24.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

ஞானம்:

ஞான இரத்தினத்தினங்களின் மதிப்பை அறிந்து கொள்வதென்றால்,  அவற்றை நன்றாக பயன்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொதுவாக,  நாம் அறிந்திருக்கும் ஒன்றை நம்முடைய வாழ்க்கையில் இப்பொழுதே நடைமுறைபடுத்த முடியாதபோது,  நாம் அதை புறக்கணிக்க கூடும் அல்லது அதை தத்துவரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே சிந்தனை செய்ய கூடும். அந்த ஞான இரத்தினத்தினங்களின் மதிப்பை நாம் புரிந்துகொள்ளாததால்நம்முடைய வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதற்கு அவற்றை நம்மால் பயன்படுத்த முடியவில்லை.

செயல்முறை:

நான் கேட்கின்ற மற்றும் படிக்கின்ற ஒவ்வொரு புதுமையான கருத்தும் சுவாரஸ்யமானதாகும். ஞானம் என்பது தத்துவம் மட்டுமல்லஆனால் நடைமுறையில் செயலாக மாற்ற கூடியதாகும். நான் அதிகம் கற்கும்போதுஎதிர்காலத்தில் நான் சந்திக்க இருக்கும் எவ்விதமான சூழ்நிலையையும் கையாளுவதற்குநான் சிறப்பாக ஆயத்தமாகின்றேன்.