BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY

 

ஓம் சாந்தி

தாதி ஜானகி வகுப்பு  - 2 மார்ச் 2015 - பாண்டவ பவன்

(ஞானத்தில் 35-ஆண்டுகளும் அதற்கு மேற்பட்டவர்களும் பங்குபெறும் இரட்டை வெளிநாட்டவர்களின் ஒன்றுகூடல்)

நீங்கள் மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கின்றீர்கள். அமைதிக்கும் மௌனத்திற்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது? அறிவியல் அதன் சொந்த வேலையை செய்துக்கொண்டு இருக்கிறது. (Dead silence) மையான அமைதி என்று ஒரு விதமான அமைதி இருக்கின்றது, அதை நீங்கள் உணர்ந்து பார்க்க முடிகின்றதா? ஒன்று (silence) மௌனம் எனப்படுகின்றது, மற்றொன்று (sweet silence) இனிமையான மௌனம் என்று அழைக்கப்படுகின்றது. “என்னுடைய இனிமையான பாபா”. மௌனத்தில் அவர் 'குழந்தைகள்' என்கிறார், நாம் 'பாபா' என்று கூறுகின்றோம். நான் என்ன சொல்ல முடியும்! இது மிகவும் அதிகம்! மௌனத்தில் செல்வதன் மூலம் நாம் (Nyara) விடுபட்டு / தனிப்பட்ட மேலும் பாபாவிற்கு (பியாரா) அன்புடன் இருக்கின்றோம். நாம் முதலில் விடுபட்டு இருக்கின்றோம், அதன் பின்னர் பாபாவிடமிருந்து அன்பையும் சக்தியையும் பெறுகின்றோம். நீங்கள் என்ன உணர்கின்றீர்கள்? நீங்கள் விடுபட்டு, தனிப்பட்டு பாபாவிடம் அன்புகொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் விடுப்பட்டு இருக்கும் போது நீங்கள் எங்கு அமர்ந்திருகின்றீர்கள்? நாம் 'நான்' என்பதை ஆத்மஉணர்வு நிலையிலிருந்து கூறுகின்றோம் என்று நான் நினைக்கின்றேன். அது மிகவும் அழகாக இருக்கின்றது. நீங்கள் உங்கள் கைகளை உங்கள் இதயத்தில் வைத்து முயற்சி செய்து பாருங்கள்!

சில நேரங்களில் மற்றவர்கள் தியான வர்ணனைகள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன், நானும் அதை கேட்டிருக்கின்றேன். எவ்வாராயினும் இன்று அங்கு நிலவும் அமைதியானது (சாந்தி) மிகவும் அமைதியாக இருக்கிறது. நீங்கள் எங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? பரந்தாமத்திலா? (Nirvandham) சப்தத்திற்கு அப்பாற்பட்ட இடத்திலா? நீங்கள் சேவை செய்வதுடன் சக்தியையும் உங்களுக்குள் கிரகித்து கொள்கின்றீர்கள். சேவை என்றால் என்ன? அனைவருக்கும் தங்கள் சொந்த பாகங்கள் உள்ளன. பாபா, நீங்கள், எங்களை பரம்தாமதத்திற்கும் நிர்வான் தாமத்திற்கும் அழைத்து செல்கின்றீர்கள். இப்போது நீங்கள் எங்கே அமர்ந்திருகின்றீர்கள்? நிர்வான் தாமத்திலா அல்லது அவ்யக்த் வதனத்திலா? இதயம் நிர்வான்தாமதத்தில் அல்லது பரம்தாமதத்தில் இருக்க விரும்புகின்றது. நான் பாபாவை பார்கின்றேன், அவர் அற்புதமாக இருக்கின்றார்! அவர் சாக்கார், அவ்யக்த் மற்றும் நிராகாரமாக இருக்கின்றார். உங்களுக்கு இந்த உணர்வு கிடைக்கின்றதா? உங்கள் இதயத்தில் உங்கள் கைகளை வைத்திடுங்கள்.

பாபா நமக்கு நாடகத்தை பற்றி நல்ல ஞானத்தை கொடுத்திருக்கின்றார். சக்கரம், மரம் மற்றும் ஏணிப்படி அனைத்தும் நன்றாக இருக்கிறது. நான் முதன்முதலில் பாபாவிடம் வந்தபோது, அவர் சக்கரத்தை செய்து கொண்டிருந்தார். மரமானது விஷ்வரத்தன் தாதாவால் பின்னர் செய்யப்பட்டது. அவர் சப்தத்தில் வருவதில்லை. சக்கரம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஏணிப்படி செய்த போது, நாம் எவ்வாறு கீழிறங்கி வருகின்றோம், உயர குதித்து மேலே செல்கின்றோம் என்பதையும் சுலபமாக பார்க்க முடிந்தது.

சில நேரங்களில் சிலர், நான் ஏன் மௌனமாக இருக்கின்றேன், சப்தத்தில் வருவதில்லை என கேட்கின்றார்கள். பாபா நம்மை (lift) லிப்டில் அமரச்செய்து மேலே கொண்டு செல்வது போல் இருக்கிறது. பாபா ஏணிப்படி செய்த பொழுது நாம் கீழே, எங்கு வந்துவிட்டோம் என்று எங்களுக்கு காண்பித்தார். மேலே செல்வது, ஒரு லிப்ட்லில் செல்வது போல் எந்த முயற்சியும் இல்லாதது. பாபா நமக்கு இரவு பகல் முழுக்க கிடைக்கும் இந்த லிப்ட் என்னும் (gift) பரிசையை கொடுத்திருக்கின்றார்! இது மிகவும் சுலபமான ஞானம் ஆகும். எனக்கு யோகம் எளிதாக இருக்கின்றது, ஞானம் எளிதாக இருக்கிறது, பாபாவின் மடியில் வந்து அமர்ந்துகொள்வதும் எளிதாக இருக்கிறது, அவரது கழுத்தில் ஒரு மாலையாக ஆவதும் எளிதாக இருக்கின்றது. இது பற்றி நாம் பேசுவது அவசியமானதில்லையா? முதலில் மடியில், அடுத்தது கழுத்தில், இப்போது எச்சியிருப்பது 'என்னுடைய பாபா' மட்டுமே ஆகும்.

 

ஓம் சாந்தி