19.03.20

இன்றைய சிந்தனைக்கு

அகத்தாய்வு

நடக்கின்ற அனைத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்திருப்பது என்பது லேசாக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் எதிர்பார்த்தவற்றிற்கு மாறாக ஏதாவது நடக்கும்போது, அதை புரிந்துகொள்வது நமக்கு சிரமமாக இருக்கின்றது. வருத்தமடைவது அல்லது குழப்பமடைவது போன்ற போக்கு மனதை மேலும் குழப்பமடைய செய்து, நம்மை திகைக்க வைப்பதுடன் மேலும் சூழ்நிலையை சரி செய்வதற்கு நம்மை எதையும் செய்ய இயலாது ஆக்குகின்றது.

செயல்முறை:

அனைத்தும் ஒரு காரணத்திற்காகவே நடக்கின்றது. நான் எதிர்பார்த்த விதத்தில் காரியங்கள் நடக்காதபோது, அது ஏன் நடக்கவில்லை என கடினமாக முயற்சி செய்து பார்ப்பது அவசியமாகும். நிகழ்வுக்கு பின்னால் உள்ள காரணத்தை நான் புரிந்துகொண்டால், நான் கவலைகளாலும், குழப்பத்தினாலும் ஒருபொழுதும் பாரமடைய மாட்டேன். நான் லேசாகவும், விடுபட்டவராகவும் ஆவேன்.