09.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

அகத்தாய்வு:

மனதிற்கு முறையான பயிற்சி வழங்குவது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எப்பொழுதெல்லாம் நாம் எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருக்கின்றோமோஅப்போது அவற்றை நாம் நிறுத்த முயற்சி செய்கின்றோம். அவை நமக்கு நல்லது அல்ல எனவும் அவை சக்தியை விரயமாக்குகின்றன எனவும் நாம் அறிந்திருப்பதால்அவற்றை மாற்றுவதற்கோ அல்லது தவிர்க்கவோ முயற்சி செய்கின்றோம். நாம் எப்போதுமே அவ்வாறு செய்வதில் வெற்றியடைய இயலாத காரணத்தால்இவ்வகையான எண்ணங்களை நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றோம்.

செயல்முறை:

என்னுடைய மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால்  நான் மனதிற்கு முறையான பயிற்சி வழங்கும் பழக்கத்தை கொண்டிருப்பது அவசியமாகும். அப்படி என்றால்அந்நேரத்திற்கு தேவையான விழிப்புணர்வை உருவாக்கி அதில் நிலைதிருப்பதாகும். அதாவது எனக்கு அமைதி தேவைப்படும்போதுஎனக்கு வேண்டிய நேரம் வரைஎன்னால் அந்த எண்ணத்தில் நிலைத்திருக்க முடியும். இது கடினமான சூழ்நிலைகளை அணுகுவதற்கு என்னை தயார்படுத்துகின்றது.