தாதி ஜானகி – பிப்ரவரி 9, 2015 மாலை - GCH லண்டன்:

கேள்வி & பதில் (சகோதரி மௌரீன்)

கேள்வி: தாதியை ஒரு நிரம்பி வழிகின்ற நீரூற்று போல் உணர்கிறேன். நாங்கள் அனைவரும் அதில் முற்றிலுமாக நினைந்துவிட்டது போலவும் இருக்கிறது.  யோகம் என்பது புத்தியினுடையது என்றும் துறவு இதயத்தினுடையது என்றும் தாதி கூறிப்பிடீர்கள். இருப்பினும் இதயம் புத்தியின் ஒரு பகுதி இல்லையா? எவ்வாறு நாம் இவ்விரண்டையும் பிரிக்கமுடியும்?

 

பதில்: துறவு என்பது இதயத்திலிருந்து வருவதாகும், யோகம் என்பது புத்தியிருந்து வருவ தாகும்.  துறவு என்பது, நமது உடல் மற்றும் அனைத்து உடல் உறவுகள், இயல்பு மற்றும் சமஸ்காரங்களை துறப்பதினால் உண்டாவதாகும்.  இதன்முலம் மற்றவர்களுடன் நம்மால் ஒருமித்து இருக்கமுடியும். சரியானதை உணர்ந்து செயல்பட முடியும். இதற்கு அதிக நேரம் தேவையில்லை. ஒரு பாபாவைத்தவிர வேறு யாரும் இல்லை என்பதுடன், புத்தியின் யோகமும் தபஸ்யாவும் உள்ளது. அதன் பின் அங்கு சக்தி இருக்கிறது.

 

“நாள் முழுவதும் பாபாவிடமிருந்து சக்தி பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்”? என்று ஒருவர் கேட்டார். இதற்கு ஆத்ம உணர்வு ஸ்திதி இருக்கிறது. கவனம் வைப்பது, துறவு, தபஸ்யா, மற்றும் சேவை. சிலர் அவர்களுக்கு துறவு மனப்பான்மை இல்லை என்றும் ஆனால் சேவை செய்வதை விரும்புவதாகவும் கூறுகின்றனர். எவ்வாறாயினும், உள்ளுக்குள், ஆத்மா சேவையின் ஆதாரத்திலிருந்தும் விடுபட்டு இருக்க வேண்டும்; அதன்பிறகு சேவையில் நல்ல பலன் இருக்கிறது. ஆன்மீக சக்தியும் பாபாவின் நினைவும் இருக்கும்போது, சேவையானது சிறப்பாக இருக்கிறது. ஞானத்தில் நாம் பாபாவை விழிப்புணர்வுவில் வைத்திருக்கின்றோம். ஞானத்துடன் சேவை செய்வதில் அதிகமான நாட்டம் இருக்கிறது. ஆனால் தபஸ்யாவில் அங்கும் இங்கும் சுற்ற வேண்டியது இல்லை, ஆனால் சுற்றுசூழலும் அதிர்வலைகளும் உருவாக்கப்படுகின்றது.  ஞானம் மற்றும் யோகத்தினால், சுற்றுசூழலானது, அவ்வளவு சக்திசாலியாக இருப்பதால், சிறிது முயற்சி செய்தாலும், பலன் நன்றாக இருக்கிறது.

 

தாதி ஒருபொழுதும் சோர்வடைவது இல்லை. மேலும் ஒருபோதும் ஓய்வு பெறும் எண்ணமும் இல்லை. நாம் ஏன் 'துறவு மனப்பான்மை' என்று சொல்கின்றோம்? துறவு என்பது இதயத்திலிருந்து உண்டாவதாகும். துறவு இருந்தால் மட்டுமே நம்மால் தபஸ்யா செய்ய முடியும். துறவு இருக்கும் போது அங்கு பேராசையும் பற்றும் இல்லை. முதலில் துறவு பின்னர், தபஸ்யா, அதன்பிறகு சேவை தானாகவே நடக்கும்.

 

கேள்வி: தாதியின் மனவலிமையினால் தான் அவர் குணமடைகின்றார் என்று ஒரு மருத்துவர் கூறியிருக்கின்றார். தாதி அவருடைய உடல்நலத்திற்கு மட்டும் அதை பயன்படுத்துகின்றாரா? அல்லது அதை மற்றவர்களுக்கும் அவர் பயன்படுத்துகின்றாரா? அல்லது அது நாடகமா? எப்படி தாதி மனவலிமையை பயன்படுத்துகின்றார்?

 

பதில்: நான் பாபாவை பயன்படுத்துவதில்லை, பாபா என்னை பயன்படுத்துகின்றார். என்னை அவர் பயன்படுத்துவதற்கு அவரிடம் அவரது நோக்கம் உள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால், நேரத்திற்கு ஏற்றவாறு, பாபா என்னை பயன்படுத்துகின்றார். மனவலிமை என்றால் ஆத்மாவின் உள்ளார்ந்த சக்தி என்பதாகும். இது அமைதியாக இருப்பதனால் வருகின்றது.

உதாரணமாக, இப்போது எனது மூச்சு சீராக இல்லாதபோது, நான் 'ஓம் சாந்தி', என்று இயல்பாக ஊக்கம் உற்சாகத்துடன் கூறுவேன். உடல் நலமில்லாமல் என்னால் வகுப்பிற்கு வர முடியவில்லை என்றால், எல்லோரையும் சந்திக்க நான் விரும்புவதை பற்றி யோசிப்பேன். என்னுடைய பாவனையானது அப்படிபட்டதாக இருக்கும்போது, நான் வந்துவிடுகின்றேன்.  தாதி ஒருபொழுதும் “மன்னிக்கவும்” என்று கூறுவதில்லை, ஏனென்றால் அவர், அவ்வாறு சொல்ல வேண்டியவாறு நடந்துக்கொள்வதில்லை. வெள்ளை புடவையின் மதிப்பை, “மன்னியுங்கள்” என்று சொல்லாமல் காப்பாற்றுகின்றேன்! (ஆங்கிலத்தில் புடவை “sari” என்றும் மன்னிப்பதை “Sorry” என்று கூறுவதால், தாதி ஒரே போன்ற சப்தத்த்தின் அடிப்படையில் கூறுகின்றார்) உள்ளூர நம்முடைய ஸ்திதியை நாம் வலிமையானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

கேள்வி: இரண்டு விதமான பந்தனங்கள் உள்ளன என்று தாதி கூறினீர்கள் - ஒன்று துல்லியமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பது. மற்றொன்று, என்னை பார்க்கும் மற்றவர்கள் என்னை பார்த்து நான் செய்வதையே செய்வார்கள் என்று எச்சரிக்கையாக இருப்பது என்பதாகும். இந்த விஷயங்களில் எவ்வாறு நாம் லேசாக இருந்துக்கொண்டு இவற்றை சுமை ஆக்கிகொள்ளாமல் இருப்பது?

பதில்: நான் சாக்கார் பாபா பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துக்கொள்கின்றேன். பாபாவிற்கு யாரும் வகுப்பிற்கு தாமதமாக வருவது பிடிக்கவில்லை. இங்கே இது ஒரு சாதரணமான விஷயம். முதலில் விருந்தினர்களுக்கு நல்ல இருக்கைகள் கொடுக்கப்படவேண்டும் என்பதை பாபா எப்போதும் விரும்புவார். முதலில் அவர்கள் அமர்ந்த பின்னர் நாம் அமரலாம் என்பதாகும். பாபா சாடை காட்டுவார்.

 

கேள்வி: ஒரு மஹாவீர், ஒரு மஹாரதி மற்றும் ஒரு சிவசக்தி ஆத்மாவின், பல்வேறு பண்புகள் யாவை?

பதில்: மஹாவீர் தைரியமானவர் ஆவார். எம்மாதிரி சோதனைகள் வருகின்றது என்பது ஒரு விஷயமே இல்லை, எது வந்தாலும், அவர்களால் அதை சமாளிக்க முடியும். ஒரு மஹாரதி ஆனவர் கவனமாக பேசுவார். நீங்கள் என்ன காரியம் செய்தாலும், மற்றவர்கள் அதை பார்பார்கள், அதை பின்பற்றுவார்கள். சுத்தமான இதயத்தோடு செயல்கள் அனைத்தும் செய்யபட வேண்டும்.  சுத்தமான இதயம் இருக்கின்ற போது பிரபுவின் உதவி, என்னுடைய ஒவ்வொரு அடியிலும் இருக்கிறது. என்னுடைய நோக்கமும் பாவனையும் தூய்மையாக இருக்க வேண்டும். அதனால் என்னுடைய நோக்கமும் நடைமுறையானதாகிவிடும். என்னுடைய நோக்கம் நல்லதாக இருந்தால், நான் சாக்குபோக்கு சொல்ல மாட்டேன். இவை மாஹாரதியின் அடையாளங்கள். எந்த சாக்குபோக்கும் இல்லை.

குதிரைப்படையை சார்ந்தவர்கள் சாக்குபோக்குகளை கொடுப்பார்கள். ஒரு மஹாவீர் துல்லியமாக, எப்போதும் தயார் நிலையில், ஒரு ஆல் ரவுண்டராக இருப்பார்கள். ஒரு சிவ சக்தியின் முன் ஏதாவது சூழ்நிலை வந்தால், அது கடந்துபோகும். அவர்கள் அவர்களின் மதிப்பை தக்கவைத்துக் கொள்வார்கள். அந்த சூழ்நிலை அவர்களின் முகத்தில் சற்றும் தெரியாது. யார் அவர்களை ஒரு மஹாவீர் என்று சொல்லிகொள்ள முடியும்? அவர்களால் தாதியை மகிழ்விக்காமல் இருக்க முடியாது. பாபாவின் தூண்டுதல்களை அடிப்படையாக கொண்டே ஒரு மஹாவீரின் அனைத்து, காரியங்களும் இருக்கும்.

ஒரு மஹாவீர் முற்றிலும் தனிப்பட்டவர் ஆவார். நான் பாதிப்படைந்தேன் என்றால், நான் குதிரைப்படையை சார்ந்தவராக வரலாம். இவ்வாறு நடக்கும் போது உள்ளுக்குள் சூட்சுமமாக ஒரு கறை ஏற்படுகிறது. நம்முடைய வெள்ளை நிற ஆடைகளை பாருங்கள். சிறிதளவு கறை இருந்தால் கூட, அது சரியாக படவில்லை.

 

கேள்வி: பாபா தற்பொழுது தாதியின் மூலமாக தர்மராஜ் பாகத்தை நடத்துகின்றாரா?

பதில்: இது ஒரு நல்ல கேள்வி. நான் தர்மராஜ் உடன் இருக்கின்றேன், அதனால் என்னால் உண்மையானது என்ன என்றும் பாவம் மற்றும் பொய் எது என்பதையும் உணர முடியும். எது புண்ணியம் என்றும் அறிந்துக்கொள்ள முடியும். எவ்விதமான சோம்பல் அல்லது கவனக்குறைவு இருக்கவேண்டாம். சாக்குபோக்கு கூறுவதும் காரியங்கள் செய்வதை தவிர்ப்பதும் தவறான விஷயங்கள் ஆகும். 

 

கேள்வி:  நாடகத்துடன் தாதி கொண்டிருக்கும் உறவுமுறை என்ன? எவ்வாறு நாம் நாடகத்தைப் நமது நண்பர் ஆக்கி கொள்ளமுடியும்?

 

பதில்: நாடகம் (dra-ma) என்பது “அம்மா”. மற்றும் நம் நினைவில் பாபா இருக்கின்றார், அதாவது தந்தை.  அனைவருடனும் நமது பாகத்தை நடிக்கும்போது, அது நாடகம் என்பதை நாம் அறிவோம். எவை எல்லாம் நடந்து முடிந்துவிட்டதோ அவை எல்லாம் கடந்தபோனதாகி விட்டது - நிகழ்காலத்தில் நாம் இருக்கவேண்டும், கடந்த கால விஷயங்களை மீண்டும் நாம் செய்ய கூடாது - அதன்பின்னர் நாடகம் மிகவும் நன்றாக இருக்கும். 'இதை இவர் இவ்வாறு இதை செய்திருக்ககூடாது.' போன்ற எண்ணங்கள் இருக்ககூடாது. விட்டுவிடுங்கள்! லேட் கோ!

 

ஏதாவது நடந்துவிட்டால் நாம் அதை எதிர்த்து நடந்துக்கொள்வதில்லை, நாம் நாடகத்தைப் நமது நண்பர் ஆக்கிக்கொள்கின்றோம். நாம் புத்தியை ஸ்திரமாகவும் அசைக்க முடியாததாகவும் தளம்பல் இல்லாமலும் வைத்திருக்கிறோம். எந்த ஒரு சூழ்நிலையிலும், பாபா தனது முகம் மாறுவதற்கு விடமாட்டார்.  பாபா, நாடகம் அற்புதம்!  என்று சொல்லுங்கள். பாபா எனக்கு முன்னால் நேரடியாக அமர்ந்திருக்கின்றார், நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது. கல்பமரத்தின் படம் செய்துகொண்டிருந்தபோது, என்னுடைய முகம் மரத்தின் வேர்களில் காண்பிக்கப்படவில்லை என்பதை பார்த்தேன். மரத்தின் வேர்களில் இருப்பதற்கு கூடுதலாக சூட்சூமமான முயற்சியை மேற்கொண்டேன். நாடகத்தின் அந்த நேரத்தில் நான் அதற்கு தகுதியானவராக இருக்கவில்லை, அதனால் தான் நான் அந்த படத்திலும் மணிகளின் மாலையிலும் இல்லை. இதை பற்றி எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. ஆனால் நான் அந்நிலையை அடைய ஆர்வம் கொண்டு, அந்த நிலையில் முயற்சி செய்ய விரும்பம் கொண்டேன். எனவே நீண்ட காலத்திற்கு செய்யும் முயற்சியானது உதவுகின்றது. 

நான் எப்போதும் முயற்சிக்காக நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வருவதும் என் மீது நான் சந்தேகம் கொள்ளாமல் இருந்ததும் பாபாவிற்கு பிடித்திருந்தது. அதேநேரத்தில், நான் வேறு யாராகவோ அல்லது வேறு எதுவாகவோ ஆகிவிடுவேன் என்றும் நான் நினைக்கவில்லை. வெறுமனே நான் முயற்சியை மட்டும் செய்துகொண்டிருந்தேன்.  இப்பேற்பட்ட சோதனைகள் வரும், ஆனால் நான் அவற்றை ஒரு சோதனை அது எடுத்துக்கொள்ளவில்லை. வெறுமனே, முயற்சி செய்வதில் உங்கள் ஆசையையும் ஆர்வத்தையும் அதிகரியுங்கள். அனைத்து தெய்வீக குணங்களிலும் முழுமையாக, 16 டிகிரி சம்பூர்ணமாக, முற்றிலும் விகாரமற்று - நான் சத்யுகத்தில் இருக்கவேண்டும் என்ற சிந்தனை வைத்திருக்கின்றேன்.

நம்முடைய பாவனையானது நம்முள்ளும் மற்றவர்களிடமும் மாற்றம் ஏற்ப்பட உதவி செய்கிறது. இதயபூர்வமான ஆழ்மான ஈடுபாட்டை உணரும் போது, உண்மையான துறவும் சேவையும் இருக்க முடியும். இது சுத்தம் மற்றும் நேர்மைக்கான ஒரு பரிமாற்றம் ஆகும். அதன் கூடவே நம் அனைவருக்கும் முன்னோக்கி செல்ல உண்மையான ஆசை இருக்கின்றது.

 கேள்வி: உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதற்கு காரணங்கள் சொல்ல முடியும், ஆனால் தாதி நீங்கள் எதனால் எங்களை அதிக அளவு நேசிக்கின்றீர்கள் என்று சொல்லமுடியுமா?

பதில்: தாதி பாபாவிடமிருந்து ஏராளமான அன்பை பெற்றுள்ளார். அதன் கூடவே, நீங்களும் என் மீது அன்பு கொண்டிருக்கிறீர்கள். நாம் கைத்தட்டும்போது, இரண்டு கைகளாலும் தட்டுகின்றோம், ஒரு கையால் அல்ல. இதில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளன.

சகோதரி மௌரீன் கூறுகின்றார் - நாங்கள் உங்களை அதிகம் நேசிக்குபோது, நீங்களும் மென்மேலும் எங்களை நேசிக்கின்றீர்கள்!

தாதி கூறுகின்றார்: நான் மதுபனில் தங்கியிருந்த வேளையிலிருந்து, எவ்வாறு செலவுகள் நடைப்பெறுகிறது என்ற அக்கறை இருந்தது. தாதிஜி அவரது காலத்தில் முழு யக்யத்தையும் பார்த்துக்கொண்டார். இப்போது முனி பெனும் மோகினி பெனும் இருக்கின்றார்கள். தாதிஜி அவரது பாகத்தை செய்தார். நாடகத்தின் படி, செலவுகள் அதிகரித்துள்ளது ஆனால் எல்லாம் நன்றாக நடத்துக்கொண்டு வருகிறது, எனவே இந்த சூட்சூமமான யக்ய சேவையானது தாதிஜியின் பாவனையால் நடக்கின்றது. மதுபனிற்கு யார் வந்தாலும் மகத்தான யக்கியத்திற்கு கொடுக்கின்றார்கள். அங்கு இருக்கும் பெரிய சமையலறைகளில் நாள் முழுவதும் உணவு தயாராகிகொண்டு இருக்கிறது. மாதம் ஒரு முறை தாதி அங்கு சென்று, அனைவருக்கும் தோளி கொடுப்பேன். சில நேரங்களில் ஆசிரியர்கள் தாதியை சந்திப்பதற்கு மிக நல்ல மாணவர்களை கொண்டுவருவார்கள். எனவே அந்த பாவனை தான் யக்கிய சேவையை நடத்தி செல்கின்றது.

நம்முடைய விழிப்புணர்வில் நாடகத்தை வைத்திருப்பது என்றால், நாம் பாபாவை நினைவு செய்கின்றோம் என்று பொருள்படும். கேள்விகள் பாபாவின் பாஷை அல்ல. இங்கே தினமும் தாதியை தோளி கொடுக்க செய்கிறார்கள்.... அதனால் தோளி சாப்பிடுங்கள், தூய்மையாக இருங்கள், பாபாவின் மாகவாக்கியங்களை கேளுங்கள்.

ஓம் சாந்தி

*********