டிசம்பர்
23, 2014
ஓர்
பாக்கியசாலி ஆத்மா
இயற்கையின்
அதிபதியோடு
சம்பாஷனை
செய்கின்றார்.
முதல்
விழிப்புணர்வு:
நான்
கண்களை
திறக்கும்
அந்த
ஷணத்தில்
நான் உணர்ந்து
பார்க்கின்றேன்.
“நான் ஓர் ஆத்மா.
நான்
ஒளியாலான
இனிமையான
வீட்டிலிருந்து,
உலகிற்கு
பிரகாசிக்கும்
ஒளியை
கொடுப்பதற்காக
கீழிறங்கி
வந்திருக்கின்றேன்.”
நான் யார்?:
சத்யுகத்தில்
இயற்கையின்
நாதம் என்னை
துயில்
எழுப்பும்
ஆனால், சங்கம
யுகத்தில், கடவுள்,
இயற்கையின்
அதிபதியே
என்னை துயில் எழுப்புவதால்
நான் ஒரு பாக்கியசாலி
ஆத்மா ஆவேன்.
நான்
யாருக்கு
சொந்தமானவன்?
ஆத்மா
பாபாவுடன்
உரையாடுகின்றார்:
இனிமையான பாபா
உங்களுக்கு
காலை வணக்கம்.
“குழந்தாய்,
இனிமையான
குழந்தாய்,”
என்று உங்களுடைய
இனிமையான குரலோசையின்
சப்தத்தை
நான்
கேட்கின்றேன்
பாபா. இந்த
சம்பந்தமானது
சொற்கலோகத்தின்
தெய்வீக
நாதத்தைவிட காதுகினியதாக
இருக்கின்றது.
சங்கம யுக
பிராமணராக
இருப்பதற்கு
நான் மிகவும் பாக்கியம்
செய்திருக்கின்றேன்.
பாபா
ஆத்மாவோடு
உரையாடுகின்றார்:
இனிமையான குழந்தாய்,
விழித்துக்கொள்!
என் அருகில்
அமர்ந்துக்கொள்.
சங்கம யுக சமஸ்காரங்கள்
மற்றும்
பிராப்திகளினால்
உன்னை நீ
நிரப்பிக்கொள்ள
வேண்டிய நேரம்
இதுவாகும், ஏனென்றால்,
இதுவே
உன்னுடைய
வெகுமதியாகும்.
சத்யுகத்தில்,
பழங்கள்
சத்தோபிராதானமாக,
முற்றிலும்
தூய்மையாக, இனிப்பாக,
சுவையாக, சாறு
நிறைந்து
இருக்கிறது. இங்கு
சங்கம
யுகத்தில், இயற்கையின்
அதிபதி
உனக்கு
ஆன்மீக ரசத்தை
கொடுக்கின்றார்.
பாபா உன்னை
அனைத்து
உறவுமுறைகளின்
இனிமையை
சுவைக்க செய்கின்றார்.
இந்த ஆன்மீக
ரசத்தை
அருந்துவது
அனைத்து பிராப்திகளுக்கும்
வழிவகுக்கும்.
அகத்தூண்டுதல்
பெறுவது:
என்னுடைய
அலைபாயும்
மனதை ஒரு
நிமிடம் மௌன
கடலான
பாபாவின் மீது
செலுத்துகின்றேன்.
இந்த
மௌனத்தில் பாபாவிடமிருந்து
நான்
சேவைக்கான தூய்மையான
எண்ணங்களை
பெறுகின்றேன்.
பாபாவிடமிருந்து
ஆசீர்வாதத்தை
பெறுவது:
என்னுடைய
தேவதை
ரூபத்தில் சூட்சும
உலகில்
இனிமையான
பாபாவின்
முன் நான்
இருக்கின்றேன்.
மிகுந்த
அன்புடன், சக்தி
வாய்ந்த திருஷ்டியின்
மூலம் பாபா எனக்கு
இந்த ஆசீர்வாதத்தை
கொடுக்கின்றார்:
சேவை
அதிகமாகவும்
நினைவு
பலவீனமாகவும்
அல்லது
நினைவு நன்றாகவும்
சேவையில் நீ
பலவீனமாகவும்
இருந்தால், அதிகமான
வேகம்
இருக்கமுடியாது.
இந்த
இரகசியத்தை
நீ நன்றாக கற்று,
நினைவு
மற்றும் சேவையின்
பலமான சிறகுகளை
வளர்த்து
கொண்டிருக்கின்றாய்.
இந்த
சிறகுகளினால்,
கடவுளின்
விண்வெளியில்
அன்பு, தூய்மை
மற்றும்
விவேகத்தின்
உச்சியில்
பறந்துக்கொண்டிருக்கின்றாய்.
எல்லையற்ற சூட்சும
சேவை (15
நிமிடங்கள்):
இந்த ஆசீர்வாதத்தை
பாபாவிடமிருந்து
பெற்றுக்கொண்டு
என்னுடைய தூய எண்ணங்கள்
மூலமாக முழு உலகிற்கும்
பரிசாக அளிக்கின்றேன்.
என்னுடைய தேவதை
ஆடையில், உலகை
வலம் வந்து அனைத்து
ஆத்மாக்களுக்கும்
இந்த ஆசீர்வாதத்தை
கொடுக்கின்றேன்.
உறங்குவதற்கு
முன்பு :
சப்தத்திற்கு
அப்பாற்பட்ட ஸ்திதியில்
என்னை நான் நிலை
பெற செய்து, மனதளவில்
சோதிக்கின்றேன்:
இன்றைய நாள் பொழுதில்
நான் எவ்விதத்திலாவது
பாபாவிற்கு கீழ்படியாமல்
இருந்தேனா? அப்படி
இருந்தால், நான்
பாபாவிடம் அதை
ஒப்புக்கொள்கின்றேன்.
நான் எதற்கு பலியானேன்
– மனதளவில் அல்லது
ஸ்தூலமாக – கவர்ச்சி,
பற்று அல்லது சுயநலமாக
நான் விரும்பி
தேர்வு செய்தேனா?.
என்னுடைய செயல்களுக்கு
நான் அட்டவணை வைக்கின்றேன்.
மேலும் 30 நிமிடங்கள்
யோகத்தின் மூலமாக
என்னுடைய தவறான
செயலின் பாதிப்பை
அகற்றுகின்றேன்.
சுத்தமான தெளிவான
இதயத்தோடு நான்
உறங்க செல்கின்றேன்.
|