09.03.20

இன்றைய சிந்தனைக்கு

அன்பு

அன்பு காரியங்களை சுலபமாக்குகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான காரியம் செய்யப்பட வேண்டியபோது, நாம் சில சமயங்களில் காரியத்தை பற்றி தவறாக உணர்கின்றோம். நாம் எதிர்மறையான கண்ணோட்டத்தில் அதைப் பார்த்தால், அதை ஒருபோதும் நம்மால் விரும்ப முடியாது. காரியம் மேலும் கடினமாக தென்படுவதோடு, இது நாம் வெற்றியடைவதற்கு தேவையான முயற்சி செய்வதை கடினமாக்குகின்றது.

செயல்முறை:

நான் அன்புடன் காரியங்களை அணுகும்போது, நான் திட்டமிட்டதை செயல்படுத்தி அக்காரியத்தை நிறைவேற்றுவதற்கு வழிமுறைகளை கண்டுபிடிகின்றேன். எந்தவொரு காரியமும் பாரமாகவோ அல்லது கடினமாகவோ தென்படுவதில்லை. அன்பு என்னைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்து நல்லாசிகளையும் உதவியையும் பெற்றுத்தருகின்றது. அதன்பிறகு ஒவ்வொரு காரியத்தை நிறைவேற்றுவதும் எனக்கு சுலபமாக உள்ளது.