10.03.20

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு

உள்ளார்ந்த சுயத்துடன் தொடர்பில் இருப்பது என்பது நேர்மறையாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, நாம் எதிர்மறையாக செயல்படுகிறோம் அல்லது சூழ்நிலையிலிருந்து ஒதுங்குவதற்கு முயற்சி செய்கின்றோம். ஆனால் இது ஒரு தற்காலிகமான தீர்வு மட்டுமே ஆகும். எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் நம்மை தொடர்ந்து தொடரும்.

செயல்முறை:

என்னுடைய உள்ளார்ந்த சுயத்துடன் தொடர்புகொள்வதால், எதிர்மறையான சூழ்நிலையிலும் என்னால் நேர்மறையாக இருக்க முடிகின்றது. நான் தவறுதலாக வெளியே தேடும், மிக அழகான தன்மைகளான அமைதி, அன்பு மற்றும் சந்தோஷம் என்னுள் ஆழமாக பதிந்துள்ளது. இத்தன்மைகளை வளர்த்துக்கொள்வது, எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் என்னை நேர்மறையாக வைத்திருக்க உதவி செய்கின்றது.