01.03.20

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை

எதிர்மறைத்தன்மையை சந்திக்கும்போது நம்பிக்கையுடன் இருப்பதென்பது உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவர் மிகவும் எதிர்மறையாக நடந்துகொள்வதை நாம் பார்க்கும்போது, அவரை பிரயோஜனமற்றவராக சிந்திப்பதோடு - மற்றவர்களிடம் அந்த நபரை நம்புவதில் புண்ணியமில்லை என்றும், ஒருபோதும் அவர் மாறவே முடியாது – என்றும் கூறும் போக்கு நம்மிடம் உள்ளது. இது அந்த நபர் சிறப்பானவராக மாற முடிவதிலிருந்து அவரை தடுத்து விடுகின்றது.

செயல்முறை:

நம்பிக்கை என்பது ஒருவரை எதிர்மறையான நிலையிலிருந்து நேர்மறையாக மாற்றுவதற்கான திறவுகோலை கொண்டுள்ளது. எதிர்மறைத்தன்மையின் பிடியில் விழுந்த ஒருவரை நான் சந்திக்கும்போது, நான் விசேஷமான முயற்சி செய்து அவர்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள முடிவதற்கு, அவர்களுக்கு ஆதரவான சூழலை வழங்குவது அவசியமாகும். அவர்கள் மீது நான் எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்திருக்கின்றேன் என நான் அவர்களிடம் காண்பிக்கும்போது, அவர்கள் நேர்மறையான மாற்றத்தை கொண்டுவருவதற்கு நான் உதவி செய்கின்றேன்.