28.03.20

இன்றைய சிந்தனைக்கு

நிகழ்காலத்தில் இருப்பது:

நிகழ்காலத்தில் இருப்பதென்றால் அதை சிறந்த முறையில் பயன்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் வாழ்க்கையில் அதிருப்தி கொள்ளும்போது, கடந்தகாலத்தை திரும்பிப்பார்த்து அந்த அனுபவங்களை நினைவிற்கு கொண்டுவரும் போக்கு நம்மிடம் உள்ளது. சில சமயங்களில் காலத்தின் குறிப்பிட்ட அந்த நொடிக்கு நாம் திரும்பி செல்ல ஆசைப்படுகின்றோம். அல்லது நாம் வேறுவிதமான முடிவு எடுத்திருந்தால் என்ன நடந்திருக்க கூடும் எனவும் நாம் சிந்திக்கிறோம். விரைவிலேயே நாம் எண்ணங்கள் மற்றும் நினைவுகளில் சிக்கிகொள்வதோடு நிகழ்காலத்தை மென்மேலும் சிறப்பாக பயன்படுத்த தவறிவிடுகின்றோம்.

செயல்முறை:

எனது கட்டுப்பாட்டிற்குள் இருப்பது இந்த கணம் மட்டுமே என்பதை நான் உணர வேண்டும். மேலும் ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாக ஆக்குவதற்கு என்னிடம் சக்தி இருக்கின்றது. இப்போது என்னுடைய நேரத்தை நான் பயன்படுத்துவதற்கு தேர்ந்தெடுக்கின்ற முறையானது, என்னுடைய எதிர்காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனக்கான அழகான எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்வதற்கான ஒரே வழி என்னுடைய நிகழ்காலத்தை சிறப்பான முறையில் பயன்படுத்துவதில் அடங்கியுள்ளது.