04.03.20

இன்றைய சிந்தனைக்கு

திருப்தி

உண்மையான திருப்தி சுயத்திற்கு திருப்தி அளிப்பதை போல, மற்றவர்களுக்கும் அதிக அளவு திருப்தி அளிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எதையாவது செய்ய வேண்டும் என்னும் போது, பொதுவாக நாம் விரும்பியவாறு அதை செய்கின்றோம். மற்றவர்கள் எவ்வாறு உணரக்கூடும் என்பதைப்பற்றி பெரும்பாலும் நாம் சிந்திப்பதில்லை. மாறாக, அச்செயல் மற்றவர்களை எப்படி பாதித்தாலும் அதை புறக்கணித்துவிட்டு, நம்முடைய சுய சந்தோஷத்தில் கவனம் செலுத்துகின்றோம்.

செயல்முறை:

என்னுடைய செயல்கள் யாரையும் சங்கடமாகவோ அல்லது வருத்தமாகவோ உணரச் செய்யாததை நான் உறுதிபடுத்திக்கொள்வது அவசியம். நான் செய்கின்ற செயல்களையும், அச்செயல்கள் எவ்வாறு மற்றவர்களை பாதிக்கின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திப்பது அவசியமாகும், அதன்பிறகு நான் வழக்கமாக செயல்படும் முறையை மாற்றிக்கொள்கின்றேன். முதலில், எனக்கு முன்பாக நான் மற்றவர்களை கருதும் போது, என்னுடைய செயல்கள் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியை கொண்டுவருகின்றது.