21.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

தாக்கம்:  

என்னுடைய சொந்த திறமைகளேமற்றவர்களை ஈர்ப்பதற்கான வழியாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:                              

நாம் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும்போதுபொதுவாக நம்முடைய வார்த்தைகள் மற்றும் சொந்த மனோபாவத்தின் மூலமாக நம்முடைய அதிகாரத்தை அவர்களின் மீது எதிர்மறையான வழியில் செலுத்த முயற்சிக்கின்றோம். ஆரம்பத்தில் மற்றவர்கள் பதிலளிக்கலாம்ஆனால் சிறிது காலத்திற்கு பின்நேர்மறையாக பதிலளிப்பதை அவர்கள் நிறுத்திவிடுவதை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

மற்றவர்களிடம் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான ஒரே வழிஎன்னுடைய தனித்துவமான திறமைகளை பயன்படுத்துவதாகும். என்னுடைய சொந்த தனித்துவமான நற்குணங்களை அறிந்துகொண்டு அவற்றை மற்றவர்களுடன் தொடர்பில் வரும்போது நான் பயன்படுத்துவது அவசியமாகும். இது தனிச்சையாகவே மற்றவர்களிடம் நேர்மறையான விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்பின் நான் என்னுடைய அதிகாரத்தை ஒருபோதும் எதிர்மறையான வழியில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.