடைத்துள்ள பாக்கியத்தை அதிர்ஷ்டத்தை வரைபடமாக கொண்டு வருவது
அதாவது நடைமுறை வாழ்வில் கொண்டு வருவதாகும். இதில் தான்
வேறுபாடு காணப்படுகின்றது. அதிர்ஷ்டத்தை அமைப்பவர் ஒரே
நேரத்தில் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தை வழங்கியுள்ளார். ஆனால்
அதிர்ஷ்டத்தை வரைபடமாக நடைமுறையில் கொண்டு வருவதில் தான்
ஒவ்வொரு ஆத்மாவும் விதவிதமாக இருப்பதால் உருவாக்கிய வரை
படத்தில் வரிசைக்கிரமமாக தென்படு கின்றது. அதிர்ஷ்டம்
எதுவாயினும் அதனுடைய விசேஷத்தன்மை கண்களிலும் புன்னகையிலும்
தென்படுகின்றது. இந்த இரு விசேஷத்தன்மைகள் மூலமாகவே வரைபடத்தின்
மதிப்பு ஏற்படுகின்றது. அது போலவே இங்கும் அதிர்ஷ்டத்திற்கான
விசேஷத்தன்மைகள் இவ்விரண்டுமே தான். கண்கள் என்பது ஆன்மீக
விஷ்வ கல்யாணி, இரக்க மனம், பரோபகாரி பார்வை பார்வையில் இந்த
சிறப்பம்சங்களே இங்கும் உள்ளது. முதன்மையான விசயம் பார்வை,
புன்னகை, முகப்பொலிவு இதுவே சதா திருப்தியாக இருப்பதற்கும்
திருப்தி மற்றும் புன்னகையின் பொலிவாகும். இந்த விசேஷத்
தன்மைகளாலே சதா முகத்தில் ஆன்மிக பொலிவு வருகின்றது. ஆன்மிக
மலர்ச்சி அனுபவம் ஆகின்றது. இவ்விரு விசேஷத் தன்மை களாலேயே
வரைபடத்தின் மதிப்பு உயர்கிறது. இன்று இதையே பார்த்துக்
கொண்டிருந்தார்கள். அதிர்ஷ்டத்தின் வரைபடத்தை அனைவருமே
உருவாக்கினார்கள். வரைபடத்தினை வரைவதற்கான எழுதுகோல் பாபா
அனைவருக்குமே கொடுத்துள்ளார். அந்த எழுதுகோல் - உயர்ந்த நினைவு,
உயர்ந்த செயலுக்கான ஞானம். உயர் செயல் மற்றும் உயர் எண்ணம்
அதாவது நினைவு. இந்த ஞானம் எனும் எழுதுகோல் மூலமாக ஒவ்வொரு
ஆத்மாவும் தமக்கே உரிய அதிர்ஷ்டமெனும் வரை படத்தினை வரைந்து
கொண்டிருக்கின்றார்கள். வரைந்தும் இருக்கிறார்கள். வரைபடம்
உருவாகி விட்டது. கண்களும், முகமும் வரைந்தாயிற்று, இப்போது
இறுதி ஒப்பனையே சம்பூர்ணதா உள்ளது. பாப்சமான் ஆக வேண்டியது தான்.
இரட்டை அயல்நாட்டுக் குழந்தைகள் படம் வரைவதில் அதிகம் ஆர்வம்
உள்ளவர்கள். இன்றும் பாப்தாதா அனைவருடைய வரைபடத்தை பார்த்துக்
கொண்டிருக்கின்றனர். நீங்களும் தனது வரைபடம் எந்தளவிற்கு
மதிப்பு வாய்ந்ததென பார்க்க முடியுமல்லவா. எப்போதும் தன்னுடைய
இந்த ஆன்மீக படத்தைப் பார்த்து அதில் சம்பூர்ண தன்மையை கொண்டு
வந்து கொண்டேயிருங்கள். உலக ஆத்மாக்களில் சிரேஷ்ட பாக்கியவான்
கோடியில் ஒருவராகவே உள்ளனர். அந்த ஒரு சிலரிலும் சிலரே
விலைமதிப்பிட முடியாத சிரேஷ்ட பாக்கியவனாக உள்ளனர். ஆனால் ஒன்று
உயர்ந்தது மற்றொன்று உயர்ந்ததிலும் உயர்ந்தது. ஆக உயர்வாகி
யுள்ளீர்களா? உயர்விலும் உயர்வாகியுள்ளீர்களா? இதனை சோதனை
செய்யுங்கள். நல்லது.
இப்போது இரட்டை அயல்நாட்டவர் பந்தயம் செய்வீர்களா! முதல்
நம்பர் பெற வேண்டுமா? முதலில் வருபவர்களை பார்த்து சந்தோஷம்
அடைவீர்களா? பார்த்து பார்த்து மகிழ்வதும் அவசியம் தான், ஆனால்
பின்னால் இருந்து பார்க்காதீர்கள். உடனிருந்து பிறரையும்
பார்த்து மகிழுங்கள். தானும் முன்னேறுங்கள் பின்னால்
இருப்பவரையும் முன்னேற வையுங்கள். அதுவே பரோபகாரி ஆவதாகும்.
பரோபகாரி ஆவது அதனுடைய விசேஷமே சுயநலமின்றி சதா
விடுபட்டிருப்பதாகும். ஒவ்வொரு இன்னலிலும் ஒவ்வொரு செயலிலும்
ஒவ்வொரு ஒத்துழைப்பான குழுவிலும் எந்தளவு தன்னலமின்மையோ
அந்தளவே பரோபகாரமும் இருக்கும். தன்னுள் சதா முழுமையே அனுபவம்
ஆகும். சதா பிராப்தி சொரூப மான மனோ நிலையில் இருப்பார்கள்.
அப்போது பரோபகாரியின் இறுதி நிலை அனுபவம் செய்து பிறரையும்
அனுபவம் செய்ய வைக்க முடியும். எப்படி பிரம்மா பபாவிடம் இறுதி
சமயத்திற்கான மனோ நிலையில் உபராம் மற்றும் பரோபகாரம் இந்த
இரண்டு விசேஷங்களே சதா தென்பட்டது. தனக்கென எதையுமே
ஏற்கவில்லை. மகிமையோ, பொருட்களோ, இருப்பிடமோ எதனையும்
ஏற்கவில்லை. ஸ்தூலமாகவோ சூட்சுமமாகவோ சதா முதலில் குழந்தைகள்
தான். இதுவே பரோபகாரி நிலை, இதுவே முழுமை மற்றும் அதி
முழுமையின் அடையாளமாகும். புரிந்ததா.
முரளிகளை அதிகம் கேட்டு விட்டீர்கள். இப்போது முரளீதர் ஆகி சதா
நடனமாடிக் கொண்டும் ஆட வைத்துக் கொண்டுமிருங்கள். முரளியால்
பாம்பின் விசத்தையும் அழித்து விடலாம். எனவே எவ்வளவு தான்
கசப்பான சுபாவம்-சம்ஸ்காரம் உள்ளவர்களையும் வசமாக்கும்
அளவிற்கு முரளீதர் ஆகுங்கள். அதாவது அவர்களையும் விடுவித்து ஆட
வையுங்கள். மகிழ வைத்து விடுங்கள். இப்போது அப்படிப்பட்ட
நல்லதோர் முரளீதர் யார், யாரென ரிசல்ட் பார்க்கலாம். முரளி
மீதும் அன்புள்ளது. முரளீதர் மீதும் அன்புள்ளது ஆனால் அதற்கான
பலன் முரளீதரன் ஒவ்வொரு குழந்தையின் மீதும் நல்லாசையிருப்பதை
நடைமுறை யில் காண்பிக்கவும். அன்பின் அடையாளமே சொன்னதை செய்து
காண்பிப்பதாகும். அப்படிப்பட்ட மாஸ்டர் முரளீதர் தானே! ஆக
வேண்டுமா! ஆகியே தீர வேண்டும். இப்போது ஆக வில்லையெனில் பிறகு
எப்போது ஆவீர்கள். செய்யலாம் என நினைக்காதீர்கள். செய்தே ஆக
வேண்டும். ஒவ்வொருவரும் நினையுங்கள், நான் ஆகாமல் பிறர் யார்
ஆவார். நான் செய்தே ஆக வேண்டும் கல்பத்தின் விளையாட்டை
வெற்றியடைய வேண்டும். முழு கல்பத்திற்கான விசயம் இது. முதல்
பிரிவில் வர வேண்டும் என்ற உறுதியான எண்ணம் வையுங்கள். புதிய
விசயம் எதுவும் செய்கிறீர்களா என்ன? எத்தனை முறை செய்த விசயம்,
வரைந்த கோட்டின் மீது மீண்டும் வரைகிறீர்கள். டிராமாவின் கோடு
ஏற்கனவே வரையப் பட்டுள்ளது. புதிய கோடு ஒன்றும் வரையவில்லையே,
நேராக வருமா, கோணலாகுமா என தெரியவில்லையே என யோசிக்காதீர்கள்,
கல்ப கல்பமாக செய்த முயற்சியே செய்கிறீர்கள். ஏனெனில் கர்ம
பலனின் கணக்குள்ளது. வேறு புதிய விசயம் என்ன? இது மிக பழைய
விசயம் தான். முடிந்தேறியது. இதில் உறுதியான நம்பிக்கை இதனையே
உறுதித்தன்மை யென்றும் தபஸ்வி மூர்த்தி என்றும் சொல்லப்படும்.
ஒவ்வொரு எண்ணத்திலும் உறுதித் தன்மையே தபஸ்யா ஆகும். நல்லது.
பாப்தாதா உயர்ந்த தந்தையாகவும், விருந்தினராகவும் உள்ளார்.
தந்தையாகவும் சந்திக் கின்றார், விருந்தினராக வருகின்றார்.
ஆனால் கோல்டன் கெஸ்ட், பிரகாசமானவர், விருந்தினர் அதிகம்
பார்த்திருப்பீர்கள் ஆனால் கோல்டன் கெஸ்ட் பார்த்ததில்லை.
முக்கிய விருந்தினரை அழைப்பது மற்றும் நன்றி செலுத்துவது.
பிரம்மா பாபாவும் தந்தையாகி சமிக்ஞை தருகின்றார்.
விருந்தினராகி அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றார்.
முழு சீசனிலும் சேவை செய்தவர்களுக்கு கோல்டன் கெஸ்ட்டாக
வாழ்த்து தருகின்றார். அனைத்திலும் முதன்மையான வாழ்த்து
யாருக்கு? நிமித்த தாதி மார்களுக்கு பாப்தாதா நிர்விக்ன
சேவைக்கான முடிவிற்கான வாழ்த்துக்களை தருகின்றார். மதுபன்
நிவாசிகளுக்கும் தடைகளற்று முகமலர்ச்சியுடன் விருந்தினராக
விசேஷ வாழ்த்துக்கள் தருகின்றார். பகவானும் விருந்தினராக
வந்துள்ளார். குழந்தைகள் அவ்வாறே இருக்க வேண்டும். இறைவன்
விருந்தினராக வருகிறார் என்றால் அவர்கள் எவ்வளவு
பாக்கியசாலிகள். ரதத்திற்கும் வாழ்த்துக்கள் ஏனெனில்
நடிப்பதும் சாதாரண விசயம் இல்லை. இவ்வளவு சக்திகளையும் இவ்வளவு
நேரம் உள் நிறுத்தி தாரணை செய்வது இதுவும் விசேஷமான நடிப்பே.
ஆனால் உள்ளடக்கும் சக்திக்கான பலன் உங்கள் அனைவருக்குமே
கிடைக்கின்றது. இந்த உள்ளடக்கும் சக்தியால் பாப்தாதாவின்
சக்திகளையெல்லாம் உள்ளடக்குவதும் விசேஷ நடிப்பு மற்றும் குணம்
என்றே கூறலாம். அனைத்து சேவாதாரிகளும் தடைகளற்று
செயல்படுகின்றனர். இதற்காக வாழ்த்துக்கள் பன் மடங்கு நன்றிகள்,
இரட்டை அயல் நாட்டவருக்கும் இரட்டை நன்றிகள். ஏனெனில் இரட்டை
அயல்நாட்டவர்கள் மதுபனின் அழகை கூட்டுகிறார்கள். பிராமண
பரிவாரத்தின் அழகே இரட்டை அயல்நாட்டவர் தான் பிராமண
பரிவாரத்தில் தேசவாசிகளும், அயல்நாட்டவரும் உள்ளனர்,
முயற்சியும் செய்கின்றனர் அதற்காக வாழ்த்துக்கள். மதுபன்
பரிவாரத்தின் விசேஷ பரிசு எனவே இரட்டை அயல் நாட்டவருக்கு
வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் சரி, எதிரில் இருப்பவர்
சிலரேயாயினும் நாலாபுறமும் உள்ள பாரதவாசி குழந்தைகளுக்கு,
இரட்டை அயல் நாட்டவருக்கு பரந்த மனதுடன் வாழ்த்துக்கள்
தருகின்றனர். ஒவ்வொருவரும் மிக நல்ல நடிப்பை நடிக்கின்றனர்.
இப்போது மீதமிருப்பது ஒரே விசயம் சமான் மற்றும் சம்பூர்ண நிலை
தாதிமார்களும் மிக நல்ல முயற்சி செய்கின்றனர். பாப்தாதா இருவர்
நடிப்பும் சாகாரமாக நடிக்கின்றனர். பாப்தாதா மனதார
சினேகத்துடன் வாழ்த்துக்கள் தருகின்றனர். அனைவருமே மிக நல்ல
நடிப்பை நடிக்கின்றனர். ஆல்ரவுண்டர் சேவாதாரிகள் அனைவருமே
சிறிய சாதாரண சேவையே ஆனாலும் மகான் தன்மையாகும். ஒவ்வொருவரும்
அவரவரது புண்ணியத்தை சேமித்தனர். உள்நாடு, வெளிநாடு
குழந்தைகளும் வந்து சேர்ந்ததற்கான விசேஷ குணம் வாழ்த்திற்கு
தகுதியானது. அனைத்து மகாரதிகளும் சேர்ந்து சேவைக்கான உயர்ந்த
சங்கல்பத்தை நடைமுறையில் கொண்டு வந்துள்ளீர்கள், கொண்டு
வருவீர்கள். சேவையில் நிமித்தமானவர் களுக்கு தொந்தரவு செய்யக்
கூடாது. தன் சோம்பல் தனத்தால் அடுத்தவரை கஷ்டப்படுத்தக்
கூடாது. தனது பொருட்களை பாதுகாப்பதுவும் ஞானம் தான். பிரம்மா
பாபா என்ன சொல்வார் நினைவு இருக்கிறதா? கைகுட்டையை தொலைத்தால்
எப்போதாவது தன்னையும் தொலைத்து விடுவார்கள். ஒவ்வொரு செயலிலும்
உயர்வும் வெற்றியும் காண்பதுவே ஞானம் நிறைந்ததாகும். தேகத்தைப்
பற்றிய ஞானமும், ஆத்மாவைப் பற்றிய ஞானமும் உள்ளது. இரு ஞானமும்
ஒவ்வொரு செயலிலும் தேவை. உடலின் நோய் பற்றிய ஞானமும் வேண்டும்.
எனது தேகம் எந்த விதியால் சரியாக இயங்கும். மாறாக நான் ஆத்மா
சக்திசாலிதான் தேகம் எப்படியிருந்தாலும பரவாயில்லை
என்றிருக்கக் கூடாது. உடல் சுகமில்லையெனில் யோகம் செய்ய
முடியாது. பிறகு தேகம் தன் பக்கம் இழுக்கும் ஆகவே ஞானம்
என்பதில் அனைத்து ஞானமும் வந்து விடுகிறது. நல்லது.
சில குமாரிகளுக்கு சமர்ப்பண விழா பாப்தாதாவிற்கு முன்பாக
நடைபெற்றது.
பாப்தாதா அலங்கரிக்கப்பட்ட விசேஷ ஆத்மாக்கள் அனைவரையும்
பார்த்துக் கொண்டிருந்தார். அனைவரையும் பார்த்துக்
கொண்டிருந்தார். தெய்வீக குணங்களின் அலங்காரம் எவ்வளவு
உயர்ந்தது. அனைவரையும் அழகுறச் செய்கிறது. ஒளிக்கிரீடம்
எவ்வளவு அழகாக மின்னுகிறது. பாப்தாதா அழிபற்ற அலங்கார முகங்களை
பார்த்துக் கொண்டிருக் கின்றார். குழந்தைகளின் ஊக்கம்,
உற்சாகம் நிறைந்த எண்ணங்களைப் பார்த்து மகிழ்வடை கின்றார்.
பாப்தாதா அனைவரையும் எப்போதும் பிரியமுடன் அன்பு
பாராட்டுகின்றார். நீங்களும் அன்பு பாராட்டுகின்றீர்கள்.
உறுதியான சங்கல்பம் அமைந்துள்ளது. பாப்தாதாவிடம் ஒவ்வொரு வரின்
அன்பான எண்ணம் மிக வேகமாக சென்றடைகிறது. இந்த எண்ணத்தின்
உயர்ந்த பந்தனம் ஒருபோதும் தொய்வடையாது. அந்தளவிற்கு உறுதியாக
கட்டப்பட்டுள்ளது. எத்தனை பிறவிகளுக்கு வாக்கு கொடுத்தீர்கள்?
பிரம்மா பாபாவுடன் சதா சம்மந்தத்தில் வருவதற்கான உறுதியான
வாக்கு உள்ளது. 21 பிறவிக்கும் சதா வித விதமான பெயர் ரூபத்தில்
உடனிருப் போம் என்ற உத்திரவாதம் உள்ளது. எவ்வளவு குஷி, கணக்கு
பார்க்க முடியுமா? இதனை கணக்கு பார்ப்பவர் யாருமில்லை.
அப்படியே சதா அலங்காரத்துடன் இருக்கவும், சதா கிரீட தாரியாக
இருக்கவும் சதா குஷியில் ஆடிப்பாடி ஆன்மீக ஆனந்தத்தில்
இருக்கவும். இன்று அனைவரும் திட எண்ணம் வைத்துள்ளீர்கள் -
இன்னும் ஒவ்வொரு அடி வைப்பவர் ஆவீர் கள். அவர்கள் ஸ்தூலமான அடி
மீது அடி வைக்கின்றார்கள். ஆனால் நீங்கள் அனைவரும் எண்ணத்தால்
அடி மீது அடி வைப்பவர்கள். தந்தையின் எண்ணமே குழந்கைளின் எண்ண
மாக வேண்டும். அப்படி எண்ணம் வைப்பீர்களா? ஒரு அடி கூட
பாபாவின் அடியை விட்டு இங்கும் அங்கும் மாறக் கூடாது. ஒவ்வொரு
எண்ணமும் சக்திசாலியாக இருப்பது அதாவது பாப்சமான் அடி மீது அடி
வைப்பதாகும். நல்லது.
அயல் நாட்டு சகோதர சகோதரிகளுடன் - எப்படி விமானத்தில் பறந்து
பறந்து வந்தீர்களோ அது போலவே புத்தி என்னும் விமானமும் அந்தளவு
வேகமாக பறக்கிறதா? ஏனெனில் அந்த விமானம் சூழ்நிலையின் காரணமாக
கிடைக்காமல் இருக்கலாம் ஆனால் புத்தி எனும் விமானம் சதா
தன்னுடனே இருக்கிறது. சதா சக்திசாலியாக இருந்தால் ஒரு நொடியில்
எங்கு வேண்டுமோ அங்கு சென்று சேர வேண்டும். இந்த விமானத்திற்கு
நீங்களே எஜமான். சதா இந்த புத்தி எனும் விமானம் எவரெடியாக
உள்ளது அதாவது சதா புத்தி லைன் தெளிவாக உள்ளது புத்தி சதா
பாபாவுடன் சக்தி சாலியாக இருப்பது, எப்போது வேண்டுமோ எங்கு
வேண்டுமோ அங்கு சென்று விடலாம். யாருக்கு புத்தி விமானம் சென்ற
டையுமோ அவருக்கு அந்த விமானமும் இயங்கும். புத்தியெனும்
விமானம் சரியில்லை யென்றால் அந்த விமானமும் இயங்காது.
பார்டிகளுடன் :
சதா தன்னை இராஜயோகியென, சிரேஷ்ட ஆத்மாக்களென அனுபவம்
செய்கிறீர்களா? இராஜயோகி என்றால் சர்வ கர்மேந்திரியங்களுக்கும்
இராஜா, இராஜாவாகி கர்மேந்திரியங்களையும் செயல்படுத்துபவர்.
கர்மேந்திரியங்களுக்கு வசமாகுபவர் அல்ல. கர்மேந்திரியங்களுக்கு
வசமாகுபவர் பிரஜா யோகியே தவிர இராஜயோகி அல்ல. ஞானம்
கிடைத்தவுடன் இந்த கர்ம இந்திரியங்கள் எனது சேவகர்கள், நான்
எஜமான். எஜமான் ஒரு போதும் சேவாதாரிகளுக்கு வசமாக முடியாது.
ஒருவர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் இராஜயோகி ஆத்மாக்கள்
சதா சிரேஷ்டமாகவே இருப்பார்கள். சதா இராஜ்யம் செய்வதற்கான
சம்ஸ்காரம் இப்போது இராஜயோகி வாழ்வில் நிரம்ப வேண்டும். எது
நடந்தாலும் நான் இராஜயோகி என்ற தனது டைட்டிலை சதா நினைவில்
வைக்க வேண்டும். சர்வ சக்திவானின் பலம் உள்ளது.
நம்பிக்கையிருப்பதால் வெற்றி அதிகாரமாக கிடைக்கின்றது.
அதிகாரம் சகஜமாக கிடைக்கிறது, கடினமல்ல. சர்வ சக்திகளின்
ஆதாரத்தால் ஒவ்வொரு செயலிலும் வெற்றியே அடங்கியுள்ளது. நான்
தில் தக்த் நஷின் (மனம் என்னும் சிம்மாசனத்தில் அமரும்) ஆத்மா
என்ற பெருமிதம் சதா இருக்க வேண்டும். இந்த பெருமிதம் அனேக
கவலைகளை தூர விரட்டி விடும். அந்த ஆன்மீக பெருமிதம்
இல்லையெனில் கவலையே கவலைதான். எனவே சதா பெருமிதத்துடன் இருந்து
வரதானியாகி வரதானம் வழங்குங்கள். தானும் முழுமை பெற்று
பிறரையும் முழுமை பெறச் செய்யுங்கள். பிறரை மாற்றுவது என்பது
சொர்க்கத்திற்கான இருக்கைக்குரிய சான்றிதழ் தருவதாகும்.
காகிதத் தாலான சான்றிதழ் அல்ல. அதிகாரமெனும் சான்றிதழாகும்.
நல்லது.
ஒவ்வொரு அடியிலும் பன்மடங்கு வருமானம் சேமிப்பவர், அழியாத
பொக்கிஷத்திற்கு எஜமான் ஆகிவிட்டீர்கள். இப்படியே குஷியை
அனுபவம் செய்கிறீர்களா? ஏனெனில் இன்றைய உலகமே ஏமாற்று உலகம்
ஏமாற்று உலகை விட்டு விலகி விட்டீர்கள். ஈர்ப்பு அங்கில்லை.
சேவைக்காக தொடர்பில் வருவது வேறு விசயம் - ஆனால் மனதின்
ஈர்ப்பு செல்லக் கூடாது. தன்னை ஒருபோதும் தரக்குறைவாக கருதாமல்
சிரேஷ்ட ஆத்மா, சதா தந்தைக்கு அன்பாக குழந்தைகள் எனும்
போதையில் இருங்கள். தந்தையைப் போல் குழந்தை அடி மீது அடி
வைத்து பின் பற்றி நடந்தால் பாப்சமான் ஆகி வடுவீர்கள்.
தந்தைக்கு சமமாவது முழுமை பெறுவது இதுவே பிராமண வாழ்வின்
செயலாகும்.
சதா தன்னை ஆன்மீக தோட்டத்தில்
ஆன்மிக ரோஜாவாக உணர்கிறீர்களா! அனைத்திலும் சிறந்த மனம் வீசும்
மலர் ரோஜா. ரோஜா நீரை எத்தனையோ வேலைக்கு பயன் படுத்துகிறார்கள்.
வண்ணத்திலும் வடிவத்திலும் ரோஜா அனைவருக்கும் பிரியமானது.
நீங்கள் அனைவரும் ஆன்மீக ரோஜா மலர். உங்களது ஆன்மீக நறுமணம்
பிறரையும் தானாகவே கவர்ந்திழுக்கிறது. வாசனையான பொருள்
எங்கிருந்தாலும் அனைவர் கவனத்தை யும் தானே ஈர்க்கிறது. அவ்வாறே
ஆன்மீக ரோஜா மலரான உங்கள் வாசனையும் உலகையே கவர்ந்திழுக்க
வல்லது. ஏனெனில் உலகிற்கு இந்த ஆன்மீக நறுமணம் தேவைப்படுகிறது.
எனவே நான் ஆன்மீக தோட்டத்தில் ஆன்மீக ரோஜா என்ற பெருமிதம் சதா
இருக்கட்டும் ஒரு போதும் வாடாத சதா மலர்ந்த மலர். அப்படி
மலர்ந்த மலர் சேவைக்கு தானாகவே நிமித்தமாகின்றது. நினைவு,
சக்திகள், குணங்களெனும் நறுமணத்தை அனைவருக்கும் வழங்கிக்
கொண்டேயிருங்கள். சுயம் பகவானே (தந்தையே) வந்து மலர்களான உங்களை
தயார் செய்கிறார் என்றால் எவ்வளவு பாக்கியசாலி நீங்கள். நல்லது.
வரதானம் :
விலகியும் அன்பாகவும்
இருப்பதற்கான இரகசியத்தை தெரிந்து கொண்டு சமாதானமாக இருக்கும்
இராஜயுக்த் ஆகுக !
எந்த குழந்தைகள் இல்லறத்தில்
இருந்தாலும் விலகியும் அன்பாகவும் இருப்பதற்கான இரகசியத்தை
தெரிந்து கொண்டிருப்பார்களோ அவர்கள் சதா தன் மீதும்,
குடும்பத்தின் மீதும் திருப்தியாக இருப்பார்கள். அது
மட்டுமின்றி உண்மையாக இருப்பதால் இறைவனும் அவர்கள் மீது
எப்போதும் திருப்தியாகின்றார். அப்படி திருப்தியாக இருப்பவர்கள்
தன் பொருட்டோ, பிறர் பொருட்டோ புகார் செய்ய வேண்டிய அவசியமில்லை
ஏனெனில் தனக்குத்தானே தீர்வு காண்பார்கள். ஆகவே அவர்களுக்காக
வேறு யாரும் வக்கீலோ, நீதிபதியோ, சமரசமோ செய்ய வேண்டியதில்லை.
சுலோகன் :
சேவையின் மூலமாக கிடைக்கின்ற
ஆசீர்வாதமே ஆரோக்கியத்தின் ஆதாரமாகும்.
ஓம்சாந்தி