ஜனவரி
8,
2015
பற்றை வென்றவர் கர்மாதீத் பாப்தாதாவுடன் சம்பாஷணை
செய்கின்றார்.
முதல் விழிப்புணர்வு:
நான் கண்களை திறக்கும் அந்த ஷணத்தில் நான்
உணர்ந்து பார்க்கின்றேன். “நான் ஓர் ஆத்மா. நான்
ஒளியாலான இனிமையான வீட்டிலிருந்து,
உலகிற்கு பிரகாசிக்கும் ஒளியை கொடுப்பதற்காக
கீழிறங்கி வந்திருக்கின்றேன்.”
நான் யார்?:
நான் ஓர் பற்றை வென்ற ஆத்மா ஆவேன். முழு நாளிலும்
இந்த 5 ரூபங்களை நினைவு செய்வதன் மூலம் நான் பற்றை
வெல்கின்றேன்,
1. நான் ஒரு குழந்தை 2. நான் ஒரு இறை மாணவன் 3.
நான் ஒரு ஆன்மீக யாத்ரீகன் 4. நான் ஒரு போர் வீரன்
5. நான் கடவுளின் உதவியாளன்.
நான் யாருக்கு சொந்தமானவன்?
ஆத்மா பாபாவுடன் உரையாடுகின்றார்: இனிமையான பாபா
உங்களுக்கு காலை வணக்கம்.
உலகிற்கு நன்மை கொண்டுவருவதை
என்னுடைய கடமையாக நான் எடுத்துக்கொள்கின்றேன்,
என்று நான் சத்தியம் செய்கின்றேன்.
தங்க
யுகத்தை கொண்டுவருவதற்கு உங்களுக்கு நான் உதவி
செய்வதில் கடமைபட்டிருக்கின்றேன். இந்த கடமையை
சரிவர நிறைவேற்றுவதற்காக,
நான் பற்றை வென்று நினைவு ஸ்வரூபம் ஆகவேண்டும்.
பாபா ஆத்மாவோடு உரையாடுகின்றார்: இனிமையான
குழந்தாய்,
விழித்துக்கொள்! என் அருகில் அமர்ந்துக்கொள்.
அமிர்த வேளையில் நீ விழித்துக்கொண்ட உடனேயே,
பாபாவுடன் ஒரு ஆன்மீக சம்பாஷணை செய். ஒரு குழந்தை,
ஒரு இறை மாணவன்,
ஒரு ஆன்மீக யாத்ரீகன்,
ஒரு போர் வீரர் மற்றும் ஒரு கடவுளின் உதவியாளன்
என்னும் 5 ரூபங்களை அனுபவம் செய். ஒரு ஆத்மாவாக நீ
பாபாவை இந்த 5 ரூபத்தில் சந்திக்கும்போது,
கர்ம பந்தனத்திலிருந்து நீ விடுபடுவாய்.
அகத்தூண்டுதல் பெறுவது:
என்னுடைய அலைபாயும் மனதை ஒரு நிமிடம் மௌன கடலான
பாபாவின் மீது செலுத்துகின்றேன். இந்த மௌனத்தில்
பாபாவிடமிருந்து நான் சேவைக்கான தூய்மையான
எண்ணங்களை பெறுகின்றேன்.
பாபாவிடமிருந்து ஆசீர்வாதத்தை பெறுவது:
என்னுடைய தேவதை ரூபத்தில் சூட்சும உலகில் இனிமையான
பாபாவின் முன் நான் இருக்கின்றேன். மிகுந்த
அன்புடன்,
சக்தி வாய்ந்த திருஷ்டியின் மூலம் பாபா எனக்கு
இந்த ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார்:
உன்னுடைய கண்கள் ஒவ்வொரு ஆத்மாவின் ஆழகையும்
விசேஷத்தன்மையையும் பார்க்கும் மந்திர கண்களாகும்.
இந்த பார்வை இந்த கூட்டத்தை ஒன்று சேர்த்து,
ஒவ்வொரு இதயத்திலும் நாம் ஒருவருக்கு ஒருவர்
சொந்தமானவர்கள் என்ற உணர்வை புகட்டுகின்றது.
எல்லையற்ற சூட்சும சேவை (15 நிமிடங்கள்):
பாபாவிடமிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு
என்னுடைய தேவதை ஆடையில்,
உலகை வலம் வந்து,
முழு உலகிலிருக்கும் அனைத்து ஆத்மாக்களுக்கும்
என்னுடைய தூய எண்ணங்கள் மூலமாக இந்த ஆசீர்வாதத்தை
பரிசாக அளிக்கின்றேன்.
உறங்குவதற்கு முன்பு
:
சப்தத்திற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் என்னை நான்
நிலை பெற செய்து,
மனதளவில் சோதிக்கின்றேன்:
இன்றைய நாள் பொழுதில் நான் எவ்விதத்திலாவது
பாபாவிற்கு கீழ்படியாமல் இருந்தேனா?
அப்படி இருந்தால்,
நான் பாபாவிடம் அதை ஒப்புக்கொள்கின்றேன்.
நான் எதற்கு பலியானேன்
–
மனதளவில் அல்லது ஸ்தூலமாக
–
கவர்ச்சி,
பற்று அல்லது சுயநலமாக நான் விரும்பி தேர்வு
செய்தேனா?.
என்னுடைய செயல்களுக்கு நான் அட்டவணை வைக்கின்றேன்.
மேலும்
30
நிமிடங்கள் யோகத்தின் மூலமாக என்னுடைய தவறான
செயலின் பாதிப்பை அகற்றுகின்றேன்.
சுத்தமான
தெளிவான இதயத்தோடு நான் உறங்க செல்கின்றேன்.