08.03.20

இன்றைய சிந்தனைக்கு

மனஉறுதி

நான் செய்வேன் எனக் கூறுவது வெற்றியை உறுதிபடுத்துகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் சிரமமான ஒன்றை சந்திக்கும்போது, பெரும்பாலான நேரங்களில் முதல் எண்ணமானது, இது சிரமமானது, ஆனால் நான் செய்ய முயற்சி செய்வேன் என்பதாகும். நான் முயற்சி செய்வேன் எனக் கூறுவது மனதில் சந்தேகத்தை கொண்டு வருகின்றது. சந்தேகம் ஏற்பட்டவுடன், நம்மை வெற்றியாளராக ஆக்கும் விஷயங்களை நாம் பெரும்பாலும் கவனிக்க தவறிவிடுகின்றோம்.

செயல்முறை:

நான் செய்வேன் எனக் கூறுவது வெற்றிக்கான சாவியாகும். இந்த எண்ணம் சக்தியால் நிரப்பப்பட்டுள்ளதால் இது நான் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியைக் கொண்டுவருகின்றது. எனக்கு கிடைத்துள்ள அனைத்தையும் பயன்படுத்தி நான் இயற்கையாகவே என்னுடைய சிறப்பானவற்றை செய்கின்றேன். நான் வெற்றியடைவதில் உறுதியுடன் இருக்கும்போது, மற்றவர்களும் சூழ்நிலையும் எனக்கு சாதகமாக வேலை செய்து என்னுடைய லட்சியத்தை அடைவதற்கு எனக்கு உதவுவதை நான் காண்கின்றேன்.