06.03.20

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு

உண்மையான ஒத்துழைப்பு ஒவ்வொரு காரியத்திலும் சுலபமாக வெற்றியை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உங்களிடம் நன்றாக நடந்து கொள்கின்ற ஒருவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பதும், நல்லவர்களிடம் ஒத்துழைப்பை பெறுவதும் சுலபமாகும். ஆனால் மற்றவர்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைப்பதில்லை. நமக்கு ஒத்துழைப்பு கிடைக்காதபோது அது காரியத்தையும் நம்முடைய மனநிலையையும் எதிர்மறையாக பாதிக்கின்றது.

செயல்முறை:

உண்மையான ஒத்துழைப்பு என்பது, என்னுடைய தொடர்பில் வருகின்ற ஒவ்வொரு நபரின் மீதும் நான் கொண்டுள்ள நம்பிக்கை நிறைந்த பார்வையின் விளைவாகும். இந்தக் கண்ணோட்டம் என்னிடம் இருக்கும்போது என்னால் சரியான வழியில் சிறப்பாக ஒத்துழைக்க முடிகின்றது. மேலும் அவர்களிடம் உள்ள சிறப்பானவற்றை நான் ஊக்கப்படுத்துவதால் அவர்களுடைய ஒத்துழைப்பை அனைத்து நேரங்களிலும் அனைத்து காரியங்களுக்கும் நான் அதிகமாக பெறுகின்றேன்.