15.03.20

இன்றைய சிந்தனைக்கு

உள்ளார்ந்த வலிமை

உள்ளார்ந்த வலிமையானது பிரச்சனைகளை தவிர்ப்பதைக் காட்டிலும் அதனை எதிர்நோக்குவதிலிருந்து வருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பிரச்சனைகளை சந்திக்கும்போது நாம் சூழ்நிலைகளையோ அல்லது மற்றவர்களையோ குற்றம் சாட்டுகின்றோம். இப்பிரச்சனைகள் நம்முடைய சக்தியை எடுத்துச் செல்ல வந்திருப்பதாக நாம் உணர்கின்றோம். நாம் பிரச்சனை இல்லாது இருப்பதற்காக, சூழ்நிலையை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று நடக்கவேண்டும் என நாம் ஆசைப்படுகின்றோம். ஆனால் சூழ்நிலை மாறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதுபோல் தோன்றுகின்றது.

செயல்முறை:

நான் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டிருப்பதற்கான ஒரே வழி தீர்வை உருவாக்குவதாகும். சூழ்நிலையானது தானாகவே மாறாது என்பதை நான் உணர்ந்துகொள்வது அவசியமாகும். என்னுடைய உள்ளார்ந்த வலிமையானது பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டுபிடிக்க எனக்கு உதவுகின்றது. அதன்பிறகு என்னால் முடியும் என்று நான் உணர்ந்ததை விட அதிக திறமையுடையவராக நான் இருப்பதை நான் அறிந்துகொள்கின்றேன்.