21.03.20

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பது:

கொடுப்பவராக இருப்பதென்றால் தொடர்ந்து சந்தோஷத்தை அனுபவம் செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், நாம் மற்றவர்களை சந்தோஷப்படுத்த முயற்சிக்கும் சூழ்நிலைகளில் நம்மை காண்கின்றோம், அவ்வாறு நாம் செய்யும்போது, நம்மை நாம் புறக்கணிப்பதோடு துன்பத்தையும் அனுபவம் செய்கின்றோம். கடினமான காரியங்களாக இருப்பினும் கூட, பெரும்பாலும் மற்றவர்களுக்காக அவற்றை நாம் செய்கின்றோம். இந்த பரிசு அறிந்துகொள்ளப்படவில்லை அல்லது பாராட்டப்படவில்லை என்றால் நாம் வருத்தமடையும் போக்கு நம்மிடம் உள்ளது.

செயல்முறை:

நான் பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது, மிகப்பெரிய சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றேன். நான் புத்திசாலித்தனமாக கொடுப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். நான் தூய மனதோடு கொடுக்கும்போது நான் சந்தோஷத்தை அனுபவிப்பதோடு என்னை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துகின்றேன்.