16.03.20

இன்றைய சிந்தனைக்கு

சுய-மரியாதை

சுய-மரியாதையுடன் இருப்பவரே கட்டாயத்தின் பேரில் தீங்கு இழைப்பதிலிருந்து விடுபட்டு இருக்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கடினமான சூழ்நிலைகளில் நான் உதவியின்றி இருப்பதாக உணரக் கூடும். இது மன அழுத்தத்தை உருவாக்கி, பெரும்பாலும் ஆக்ரோஷமாக வெளிப்படுகின்றது. இவ்விதமான உணர்வுகளை அடக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ கூடாது. இதனால் எளிமையான காரியங்கள் கடினமாகுவதோடு உறவுமுறைகளும் குழப்பத்தினால் நிரம்புகின்றது.

செயல்முறை:

எனக்கு நான் மரியாதை கொடுக்கும்போது, என் மனதை என்னால் அமைதியாக வைத்திருக்க முடியும். நான் எதிர்மறையான வழியில் சூழ்நிலைகளை எதிர்த்து செயல்படமாட்டேன். மாறாக, சூழ்நிலையை புரிந்துகொள்ள நான் நேரம் எடுத்துக்கொண்டு சரியான வழியில் பதிலளிப்பேன். நான் அமைதியான மனநிலையில் முடிவுகளை எடுப்பேன். அதனால் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட நான் ஓய்வுடன் இருப்பதை நான் காண்கின்றேன்.