19.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

சுய-மாற்றம்:

சுயத்தை மாற்றுவதன் மூலம் நீங்கள் உலகத்தை மாற்றுகின்றீர்கள்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில்இந்த உலகிலுள்ள  அனைத்தும் தவறானது என குமுறுகின்றோம்  நமது சுற்றுச்சூழல் மற்றும் மனித குலத்திற்கு எதிராக போர்கள் மற்றும் மோசமான குற்றங்கள் நடக்கின்றன  ஆயினும் நாம் என்ன செய்தபோதிலும் எந்த வித்தியாசமும் இல்லை.

செயல்முறை:

என்னையே நான் மாற்றிக் கொள்ளும்போதுஎன்னை சுற்றியுள்ள உலகம் மாற ஆரம்பிக்கின்றது என்பதை பற்றி இன்று நான் சிந்திப்பேன்: ஒவ்வொரு சூழ்நிலையையும்நபரையும் நான் அன்புடனும் பணிவுடனும் அணுகும்போதுஅப்பண்புகள் சூழ்நிலைகளையும்என் தொடர்பில் வருகின்ற நபர்களையும் சிறப்பானதாக மாற்றுகின்றது. இதன் மூலம் நேர்மறையான மாற்றத்தின் அலைகள் உலகத்தில் தொடர்ந்து வெளிப்படுகின்றது. என்னுடைய சுயமாற்றத்தை எடுத்துக்காட்டாக மற்றவர்களுக்கு நான் காண்பிப்பேன்.