30.04.20

 

இன்றைய சிந்தனைக்கு

 

பொறுமை:

நீண்ட கால பயிற்சி நீண்ட காலத்திற்கு பலனை கொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் முயற்சி செய்யும்போதுநாம் கொண்டுவருகின்ற மாற்றங்கள் மூலமாகநிலையான லாபத்தை அனுபவம் செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவ்வாறான முயற்சி நேர்மையாக இருந்தாலும் பொதுவாக அவை சிறிது காலத்திற்கு மட்டுமே நீடிக்கிறது. மிகப்பெரிய மாற்றத்தை சிறிய அளவிலான முயற்சிலிருந்து நாம் எதிர்பார்க்கும்போதுபொதுவாக அந்த மாற்றம் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கின்றது.

செயல்முறை:

நான் நீண்ட கால மாற்றத்தை அடைய விரும்பினால்நான் பொறுப்புடன் குறிப்பிடத்தக்க முயற்சி செய்வது அவசியமாகும். சவாலான சூழ்நிலைகள் வருகின்றபோது மட்டுமே நான் பயிற்சி செய்வது போதுமானதல்ல. பிரச்சனைகள் உருவாகும் போதெல்லாம் அவற்றை சந்திப்பதற்கு, நான் தயார் நிலையில் போதுமான அளவு பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாகும். இவ்விதமான நீண்ட கால பயிற்சி நீண்ட காலத்திற்கு விளைவைக் கொடுக்கும்.