தாதி ஜானகி, 22.1.15 மதியம் - GCH, லண்டன்

ஒரு சிறப்பு சிந்தி ஒன்றுகூடல் (ஓர் தவறிவிட்ட ஆத்மாவிற்கு போக் படைத்தல்)

 

இரக்கம், ஆசீர்வாதம் மற்றும் நல்லாசிகள்

 

நான் யார், என்னுடையவர் யார், நான் என்ன செய்ய வேண்டும்? கடவுள், இந்த மூன்று விஷயங்களுக்கும் நமக்கு புரிந்துணர்வு கொடுத்திருக்கின்றார். இதை எப்போதும் மறக்க வேண்டாம். நான் யார்? தாதி நேற்றைய முரளியை படித்து கொண்டிருந்தேன். நான் 'சகோதரர்' என்று சொல்லும் போது, அது ஒரு சகோதரன் அல்லது சகோதரியாக இருந்தாலும், நான் ஒர் ஆத்மா, கடவுள்  குழந்தை ஆவேன் என்பது அதன் பொருளாகும்.  தாய் மற்றும் மகளாக இருந்தாலும் நாம் ஆத்மாக்கள், சகோதரர்கள், கடவுளின் குழந்தைகள் ஆவோம். எப்போதும் ஞாபகம் வைத்திருங்கள்: நான் அவருக்கு சொந்தம். நான் என்ன செய்ய வேண்டும்? கடவுள் கர்மத்தின் ஆழமான இரகசியங்களை விளக்கியுள்ளார்.

 

நான் எப்போதும் இரண்டு விஷயங்களை நினைவு செய்கின்றேன்: 1), நாம் என்ன நல்லது செய்தாலும், அதை நமக்காக நாம் செய்கின்றோம்; வேறு யாருக்காகவும் அதை செய்யவில்லை. 2) நான் செய்வதெல்லாம், மற்றவர்கள் பார்ப்பார்கள், அதையே அவர்களும் செய்வார்கள்.

 

 

கிருப்பலாணி என்பது என்னுடைய குடும்ப பெயர், இங்கே ஓர் இருவருக்கு அதே பெயர் இருக்கிறது. கிருபா என்றால், ஆசீர்வாதம் என்று பொருள்படும். அது எப்போதும் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று பொருள்படும். உங்கள் பெயர், உங்கள் குடும்பம், என்னவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் பாபாவின் குழந்தை - ஒவ்வொருவருக்கும் கடவுளின் ஆசீர்வாதத்தை பெறுவதற்கு உரிமை உண்டு.

ஐந்து விரல்களும் வெவ்வேறு விதமாக, தனிப்பட்டதாக இருக்கின்றன. கட்டைவிரல் பருமனாக உள்ளது. சுண்டுவிரல் சிறியதாக இருக்கிறது - இது அனைவருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பதன் சின்னமாக உள்ளது.

தயை (இரக்கம்), கிருபா (ஆசீர்வாதம்) மற்றும் நல்லாசிகள் உள்ளது. ஒருவருக்கு இரக்கம் இருக்கும்போது, அவர்களின் வேலை இதை வெளிப்படுத்துகிறது, அவர்கள் மற்றவர்களிடமிருந்து நல்லாசிகளை பெறுகிறார்கள். கடவுளின் கருணை, ஆசீர்வாதம் மற்றும் நல்லாசிகளை அனுபவம் செய்திருக்கின்றோம் என்று, யார் உணர்கின்றார்கள்?

நாம் பிரம்மா போஜனம் சாப்பிடுகின்றோம். பிரம்மா போஜனம் என்று அதை நான் ஏன் அழைக்கிறோம் என்றால், பிரம்மா பாபாதான் முற்றிலுமாக அனைத்தையும் சமர்ப்பணம் செய்தார். பாபா, துறவு, தபஸ்யா  மற்றும் சேவையில் தன்னை  ஈடுபட்டுத்திக் கொண்டார். அவர் அனைத்தையும் சமர்ப்பணம் செய்தார்; அது சுலபமானது. துறவு – யார் மீதும் பற்று இல்லை, பேராசை இல்லை. காமம், கோபம், பேராசை, பற்று மற்றும் ஆணவம் என்பது இல்லை. அதன்பின் தபஸ்யா மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, அதன் முலம் சேவையானது தானாகவே நடந்தது. பின்னர் அனைவருடனும் நல்ல உறவுமுறை இருந்தது. அனைவரிடமுமிருந்து  நல்லாசிகளும்  ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும். 

 

தாதி ஏன் லண்டனுக்கு செல்கின்றேன், 99வயதில் எவ்வாறு தாதியால் இதை கையாள முடியும் என்று மக்கள் ஆச்சரியபட்டு தாதியை கேட்டார்கள். அது நிஜம் தான்! நான் ஆங்கிலம் பேசவில்லை என்றாலும், நான் இங்கே சேவைக்கு வந்து 40ஆண்டுகள் ஆகின்றது. எனக்கு 99 வயதாகின்றது என்பதால் தான் நான் இங்கு ஈர்க்கப்பட்டேன்.

நாம் ஜனவரி மாதத்தில் இருக்கின்றோம். 18 ஆம் ஜனவரி பாபாவின்  நாள், ஆனால் 21 ஜனவரி பாபாவிற்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற நாள். அதனால் தாதி 21 அன்று, இங்கு வந்துவிட்டேன். அதுதான் நாடகம்.

ஒரு முறை, நான் புனாவில் இருந்த போது, ஒரு குழுவாக எங்களை பாபா மதுபனிற்கு அழைத்தார். நாங்கள் கடும் மழையில் அங்கு சென்றடைந்தோம். நாங்கள் பாதி வழி நடக்க வேண்டியிருந்தது. பாபா அங்கு எங்களுக்காக சூடான தண்ணீரில் எங்கள் கால்களை சுத்தம் செய்து, துண்டால் துடைப்பதற்கு தயாராக  காத்திருந்தார்.

 

தாதி ஜோதி பெனை பகிர்ந்து கொள்ள சொன்னார்.  அவர் பாபாவிடமிருந்து எவ்வாறு ஒரு வரம் கிடைத்தது, என்பதை பற்றி பகிர்ந்துகொண்டார். சிக்கனமாக இருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, எதையும் வீணாக்காமல் இருப்பது பற்றியது அது. அது அவருடைய சுபாவத்திலும் இல்லை, அவருடைய பெற்றோர்களிடமும் இல்லை, அல்லது அவர் அனுபவத்திலும் அவர் தெரிந்துக்கொள்ளவில்லை; ஆனால் அது பாபா கொடுத்த வரப்பிரசாதமாக இருந்தது. ஜோதி பென் தனது விடுமுறை நாட்களில் அபுவில் தங்கியிருந்த போது அவர் உருளைக்கிழங்குகளை தோல் எடுத்துக்கொண்டு இருந்த போது, பாபா சமையல் அறைக்குள் வந்தார். பாபா மிகவும் இனிமையாக இருந்தார், அவர் மிகவும் நன்றாக செய்கின்றார் என்று கூறி, தோலில் இன்னும் சிறிது உருளைக்கிழங்கு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். சமையலறை பார்த்துகொண்ட போலி தாதியை, அவருக்கு எப்படி சரியான முறையில் உருளைக்கிழங்கை தோல் நீக்குவது என்று காட்ட சொன்னார்.

ஜோதி பெனிற்கு இது பற்றி மிகவும் கஷ்டமாக இருந்தது. இது அவருக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை  கற்றுகொடுத்தது. 'நான் உருளைக்கிழங்கு தோல் நீக்கும்பொழுதெல்லாம் எப்போதும், பிரம்மா பாபாவை நினைவு செய்வேன், என்னை நம்புங்கள்! என்று கூறி அவர் முடித்தார். ஆமாம், எனக்கு நல்ல விஷயங்கள் பிடிக்கும், ஆனால் அதை எப்படி பெறுவது  என்று எனக்கு தெரியும், எனக்கு அது ஏன் தேவை என்றும் எனக்கு தெரியும். இதுவே எனக்கு பிரம்மா பாபாவிடமிருந்து கிடைத்த பரிசு ஆகும். '

ஓம் சாந்தி.