29.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

நம்பிக்கை:

 

நம்பிக்கையுடன் இருப்பவரே எப்பொழுதுமே சந்தோஷமாக இருக்கின்றார்.

 

சிந்திக்க வேண்டிய கருத்து:

 

நமக்கு நம்பிக்கை இருக்கும்போதுநாம் செய்கின்ற அனைத்திலும் சந்தோஷம் தெரிகின்றது. நாம் எவ்விதமான தடைகளை சந்தித்தாலும்நம்பிக்கை அவற்றை வெற்றிகொள்வதற்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. நாம் நம்பிக்கையினால் காரியங்களை தெளிவாக பார்ப்பதாலும்மனம் தளராமல் இருப்பதாலும்நம்மால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடிகிறது.

 

செயல்முறை:

 

நான் எடுத்துகொள்கின்ற எந்த காரியத்திலும்எவ்விதமான கஷ்டங்களை நான் எதிர்கொள்ள நேரிட்டாலும்நான் வெற்றி பெறுவேன் என எனக்குள் நான் தொடர்ந்து கூறிக்கொள்வது அவசியம். இவ்வாறு தொடர்ந்து நினைவு செய்வது சந்தோஷத்துடன் முன்னோக்கி செல்வதற்கு எனக்கு நம்பிக்கை அளிக்கிறது.