30.03.20

இன்றைய சிந்தனைக்கு

ஒத்துழைப்பு:

எடுத்துக்காட்டு மூலமாக கற்றுக்கொடுப்பதே சிறந்த வழியாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம், ஒருவர் கற்பதற்கு உதவி செய்ய முயற்சி செய்யும்போது, நாம் ஒரு கருத்தை தெரிவிப்பதற்கு பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். நம் கருத்திற்கு மற்றவரை சம்மதிக்க வைத்து நம் ஆசைக்கு ஏற்றவாறு அவர் நடந்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்கின்றோம். இருந்தபோதிலும் மற்றவர்களை சம்மதிக்கவைப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் அவரவர்கள் எது சரி என்று உணர்கின்றனரோ, அதற்கேற்றாற்போல அவர்கள் தொடர்ந்து நடந்துகொள்வார்கள்.

செயல்முறை:

வார்த்தைகளை விட செயல்களே அதிக சமாதானபடுத்த கூடியதாக இருக்கின்றது. நான் ஒன்றை மற்றவர்களுக்கு வார்த்தைகளால் விளக்குவதை விட, அதை நான் செய்துகொண்டிருப்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, அது அவர்களிடம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. என்னுடைய செயல்களே மற்றவர்கள் மாற்றத்தை கொண்டுவர தூண்டுவதற்கு ஆதாரமாகின்றது.