BRAHMA KUMARIS WORLD SPIRITUAL UNIVERSITY

 

ஓம் சாந்தி

தாதி ஜானகி வகுப்பு - 5 மார்ச் 2015 - ஓம் சாந்தி பவன், பாண்டவ பவன்

(ஞானத்தில் 35 ஆண்டுகளும் அதற்கு மேற்பட்டவர்களும் பங்குபெறும் இரட்டை வெளிநாட்டவர்களின் ஒன்றுகூடல்)

யோக சக்தியின் முக்கியத்துவம்

தாதி ரத்தன் மோகினி: இந்த மலர்களால் ஆன பூச்செண்டை பார்த்து நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன். பாபா நான்கு முலைகளிலிருந்தும் மலர்களை கண்டுபிடித்து தமக்கு முன் கொண்டு வந்திருக்கின்றார் பாபா உங்கள் அனைவரையும் உலக சேவைக்காக ஒன்று சேர்த்து கருவிகள் ஆக்கியிருக்கின்றார். அதன் மூலமாக உலகம் முழுவதும் தந்தையின் மகிமை வெளிப்படும். இதை பார்த்து நான் மிகவும் சந்தோஷப் படுகின்றேன். உலகில் மாற்றத்தை கொண்டுவருவதற்காக தந்தை இந்த அழகான பூங்கொத்தை உருவாக்கியிருக்கின்றார் என்று நான் சொல்வதற்கு விருப்பப்படுகின்றேன் இது ஏற்கனவே செய்து முடிக்க பட்டுவிட்டது. அதன் மாதிரிகள் (sample) தான் நீங்கள். உங்களை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்த உலகம் நிச்சயமாக மாற்றமடைய போகின்றது. உலகம் மாறும் போது, கடவுள்தான் இந்த வேலையை செய்திருக்கின்றார் என்பது எல்லோருக்கும் தெளிவாக இருக்கும். நாம் பழைய உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம், ஆனால் புதிய உலகை பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.

நாம், புதிய உலகின் காட்சிகள் தற்போது நமக்கு முன் வருவதை பார்க்கின்றோம். நம் மூலமாக பாபா உலகற்கு வெளிப்படுத்த படுவார்நாம் நினைவில் நினைத்து இருக்கிறோம், சேவை செய்கின்றோம். நாம் செய்யும் சேவை மூலம் உலகம் மாறுகின்றது. அந்த மாற்றம் உலகிற்கு இன்னும் அதிகமாக தெரிய வருகிறது.

உலகம் முழுவதிலும் ஒரு சிறப்பான வழிமுறையில் நாம் நம்முடைய யோக சக்தி, தூய அதிர்வலைகள் மற்றும் தூய உணர்வுகளை பரவச் செய்கின்றோம். இதன் மூலம் உலக மாற்றத்திற்கான வேலை முன்னோக்கி சென்று கொண்டு இருகின்றது. எனவே நாம் இந்த அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தாதி ஜானகி - நாம் 'ஓம் சாந்தி' என்று கூறுகின்றோம். ஓம் சாந்தி என்பது, மனதை அமைதி பெற செய்கிறது, புத்தியை ஸ்திரமாக்குகின்றது, இதயத்தை சுத்தமாக்குகின்றது. உலகத்தில் உள்ள மக்களுக்கு இந்த மூன்று விஷயங்களும் தேவைப்படுகின்றது: அமைதியான மனம், ஸ்திரமான புத்தி மற்றும் சுத்தமான இதயம். இந்த ஞானம் எனக்கு, நான் யார் என்றும் நான் யாருக்கு சொந்தம் என்றும் எனக்கு கற்றுக்கொடுக்கிறது. நான் சொந்தாமாகி இருக்கும் அந்த ஒருவர் அத்தகையானவர்…... தாதி ரத்தன் மோகினி யோக சக்தியை பற்றி கூறியுள்ளார் ஞானத்தின் மூலம் நாம் யோகத்தில் நம்மை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும், சர்வ சக்திவானான பாபாவிடமிருந்து, நம்மால் சக்தியை எடுத்துக்கொள்ள முடியும். அவரிடமிருந்து நாம் அதிக அளவு சக்தியை எடுக்க முடியும்.

நம்மிடம் 8-சக்திகள் இருக்கின்றன. அனைத்து சக்திகளிலும், சகித்துக்கொள்ளும் சக்தி மற்ற சக்திகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது. ஏன்? ஏனென்றால், உடல் மற்றும் உடல் உறவுகளினால் வரும் சவால்களை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், மற்ற சக்திகளை வளர்த்துக்கொள்வது சுலபமானது அல்ல. (உடல் மற்றும் உடல் உறவுகள்) இந்த இரண்டு அம்சங்களிலும் அவை எனக்கு சொந்தம் இல்லை என்ற அளவிற்கு நான் விடுபட்டு (detached) இருக்கவேண்டும். நாம் நம்முடைய அனைத்து கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுகின்றோம், இருந்தபோதிலும், யாரிடமும் எதனுடனும் நாம் சுயநலம் கொள்வதோ அல்லது அதிகமான உரிமை கொண்டாடுவதோ இல்லை. இது வளர்வதற்கான ஒரு ஸ்திதி ஆகும்.

புத்தியில் நம்பிக்கை கொண்ட ஒரே ஒரு வெற்றியாளர் ஆகமுடியும். புத்தியில் சந்தேகம் உள்ளவர்கள் எளிதில் துரோகிகள் ஆகிவிடமுடியும். உண்மையில், நம்முடைய தொடர்பில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும் அன்பும் தேவையாகும். நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்……. நாம் நேரத்தை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: இது சங்கம யுகமாகும். பாபா நமக்கு அனைத்தையும் பற்றி கூறி இருக்கின்றார். ஒவ்வொரு நாளும் நாம் ஆத்மா, பரமாத்மா மற்றும் நாடகம் பற்றி ஞானத்தை கேட்கின்றோம். நாடகத்தில் முக்கியமான பங்கு வகிப்பவர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள். ஒரு நடிகர் அவரது சொந்த பாகத்தில் கவனம் செலுத்தாமல் மற்றவர்களை பார்த்து கொண்டிருக்கும்போது, அவர் தனது சொந்த நேரத்தை வீனாக்குகின்றார்.

 

கடந்த மூன்று நாட்களாக நாம் (mediataion hall) தியான மண்டபத்தில் யோகம் செய்துக்கொண்டு இருக்கின்றோம். மன ஒருமுகப்பாடு மற்றும் (concentration & stability) ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துகின்றோம். நீங்களே உங்களில் இந்த கவனம் செலுத்தும்போது, எப்படி ஆற்றல் (energy) ஒன்று சேர்கின்றது என்று நீங்கள் பார்ப்பீர்கள். பக்தியின் பாதையில் கூட, மாலை நேரத்தில் கடவுளை நினைவு செய்ய பயன்படுத்துவதில் நன்மை இருக்கிறது என கூறப்படுகிறது. ஒன்று சேர்ந்து கடவுளை நினைவு செய்வது சக்தியை கொண்டு வருகிறது. இது ஆத்மாவிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

 

நமக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன; ஒன்றில் சிவ் பாபாவும் மற்றொன்றில் பிரம்மா பாபாவும் இருக்கின்றார்கள். இந்த இரண்டையும் உங்கள் இரு கண்களில் வைத்திருங்கள். அப்போது உங்கள் மூன்றாவது கண் திறந்திருக்கும். அப்போது உங்களால் எளிதாக முன்று காலங்களையும் (trikaldarshi) உணர்ந்தவர்களாக இருக்க முடியும். சக்கரத்தை சுலபமாக உங்களால் சுற்ற முடியும். நாம் இந்த உலகில் அமர்ந்திருக்கின்றோம், ஆனால் நாம் நம்முடைய புத்தியை மேல்நோக்கி எடுத்துச்செல்ல வேண்டும்.

ஆத்மாவும் பரமாத்மாவும் நீண்ட காலம் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இது அழகான அந்த சந்திப்பிற்கான நேரம் ஆகும். பிரம்மா பாபாவும் முயற்சி செய்யவேண்டி இருந்தது என்பதை மறக்க வேண்டாம், இருந்தபோதிலும் அவர்தான் தரகராகி (broker) நமக்கு அனைத்தையும் எளிதாக்கி கொடுத்திருக்கின்றார்.

பாபாதான் நமக்கு தந்தை, ஆசிரியர், மற்றும் சத்குரு ஆவார். அவரது ஸ்ரீமத் நமது தலையில் இருக்கிறது. இப்போது துல்லியமாக அவரை பின்பற்றுங்கள். இதன்முலம் நீங்கள் ஒரு குளிர்ச்சியான மூளை மற்றும் ஒரு மகிழ்ச்சியான இதயத்தை கொண்டிருக்கமுடியும்.

 

ஓம் சாந்தி