13.03.20

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பது

திருப்தியுடன் உள்ளவர்களே உண்மையான சேவையாளர்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், ஏதாவது நல்லகாரியத்தை செய்வதன் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலமாகவோ நம் வாழ்க்கையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்கின்றோம். ஆனால் மற்றவர்களுக்கு உதவுகின்ற வாய்ப்பை காட்டிலும் சேவையினால் வரக்கூடிய திருப்தியின் மூலமாக நாம் ஊக்குவிக்கபடலாம்.

செயல்முறை:

நான் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்பு, என்னுள் நான் திருப்தியாக இருக்க வேண்டும். நான் திருப்தியுடன் இருக்கும்போது மட்டுமே, அவசியமான எந்த வழியிலும் என்னால் தன்னலமற்று சேவை செய்யமுடியும். நான் திருப்தியுடன் இருக்கும்போது எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு இருப்பதுடன் என்னுடைய வளங்கள் அனைத்தையும் மற்றவர்களுடைய நன்மைக்காக பயன்படுத்த முடிகின்றது.