தாதி ஜானகி - பிப்ரவரி 12, 2015 - GCH

இது பிரம்மா பாபாவை போல் ஒரு தேவதை ஆவதற்கான  நேரம்...

நீங்கள் ஒரு தேவதை ஆக வேண்டும் என்றால், நீங்கள் முதலில் ஒரு துல்லியமான பிராமணர் ஆக வேண்டும். மற்றவர்கள் உங்களை பார்க்கும்போது, நீங்கள் பிரம்மாவின் வாய்வழி பிறந்தவர்கள் என்று அவர்களுக்கு தெரிய வேண்டும். பிரம்மா பாபாவின் முகத்தை பாருங்கள்; அவரது முகம் எவ்வாறு இருக்கின்றது, என்னுடைய முகம் எவ்வாறு இருக்கின்றது? இரண்டையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுடைய வாழ்க்கையை பிரம்மா பாபாவின் வாழ்க்கை போல் ஆக்கிகொள்ளுங்கள். நாம் அனைவரும் பிரம்மா பாபாவை நேரில் பார்த்ததில்லை என்றாலும், அவரை பார்த்திருக்கின்றோம், அவரது வாழ்க்கையை அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதையும் உணர்கின்றோம். நாம் பிரம்மா பாபாவை பின்பற்ற வேண்டும்.  சிவ் பாபாவை போல் நிராகார் ஆக வேண்டும். அன்பு மற்றும் பற்றற்றதன்மையை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவாருங்கள்.

பாபா இனிமையாக பேசுவதற்கு நமக்கு கற்றுக்கொடுக்கின்றார். நமக்கு பலம் கொடுப்பது அவர் தான்; சோர்வை அனுபவம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சோர்வை முடிப்பதற்கு, சோம்பலை விட்டுவிடுங்கள். நாம் கேள்விகள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை; ஏன், என்ன, இப்போது எப்படி. உங்கள் பார்வை மற்றும் மனோபாவத்தை ஆரோக்கியமான முறையில் வைத்திருங்கள். அனைத்தும் நன்றாக இருக்கும்.

 

தூய்மை, நேர்மை, மற்றும் பொறுமை அவசியமானவை. பலருக்கு பொறுமை இல்லை. அதனால் அவர்களால் பொறுமை கொண்டுவரும் அந்த சக்தியை சேர்க்க முடியாது. பணிவுத்தன்மை மிகவும் நல்லது. பணிவுத்தன்மை உடல் உணர்வை முடித்துவிடும். நடைமுறை வாழ்க்கையில் இந்த குணங்களை கொண்டுவருவதற்கு பாபா நமக்கு வலிமை அளிக்கின்றார்.

 

நான் ஒரு தாதி ஆவேன் என்று ஒரு எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. ஒரு தாதியாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? பாபாவிற்கு சமமாக ஆகுவது என்பதாகும். உங்களுடைய மனோபாவமானது நீங்கள் என்ன சிந்தித்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை அடிப்படையாக கொண்டது. ஒவ்வொரு துளியாக மெதுவாக ஞானத்தை சிந்தனை செய்யுங்கள். ஆனால் நிச்சயமாக அனைத்துவிதமான மாயையும் அகன்றுவிடும். அதற்காகத்தான் நாம் ஞான சிந்தனை செய்யவேண்டும். ஞானம் நமக்கு கேட்பதற்கும் பேசுவதற்கும் மட்டுமல்ல, ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் அவற்றை கிரகிக்க வேண்டும்.

 

மூன்று விஷயங்கள் இருக்கின்றன: யக்கியம், குடும்பம் மற்றும் சேவை. பாபாவுடன் தனியாக இருங்கள்… பற்று மற்றும் ஆசைகளிலிருந்து உங்களை விடுவித்து கொள்ளுங்கள். அனைத்து பழைய சமஸ்காரங்களையும் விட்டுவிடுங்கள்.  உங்கள் புத்தியை சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் புத்தியை அமைதி ஆக்குங்கள். நீங்கள் ஏதாவது நல்ல எண்ணங்களை கொண்டிருந்தால், அது நடக்கும் என்ற நம்பிக்கையை கொண்டிருங்கள். நம்பிக்கை இழந்தவர் ஆகாதீர்கள்; யாரும் எனக்கு உதவி செய்யவில்லை, அது நடக்குமா…... இம்மாதிரி எண்ணங்களில் செல்லாதீர்கள்.

இப்போது அமைதியாக அமர்ந்திருப்பதை பயிற்சி செய்யுங்கள். உங்கள் புத்தியை அலைய விடாதீர்கள். உங்கள் கண்களை திறந்து வைத்திருங்கள். உங்களை பாபாவின் முன் வைத்திருங்கள், அவரை அவர் உங்கள் முன் வை பார். நீங்கள் உள்ளுக்குள் ஆழமான அமைதியை அனுபவம் செய்வீர்கள். அமைதியை நீங்கள் உங்கள் மதமாக அனுபவம் செய்வீர்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை, "பாபா, பாபா" என்று சொல்லிக்கொண்டிருங்கள். உள்ளிருந்து எப்போதும் இந்த மௌன ஒலி வெளிப்பட வேண்டும், வேறு எந்த ஒலியும் அல்ல.

ஓம் சாந்தி