29.03.20

இன்றைய சிந்தனைக்கு

சுய-கட்டுப்பாடு:

சுய-கட்டுப்பாடு என்றால் எண்ணங்களை சரியான வழியில் திசைதிருப்பும் ஆற்றலை கொண்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சுய-கட்டுப்பாடு என்றால் நாம் பொதுவாக மனதை ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்க விடாமல் கட்டாயப்படுத்தும் முயற்சி என சிந்திக்கின்றோம். இது உணர்வுகளை அடக்குவது எனவும் புரிந்துகொள்ளப்படுகின்றது. அதனால் அவ்வாறு நாம் செய்ய இயலாதிருப்பதை நாம் காண்கின்றோம். இது பொதுவாக, சுய கட்டுப்பாட்டை முற்றிலுமாக கைவிட்டுவிட்டோம், என்பதோடு சுய-கட்டுப்பாடு கடினமானது எனவும் சிந்திக்க வைக்கின்றது.

செயல்முறை:

சுய-கட்டுப்பாடு என்றால் என்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு அதிகாரி ஆகுவதாகும். சவால்கள் எவ்வளவு பெரிதாக இருப்பினும், என்னுடைய எண்ணங்களை சரியான வழியில் என்னால் திசை திருப்ப முடிகின்றது. என்னுடை ய எண்ணங்களை அலைபாய்வதற்கு நான் அனுமதிப்பதில்லை, அதனால் என்னுடைய கட்டுப்பாட்டை மீட்டுக்கொள்வதை பற்றி நான் கவலையடைய தேவையில்லை. இது என்னுடைய மனதை ஆக்கபூர்வமாக ஆக்குவதோடு, நான் பிரச்சனைகளுக்கு மேலும் சுலபமாக தீர்வுகளை கண்டுபிடிக்கின்றேன்.