20.03.20

இன்றைய சிந்தனைக்கு

கருத்து பரிமாற்றம்

வார்த்தைகளில் சிக்கனமாக இருப்பதால் காரியங்கள் மிகவும் சுலபமாக செய்து முடிக்கப்படுகின்றன.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நம்மை வெளிப்படுத்திகொள்வதற்கு நாம் அதிகமான நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கின்றோம். நாம் அதிகமாக பேசும்போது, நாம் கூறும் அதிகமான விஷயங்கள் வீணாகிவிடுகின்றது. மக்கள் மேற்கொண்டு கேட்பதை நிறுத்திவிடுகின்றார்கள்.

செயல்முறை:

அதிகமான விஷயங்களை குறைவான வார்த்தைகளில் கூற முடியும். நான் தெரிவிக்க வேண்டியதை பற்றி நான் கவனமாக சிந்திக்கும்போது, மிக குறைவான வார்த்தைகளில் என்னால் மிகவும் சுலபமாக பேச முடியும் என்பதை நான் அறிந்து கொள்கின்றேன். இது என்னுடைய மற்றும் மற்றவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் சேமிக்கின்றது. அதன்பிறகு மற்றவர்கள் நான் கூறுவதை கேட்பதற்கு அதிக ஆர்வமுடையவர் ஆகுவதோடு, அவர்களிடம் நான் என்ன எதிர்பார்க்கின்றேன் என்பதையும் புரிந்துகொள்கின்றார்கள்.