26.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

பொறுப்பு:

 

எப்பொழுதும் பொறுப்புடன் இருப்பதென்பது தொடர்ந்து துல்லியமாக இருப்பதாகும்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

 

பெரும்பாலும்காரியங்களை சந்தர்ப்பத்தின் படி அமையட்டும் என்றோ அல்லது மற்றவர்களிடமோ நாம் விட்டுவிடுவதை காண்கின்றோம். பெரிய விஷயங்களை நாம் கவனத்தில் கொள்கின்றோம்ஆனால் சிறு விஷயங்களை பற்றி கவனக்குறைவாக இருக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. நாம் மற்றவர்களிடம் காரியங்களை கவனித்துகொள்ள விட்டுவிடும்போதுஅதை அவர்கள் செய்யாமல் இருக்கலாம்அதன்பிறகுநாம் அதிகாரப்பூர்வமாக காரியங்களை அவர்களிடம் ஒப்படைக்காவிட்டாலும் கூட - நாம் ஏமாற்றம் அடைகின்றோம்.

 

செயல்முறை:

 

நான் மேற்கொள்ளும் காரியத்திற்கு நான் முழு பொறுப்பேற்பதை பற்றியும்மேலும்பெரிய மற்றும் சிறு விஷயங்கள் இரண்டையும் கருத்தில் கொள்வதற்கான அவசியத்தையும் நான் அறிந்துகொள்ளும்போதுநான் கவனக்குறைவாக இருப்பதை நிறுத்திக்கொள்வேன். ஒவ்வொரு அம்சத்தையும் கடைசி வரை நான் கவனித்துக்கொள்ள வேண்டியதை நான் கருத்தில் கொள்வேன். இது என்னுடைய காரியங்களில் துல்லியத்தை கொண்டுவருவதோடுபொறுப்பை நன்றாக பகிர்ந்து அளிப்பதற்கும் என்னை தயார்படுத்துகிறது.